Pages

Tuesday, March 13, 2012

மின்வெட்டை எப்படி சமாளிக்கலாம்?

கடந்த கருணாநிதி ஆட்சிக்காலத்தில், மின்வெட்டு இருந்த போது விமர்சித்து, அதன் காரணமாகவே கருணாநிதி ஆட்சியை இழந்தார் என்று கருதியவர்கள் எல்லாம் இன்று வாய் மூடி மௌனியாக - இருக்கின்ற காரணம் என்ன? சென்ற ஆட்சிக்காலத்தை விட, இம்முறை மின் வெட்டு மேலும் அதிகரித்திருக்கிறது...


சென்னையில் தினமும் இரண்டு மணி நேரங்கள் மின்வெட்டு வைத்திருப்பதால் மின்சாரம் சேமிக்கப்படுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை..காரணம், இரண்டு மணி நேரம் கழித்து மின்சாரரம் வந்தவுடன், காத்திருந்து, ஏசி, பிரிட்ஜ், வாஷின் மெசின் , மின் விசிறி என்று அனைத்தையும் அனைவரும் ஒரு சேர உபயோகிப்பதால், அந்த இரண்டு மணிநேரம் சேமித்த மின்சாரம் அதைவிட அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதே உண்மை..

இதை தவிர்க்க, மின்சாரத்திற்கு ரேஷன் முறையை கொண்டு வரலாம்..
அதாவது, ஒரு வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு யூனிட் மின்சாரம் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றும் அதற்குமேல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் அறிவித்தால் மக்களிடையே விழிப்புணர்வும், அதே போன்று மின்சார சிக்கனமும் ஏற்படலாம்..

கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஒரு சில பயங்கரவாதிகள் செயல்படுத்தப்படாமல் செய்து வருவதால் அவர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவேண்டும்..

இருந்தாலும், நமது தமிழகத்திற்கு  தேவையான மின்சாரத்தின் அளவு 11  ஆயிரம் மெகாவாட் ஆகும்..கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்பட ஆரம்பித்தாலும், அதன் மூலம் உபரியாக ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள்..இப்போது தமிழகத்தில் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே தயாரிக்கப்படுகிறது..எனவே கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படும்போது நமக்கு மேலும் இரண்டாயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது..வரும் காலங்களில் மின்சாரத்தேவை மேலும் அதிகரிக்கும்..மக்கள் தொகை பெருக்கத்தாலும், தொழில்சாலைகள் பெருக்கத்தாலும், புதிய புதிய மின் சாதனங்களாலும், இன்னும் மின்சாரம் அதிகமாக தேவைப்படும்..
சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு திட்டம் தீட்டி இருக்கிறது..அதன் மூலம் ஓரளவு மின்சார தேவைகள் நிறைவேறினாலும், வருங்காலத்தேவைகளை மனதில் கொண்டு..மின்சாரம் ரேஷன் முறையில் விநியோகிப்பது உபயோகமாக இருக்கும் என தோன்றுகிறது...

8 comments :

ஜெய்லானி said...

எங்கே இந்த டாபிக் இன்னும் வரலையேன்னு நினைச்சேன் ஹி..ஹி... :-))))))

மர்மயோகி said...

ஆக வந்துடுச்சு இல்லே...

வால்பையன் said...

//கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஒரு சில பயங்கரவாதிகள் செயல்படுத்தப்படாமல் செய்து வருவதால் அவர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவேண்டும்..//

ஒரு கவிதையே
கவிதை சொல்லுதே
அடடே

ஆச்சர்யக்குறி...........

தமிழ் மாறன் said...

//கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஒரு சில பயங்கரவாதிகள் செயல்படுத்தப்படாமல் செய்து வருவதால் அவர்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவேண்டும்..//

இதில் இருந்து தெரிகிறது நீங்கள் யார் என்று... தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களும் முஸ்லிம் அமைப்புகளும் கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்த்து வருகிறார்கள் படிக்க சிந்திக்கவும். அப்படி இருக்க தங்கள் கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்க்கும் மக்களை பயங்கரவாதிகள் என்று மத்திய அரசே சொல்லாத வாசகத்தை பயன்படுத்தி இருக்கிறீர்கள். இதில் இருந்து உங்கள் முகம் தெளிவாகிறது. ஹிந்துமுன்னணி, ஹிந்து மக்கள்கட்சி, தினமலர் போன்ற ஹிந்துதுவா பயங்கரவாதிகள் கூட கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு பிரச்சார குழுவை சார்ந்தவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லவில்லை. அவர்களை விட மோசமாக நீங்கள் இந்த வாசகத்தை பயன்படுத்தி உள்ளீர்கள்.

இப்படி எழுதும் நீங்கள் தமிழர் பிரச்சனையில் தேவையில்லாமல் (இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்கள் கண்டனத்திற்குரியவையே..குஜராத்தில் நடந்த படுகொலைகளுக்காக மோடியை தண்டிக்க போவது எப்போது..உங்களுக்கெல்லாம் தமிழன் மட்டும்தான் மனிதனா? ) குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு உங்களை ஒரு முஸ்லிம் போல் காட்டி கொண்டு அங்கே வந்து மோடி குஜராத்தில் செய்த படுகொலையை சாடுவது போல் பேசி குழப்பத்தை உண்டாக்குகிறீர். இதனால் அந்த பதிவின் நோக்கத்தை கெடுத்து தமிழர்கள் என்கிற நிலையை விட்டு ஹிந்து, முஸ்லிம் பிரச்சனைபோல் திரிக்க முற்படும் குழப்பகாரறாய் இருக்கிறீர்.

இப்படி எல்லாம் செய்பவன் நிச்சயம் பார்பன ஹிந்துத்துவா களிசடையாகவே இருக்க முடியும் என்பதே எனது கருத்து.

மர்மயோகி said...

நன்றி திரு தமிழ்மாறன்
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்பவர்கள் உண்மையிலேயே - மக்கள் பிரச்சினைக்காகத்தான் இதை செய்கிறார்கள் என்றால் - அவர்கள் - அதைவிட பயங்கரமான பெப்சி, கோகோகோலா போன்ற விஷக்கிருமிகள் பானத்தை இதைவிட தீவிரமாக எதிர்க்கவேண்டும்..
இருபது வருடங்களாக - பலகோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட அணுமின் திட்டத்தை, எத்தனையோ விஞ்ஞானிகள் பாதுகாப்பானது என்று சொல்லியும் அதை அரசியல் காரனங்களுக்காகவும், - அந்நிய நாடுகளிடம் பணம் பெற்றும் எதிருப்பவர்கள் நிச்சயமாக மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களே..

இலங்கை தமிழர்கள் விசயத்தில் இவ்வளவு தீவிரமாக இருக்கும் "மனித நேயர்கள்" - தெகல்காவினால் அம்பலப்படுத்தப்பட்ட மோடியின் பயங்கரவாதத்தை சிறிதும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? அது மனித உரிமை மீறல் இல்லையா? அங்கு கொல்லப்பட்டவர்கள் மனிதர்கள் இல்லையா?

UNMAIKAL said...

எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

பிஞ்சுகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள். .

இதில் மிக வேதனைக்குறிய விடையம்

இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.
...
.

மர்மயோகி said...

இலங்கையில் நடந்த போர் குற்றங்களுக்காக இந்தியாவைப் புறக்கணிப்போம் என்று சொல்லக்கூடிய தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது..வைகோ சீமான் நெடுமாறன் போன்றோரை கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் ஓடுங்கள்..
சொந்த நாட்டிலேயே அநியாயமாக கொன்று குவிக்கப்பட்ட குஜராத் முஸ்லிம்களுக்காக எவனும் குரல் கொடுக்கவில்லை எனும்போது, இலங்கையில் முஸ்லிம்களை கொன்ற விடுதலைப்புலிகளை நாங்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்? இடம் கொடுத்த தமிழ் நாட்டிலேயே பல்வேறு வன்முறைகள், கொள்ளைகள், கொலைகள் (ராஜீவ்காந்தி படுகொலை உட்பட) செய்த விடுதலைப்புலிகளுக்காக நாங்கள் ஏன் குரல் கொடுக்கவேண்டும்..

தமிழ் மாறன் said...

//நன்றி திரு தமிழ்மாறன் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்பவர்கள் உண்மையிலேயே - மக்கள் பிரச்சினைக்காகத்தான் இதை செய்கிறார்கள் என்றால் - அவர்கள் - அதைவிட பயங்கரமான பெப்சி, கோகோகோலா போன்ற விஷக்கிருமிகள் பானத்தை இதைவிட தீவிரமாக எதிர்க்கவேண்டும்..

இருபது வருடங்களாக - பலகோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட அணுமின் திட்டத்தை, எத்தனையோ விஞ்ஞானிகள் பாதுகாப்பானது என்று சொல்லியும் அதை அரசியல் காரனங்களுக்காகவும், - அந்நிய நாடுகளிடம் பணம் பெற்றும் எதிருப்பவர்கள் நிச்சயமாக மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களே..//

கூடங்குளத்தில் தொடங்கப்படும் அணு மின்னிலத்தை எதிர்ப்பதற்கு அந்த பகுதி மக்களுக்கு உரிமை உண்டு. அதனால் ஏற்ப்படும் பாதிப்புகளை அனுபவிக்கப்போவது அவர்களே. கூடங்குளம் அணு மின்நிலயம் குறித்து போராடும் மக்களை போயி நீயேன் பெப்சியை, கோகோகோலாவை எதிர்க்கவில்லை என்று கேட்க்க முடியாது.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து மனித உரிமை இயக்கங்களும், ஆர்வலர்களும், மனித நீதி மக்களை கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், sdpi , போன்ற கட்சிகளும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிக்கின்றன, பேராசிரியர் ஜவாஹிருல்லா இது குறித்து பல முறை குரல் கொடுத்துள்ளார். sdpi யின் மாநிலத்தலைவர் தேகலான் பாக்கவி கடுமையாக எதிர்க்கிறார் கூடங்குளம் அணு உலை திட்டத்தை இவர்களை எல்லாம் வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கி கொண்டு கூவும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்று ஒப்பு கொண்டதற்கு நன்றி தோழரே.

உங்களை சில பதிவர்களிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது தான் செய்தது சரி என்று வாதிடுவது. நாம் தெரியாமல் ஒரு கருத்தை மனிதன் என்கிற முறையில் சொல்லி இருக்க முடியும் அதை தவறு என்று தெரிந்து கொள்ளும்போது திருத்தி கொள்ல வேண்டும் நான் பிடித்த் முயலுக்கு மூன்று கால் என்று சொல்வது சரியான விஷயம். உலகமே அறிந்த ஒரு விசயம்தான் அணு உலை கொடிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் ஒரு துறை என்று அதாலதான் எல்லா நாடுகளும் அணு உலையை மூடி வருகின்றன. இதிலும் உங்களுக்கு கருத்து முரண்பாடா.

கலாம் மாதிரி கோமாளிகள்தான் அதை ஆதரிப்பார்கள்... உங்களது கேள்விகள் எல்லாவற்றிகும் பல இணையதளங்களில் மறுப்பும் செய்திகளும் வந்து விட்டன. நீங்கள் இப்போதுதான் கூடங்குளம் பற்றி தெரிய தொடக்கி இருக்கிறீர்கள். அதை பற்றி முறையாக அங்கு எண்ண நடக்கிறது என்று தெரிந்து கொண்டு எழுதுங்கள்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?