Pages

Tuesday, March 20, 2012

சாதனைகள் - வேதனைகள்..

 அந்நியன் எதை செய்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு (மூளையையும் கலட்டி வைத்துவிட்டு) அதை அஹா ஓஹு என்று வானளாவப் புகழும் அடிமைபுத்தி இந்தியாவை சேர்ந்த நமக்கு ரொம்பவே உண்டு..
அதனால்தான் இந்தியாவில் எவ்வளவோ கொடுமைகள் செய்த மோடியை - இந்தியாவின் தெகல்கா அம்பலப்படுத்தியபோது கண்டுகொள்ளாமல் இருந்த மனித நேய - வியாபாரிகள், இங்கிலாந்து சானல்4 இலங்கை போர் குற்றங்களை ஒளிபரப்பியவுடன் குய்யோ முய்யோ என்று குதிக்கிறார்கள்..இந்திய டிவி காட்டினால் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை..வெளிநாட்டு..அதுவும் வெள்ளைக்காரன் சேனல் காட்டிவிட்டனல்லவா...அதனாலேய அதற்க்கு இந்த வரவேற்ப்பு..
வெள்ளைக்காரன் கண்டு பிடித்த கிரிக்கெட்டுக்குதான் இவர்கள் கொடுக்கும் வரவேற்ப்பையும் அதில் காட்டும் தேசபற்று நாடகத்தையும் பார்த்தாலே தெரியும் இவர்களது அடிமை புத்தி இன்னும் மாறவில்லை என்பதை..
கிரிகெட்டை பார்க்கும்போதெல்லாம் எனக்கு தோன்றுவது - நாயிடம் ஒரு எஜமான் ஒரு பொருளை தூக்கி எறிந்துவிட்டு, அதை எடுத்துவர உத்தரவிடுவானல்லவா..அப்படித்தான் கிரிக்கெட் தோன்றியிருக்ககூடும் எனபது என் அனுமானம்..
நாயிக்கு பதிலாக ஒரு அடிமையை பந்தை எடுத்துவர ஏவி விட இவர்கள் ஆரம்பித்ததுதான் கிரிக்கெட்..தனது அடிமை தனத்தை மேலும் பறைசாற்ற, அதற்க்கு ஜென்டில் மென் கேம் என்று நாம் பேர் விட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்..
அதில் - அந்நிய நாட்டு பெப்சியையும், கோலாவையும் குடிக்க சொல்லி- தனது தேச பற்றை நிலைநாட்டும் டெண்டுல்கர் - நூறு சதம் அடித்து விட்டானாம்..வேலைமெனக்கெட்டு பாராளுமன்றத்திலும் இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்..இன்னும் அவனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க விதிமுறைகளை மாற்ற சொல்லும் விவாதம் இன்னும் வலுப்பெறும்.. ஏறக்குறைய இருபத்தி இரண்டு வருடங்களாக முழு கிரிக்கெட்டையும் ஆக்கிரமித்துக்கொண்டு, ரிட்டைர் ஆகவேண்டிய வயதிலும் இன்னும் பணம் பணம் - என்று விளையாடிக்கொண்டிருக்கும் போக்கை, சாதனை என்று ஏற்றுக்கொள்ளும் முட்டாள்தனம் அடிமைகளுக்கு மட்டுமே உரியது..ஒருவன் இருபது வருடங்கள் விளையாடினால் இதெல்லாம் சாதாரணம்..இதில் நூறு சதம் - சதத்தில் சதம் என்று புள்ளிவிவரக்கணக்கை போட்டுக்கொண்டும் நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கும் அவலம் இங்குதான் நடக்கிறது..
இன்னும் அரை சதத்தில் நூறை கடக்க வேண்டும் என்று இன்னும் ஓரிரண்டு வருடங்கள் தனது இருப்பை நிலை நிறுத்திக்கொண்டும், அதன்மூலம் இன்னும் வருமானம் பெற்றும், வரி செலுத்தாமல் - சலுகைகள் பெற்றும் தனது தேசப்பற்றை டெண்டுல்கர் உறுதி செய்வார்..நாமும் பல்லிளித்துகொண்டு பார்த்துக்கொண்டிருப்போம்..
அடுத்து கின்னஸ் சாதனை என்று கேலிக்கூத்து..
பாவம் ஒரு பெண்..உலகத்திலேயே மிகவும் உயரம் குறைந்த பெண்ணாம்..இது இயற்கையின் கோளாறு..அவளை போய் தினமும் அளந்து பார்த்து. வளர்ந்து விடக்கூடாது என்ற வகையில் அந்த பெண்ணை கொடுமை படுத்தி கின்னஸ் சாதனை புத்தகத்தில் அந்த பெண் வளராமல் இருப்பதை ஏதோ அந்த பெண்ணே தன்னை வளர் விடாமால் செய்தத்துபோல காட்டி வேடிக்கை செய்து வருகிறார்கள்..
கின்னஸ் சாதனை என்று இன்னும் பல முட்டாள்தனங்களை செய்துகொண்டிருப்பதை அன்றாடம் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்..பின்னாடி நடப்பது, பின்னாடி சைக்கிள் ஓட்டுவது, ஜந்துக்கள், மிருகங்களுடன் வசிப்பது இன்னும் மனிதனுக்கு உபயோகமற்றை செய்து கின்னஸ் சாதனை என்று வியாபாரம் செய்யும் அவலமும் - அதை வெள்ளைக்காரன் செய்வதால் ஏற்றுக்கொள்ளும் -இன்னும் பெருமையாக மதிக்கும் அடிமைத்தனமும் நம்மிடம்தான் மேலோங்கி நிற்கிறது..
இன்னுமொரு வேதனை : சமீபத்தில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு விளையாட்டில் விராத் கோலி என்பவன் அதிகபட்ச ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்ததற்காக, டுவிட்டரில் - ஆபாச நடிகை பூனம் பண்டே என்பவள் தனது ஆபாச படத்தை பரிசாக வழங்கி இருக்கிறாளாம் ..ஹ்ம்ம் என்னதான் சொல்வது ?

6 comments :

ஜெய்லானி said...

// அந்நியன் எதை செய்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு (மூளையையும் கலட்டி வைத்துவிட்டு) அதை அஹா ஓஹு என்று வானளாவப் புகழும் அடிமைபுத்தி இந்தியாவை சேர்ந்த நமக்கு ரொம்பவே உண்டு..//

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டேனே தெரியாதா உங்களுக்கு ஹய்யோ ஹய்யோ :-))))))))))))))))))))))))))))))

Appu Chellam said...

இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை புரிந்துகொண்டு புரியாமல் மற்றவர்களையும் உசுப்பேத்தி உசுப்பேத்தியே இந்தியாவை வளரவிடாமல் செய்வதுதான் அவர்களின் குணம் by Abbhas.

மர்மயோகி said...

நன்றி ஜெய்லானி
நன்றி அப்பாஸ்

Unknown said...

எதுவும் சொல்றதுக்கு இல்ல.!

தீபிகா(Theepika) said...

மாறுபட்ட சிந்தனைகளில் நியாயமும் இருக்கிறது.

மர்மயோகி said...

நன்றி வெங்கடேஷ்
நன்றி தீபிகா

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?