Pages

Friday, March 23, 2012

தமிழ்படங்கள் - சில "ஏன்"கள் - சில "எப்படி" கள்


எப்போதோ ஒரு பதிவில் படித்த ஞாபகம்..


அதாவது தமிழ்படங்களில், கதாநாயகியை வில்லன்கள் துரத்திச்சென்று கற்பழிக்க முயல்கையில் - ஏழு கடல்களுக்கு அப்பால் இருந்தாலும் கதாநாயகன் வந்து காப்பாற்றி விடுவான்...அதே சமயம் அவன் கதாநாயகனின் தங்கை என்றால் அவள் கற்பழிக்கப்பட்டு, தற்கொலை செய்துகொண்டபின்போ..அல்லது தற்கொலைக்கு முயற்ச்சிக்கும் போதோ தான் வருகிறான்..


இதை படித்த பின்பு  நிறைய "ஏன்" கள் "எப்படி" கள் தோன்றியது....


1. கதாநாயகனை தாக்க வரும்  குண்டர்கள், கூட்டமாக வந்தாலும், தனித்தனியாக வந்து அடிவாங்கி செல்வது ஏன்?


2. கதாநாயகன் கிராமத்திலிருந்து அப்போதுதான் வந்து ரயில்வே ஸ்டேஷனிலோ, அல்லது பஸ் ஸ்டாப்பிலோ இறங்கும்போது நவநாகரீக மங்கை அவனுக்காகவே காத்திருப்பது ஏன்?
3. அதே மக்கு கதாநாயகன் திடீரென ஒரு பிரச்சினையில் சிக்கும்போது, - எந்த முன் அனுபவுமும் பயிற்ச்சியும் இல்லாமல், துப்பாக்கியை குறிபார்த்து சுடுவது - அல்லது துப்பாக்கியை லாவகமாக கையாளுவது எப்படி?


4. போலீசாரோ அல்லது வில்லன் கோஷ்டியோ..எத்தனை பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டாலும், இதற்கும் முன் எந்த பயிற்ச்சியும் பெறாத கதானாயகள் துளி கூட காயம் படாமல் தப்பிப்பது எப்படி..?


5. பயங்கரமான இரும்புத்தடியாலும், கடுமையான ஆயுதங்களாலும், மண்டையிலும், முகத்திலும் மரண அடி கொடுத்தும் கதாநாயகன் கடைசி காட்சியில் வசனம் பேசி வில்லனை கொன்றுவிட்டு ராஜ நடை போடுவது எப்படி?



6. கதாநாயகன் எவ்வளவுதான் பொறுக்கியாக இருந்தாலும் விழுந்து விழுந்து காதலிக்கும் கதாநாயகி, வில்லன் எவ்வளவுதான் நாகரீகமாக இருந்தாலும் அவனை காரணம் இல்லாமல் வெறுப்பது ஏன்?


7. நகைச்சுவை நடிகர்கள், கதாநாயகனுடன் சேர்ந்து எவ்வளவு திருட்டு வேலை கொள்ளைகள் செய்திருந்தாலும், இறுதிக்காட்சியில் கதாநாயகன் மட்டும் போலீசில் தண்டனை அனுபவிப்பது ஏன்?


8. தண்டனை முடிந்து வெளிவரும் கதாநாயகனை வரவேற்க நகைச்சுவை நடிகன் மட்டும் பெரும்பாலும் சிறைக்கு வெளியே காத்திருப்பது ஏன்?


9. எவ்வளவு பயங்கரமான வெடிகுண்டு வெடித்தாலும்,  நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டும், உடம்பு முழுவதும் கருப்பாக மட்டும் - சட்டை பேன்ட் கிழிந்தும், தலைமுடி நட்டிக்கொண்டும் நிற்பது, உடம்பில் வேறு எங்கும் துளிகூட காயமே படாமல் இருப்பதும் ஏன்?


10. வில்லனை பழிவாங்க சிறையிலிருந்து தப்பி வரும் கதாநாயகன், போலீசாரால் துரத்தப்பட்டு வரும்வழியில் பலநூறு போலீஸ்காரர்களை கொன்றும், கை கால்களை உடைத்தும், போக்குவரத்து குளறுபடி ஏற்படுத்தியும், வாகனங்களை சேதம் செய்தும், இன்னும் வில்லனின் ஆட்கள் பலரை பயங்கர காயப்படுத்தியும், கொன்றும், வில்லனை நெருங்கி கொலை செய்ய முயர்ச்சிக்கும்போது, வேறு ஒருவரோ அல்லது போலிசோ வில்லனை கொன்று விட்டு, கதாநாயகனிடம் " நீ இவனை கொன்று - உன் வாழ்கையை வீனடித்துவிடாதே" என்று வசனம் பேசுவது ஏன்? வரும் வழியில் இவ்வளவு கொலைகள், வன்முறைகள் செய்த்தது கணக்கில் வராதது எப்படி?


11. போலீசாரால் தேடப்படும் கதாநாயகன் தன தாயிடம் அவள் கையால் உணவு வாங்கி வாயில் வைக்கும் சமயம் சரியாக போலீசாரிடம் சிக்குவது ஏன்?



12. அதேபோல காடுகளில் ஒழிந்து இருக்கும் கதாநாயகனை போலீசார் தேடும்போது, அங்கே வரும் கதாநாயகி ஒரு பாட்டை பாடுவாள்..அது போலிசுக்கு கேட்காமால் கதாநாயகனுக்கு மட்டும் கேட்பது எப்படி?



13. கதாநாயகன் குற்றவாளி என்று ஊரே வெறுத்து ஒதுக்கி  இருக்கும்..தனது பிளாஷ்பேக்கை, ஒருவனிடமோ அல்லது ஒருத்தியிடமோ சொன்னவுடன், ஊரே அதை தெரிந்து, நேரில் பார்த்ததுபோல நம்புவது எப்படி?


14. கதாநாயகனை துரத்துவதால் போலிசும் வில்லனாக வேண்டுமா?


15. முதல் காட்சியில் ஊரே போற்றும் பெரிய மனிதனாக அறிமுகமாகும் கதாநாயகனுக்கு, முதல் காட்சியில் கிடைக்கும் மரியாதை ஏன் இறுதிவரை கிடைப்பதில்லை..அடுத்த காட்சியில் கூட அந்த மாதிரி யாரும் மதிப்பதில்லை..ஏன்?


16. கதாநாயகி பிரசவகாட்சியில் கதாநாயகன் கைகளை கசக்கியவண்ணம் குறுக்கும் நெடுக்குமாக அலைவது ஏன்?




17. இரவில் கதாநாயகனின் பாட்டுக்காக ஊரே காத்திருக்கும், அதே போல கதாநாயகியையோ, அல்லது கதானயகனையோ கிண்டல் செய்து பாட்டு பாடுவார்கள்..அந்த சமயத்தில் இசையும் கேட்கும்..அந்த இசையை அமைப்பது யார்?


18. மிகப்பிரபலமான  பாடகராகவோ, வித்வானாகவோ இருக்கும் கதாநாயகன் அல்லது கதாநாயகி, ஒரு கச்சேரியில் ஒரு பாடல் மட்டுமே பாடிவிட்டு செல்வது ஏன்?



19.  வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, மனதுக்கு பிடிக்காத ஒரு நிகழ்வு ஏற்பட்டால், முழு சாப்பாட்டிலும் தண்ணியை ஊற்றி சாப்பாட்டை வீணடிப்பது ஏன்?


20. கணவன் மனைவியாக வரும்போது, குழந்தை பெறுவதற்கு ரொம்ப மேனக்கேடுவதாக காட்டப்படுவதும்,  காதலிக்கும்போதோ அல்லது கற்பளிக்கப்பட்டாலோ, ஒருமுறை உடலுறவு கொண்டவுடனேயே கற்பமுருவது எப்படி?


21. முதல்  குழந்தைக்கு ஐந்தாறு வயது  இருக்கும்,,இரண்டாவது குழந்தை பெற கதாநாயகன் கதாநாயகியை கெஞ்சுவது போலவும், அவள் பிகு பன்னுவதுபோலவும் காட்சி இருக்கும்...ஏன் இதற்கிடையில் அவர்ளுக்கிடையே செக்ஸ் நடைபெறவே இல்லையா?




22.  முதல் காட்சியில் கதாநாயகியை  பிரியும் கதாநாயகன், இருபது முப்பது வருடங்கள்.,  கழித்து இருவரும் சந்திக்கும்போதும்,  வேறு திருமணமே செய்யாமல் இருவரும் அவர்கள் நினைவாகவே வாழ்வது எப்படி?


23. காதலிக்கும்  கதாநாயகனும் கதாநாயகியும் இதற்க்கு முன்போ, இதற்க்கு பிறகோ வேறு எவரையும் மனத்தால் கூட நினைக்கவில்லை எனபது எப்படி சாத்தியமாகும்?


24. சண்டை காட்சியில் ஒருவன் அடித்தால் அதிகபட்சம் கீழேதான் விழலாம். அதைவிடுத்து அடிவாங்கியவன் குட்டிகரணம் அடிப்பது, இரண்டு மூன்று கிலோமீட்டர் தள்ளிப்போய விழுவது  எப்படி?


இப்படி   இன்னும்  எவ்வளவோ கேள்விகள் இருந்தாலும், இன்னும்  இந்த கேள்விகள் கேட்கப்படாமலேயே இருப்பது ஏன்? 

18 comments :

ஹாலிவுட்ரசிகன் said...

நிறைய ஏன்கள் எப்படிக்கள் என் மனதிலும் எழுந்தவை தான். முக்கியமாக சி.பியின் மனதில் கட்டாயம் எழுந்திருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

"இதோ பாருங்க....கேக்கறது ரொம்பச் சுலபம்....பதில் சொல்லிப் பாருங்க..." :))))) பத்தாவதும் பனிரெண்டாவதும், பத்தொன்பதாவதும் ரொம்ப நல்ல கேள்விகள்!

இதற்கு பதில்கள் தயாரித்து அதையே தனிப் பதிவாக்கலாமே...!

kasupanamthutu said...

சினிமா என்பது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு. அதில் லாஜிக் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் சொன்ன இந்த அனைத்து ஏன்களும் ஹாலிவுட் படத்திலும் இருக்கிறது. அனைத்து ஏன்களையும் தவிர்த்துவிட்டு ஒரு படம் எடுக்க சாத்தியமே இல்லை. கேள்வி கேட்பது ரொம்ப சுலபம். ஆனால் படம் எடுப்பது ரொம்ப கஷ்டம் என்பதை நேரில் ஒரு ஷூட்டிங்கை பார்த்தால் புரியும்.

மர்மயோகி said...

//ஹாலிவுட்ரசிகன் said...
நிறைய ஏன்கள் எப்படிக்கள் என் மனதிலும் எழுந்தவை தான். முக்கியமாக சி.பியின் மனதில் கட்டாயம் எழுந்திருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி.//

நன்றி ஹாலிவுட் ரசிகன்..

மர்மயோகி said...

//ஸ்ரீராம். said...
"இதோ பாருங்க....கேக்கறது ரொம்பச் சுலபம்....பதில் சொல்லிப் பாருங்க..." :))))) பத்தாவதும் பனிரெண்டாவதும், பத்தொன்பதாவதும் ரொம்ப நல்ல கேள்விகள்!

இதற்கு பதில்கள் தயாரித்து அதையே தனிப் பதிவாக்கலாமே...!//

பதில் யாராவது எழுதி பதிவிட்டால் நலம்..:)

மர்மயோகி said...

//sivalingamtamilsource said...

சினிமா என்பது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு. அதில் லாஜிக் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் சொன்ன இந்த அனைத்து ஏன்களும் ஹாலிவுட் படத்திலும் இருக்கிறது. .//

நாம் பெரும்பாலும் பார்ப்பது தமிழ்படங்கள் மட்டுமே..ஹாலிவுட் படங்களை அல்ல..

//அனைத்து ஏன்களையும் தவிர்த்துவிட்டு ஒரு படம் எடுக்க சாத்தியமே இல்லை. கேள்வி கேட்பது ரொம்ப சுலபம். ஆனால் படம் எடுப்பது ரொம்ப கஷ்டம் என்பதை நேரில் ஒரு ஷூட்டிங்கை பார்த்தால் புரியும்//
அவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் இப்படி படம் எடுக்க வேண்டும்?

ஜெய்லானி said...

ராமராஜன் படம் எதுவும் நீங்க பார்த்தில்லை போலிருக்கு . ஒரு வேளை பார்த்திருந்தால் இன்னும் நிறைய ஏன் , எப்படி கேள்வி வந்திருக்கும் ஹி...ஹி.. :-))))

மர்மயோகி said...

//ஜெய்லானி said...
ராமராஜன் படம் எதுவும் நீங்க பார்த்தில்லை போலிருக்கு . ஒரு வேளை பார்த்திருந்தால் இன்னும் நிறைய ஏன் , எப்படி கேள்வி வந்திருக்கும் ஹி...ஹி.. :-))))//

நன்றி ஜெய்லானி..
ராமராஜன் படங்களே ஏன் என்பதுதான் கேள்வி..அவர் இவ்வளவு நாள் எப்படி ஒரு கதானாயங்கனாக நீடித்தார்? இதையும் கேள்விகளில் ஒன்றாக சேர்த்துக்கொள்ளலாம். :)

முத்தரசு said...

சினிமாக்காரன் பொழப்பு பொழுது போக்கு அம்முட்டுதேன்.

வாசலோட நிறுத்தனும் பூஜை அறை வரை விட்டாச்சி...இப்ப போய் ஏன் எப்படி ன்னு அய்யோ ஐயோ...காமடி பண்ணிக்கிட்டு.

மர்மயோகி said...

நன்றி மனசாட்சி....

கோவை நேரம் said...

ரொம்ப பாதிக்க பட்டு இருக்கீங்க போல...

மர்மயோகி said...

நன்றி கோவை நேரம்

mahi said...

- Heroine pattanathil padichu mudichitu atu figures oda Gramathai ota car il sutri parka varuvargal.
- Heroine thimiru pidithavalaga irupaal. Periya coolers potirupaal.
- Gramthu kulathil swimming dress potu nanbigalodu kulipaal.
- Rotil car vegamaga oti chicken,goat alathu oru siruvanai mothi vitu nirkamal sendru viduvaal.
- Hero thidrnu kaar munadi jump aditho alathu kanadi odithu nyayam ketpaar. Heroine car alathu heroine setril thalivitu kindalithu vitu pattu paduvaar.
- Heroine atharku aparam modern dress vitu podavai kati kondu varuaval.
- Perumpalana nerathil villain oda magal heroine aga irupaal.
- Antha Gramthail hero matum padithu irupaar but cooli veleai seivaar.
- Villain oda payan nichayam oru thiyai rape pani viduvaan. Antha character vanthu padam starting irunthu vaayadi althu hero vai oru thalayai kathalipaal.
The above cliches have been enacted so many times by Kamal, Rajini,Sathyaraj,Karthick,Vijayakanth,Ramarajan,Murali.......... If you noticed another thing. There were only dozen heroes from 1980- 2000 .But if you count the number of heroines who have come and gone it will be few thousands. Cinema industry is a male dominated one.

மர்மயோகி said...

நன்றி மகி..

நீங்கள் சொன்ன அனைத்தும் கமலஹாசன் நடித்த சகலகலா வல்லவன் படத்தில் உள்ளது....அந்த படத்தை பற்றி கூட விமர்சனம் செய்யலாம் என்று நினைக்கிறேன்..நினைவூட்டியதற்கு நன்றி..

மர்மயோகி said...

நன்றி கிருஷ்ணா..

nirvana said...

Waiting for the review. Thanks in advance

mahi said...

Thanks Marmayogie.

Rajkumar said...

வில்லன் நாயகனை பிடிச்சு கொல்லாம ஏன் கட்டி வச்சு அடிக்கனும்? அப்பறம் நாயகன் அல்லது நாயகி வில்லனிடம், நீ ஒரு ஆம்பிள்ளையா இருந்தா கைய கழட்டி விட்டுட்டு அடிடானு சொல்றது...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?