Pages

Friday, June 3, 2011

திசைமாறும் பறவைகள் - இவர்கள்தான் சினிமாக்கலைஞர்கள்...!



1996 - இப்போதும் பசுமையாய் நினைவிலிருக்கிறது...அன்றைக்கு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் ஒட்டுமொத்த அதிகார துஷ்பிரயோகம், ஆடம்பரம், பகட்டு, லஞ்சம், ஊழல் என்று எங்கும் விரவிக்கிடக்க - தமிழகமே ஜெயலலிதாவை புறக்கணித்து அவரது ஆட்சி அகற்றப்பட்டது. முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதாவே அவரது தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்..

அன்றைய நாட்களில் - சினிமா நடிகர் ரஜினிகாந்த் "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று உளறினார்..

அதை தூக்கிபிடித்த ஆபாச பத்திரிகைகள், அதே ரஜினிகாந்த் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து ஒரு விழாவில் கலந்து கொண்டபோது அதே மேடையில் வைத்து ஜெயலலிதாவை  "தைரிய லக்ஷ்மி" என்று மீண்டும் உளறியதை சிறிதும் வெட்கமின்றி மூளையின்றி வெளியிட்டு கொண்டாடின.,

சென்ற ஆட்சிகாலத்தில் கூட, தமது மகளின் திருமண அழைப்புக்கு, கருணாநிதியை அழைக்க தன மனைவியை அனுப்பிய ரஜினி, "தைரியலட்சுமி" ஜெயலலிதாவை அழைக்க தானே தன் மனைவியுடன் நேரில் சென்றார்.

இப்படிதான் சினிமாக்காரர்கள்..அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்திகள் என்பதற்கு ரஜினியின் இந்த நடவடிக்கைகளே சாட்சி..



பால்தாக்கரேயை கடவுளாக வணங்கும் ரஜினிகாந்த் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்ற ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு எப்படி ஒட்டு போடுவார்?

அவர் சென்ற பாராளுமன்ற தேர்தலிலேயே பயங்கரவாத பார "தீய" ஜனதா கட்சிக்கு ஆதரவு என்று அறிவித்தவர்..

அவர் அதிமுகவுக்குத்தான் ஓட்டுபோட்டார் என்று தெரிந்தும் சினிமாக்காரரான கருணாநிதி அந்த பாசம் மாறாமல் - அன்றைய தினமே  ரஜினியுடன் "பொன்னர் சங்கர்" திரைப்படம் பார்க்க சென்றார்..



கருணாநிதியின் சென்ற ஆட்சியில் அவரை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தவர்கள் எல்லாம் இன்று ஒன்றன் பின் ஒன்றாக தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கும் காட்சிகள் இவர்களது சுயநலத்தை அப்பட்டமாக காட்டுகிறது..

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற கே. பாலச்சந்தர் அதை எடுத்துகொண்டு ஜெயலலிதாவை சந்திக்கிறார்..


தங்கள் சன் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட ஆடுகளம் தேசிய விருது பெற்றுவிட்டது என்று சன் டிவிக்காரர்கள் அலப்பறை செய்துகொண்டிருக்க, அந்தப் படக்குழுவினரோ ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்று பவ்யமாய் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..



சில காலங்களுக்கு முன் வெளிவந்த "நீதிக்கு தண்டனை" என்ற திரைப்பட்த்திருக்கு தயாரிப்பு மற்றும் திரைக்கதை இயக்கம் எஸ்.எ. சந்திரசேகர்.

கதை வசனம் கலைஞர் மு. கருணாநிதி. கதாநாயகன் விஜயகாந்த் . கதாநாயகி ராதிகா. இன்று அப்படம் சம்மந்தப்பட்ட அனைவருமே எதிர் எதிர் அணியில்.

எத்தனையோ தொண்டர்கள் கருணாநிதியின் முரசொலி கடிதத்தை படிப்பதையே பாக்கியமாக கருதிக்கொண்டிருக்கையில், நடிகர் என்ற காரணத்திற்காக சரத்குமாருக்கு கருணாநிதி ராஜ்யசபா எம்பி பதவியை கொடுத்தார்..
பதவி முடியும்போது சரத்குமார் ஜெயலலிதாவிடம் சரணடைந்தார்..

கருணாநிதி ஒன்றும் நல்ல அரசியல்வாதி அல்லதான்.உத்தமர் அல்லதான்..ஆனால் அவரால் பலனடைந்த  சினிமாக்காரர்கள் யாரும் அவரை விட்டு விலகிய காரணம் மக்கள் நலனல்ல..தம் சொந்த நலன்தான்..

எல்லாம் அப்பட்டமான சுயநலம்..

இந்த கூத்தாடிகளைத்தான் நாளைய முதல்வர்கள், என்று மக்களை நம்பவைக்க ஆபாச பத்திரிக்கைகள் போட்டி போட்டுக்  கொண்டிருக்கின்றன..



Wednesday, June 1, 2011

அதிமுகவின் மாபெரும் வெற்றிக்கு காரணமான "பவர்ஸ்டார்"


கருணாநிதியின் குடும்ப ஆட்சியையும், ஸ்பெக்ட்ரம் ஊழலும்தான் திமுகவின் பரிதாபமான தோல்விக்கு காரணம் என்று அறிவில்லாத பலர் உளறிகொட்டிக் கொண்டிருக்கின்றனர். பாவம் அவர்களுக்கு தமிழ்நாடு அரசியலைப்பற்றி என்ன தெரியும்?

என் டி டி வி, சி என் என் டிவி போன்ற முட்டாள்களுக்கு கோமாளி சோவை விட்டால் வேறு அரசியல்வாதி தெரியாது..ஜெயலலிதா வீட்டு பாத்ரூமில் தண்ணி வரலயின்னாகூட இந்த கோமாளி சோ தான் மேற்கண்ட டிவிக்களில் போய் பேட்டிகொடுத்துவிட்டு வருவார்.

எம்ஜியார் காலப்படங்களில் ரிக்ஷா ஒட்டிக்கொண்டிருந்த கோமாளி சோவிற்கு இன்றைக்கு தெரிந்த நல்ல அரசியல்வாதிகள் யார் என்றல் ஜெயலலிதாவும், குஜராத் கொலைகாரான் பயங்கரவாதி நரேந்திர மோடியும், பாபர் மசூதியை இடித்த பயங்கரவாதி அத்வானியும்தான்.

ஆனால் அந்த அரசியல் வியாதிகளெல்லாம் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் ஒன்றும் புடுங்க முடியாது என்று தெரிந்தே..ஜெயலலிதா, தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் கனவில் இருக்கும் டாக்குட்டர் (?) விஜய் போன்ற மாமனிதர்களை நம்பி களத்தில் இறங்கினார் என்று தோன்றுகிறது..


விஜயகாந்தை எதிர்த்து திமுக மேதாவிகள் வடிவேலு என்ற மாபெரும் அரசியல் சாணக்கியனை களத்தில் இறக்கியது..சாணக்கியன் என்றால் அவனுக்கு போட்டியாக இன்னொரு சாணக்கியன் வேண்டுமல்லவா? அதிமுக சார்பில் சிங்கமுத்து என்னும் இன்னொரு அரசியல் சாணக்கியன் களத்தில் இறங்கி அதிமுகவுக்கு ஆதரவாக ஓட்டுகேட்டார்..


இதற்கிடையே - மக்கள் சென்ற ஆட்சியல் அனுபவித்த கஷ்டங்களை எல்லாம்  பார்த்துகொண்டிருந்தார் நமது டாக்குட்டரின் தந்தை எஸ் எ. சந்திரசேகர். ஒரு கட்டத்தில் திமுக டாக்குட்டர் விஜய்  நடித்த, நடித்துக்கொண்டிருக்கும் படங்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துகொண்டிருந்ததால் - இதற்கும் மேலும் மக்கள் துன்புறுவதை தாங்கமுடியாது என்ற உயர்ந்த நோக்கில் தமிழ்நாட்டின் தலைஎழுத்தை தீர்மானிக்க - டாக்குட்டர் விஜயின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த  முடிவை எடுத்தார்..

அதுவரையில் தோல்விப்பாதையில் சென்றுகொண்டிருந்த அதிமுக கூட்டணி - வீறுகொண்டு எழுந்து நம்பமுடியாத அளவில் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது..

டாக்குட்டரின் ஆதரவு மட்டும் அதிமுகவிற்கு இல்லையென்றால்...தமிழகத்தின் நிலை இன்றைக்கு எப்படி இருக்கும்?

இது தெரியாமல் பலர் ஏதேதோ காரணங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...

இதனால்தான் நமது டாக்குட்டர்கூட - இரு நாட்களுக்கு முன் தமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்..

இதில் எங்கே நமது "பவர்ஸ்டார்" வந்தார் என்று பார்க்கிறீர்களா? பாவம்க அவர். இருக்கிற படங்களை முடிக்கவே அவருக்கு நேரம் இல்லை..சும்மா வம்புக்குத்தான் அவர் பெயரை உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது.. நமக்கும் ஹிட்ஸ் வேணுமேங்க..

பின் குறிப்பு : இதை நகைச்சுவை பிரிவில் போட்டு இருக்கிறேன்..பைத்தியக்காரத்தனம் என்று ஒரு பிரிவு இருந்தால் அதில் போடலாம் .


மொத்தத்தில் தமிழ்நாட்டுக்காரனுக்கு சொந்த மூளை இல்லை.. சோ, ரஜினி, விஜயகாந்த், விஜய், வடிவேலு, சிங்கமுத்து, எஸ்.எ. சந்திரசேகர் போன்ற சினிமா கூத்தாடிகள் சொல்வதைத்தான் கேட்கிறார்கள் என்று இந்த ஆபாச பத்திரிக்கைகளும் அரசியல்வாதிகளும் முடிவே பண்ணிவிட்டார்கள்...ஹ்ம்ம்

 

Monday, May 30, 2011

இன்னும் இவனை ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள்?


இந்தியாவில் மைய அரசு என்று ஒன்று செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறதா?

இல்லை பிரதமரின் வேலை வெறுமனே வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதும், அமெரிக்காவின் ஆட்டுவித்தளுக்கு தலையாட்டுவதும்தானா?

2G - அலைக்கற்றை வரிசை ஒதுக்கீட்டில் ஊழல் செய்தவர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகூட, கூட்டணிக்கட்சியான திமுகவை மிரட்டுவதற்கு - அதாவது அதிக தொகுதி ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசின்மீது அளவுக்கதிகமான தலையீடு போன்றவைகளின் காரணமாக அடக்கிவைக்க - மேற்கொள்ளப்பட்ட நடவைக்கைகள் என்றுதான் சந்தேகம் எழுகிறது..அதுவும் சுப்ரீம் கோர்ட் தலையிட்டதன் விளைவுதான்..

உண்மையிலேயே தேச நலனில் அக்கறை இருந்தால் தேசத்தை துண்டாடும் வகையில் பேசிவரும் மும்பையின் பயங்கரவாதி சிவசேனாவின் பால்தாக்கரே என்பவனை இன்னும் ஏன் கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவனை சிறையில் அடைக்கவில்லை?

சில மாதங்களுக்கு முன்பு பிரபல கிரிகெட் வீரர் டெண்டுல்கர் - பாதாக்கரேயின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் மும்பை இந்தியாவின் ஒருபகுதி என்று பேட்டி அளித்தார்.

அதற்க்கு பயங்கரவாதி பால்தாக்கரே ஆவேசமாக குதித்தான்..பலரது எதிர்ப்பு காரணமாக அவனது பருப்பு வேகவில்லை..



இப்போது அதே பிரச்சினையை எடுத்துக்கொண்டு, மும்பையை எப்படி இந்தியாவின் ஒரு பகுதி என்று டெண்டுல்கர் சொல்லலாம் என்று பால்தாக்கேரே மீண்டும் குதிக்க ஆரம்பித்திருக்கிறான்.

மும்பை இந்தியாவின் ஒரு பகுதி இல்லையென்றால் - ஆப்ரிக்காவின் பகுதியா?

இப்படி தேசவிரோதமாக பேசும் இவனை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள்?

இவன் அப்படி என்ன இந்தியாவிற்காக கிழித்துவிட்டான்?

இவனால் ஒவ்வொருநாளும் பயங்கரவாதம் வளர்ந்துகொண்டே இருக்கிறதே தவிர அமைதி ஏற்பட வாய்ப்பே இல்லை.

இவன் போன்ற பயங்கவாத ரவுடிகளை ஏன் இன்னும் கைது செய்து உள்ளே தள்ளாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்?

இவன் இந்தியாவில்தானே அரசியல் பிச்சை செய்து வாழ்ந்துகொண்டிருக்கிறான்?

இவன் என்ன மும்பை சாம்ராஜ்யத்தின் பேரரசனா?

பொறுக்கித்தனம் செய்து பிச்சை எடுத்துகொண்டிருன்தவன்.

இன்று ஏதோ ஒரு சில பொறுக்கிகளின் ஆதரவை வைத்து இந்தியாவையே துண்டாட நினைக்கும் இந்த பயங்கரவாதியை இன்னும் விட்டுவைப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்து எனபது ஏன் இந்த அரசுகளுக்கு தெரியவில்லை?



தங்களது சொந்த கட்சிக்கு லாபம் இல்லையென்றால் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்களா?




Friday, May 27, 2011

இந்தியன் என்றால் இன்னும் அடிமைகள்தானா?


ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு சென்று ஏறக்குறைய அறுபது வருடங்களை தாண்டிவிட்டோம்..

ஆனாலும் அவர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த அந்த மனோபாவம் இன்னும் நம்மிடம் இருந்து மாறவில்லை..

அதனால்தான்..நாம் போராட்டத்தின் மூலம் ஆங்கிலேயனை விரட்டியும்கூட, அவர்களிடம் இருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்றுதான் சொல்கிறோமே தவிர நாம் அவனை விரட்டியதாக சொல்வதில்லை..

தாய்மொழி பேசுவதை விட ஆங்கிலம் பேசுவதுதான் உயர்ந்தது என்று நினைத்துகொண்டு வாழ்கிறோம்.

தமிழ்நாட்டில்கூட திராவிட கட்சிகள் வளர்ந்தது, நமது தாய்நாடு இந்தியாவில் அதிக மக்கள் பேசும் ஹிந்தி மொழியை எதிர்த்துதானே தவிர ஆங்கில மொழியை எதிர்த்து அல்ல..

இன்னும் தமிழ்நாட்டில் ஆங்கில மொழியை வரவேற்று, ஹிந்தியை தார் பூசி அழிக்கிறோம்..

அதனால்தான் பெரும்பாலான தமிழர்கள் சென்னை சென்ட்ரலை தாண்டிவிட்டால் ஹிந்தி தெரியாமல் ஊமை பாஷை பேசவேண்டிய சூழல்..



வெள்ளைக்காரனைக் கண்டால் அவன் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவன் போல நம்மவர்கள் அவனுடன் பவ்யமாக பணிந்து பேசும் அவலம் வேறு எங்கும் இல்லை..

நம்மை நாம தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகள் இந்தியாவில்தான் அதிலும் தமிழ்நாட்டில்தான் அதிகம் என்று நினைக்கிறேன்..



என்னதான் இந்தியா  உலகின் வல்லரசுகளில் ஒன்றாகி வருகிறது, பொருளாதாரத்தில் வியக்கவைக்கும் அளவில் முன்னேற்றம் பெற்றிருக்கிறது என்றாலும்,  அமெரிக்காவிலிருந்து ஜார்ஜ் புஷ்ஷோ, பில் கிளிண்டனோ, ஒபாமாவோ வந்தால் அவர்கள் கையிலே இந்த நாட்டை ஒப்படைக்கும் கேவலமாக ஆட்சியாளர்களைதான் நாம் பெற்றுள்ளோம்..

ஆனால் நமது நாட்டு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அங்கு சென்றால் - பாதுகாப்பு சோதனை என்று கருதி அவமானப்படுத்தப்பட்டாலும், கை கட்டி வாய்பொத்தி சின்னதாக கண்டனம் தெரிவித்து அமைதியாகி நாம் எப்போதும் ஆங்கிலேயர்களுக்கு அடிமைதான் என்று பறைசாற்றியே வருகிறோம்.

அதனால்தான், அமெரிக்காவின் இந்திய துணைததூதரின் மகள் கிருத்திகா பிஸ்வாஸ் என்ற ஒரு சிறுமியை  அநியாயமாக - ஆபாச ஈமெயில் அனுப்பினார் என்று அமெரிக்க அரசாங்கத்தால் தண்டிக்கப்பட்டிருகிறார். ஒரு நாள் சிறைவாசம் அனுபவித்ததோடு, அளவுக்கதிகமான சித்திரவதையும் அனுபவித்திரிகிறார்.

அந்த பதினெட்டு வயது சிறுமிக்கு, குடிப்பதற்கு குடிநீர் கொடுக்காமலும், திறந்த வெளி கழிப்பிடத்தை பயன்படுத்த வைத்தும், எய்ட்ஸ் நோயாளிகள் அருகில் வைத்தும் சித்திரவதை செய்திருக்கிறார்கள் - இவ்வளவும் அவள் செய்திராத தவறுக்கு - ஒரு முறையான விசாரணை இல்லாமல்..


இறுதியில் தவறு செய்தது ஒரு சீன மாணவன் எனத்தெரிந்ததும் அப்பெண் விடுவிக்கப்பட்டாலும், அந்த மாணவன் தண்டிக்கப்படவில்லை..


காரணம் அவன் இந்தியன் அல்ல..சீனன்.

.இந்தியன்தான் அடிமை..இந்தியாவுக்கு அவர்கள் வந்தால் அவர்கள் கையில் நாம் ஆட்சியை ஒப்படைத்துவிடுவோம்.

அணு ஒப்பந்தத்தில் அமெரிக்கன் சொன்னதை மீறாமல் கையெழுத்திடுவோம்..பாகிஸ்தான் நம்மை தாக்கினால் - திருப்பித்தாக்க வக்கில்லாமல், அமெரிக்காவிடம் முறையிடுவோம்.. ஐ நா சபையில் உறுப்பினராக கூட அமெரிக்காவின் தயவையே எதிர்பார்க்க நேரிடுகிறது..

கிரிக்கெட் மைதானத்தில் மட்டும் தேசியக்கொடியை ஆட்டிவிட்டு, அணியும் ஆடைகளில் அமெரிக்க கொடி வரைந்த ஆடைகளை அணிவதே பெருமை என்று நினைக்கு அடிமைகளே இந்நாட்டில் அதிகமதிகம் உலா வருகிறார்கள்.

அமெரிக்கர்கள் சொல்லும் வேலையை இரவெல்லாம் விழித்திருந்து முடித்துவிட்டு, - தாம் கால் சென்டரில் வேலை செய்வதை கவுரமாக கருதும் அடிமைகளே அதிகம்..

பிறக்கும்போதே அமெரிக்காவில் வேலை செய்வதே லட்சியமாக கொண்டு  பிறக்கும்  "மேல்தட்டு" அடிமைகளும் அமெரிக்க தூதரக வாசலில் இரவு பகல் பாராமல் வெயில் மழை பாராமல் அவனுக்கு அடிமை சேவகம் செய்ய ஆவலாய் காத்திருக்கும் அடிமைகளும் இங்குதான் இருக்கிறார்கள்..


இன்னும் நாம் அடிமை மனோபாவத்திலேயே இருப்பதால்தான் இன்னும் குனிய குனிய குட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..

எப்போது எழுந்து திருப்பி குட்டப் போகிறோம்?


Tuesday, May 24, 2011

தமிழ்பதிவர்கள் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்..

 
மரியம்பிச்சை..!
திருச்சியில் அமைச்சர் கே.என் நேருவை தோற்கடித்து ...வெற்றி பெற்றவர்..பணபலம், அதிகாரபலம், அமைச்சரின் செல்வாக்கு போன்றவைகளைக்கடந்து வெற்றிபெற்றவர்..சிறுபான்மை பிரிவு மற்றும் சுற்று சூழல் சுகாதாரத்துறை அமைச்சராக பதவியேற்றவர்.
பதவி ஏற்ற ஒரே வாரத்தில் அகால மரணமடைந்துள்ளார்.
 
அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் மனிதர். அதுவும் ஒரு முக்கிய பொறுப்பிலிருந்தவர்..அகால மரணமடைந்துவிட்டார்..
நானும் இந்த இரண்டு நாட்களாக பார்த்துகொண்டிருக்கிறேன்..எந்த பதிவராவது அனுதாபம் தெரிவித்து பதிவிடுவாரோ என்று...ம்ஹூம்..அதை வெறும் செய்தியாகத்தான் ஓரிரண்டு பதிவர்கள்  வெளியிட்டு இருக்கிறார்களே தவிர அதைப்பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் வெறும் மொக்கை பதிவுகளும் சினிமா துதிகளுமே நிறைந்திருக்கிறது.
 
சினிமாவில் சம்பாதித்து தற்சமயம் நோய் வாய்ப்பட்டிருக்கும் ரஜினி என்னும் நடிகர் பற்றி - அவர் மீண்டு வந்து விடுவார்..அவருக்கு அந்த சிகிச்சை, அங்கே சிகிச்சை என்று மாய்ந்து மாய்ந்து எழுதியவர்களுக்கு - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்முறையாக அமைச்சராகி - அதை செயல்படத் தொடங்கும் முன்பே அகால மரணமடைந்த ஒரு மனிதருக்கு அனுதாபம் தெரிவிக்ககூடவா தோன்றவில்லை?
 
தமிழ் பதிவர்கள் அந்த அளவுக்கு மனிதாபிமானமற்றவர்களா?
 
பின் குறிப்பு :
அப்படி யாரேனும் பதிவிட்டிருந்தால் - அவர்களுக்கல்ல இந்த பதிவு..
அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்..

Monday, May 23, 2011

எங்கேயும் காதல்..! - எங்கேயும் காமம்..!!!



இப்படம் வெளியாகும் முன்பே, இப்படம், லவ் ஆஜ்கல் என்ற ஹிந்திபடத்தின் காப்பி என்றொரு பதிவை இட்டிருந்தேன்.

அப்படியேதான் காப்பியடித்து இருந்தாலும் அது தெரியாமலிருக்க சற்று மாற்றி படம் பிடித்து இருக்கிறார்கள்.மற்றபடி படம் முழுவதும் ஆபாசம் விரவிக்கிடக்கிறது.

இருந்தும் இந்தப்படம் பார்க்க நேர்ந்தது..சென்ற ஞாயிற்றுக்கிழமை இப்படத்திற்கான டிக்கெட் சிரமமின்றி கிடைத்ததற்கான காரணம் படம் தொடங்கிய பத்து நிமிடங்களில் தெரிந்துவிட்டது;



படத்தின் கதையை அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழி என்று இப்படத்தின் இயக்குனர் பிரான்சை காட்டுகிறார்.

பிரான்ஸ் சென்று வந்தவர்களுக்கு தெரியும்..அந்நாட்டில் ஆண்களும் பெண்களும் சிறிதும் வெட்கமின்றி..தெருவோரத்தில் நாய்கள் உறவு கொள்வதுபோல சாலைகளிலும், பூங்காக்களிலும் ஆபாச செய்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.



அந்த நீலப்படக் காட்சிகளைத்தான் காதல் என்ற பெயரில் அப்படத்தின் இயக்குனர் நமக்கு அறிமுகப்படுத்தி தன் ஆபாச வக்கிரத்தை தீர்த்துக்கொள்கிறார்.



பெரும் தொழிலதிபர் ஒருவன் செக்ஸ் ஆசையை தீர்த்துகொள்வதர்காகவே பிரான்ஸ் வருகிறானாம்..அவனுக்காகவே பிரான்ஸ் நாடு அழகிகள் எல்லாருமே காத்துக் கிடப்பதுபோல் அவனை சுற்றியும் ஆபாச அழகிகளின் கூட்டம். கேவலம்..



இந்திய கலாசாரத்திலேயே ஊறிய அழகி கதாநாயகியாம்.

இந்த ஆபாச நாயகனைக் கண்டவுடன் காதல் கொள்கிறாராம்.

அவனும் இறுதிவரை இவள் பெயர் தெரியாமலேயே ஊர் சுற்றுகிறான் கட்டிப்பிடிக்கிறான், சேர்ந்து படமெடுத்துக் கொள்கிறான்.இன்னும் டூயேட் எல்லாம் பாடிவிட்டு எனக்கு காதல் இல்லை என்று சொல்லிவிட்டு ஊர் திரும்புகிறான்.



ஒருவருடம் கழித்து ஒரு தண்ணி பார்டியில் இவளை சந்திக்கிறான்.

இந்திய கலாசாரத்தில் ஊறிய அந்த அழகி, இவனை அடைவதற்காக தனக்கு ஏராளமான காதலர்கள் இருப்பதாக கதை கட்டுகிறாள்.


அவனுடன் டேட்டிங் செல்கிறாள். தண்ணி அடிக்க கூப்பிடுகிறாள்..தண்ணியடித்து தள்ளாடி ஓர் இரவு அவன் ரூமிலேயே தங்குகிறாள்..
முன்பு அவள்மீது வராத காதல், அவள் பலருடன் சுற்றுகிறாள் என்று தெரியும்போது இவனுக்கு காதல் வருகிறது..

அதாவது ஒருத்தி பலருடன் சுற்றினால்தான் இவனுக்கு காதல் வருமோ? இதற்க்கு பெயர்தான் காதலா?


டிரயினில் டிக்கெட் எடுக்காமல் போவதற்கு ஆணும் பெண்ணும் ஆபாசமாக கட்டிபிடித்துக்கொண்டிருந்தால் அங்கே விட்டுவிடுவார்கள் என்றும் ஒரு முட்டாள்தனமான காட்சி.



படத்தின் கதாநாயகன் பலருடன் ஊர் சுற்றுகிறான்.

அவனது தோழனாக வருபவனும் பெண் பெண் என்று அலைகிறான்.

கதாநாயகி சம்மந்தமே இல்லாமல் கதாநாயகனிடம் காமம் (காதல்?) வயப்படுகிறாள்

கதாநாயகியின் தந்தையின் வேலையே அடுத்தவர்களின் கள்ளகாதலை துப்பறிவதுதான்

பிரான்சில் சாலைகளிலும் பூங்காக்களிலும் காதல் என்ற பெயரில் அனைவரும் ஆபாசமாக படுத்து கிடக்கிறார்கள்..

இப்படி படம் முழுவதும் வருபவர்கள் அனைவரும் காமவெறி  பிடித்து அலைகிறார்கள்..

இந்த குப்பையை படம் என்று எடுத்து காசுபார்க்க நினைத்தவர்களை திகார் ஜெயிலில்தான் களி திங்க வைக்கவேண்டும்..



எங்கேயும் காதல் அல்ல.. அல்ல..எங்கேயும் காமவெறி..


Saturday, May 21, 2011

கேட்கமறந்த கேள்விகள்!

கேள்வி 1


ஸ்பெக்ட்ரம் 2 G ஊழல் இன்று பெருமளவில் பேசப்படும் விசயமாக இருக்கிறது..

அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி போன்ற பெருந்தலைகள் கைது செய்யப்பட்டு இன்று சிறை வாசம் அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது..


மக்களுக்காக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று வந்ததை சரித்திரமாக சொல்லிவந்த காலம் போய் , இன்றைய அரசியல்வாதிகள் ஊழல் குற்றசாட்டுக்களுக்காக மட்டுமே சிறை செல்லும் அவலம் ஏற்ப்பட்டு இருப்பது இந்திய அரசியலின் கறைபடிந்த வரலாறாகிவிட்டது..

 இதுவரைக்கும் இந்தியாவிற்கு துளியளவுகூட நன்மையே செய்திராத பயங்கரவாத கட்சியான பார"தீய" ஜனதா கட்சி இந்த ஊழலை வைத்து இலாபம் அடைய பார்க்கிறது.

கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் கூட்டணியின் ஊழலை தட்டிக்கேட்பதர்காக, இந்த பயங்கரவாத கட்சியுடன் ஒத்துப்போக நேரிடுகிறது...

1995 ஆம் ஆண்டுகளில் மொபைல் போன் அறிமுகமாகியது... அப்போது காங்கிரசின் பொம்மை பிரதமர் நரசிம்மராவின் கடைசிகாலமாக இருந்தது.

அத பிறகு தேவகவுட, ஐ.கே குஜ்ரால் போன்றோர்கள் குழப்பமான ஆட்சிகாலம்..இந்த கால கட்டங்களில், நரசிம்மராவின் காங்கிரஸ் ஆட்சியை தவிர்த்து, தி.மு.க தொடர்ந்து ஆட்சியில் பங்கெடுத்து வருகிறது..

இந்த காலகட்டங்களில் ஆண்ட மத்திய அரசுகள், செல் போன் சேவையை அரசு நிறுவனமான பி எஸ் என் எல்லுக்கு வழங்காமல் தனியார் செல்போன் சேவை நிறுவனங்களான ஏர்டெல், ஆர் பி ஜி போன்ற நிறுவனகளுக்கு வழங்கப்பட்டு, அந்த நிறுவனங்கள் கொள்ளை இலாபம் சம்பாதித்ததை அனைவரும் அறிவோம் ..

இன்றைய கால கட்டங்களில் இன்கமிங் கால்கள் இலவசமாகவும், ஒரு அழைப்புக்கு ஒரு செகண்டுக்கு ஒரு பைசாவும் வாங்க செல்போன் நிறுவனங்களுக்கிடையே கடுமையாக நிலவும் போட்டிகளைப்பார்க்கும்போது, போட்டிக்கு நிறுவனங்களே இல்லாத காலகட்டத்தில் , ஒரு அழைப்புக்கு பதினாறு ரூபாய்களும், இன்கமிங் கால்களுக்கு எட்டு ரூபாய்களும் வசூலித்ததை நினைக்கும்போது, அந்த நிறுவனங்கள் எவ்வளவு கொள்ளை இலாபம் பார்த்திருப்பார்கள் என்பதை நினைக்கும்போது தலை சுற்றுகிறது..,


அன்று தனியார் நிறுவனங்கள்  அடித்த கொள்ளை பற்றியும், அதற்க்கு அனுமதி அளித்த அரசுகளை பற்றியும் அன்றும் சரி, இன்றும் சரி, ஸ்பெக்ட்ரம் ஸ்பெக்ட்ரம் என்று அலறும் அரசியல் கட்சிகள் மௌனம் சாதித்தது ஏன் ?

கேள்வி 2
இன்றைய தேதிகளில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் உதாரணமாக ரஜினிகாந்த், கமல் போன்றவர்கள் 1980  களில் எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பார்கள்? ..அவர்களுக்கு முன்பு நடித்துக்கொண்டிருந்த நடிகர்களான எம் ஜி ஆர் , சிவாஜி போன்றவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பார்கள்? எம் ஜி ஆர்..ஒரு படத்துக்கு அப்போது ஒரு லட்சம் சம்பளமாக பெற்றிருப்பார? சினிமாக்காரர்கள் பாஷையிலேயே சொன்னால் வெள்ளையில் ஒரு லட்சமும் கருப்பில் ஒரு லட்சமும்  வாங்கி இருப்பாரா?

விசயம் இதுதான்..
அப்போது அதாவது எம் ஜி ஆர் முதலமைச்சராக இருந்த பொது, விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாத இயக்கத்திற்கு  நான்கு  கோடிகள் தனது சொந்த பணத்தில் இருந்து கொடுத்தாராம்...
அன்றைய கால கட்டங்களில் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்பதே அளவுக்கதிகமான தொகையாக இருந்தபோது, முதலமைச்சராக இருந்த ஒருவர், அதுவும் தனது சொந்த பணத்தில் நான்கு கோடிகள் கொடுத்திருக்கிறார் என்றால்..அவரிடம் எவ்வளவு பணம் இருந்திருக்க வேண்டும்..அதுவும் ஒருவர் இதுமாதிரி கொடுக்கிறார் என்றால் அது உபரியான தேவைக்கும் அதிக அதிகமான பணமாகத்தான் இருந்திருக்க வேண்டும்..
அப்படியென்றால் எம் ஜி ஆரிடம் எவ்வளவு பணம் இருந்திருக்க வேண்டும்..அந்த பணம் எங்கிருந்து வந்தது..
மஞ்சள் பையுடன் திருட்டு ரயில் ஏறி வந்த கருனாநிதியிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று மேடைக்கு மேடை கூப்பாடு போடும் ஜெயலலிதாவும்  , அவரது தற்காலிக கூட்டாளி கருப்பு எம் ஜி ஆர் (?) விஜயகாந்தும் இதைப் பற்றி பேசுவார்களா?

இது கேட்க மறந்த கேள்விகள் என்று சொல்வதைவிட, கேட்காமல் விடப்பட்ட கேள்விகள் என்றுதான் சொல்லவேண்டும்...
அதைவிட ஒரு சுவராசியமான கேள்வி (3)

லத்திகா என்றொரு திரைப்படம் சன் டிவி துணை இல்லாமலேயே இத்தனை நாட்கள் (?) ஓடுகிறது.. ..போதாதற்கு அந்தப்படத்தின் நாயகன் இன்னும் ஏராளமான படங்களில் நடிப்பதாகவும் விளம்பரங்கள் வேறு வந்து பாடாய் படுத்துகிறது..இவருக்கு யார் இவ்வளவு படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள்..அல்லது அவரே அத்தனை படங்களையும் தயாரித்து நடிக்கிறார் என்றால் அவருக்கு என்ன பின்புலம்?