Pages

Friday, June 3, 2011

திசைமாறும் பறவைகள் - இவர்கள்தான் சினிமாக்கலைஞர்கள்...!1996 - இப்போதும் பசுமையாய் நினைவிலிருக்கிறது...அன்றைக்கு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் ஒட்டுமொத்த அதிகார துஷ்பிரயோகம், ஆடம்பரம், பகட்டு, லஞ்சம், ஊழல் என்று எங்கும் விரவிக்கிடக்க - தமிழகமே ஜெயலலிதாவை புறக்கணித்து அவரது ஆட்சி அகற்றப்பட்டது. முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதாவே அவரது தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்..

அன்றைய நாட்களில் - சினிமா நடிகர் ரஜினிகாந்த் "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது" என்று உளறினார்..

அதை தூக்கிபிடித்த ஆபாச பத்திரிகைகள், அதே ரஜினிகாந்த் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்து ஒரு விழாவில் கலந்து கொண்டபோது அதே மேடையில் வைத்து ஜெயலலிதாவை  "தைரிய லக்ஷ்மி" என்று மீண்டும் உளறியதை சிறிதும் வெட்கமின்றி மூளையின்றி வெளியிட்டு கொண்டாடின.,

சென்ற ஆட்சிகாலத்தில் கூட, தமது மகளின் திருமண அழைப்புக்கு, கருணாநிதியை அழைக்க தன மனைவியை அனுப்பிய ரஜினி, "தைரியலட்சுமி" ஜெயலலிதாவை அழைக்க தானே தன் மனைவியுடன் நேரில் சென்றார்.

இப்படிதான் சினிமாக்காரர்கள்..அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்திகள் என்பதற்கு ரஜினியின் இந்த நடவடிக்கைகளே சாட்சி..பால்தாக்கரேயை கடவுளாக வணங்கும் ரஜினிகாந்த் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்ற ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு எப்படி ஒட்டு போடுவார்?

அவர் சென்ற பாராளுமன்ற தேர்தலிலேயே பயங்கரவாத பார "தீய" ஜனதா கட்சிக்கு ஆதரவு என்று அறிவித்தவர்..

அவர் அதிமுகவுக்குத்தான் ஓட்டுபோட்டார் என்று தெரிந்தும் சினிமாக்காரரான கருணாநிதி அந்த பாசம் மாறாமல் - அன்றைய தினமே  ரஜினியுடன் "பொன்னர் சங்கர்" திரைப்படம் பார்க்க சென்றார்..கருணாநிதியின் சென்ற ஆட்சியில் அவரை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தவர்கள் எல்லாம் இன்று ஒன்றன் பின் ஒன்றாக தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கும் காட்சிகள் இவர்களது சுயநலத்தை அப்பட்டமாக காட்டுகிறது..

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற கே. பாலச்சந்தர் அதை எடுத்துகொண்டு ஜெயலலிதாவை சந்திக்கிறார்..


தங்கள் சன் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட ஆடுகளம் தேசிய விருது பெற்றுவிட்டது என்று சன் டிவிக்காரர்கள் அலப்பறை செய்துகொண்டிருக்க, அந்தப் படக்குழுவினரோ ஜெயலலிதாவின் வீட்டுக்கு சென்று பவ்யமாய் போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..சில காலங்களுக்கு முன் வெளிவந்த "நீதிக்கு தண்டனை" என்ற திரைப்பட்த்திருக்கு தயாரிப்பு மற்றும் திரைக்கதை இயக்கம் எஸ்.எ. சந்திரசேகர்.

கதை வசனம் கலைஞர் மு. கருணாநிதி. கதாநாயகன் விஜயகாந்த் . கதாநாயகி ராதிகா. இன்று அப்படம் சம்மந்தப்பட்ட அனைவருமே எதிர் எதிர் அணியில்.

எத்தனையோ தொண்டர்கள் கருணாநிதியின் முரசொலி கடிதத்தை படிப்பதையே பாக்கியமாக கருதிக்கொண்டிருக்கையில், நடிகர் என்ற காரணத்திற்காக சரத்குமாருக்கு கருணாநிதி ராஜ்யசபா எம்பி பதவியை கொடுத்தார்..
பதவி முடியும்போது சரத்குமார் ஜெயலலிதாவிடம் சரணடைந்தார்..

கருணாநிதி ஒன்றும் நல்ல அரசியல்வாதி அல்லதான்.உத்தமர் அல்லதான்..ஆனால் அவரால் பலனடைந்த  சினிமாக்காரர்கள் யாரும் அவரை விட்டு விலகிய காரணம் மக்கள் நலனல்ல..தம் சொந்த நலன்தான்..

எல்லாம் அப்பட்டமான சுயநலம்..

இந்த கூத்தாடிகளைத்தான் நாளைய முதல்வர்கள், என்று மக்களை நம்பவைக்க ஆபாச பத்திரிக்கைகள் போட்டி போட்டுக்  கொண்டிருக்கின்றன..2 comments :

ஷர்புதீன் said...

survival of fittest!! ( puriyuthubgala?)

nirvana said...

migavum unmayaina ,arumayana pathivu . Marmayogie. Your articles are here to stay and will live forever even after you leave this earth. Your articles will be a yardscale for future generations to analyse their lifestyle and culture. Thanks a lot and please continue your good work. Regards

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?