Pages

Wednesday, June 29, 2011

முதல்வனும் முதல்வியும்

முதல்வன் என்ற திரைப்படம் கடந்த ஞாயிறன்று தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது.

"தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும்  புகழேந்தி  ஆகிய நான் இந்திய  அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு,  எனது சுய வெறுப்பு விருப்புக்களுக்கு அப்பாற்பட்டு, பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே ஆட்சியை நடத்துவேன்!"

தனது தாய் தந்தையரை பாம் வைத்துக் கொன்ற எதிர்க்கட்சி தலைவரை - உணர்ச்சி வேகத்தில் கொல்ல புறப்பட்டு வரும் கதாநாயகன், மேற்கண்ட உறுதிமொழி நினைவிற்கு வந்தவுடன் தன்னை கட்டுபடுத்தி கொள்வதாக ஒரு காட்சி வரும்..

ஜெயலலிதாவின் அடிமையாக இருந்த இயக்குனர் ஷங்கர் கருணாநிதியின் இதற்க்கு முந்தைய ஆட்சி காலத்தில் இந்த படத்தை எடுத்திருந்தார்..அச்சமயம், மதுரையில் இப்படம எல்லா கேபிள் சேனல்களிலும் ஒளிபரப்பட்டு பரபரப்பாகி இருந்தது..

அதற்க்கு முன்பு, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கவர்னராக இருந்த சென்னா ரெட்டி போன்ற  ஒரு பாத்திரத்தை வில்லனாக சித்தரித்து ஷங்கரால் எடுக்கப்பட்ட படம் "காதலன்."

இப்படி சுய விருப்பு வெறுப்புக்களை  தம் படங்களில் திணித்து வந்த ஷங்கரின் படத்தில்தான் இது போன்ற வசனம்..சரி சரி..அவர்கள் வியாபாரிகள்..அவர்களது நோக்கம் வியாபாரம்தான்..

ஆனாலும் "முதல்வன்" திரைப்படத்தில் இந்த காட்சியை பார்த்தபோது தற்போதைய ஜெயலலிதாவின் ஆட்சியையும் அவரது நடவடிக்கைகளும் இப்படிதான் இருக்கிறதா என்ற ஒப்பீடு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை..

தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது, பலநாடுகளாலும் விரட்டியடிக்கப்பட்ட பயங்கரவாதி நரேந்திர மோடி என்பவனை பதவி ஏற்ப்பு விழாவுக்கு அழைத்தது -  முதல் கோணலாக அமைந்த அவரது ஆட்சி தொடர்ந்து அவரது சொந்த விருப்பு வெறுப்புக்களால் தடுமாறிக்கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள்...

மக்களில் கோடிக்கணக்கான வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்தது...
சமச்சீர் கல்வி குளறுபடி...
பதவி ஏற்பு விழாவிற்கு புறப்பட்ட ஒரு அமைச்சரே விபத்தில் மரணமடைந்தார்..அவரது மரணம் கொலையா விபத்தா எனபது இன்னும் குழப்பமாக உள்ளது..லாரியை பிடித்தோம் என்றார்கள்..ஓட்டுனரை பிடித்தோம் என்றார்கள்..அதற்குமேல் என்ன நடவடிக்கை எனபது  இன்று வரை தெரியவில்லை..
தனது முதல் வேலையே சட்டம் ஒழுங்கை சரிசெய்வதுதான்  என்று உறுதிமொழி எடுத்த  ஜெயலலிதாவின் இரண்டு மாத கால ஆட்சியில் மட்டும்    ஏராளமாக கொலைகளும், கொள்ளைகளும் நடப்பதை பார்க்கும்போது..., மேற்கண்ட உறுதிமொழி, சினிமா வசனம் - சினிமாவிற்காக எழுதப்பட்ட வசனம் எனபது போல அவர் நினைத்திருப்பதுபோல தெரிகிறது..

மின் வெட்டுக்கு காரணம் கருணாநிதிதான் என்று ஓலைமிட்டவர்களின் ஆட்சியில்தான் முன்பை விட மின்வெட்டு அதிகரித்துள்ளது...அதை மாற்ற என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதும் தெரியவில்லை

கலைஞர் காப்பீட்டு திட்டம்..பெயரை மாற்றி  இருக்கலாம்....ஆனால் திட்டத்தையே ரத்து செய்திருப்பது கலைஞர் என்று பெயரிட்டதினால்தான்..


தான் வெற்றிபெற்றது - மக்கள் கருணாநிதியின் - சொந்த விருப்பு மற்றும் வெறுப்புக்களால் - வெறுப்படைந்த மக்களின் கோபத்தின் வெளிப்பாடுதான் என்பதை அவர் சுத்தமாக மறந்து விட்டு வெற்றி மமதையில் இருக்கிறார்...

போகிற போக்கில் கருணாநிதி ஆட்சி காலத்தில் நடைபெற்ற திருமணங்கள் செல்லாது, அவரது ஆட்சி காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை குடியுரிமை கிடையாது, படித்த படிப்பு, வாங்கிய டிகிரி, வேலை, சம்பளம் எதுவும் செல்லாது என்ற அறிவிப்பு வந்தாலும்  வரலாம்..

தட்டிகேட்கவேண்டிய "ஜனநாயகத்தின் நான்காவது தூண்களும்" ஆபாச பத்திரிக்கைகளாகி, பத்திரிகை விபச்சாரத்தில் மும்முரமாக இருக்கின்றன..

எதிர்க்கட்சிகளோ, ஜெயலலிதாவை எதிர்க்க திராணி இன்றி அவரது அப்பாயின்ட்மென்ட்டுக்காக இரண்டுமாதங்கள் வெட்டியாக காத்திருந்து சந்தித்த மகிழ்ச்சியில் இருக்கின்றன. 

தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்க, விடுதலைப்புலிகளின் அடிமைகளான "புதிய தமிழ் பற்று வியாபாரிகளோ" தமிழ்நாட்டில் வேறு பிரச்சினையே கிடையாது எனபது போல இலங்கை பிரச்சினையை வைத்து மெரீனா பீச்சில் மெழுகுவர்த்திகளை  ஏற்றி வைத்துக்கொண்டு  விளம்பரம் தேடிக்கொண்டிருக்கின்றன ..

தினசரிகளோ பிரபல நடிகனின் அடுத்த படத்தைப் பற்றியும், அவர் அடுத்த வாரம் வருவார், அடுத்த மாதம் வருவார் என்று  அலறிக்கொண்டிருக்கின்றன..
அது போக, தயாநிதி மாறனின் பதவி பற்றியும், கருணாநிதியின் டெல்லி பயணம் பற்றியுமே எழுதி பரபரபூட்டுகின்றன..
உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருந்தால் இந்த குளறுபடிகளையும் தைரியமாக கேட்க வேண்டும்

இவைகளால் பாதிக்கப்படும் சராசரி தமிழனோ, டாஸ்மாக் கடைகளிலும், சினிமா தியேட்டர்களிலும், டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் தன காலங்களை கழித்துக் கொண்டிருக்கிறான்..


23 comments :

Arun Kumar said...

I Appreciate your Open Talk and Agree with your points mentioned in a post.

Mannar said...

இவைகளால் பாதிக்கப்படும் சராசரி தமிழனோ, டாஸ்மாக் கடைகளிலும், சினிமா தியேட்டர்களிலும், டிவி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் தன காலங்களை கழித்துக் கொண்டிருக்கிறான்..

கூடவே ப்ளாக் எழுதிக்கொண்டு!!!!

கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...

Vela vetti illama neenga eluthiringa naanga padiukkarom avlothanVela vetti illama neenga eluthiringa naanga padiukkarom avlothan

மர்மயோகி said...

நன்றி திரு Arunkumar

மர்மயோகி said...

நன்றி திரு Mannar

மர்மயோகி said...

//கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
Vela vetti illama neenga eluthiringa naanga padiukkarom avlothanVela vetti illama neenga eluthiringa naanga padiukkarom அவ்ளோதான்//


உங்களுக்கென்ன கேரளகாரன்...டீயிலேயே டைமண்ட் டீ., இன்ஜி டீ, சிங்கிள் டீ, கப் டீன்னு பல டீயா பிரச்சு வித்து தமிழ்நாட்டுக்காரன்கிட்டே நல்ல மொளகா அரைச்சி ஏமாத்தி சம்பாதிக்கிறீங்க..ஏன் சொல்லமாட்டீங்க நாங்க வெட்டியா இருக்கோம்னு..

முழு கிளாஸ்லே முக்கால் டீ போட்டு சிங்கிள் டீன்னு ஏமாத்துற திறமை கேரளா காரண விட்டா வேறு யாருக்கு வரும்..

Dr. சாரதி said...

//தட்டிகேட்கவேண்டிய "ஜனநாயகத்தின் நான்காவது தூண்களும்" ஆபாச பத்திரிக்கைகளாகி, பத்திரிகை விபச்சாரத்தில் மும்முரமாக இருக்கின்றன..//

//எதிர்க்கட்சிகளோ, ஜெயலலிதாவை எதிர்க்க திராணி இன்றி அவரது அப்பாயின்ட்மென்ட்டுக்காக இரண்டுமாதங்கள் வெட்டியாக காத்திருந்து....//

அருமை......

Jayadev Das said...

\\பலநாடுகளாலும் விரட்டியடிக்கப்பட்ட பயங்கரவாதி நரேந்திர மோடி என்பவனை பதவி ஏற்ப்பு விழாவுக்கு அழைத்தது\\ இப்படியெல்லாம் நீங்களாக அளந்து விடக் கூடாது, அவர் ஒரு முதல்வராக தனது மாநில மக்களை எப்படி வைத்திருக்கிறார் என்று பாருங்கள், அங்குள்ள முஸ்லீம்களே இவருக்கு வாக்களிக்கிறார்கள். கருணாநிதியைக் காப்பியடித்து இலவசம் கொடுக்கிறேன் என்ற காங்கிரசை புறந்தள்ளிவிட்டு, மின்சாரக் கட்டணம் செலுத்தாதவர்களிடம் வட்டியோடு வசூல் செய்வேன் என்ற இவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். குஜராத்திகள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை,மோடியைப் பற்றி தவறாக எழுதும் இந்திய ஆகில சேனல்கள் அத்தனைக்கும் பின்னணியில் அவற்றின் கிறிஸ்தவ முதாளிகள் உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்.

Jayadev Das said...

\\மக்களில் கோடிக்கணக்கான வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்தது...\\ அதில் கருணாநிதி கொள்ளையடிக்க போட்ட சினிமா செட்டிங். அங்கே தலைமைச் செயலகம் இருந்தால் பாதிப்பு போது மக்களுக்குத்தான். பணத்தாசை பிடித்த கருணாநிதி புத்தி கெட்டுப் போய் செய்து விட்டார்.அதை ஏதாவது உபயோகமான விஷயத்துக்கு அம்மா பயன்படுத்துவார் என நம்புவோம்.

Jayadev Das said...

\\சமச்சீர் கல்வி குளறுபடி...\\ இந்தி எதிர்ப்பு, தமிழில் மருத்துவம், பொறியியல் என்று தமிழன் வெளியே சென்று பிழைப்பதில் மண்ணை வாரிப் போட்ட கருணாநிதியின் திட்டம் இது. இதன் மூலம் அரசுப் பள்ளியின் கல்வித் தரம் உயருமா என்பதே கேள்வி. [அட, அட் லீஸ்ட் தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்கும் அரசு ஆசிரியர்கள் இக்கல்வித் திட்டம் அமுல் படுத்தியவுடன், அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க முன் வருவார்களா?]

Jayadev Das said...

\\தனது முதல் வேலையே சட்டம் ஒழுங்கை சரிசெய்வதுதான் என்று உறுதிமொழி எடுத்த ஜெயலலிதாவின் இரண்டு மாத கால ஆட்சியில் மட்டும் ஏராளமாக கொலைகளும், கொள்ளைகளும் நடப்பதை பார்க்கும்போது..., மேற்கண்ட உறுதிமொழி, சினிமா வசனம் - சினிமாவிற்காக எழுதப்பட்ட வசனம் எனபது போல அவர் நினைத்திருப்பதுபோல தெரிகிறது.\\ தி.மு.க ஆட்சி என்றாலே முதல் வேலை ரவுடிகள் கட்டவிழ்த்து விடப் பட்டு ஆட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள். இதை எந்த சென்னை வாசியிடம் வேண்டுமானாலும் கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். அம்மா வந்தால், ரவுடிகள் மட்டுமல்ல, தீவிர வாதிகள், அந்நிய நாட்டு தீய சக்திகள், வீரப்பன் மாதிரி ஆட்களும் கட்டுப் படுத்தப் படுவார்கள் or eliminate ஆவார்கள். இது நிஜம்.

Jayadev Das said...

\\கலைஞர் காப்பீட்டு திட்டம்..பெயரை மாற்றி இருக்கலாம்....ஆனால் திட்டத்தையே ரத்து செய்திருப்பது கலைஞர் என்று பெயரிட்டதினால்தான்.\\ அதென்னது கலைஞர் காப்பீட்டு திட்டம்? அவர் அப்பன் வீட்டுக் காசில் போட்ட திட்டமா? ஏன் "கலைஞர் மின் வெட்டு", கலைஞர் பால் விலை உயர்வு,கலைஞர் விலைவாசி உயர்வு என்று பெயர் வைக்க வேண்டியதுதானே? இத்திட்டத்தால் கொழுத்தது தனியார் மருத்துவமனைகளும், அவர்களது கமிஷனைப் பெற்ற கருணாநிதியும் தான். மக்களுக்கு அதே அரசு மருத்துவ மனையும், அங்கிருந்து கண்ணம்மா பேட்டையும் தான் .

Jayadev Das said...

\\தினசரிகளோ பிரபல நடிகனின் அடுத்த படத்தைப் பற்றியும், அவர் அடுத்த வாரம் வருவார், அடுத்த மாதம் வருவார் என்று அலறிக்கொண்டிருக்கின்றன..\\ அரசியலுக்கு எப்போ வருவார் என்ற கேள்வி போய் ஆஸ்பத்திரியில் இருந்து எப்போ வருவார்னு ஆயிடிச்சா?

அருண் இராமசாமி said...

Jayadev Das ... super sir.. pattaya kelapiteenga ...

மர்மயோகி said...

திரு Jayadev das, திரு அருண் இராமசாமி

பயங்கரவாதி நரேந்திர மோடி அமேரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளால் விசா மறுக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டவன். காரணம் அவன் ஒரு பயங்கவாதி என்பதால்தான்..இது நானாக ஒன்றும் சொல்லவில்லை
இதெல்லாம் தெரிந்தும், தமிழ்நாட்டில் இருந்துகொண்டும் அங்கே அவன் நல்லாட்சி செய்கிறான் என்று வக்காலத்து வாங்குவதும் நீங்களிருவரும் அந்த பயங்கரவாதியின் அனுதாபியாக இருப்பதும் உங்களது வன்மத்தையும்
இனப்பற்றையுமே காட்டுகிறது..
இது அதற்கான தளம் அல்ல

Jayadev Das said...

அப்பாவி நாடு வியட்நாம் மீது வீணாக போர் தொடுத்து பொருள், உயிர் சேதம் உண்டு பண்ணியது, ஜப்பான் மேல அணுகுண்டை போட்டது, ஆபத்தான ஆயுதம் இருக்குன்னு சொல்லி அனாவசியமா ஈராக் மேல போர்தொடுத்து நாசம் பண்ணியது எல்லாத்துக்கும் மேல தனக்கு சந்தேகம்னு வந்துட்டா ஐக்கிய நாடுகள் சபை உட்பட யாரையும் மதிக்காம போய்த் தாக்குவது இதெல்லாம், அமெரிக்கா காரன்தான் ஒன்னாம் நம்பர் பயங்கரவாதி என்பதற்கான உதாரணங்கள். உலகில் தனது சாம்ராஜ்யத்தில் சூரிய அஸ்தமனமே இல்லை என்ற அளவுக்கு வளைத்துப் போட்டு அங்கிருந்த சொத்துக்களை களவாடி தங்கள் நாட்டிற்கு எடுத்துச் சென்றவர்கள் இங்கிலாந்துக் காரர்கள், இந்த இரண்டு அயோக்கியர்கள் சொல்வதெல்லாம் ஒரு பேச்சா நண்பரே? குடி குடியைக் கெடுக்கும் என்று தெரிந்திருந்தும் அரசே குடியை விற்கும் தமிழ் நாடு போன்ற வக்கத்த அரசுகள் இருக்கும் நாட்டில் அதை தடை செய்வதிலிருந்து நீர் தெரிந்து கொள்ள வேண்டும், அவர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்று.

மர்மயோகி said...
This comment has been removed by the author.
மர்மயோகி said...

மிக்க நன்றி திரு Jayadev Das அவர்களே
நீங்களே சொன்னது போல அமெரிக்காவும், இங்கிலாந்தும் உலகின் மிக பயன்கரமானவர்கள்தான்..அப்பேற்பட்ட பயங்கரமான நாடுகளே ஒருத்தனை விரட்டி யடிக்கின்றன என்றால்....இவன் எவ்வளவு பயங்கரமானவனாக இருப்பான்?
இவனது படுபாதக செயல்களுக்கும் தெகல்காவின் புலனாய்வு வீடியோ..மற்றும் அவனது பயங்கவாத செயல்களுக்கு சாட்சியாக இருந்த அதிகாரிகள் என்று உணமையான சாட்சிகள் இருந்தும் இன்னும் நீங்கள் அவனை குற்றவாளி அல்ல என்று சொல்வது மனிதத்தன்மையற்ற காரியம்..மேலும் பார "தீய" ஜனதாவின் கைப்பாவை அன்னா ஹசாரே என்பவரே மோடியின் ஊழல் பற்றி சொல்லும்போது அவனை ஊழலற்ற ஆட்சி செய்கிறான் என்று எப்படி நீங்க நம்புகிறீர்கள்?

Jayadev Das said...

குஜராத் முதல்வரை தீவிரவாதி, பயங்கரவாதி என்று வெளிநாடுகள் சொல்வதால் அவர் அவ்வாறாகி விட்டார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. மேலும், தீர்ப்பு சொல்ல அண்ணா ஹசாரே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும் அல்ல. சட்டத்துக்குப் புறம்பாக செயல் பட்டதற்கு ஆதாரம் இருக்கிறதென்றால், மத்தியில் ஆளும் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்கள் இவருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்கிறீர்களா? யோக்கியமான கருணாநிதியின் ஆட்சி எப்படி இருந்தது? மாநிலத்தில், மக்களை ஹிந்தியை படிக்காதே என்று துர்போதனை செய், தமிழிலேயே என்ஜினீயரிங் மருத்துவம் படித்து கிணற்றுத் தவளையாகவே செத்துப் போ, சாராயத்தை குடித்து எனக்கு கள்ளப் பணம் கிடைக்குமாறு செய், முன்னேற்றத் திட்டங்களுக்கு வரும் பணத்தை எல்லாம் இலவசத்துக்குச் செலவழித்து மக்களை சோம்பேறிகளாக்கி, நலத்திட்டங்களை கிடப்பில் போடு, விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொள்ளை லாபத்துக்கு விற்று பணத்தை பையில் போட்டுக் கொள், இலவச தொலைக் காட்சி கொடுத்து அதன் பின்னால் கேபிளை சொருகி கல்லா கட்டு, மத்திய அமைச்சரைவையில் கேட்ட துறைகள் கிடைக்கவில்லை என்றால் ஆதரவு வாபஸ் என்று சொல்லி, அதே சமயம் மாநிலங்களுக்கிடையே உள்ள நதி நீர்ப் பிரச்சினைகளில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மற்ற மாநிலங்கள் காலில் போட்டு மிதித்தாலும் வாயைப் பொத்திக்கொண்டு இரு, மகன்களுக்கும் பேரன்களுக்கும் பதவி வேண்டி வீல் சேரில் டில்லி வரை போ, ஆனால் மாநில முதல்வர்கள் கூட்டம் நடக்கையில் ரம்பா திருமண வரவேர்ப்புக்குப் போ.......... என்று ஊதாரித்தனமான ஒரு முதலமைச்சரை விட்டுவிட்டு, மோடியை விமர்சிப்பது வேடிக்கை. இங்கிலாந்து நாட்டுக்காரன் குப்பையை தூத்துக் குடியில் கொண்டுவந்து கொட்ட அனுமதிப்பதால், கருணாநிதியை நல்லவன் என்பான், விலை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி கொடுத்தால் நல்லவன் என்பான், ஆனால் குஜராத்தில் உள்ள மக்கள் அம்மாநில முதல்வரை நல்லவர் என்கிறார்கள். அது தான் முக்கியம்.

மர்மயோகி said...

உங்கள் வாதத்தை தொடர்வதற்காக நீங்கள் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் கருணாநிதியை இழுக்கிறீர்கள்..கருணாநிதியை நான் நல்லவர் - உத்தமர் என்றும் சொல்லவில்லை..அவர் ஒரு மன்னரைப் போல ஆட்சி செய்து வாரிசு ஆட்சியை கொண்டுவர முயற்ச்சித்தார். இன்னும் நீகள் குறிப்பிடுவதுபோல சினிமாக்கூத்தாடிகளையே சார்ந்தும் இருந்தார்..இது பற்றி எனது பல பதிவுகளில் தெரிவித்துள்ளேன்..இன்னும் சொல்லப்போனால் இந்த முறை கருணாநிதி வென்றுவிடக்கூடாது என்று பலரிடமும் நான் பேசிவந்திருக்கிறேன்.
அவரது தவறினாலேயே மக்கள் அவரிடம் இருந்து ஆட்சியை பறித்தனர்..
குஜராத் மோடியை மத வெறியர்கள் நல்லவர் என்றுதான் சொல்லுவார்கள்..அப்படியென்றால் தெகல்கா ஆதாரம், அந்த வீடியோவில் சாட்சி சொன்ன பயங்கரவாதிகள் அனைவரின் வாக்குமூலமும் பொய்யென்று சொல்கிறீர்களா?
அவரது ஆட்சியில் காவல்துறையில் பணிபுரிந்த பலரின் வாக்குமூலம் பொய்யென்று சொல்ல வருகிறீர்களா? அல்லது மோடியை நல்லவன் என்று காட்டி என்ன சொல்ல வருகிறீர்கள்?

Jayadev Das said...

\குஜராத் மோடியை மத வெறியர்கள் நல்லவர் என்றுதான் சொல்லுவார்கள்..\\ அப்படிஎன்றால் மொத்த குஜராத் மாநில மக்களும் [குறைந்தபட்சம் இவரைத் தேர்ந்தெடுத்த மெஜாரிட்டி மக்கள்] மதவெறியர்கள் என்கிறீர்களா?

\\அப்படியென்றால் தெகல்கா ஆதாரம், அந்த வீடியோவில் சாட்சி சொன்ன பயங்கரவாதிகள் அனைவரின் வாக்குமூலமும் பொய்யென்று சொல்கிறீர்களா?\\ மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ், கொஞ்சம் வாய்ப்பு கிடைக்காதா மோடியை சிக்கலில் போடலாம் என்று நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறது. ஆதாரம் இருக்கிறதென்றால் நடவடிக்கை எடுக்கட்டுமே? ஏன் எடுக்க வில்லை?
\\அவரது ஆட்சியில் காவல்துறையில் பணிபுரிந்த பலரின் வாக்குமூலம் பொய்யென்று சொல்ல வருகிறீர்களா? அல்லது மோடியை நல்லவன் என்று காட்டி என்ன சொல்ல வருகிறீர்கள்?\\ சட்டப் படி நடவடிக்கை எடுக்கட்டும். தீவிரவாதி என்பதை நீதிமன்றம் சொல்ல வேண்டும், நீங்களோ நானோ அல்ல.

இயக்குனர் சார்லஸ் said...

அன்புள்ள மர்மயோகி
இப்படி எல்லாரையும் குற்றம் சுமத்துவதை, திட்டுவதை நிறுத்திவிட்டு, டிவி சினிமா பார்ப்பதையும் பொழுதுபோக்குப் பத்திரிகைகளைப் படிப்பதையும் கூட கொஞ்ச காலத்துக்கு நிறுத்திக்கொண்டு, நீங்கள் சமூக மாற்றத்துக்காக வீதியில் இறங்கி செயலாற்றலாமே. அல்லது குறைந்த பட்சம் ஏதாவது ஒரு உண்மையான மக்கள் பிரச்சனையை ஆழமாக ஆராய்ந்து தெளிவான நல்ல ஒரு பதிவையாவது எழுதலாமே.

NAN RAAVANAN said...

////தமிழ்நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்க, விடுதலைப்புலிகளின் அடிமைகளான "புதிய தமிழ் பற்று வியாபாரிகளோ" தமிழ்நாட்டில் வேறு பிரச்சினையே கிடையாது எனபது போல இலங்கை பிரச்சினையை வைத்து மெரீனா பீச்சில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துக்கொண்டு விளம்பரம் தேடிக்கொண்டிருக்கின்றன ..
//////


nengalum seiya matinga...aduthavan seithal kasakutho...!!!....ungaluku ena oru naal pathiva potutu poiduvinga.... sagurathu nanga thane!!!

unga manda mela piranchana vantha than ...iyo amma nu alaritu oduvinga....!!!

MUTHALA IPDI MOKKA PATHIVA POTU ASINGA PADUTHATHINGA!!!!

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?