Pages

Tuesday, June 7, 2011

ஆண்மைதவறேல்... - வழிகேடலுக்கான வழி



படம் தொடங்கியதிலிருந்தே - திருட்டுத்தனம் செய்வது எப்படி என்கிற பாடம் தொடங்கி விடுகிறது..

முதல் காட்சியே, ஒர்க் ஷாப்பில் திருட்டுக்காரை எப்படி வாங்குவது என்பதுதான்..

அந்த காரை வைத்து, அழகான (?) பெண்களை கடத்துகிறார்கள்..எதற்கு..ஏற்கனவே பல படங்களில் பார்த்ததுபோல..விபச்சாரம் செய்வதற்குதான்..

நடிகர்கள் யாரும் நடிக்கதெரியாதவர்களாகவே இருப்பது சிரிப்பை வரவழைக்கிறது..

ஆரம்பகட்ட காட்சிகள் யுத்தம் செய் என்ற படத்தை நினைவு கூறுகின்றன

கால் சென்டரில் இரவு நேரம் வேலை பார்க்கும் பெண் - பெற்றோரை ஏமாற்றிவிட்டு காதலனை எப்படி சந்திப்பது என்பதில் தொடங்கி,

பெண்களை எப்படி கடத்துவது,

எங்கெங்கு விபச்சாரம் நடக்கிறது,

பெண்களை எங்கு சென்று விற்கிறார்கள்,

ஏலம் எப்படி நடக்கிறது,

ஆன்லைன் ஏலம் மூலம் பெண்களை எப்படி விலைக்கு வாங்குவது..

பெண்களை கடத்தி செல்லும்போது, செல்லும் வழியில் உள்ள செக் போஸ்ட்களில் எப்படி தப்பிப்பது,

விபச்சாரத்திற்கு விற்கும் முன்பு பெண்களை வெர்ஜின் டெஸ்ட் செய்யவேண்டும் போன்ற விவரங்களை அழகாக பாடம்போல் நடத்தி அருமையான ஒரு அசிங்க வியாபாரம் செய்கிறார்கள்..

கதாநாயகன் வெல்டிங் தொழிலாளி போல இருக்கிறான்..அவன் ஜஸ்ட் டயல் கால் சென்டரின் டீம் லீடராம்.

கதாநாயக அறிமுகமே அவளை - ஒரு தொழிலாளி - போல அங்கம் அங்கமாக அறிமுகம் செய்து இயக்குனர் தம் அரிப்பை தீர்த்துகொள்கிறார்.



வீட்டில் காலை ஆறு மணிக்குதான் வேலை முடியும் என்று பொய் சொல்லி - காலை நாலு மணிக்கே கதா நாயகனை காத்திருக்க சொல்லி, அவனுடன் ஜல்சா செய்கிறாள் கதாநாயகி. - வேறு என்ன உலக பொருளாதாரம் பற்றியா பேசுவார்கள் ? .இவர்கள் பிறந்ததிலிருந்து காதலிக்கிறார்களாம் ..இந்த கதையை சொல்வதற்காக நான்குபேரை குடிக்கவைக்கிரார்கள்..



கடைசியிலும் தாமதாமாக காதலன் வந்து காப்பாற்றுவதை - சொல்வதற்காகவே, காதலனுக்கு பதிலாக எப்போதும் காதலியே காத்திருப்பது போன்ற வலுக்கட்டாயமான காட்சிகள்..

கடத்தப்பட்ட காதலியை காதலன் பலவகையிலும் தேடுகிறான்..போலிஸ் அதிகாரிகள், விபச்சார தடுப்பு பிரிவு, ஆள் கடத்தல் தடுப்பிரிவு போன்ற அதிகாரிகளால் கைவிடப்படும் கதாநாயகனை, ஒரு அதிகாரி "இதற்கெலாம் அவர் வந்தால்தான் சரிப்படும்" என்று சொல்லும்போதே பகீர் என்கிறது..எங்கே நமது கேப்டன் வந்துவீடப்போகிராரோ என்று..

நல்லவேளை அப்படி ஒன்றும் நடந்துவிடவில்லை..

எல்லாவற்றையும் கண்டுபிடிக்கும் "அவர்" முன்னாள் போலிஸ் அதிகாரி..எனவே எல்லாமே சுலபமாக முடிந்து விடுகிறது..

ஆனாலும் இடைவேளையில் அந்த அதிகாரியை பாம் வைத்து கொன்று விடுகிறார்கள்..

கதாநாயகனே எந்த சிக்கலும் இல்லாமல் கதாநாயகியை கண்டு பிடித்து விடுகிறான்.

திடீரென கொல்லப்பட்ட அந்த அதிகாரி வந்து நிற்கிறார்..

"சார் நீங்க எப்படி சார்"

"அதை எல்லாம் இப்போ சொல்லிகிட்டிருந்தா நேரம் பத்தாது "

இன்னொரு படம் எடுத்து அவர் எப்படி தப்பித்தார் என்று சொல்வார்கள் போல...



எப்படியோ , கதா நாயகன் கதாநாயகியுடன் கிளைமாக்சில் இணைந்து விடுகிறான்...

பெண் கடத்தல், செக் போஸ்டில் தப்பித்தல், போலிசால் அலைகளிக்கப்படுதல் போன்றவற்றை விலாவாரியாக காட்டியவர்கள், பெண் காப்பாற்றப்படுவதை, வெறும் சண்டைகாட்சி, ஒரு ஆக்ரோஷ பாடல், துப்பாக்கி சுடுதல் போன்ற சாதாரண மசாலாக் காட்சிகள் மூலம், தங்கள் நோக்கம், பெண்களை கடத்துவது எப்படி என்று காட்டுவதுதான் என்று உணர்த்தி இருக்கிறார்கள்.

ஏதோ சுதந்திரத்திற்காக போராட்டம் போல இறுதிகாட்சியில் வில்லன் சொல்லும் ஒரு வசனம்..
"நான்தான் தோற்றுபோய் விட்டேன்..இந்த பிசினஸ் தோற்கவில்லை" 

ச்சே..வெட்கமாக இல்லை?
ஆண்மை தவறேல்..பொறுப்பை உணர தவறியவர்கள்..

12 comments :

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் விமர்சனம்..

ஷர்புதீன் said...

WOW!WONDERFUL! CHANCELESS! GREAT

VERA ennaththa solla?

:)

"ராஜா" said...

எனக்கு என்னமோ படம் எடுக்கிற அவனுங்களை விட , இப்படித்தான் படம் இருக்கும் என்று தெரிந்தும் எல்லா பாடங்களையும் பார்த்து விடும் உங்களுக்குதான் சமூக பொறுப்பு கொஞ்சம் அல்ல நிறையவே குறைந்து விட்டது என்று நினைக்கிறேன் ...

nirvana said...

Marmayogie : Neengal neraya unmai pesuvathal ungalauku nanbargal kuraivu thane?

மர்மயோகி said...

நன்றி திரு வேடந்தாங்கல் கருண்

மர்மயோகி said...

நன்றி திரு சரபுதீன்..

நான் ரசிகனல்ல எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருப்பதற்கு

மர்மயோகி said...

நன்றி திரு ராஜா

அனைத்து படங்களையும் நான் பார்த்துக்கொண்டிருப்பதில்லை..

அதே சமயம் படங்களின் உண்மை சொரூபத்தை வெளிக்காட்டவேண்டிய பொறுப்பும் உள்ளதல்லவா..வேறு வழி ..தரமற்ற படங்களையும் பார்த்துத்தானே மற்றவர்களை தடுக்க முடியும்..

மர்மயோகி said...

நன்றி திரு nirvana

எனக்கு உண்மையிலேயே நண்பர்கள் அதிகம் நண்பரே..

மற்றபடி அவர்கள் என்னிடம் உண்மையை சொல்கிறார்களா எனபது எனக்கு தெரியவில்லை ;)

mohamed said...

CONGRATZ.. EVERYONE SHOULD GET GOOD THOUGHTS LIKE YOU.

மர்மயோகி said...

தங்களது அபிப்பிராயத்திருக்கு மிக்க நன்றி திரு MOHAMED

cisco said...

intha marmayogi arivillaathavan....

cisco said...

http://onelanka.wordpress.com/2011/06/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86/

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?