Pages

Monday, June 6, 2011

பாபா ராம்தேவின் நாடகமும் - அரசின் மிகச்சரியான நடவடிக்கையும்..


இவர்கள் போன்றவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது உத்தமம்..ஆனால் என்ன செய்வது..எல்லாரும் இவரைப்பற்றியே எழுதிவருவதால்...பதிவுலக மரபை மீறமுடியுமா..பாபா ராம்தேவ் என்ற நடிகர் (?)..இத்தனை நாள்களாக யாருக்கும் தெரியாமல்தானிருந்தார்.. விளம்பரமோகம் பிடித்தலையும் இந்த நாட்டில் இவருக்கும் ஒரு விளம்பரம் தேவைப்பட்டுள்ளது..என்னசெய்வது..

"புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது.." என்ற பழமொழி நிச்சயமாக இந்த யோகா சாமியாருக்கு பொருந்தும்.

அன்னஹசாரே ஆர்பாட்டமில்லாமல் -உண்ணாவிரதமிருந்து - பெயர்வாங்கியது இந்த ஆர் எஸ் எஸ் சாமியாருக்கு பொறுக்கவில்லை...தாமும் பெயர்வாங்கவேண்டும், பிரபலமாகவேண்டும் என்றதோர் ஆசை..

ஊழலை ஒழிக்க நினைப்பவன் கொஞ்சமாவாது கை சுத்தம் வேண்டும்..

ஏற்கனவே நிலமோசடி விவகாரத்தில் கலெக்டரின் விசாரனைக்குள்ளானவர் இந்த பாபா ராம்தேவ். இப்போது அந்த நிலங்களை திருப்பித்தருவதாக சொல்லி இருக்கிறாராம்..

இப்படி இருக்கிறது இந்த ஊழல் எதிர்ப்பு நடிகரின் லட்சணம்..

அதுபோக "ராம்லீலா" மைதானத்தை, இருபது நாட்கள் யோகோ பயிற்சி செய்வதற்காக டெல்லி போலீசாரிடம் அனுமதிவாங்கிவிட்டு, திடீரென்று உண்ணாவிரத நாடகம் மேற்கொண்டிருப்பதும் நேர்மையான செயலாக தெரியவில்லை..

எந்த சாமியார் வந்தாலும் அவன் பின்புலத்தை சிறிதும் ஆராயாமல், அவன் பின்னாடி அலையும் "ஆபாச வியாபாரிகளான" பத்திரிக்கைகளும் இந்த வகையை சார்ந்தவையே..

தனக்கு வியாபாரம் நடந்தால் போதும் - செய்திகள் எப்படி இருந்தால் என்ன..? அன்றைய தினம் பரபரப்பாக இருக்கவேண்டும் . இதுதான் இந்த ஆபாச வியாபாரிகளின் நோக்கமும்..


மத்திய அரசை நிர்பந்தித்து போராட்டம் நடத்த துணிந்தவருக்கு, போலிசின் நடவடிக்கையை எதிர்கொள்ள துணிவில்லாமல் போனதும், போலீசிடம் இருந்து தப்பிக்க பெண்களுடன் கலந்து, பெண்ணுடை அணிந்து தப்பிக்க முயற்சித்ததும் கேவலமாக உள்ளது..


இவர்கள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்து விட்டு, ஒருநாள் காவலில் இருக்க கூட தைரியமில்லாதவர்கள்..இதிலிருந்தே இவர்களது போராட்டம் பித்தலாட்டம் எனபது தெளிவாகிறது..எப்போதுமே, ஆங்கிலேயரிடம் மன்னிப்புக்கடிதம் கொடுத்தே தப்பித்து பழக்கப்பட்ட ஆர் எஸ் எஸ் கோழைகளின் ஆசீர்வாதத்துடன் நடக்கும் நாடகமல்லவா இது?

ராம்தேவ் விசயத்தில் - மத்திய அரசின் நடவடிக்கை உறுதியானது..பாராட்டுக்குரியது..அனால் இதே நடவடிக்கைகள்,

காமென்வெல்த் ஊழல்,

ஸ்பெக்ட்ரம் ஊழல்

கார்கில் வீரர்களுக்கான கட்டிட ஊழல்,

பயங்கரவாதிகள் விடுதலைப்புலிகளுக்கு இங்கே ஏஜெண்டுகளாக இருந்துகொண்டு தமிழ் வீரம் பேசும் துரோகிகள்

போன்றவைமீது கடும் நடவடிக்கை எடுத்தால் இன்னும் நாடு உருப்படும்..

டிஸ்கி : உண்ணாவிரதம் இருந்தால் யோகா செய்வது சற்று சுலபமாக இருக்குமாமே..உண்மையா?


2 comments :

மர்மயோகி said...

:(

heartripper said...

ivan police la irunthu thappikka innoru pombala dress a uruvi pottutu poirukaan.appo ivan edathula ennenna panni irupaan.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?