Pages

Friday, July 23, 2010

மனிதாபிமானம் vs தமிழின உணர்வு!!!

முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் கைப்பற்றி விட்டாராம்..அவர் தமிழராம்..இங்கே தமிழினப் பற்றாளர்கள் கொண்டாடுகிறார்கள்...

முத்தையா முரளிதரன் என்பவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர்..இதில் எங்கே மொழி வந்தது?

வீ ராமகிருஷ்ணன் என்பவர் வேதியலுக்காக நோபல் பரிசு வென்றார்...இவர் இங்கிலாந்து குடியுரிமைப் பெற்றவர்..தமிழ் அறவே தெரியாது.. 
ஆனால் பிறப்பால் தமிழராம்..கொண்டாடுகிறார்கள்..

இப்படி வீண் பெருமை அடிப்பதே தமிழன் பெருமை என்று கொண்டாடும்  நமது தமிழ்நாட்டில் மனிதாபிமானம் இப்படித்தான் உள்ளது..

இந்தியாவில் குஜராத்தில் அநியாயமாக மக்கள் கொல்லப்பட்டால் கண்டுகொள்ளாமல் இருப்பது...

ஒரிஸ்ஸாவில் ஹிந்து வெறியர்களால் கிருஸ்துவ பாதிரியார் கொல்லப்படும்போதும்,

மும்பையில் சிவசேன வெறியர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும்போதும்,

 தினம் தினம் காஸ்மீரில் குண்டுகள் வெடிக்கும்போதும்,

 வட இந்தியாவில் மாவோயிஸ்டுகள் இரயிலையும், பஸ்களையும் குண்டுவைத்து தகர்க்கும்போதும்,

தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று பெருமை அடித்துக் கொள்வது..

அதேசமயம், தமிழினப் பற்று எப்படி உள்ளது?

இந்தியாவில் பிறந்து, அங்கேயே எல்லா சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு, சில அரசியல் களவாணிகள் இங்கேயே ஓட்டுப் பிச்சை எடுத்து, அதன் மூலம் பதவிகளையும் இலவசங்களையும் அனுபவித்துக் கொண்டு,

அந்நிய நாடான இலங்கையில் தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் நடக்கும் போரில், தீவிரவாதிகளை ஆதரித்துக்கொண்டு இந்திய அரசியல்வாதிகளை கொன்ற விடுதலைப் புலிகளுக்காக, இந்தியாவை எதிர்க்கும் தேச துரோகிகளுக்கு பெயர் தமிழ் பற்றாளர்..

தமிழ்நாட்டில் பிழைத்துக்கொண்டு, இலங்கையில் உள்ள தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் சினிமாக்கூத்தாடிகள்..
சினிமாவில் விலை போகாமல் இந்தியாவில் இருந்துகொண்டே இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசும் தேச துரோகிகள்தான் இங்கே தமிழ் இனக்காவளர்கள்

ஒரு மலையாள நடிகை, படப்பிடிப்பு விசயமாக இலங்கை செல்லக்கூடாதாம்

ஆனால் ஒரு தமிழ் கிரிக்கெட்டு வீரர் சிங்களனுடன் சேர்ந்து கிரிக்கெட் விளயாடலாமாம்.

தமிழனை விரட்டுவதற்காக மும்பையில் வெறியன் பால்தாக்கரே என்பவனால் ஆரம்பிக்கப்பட்ட சிவசேனா என்னும் கட்சிக்கு இங்கே தமிழ்நாட்டில் கிளைகள் உண்டு..

ஆபாசமாக படம் எடுத்து, அதற்க்கு தமிழ்பெயரை சூட்டி அரசை ஏமாற்றும் அவலமும் இந்த தமிழ் பற்றாளர்களிடம் உண்டு..

தமிழன் என்பவன் மனிதனா தமிழனா?

10 comments :

ராஜவம்சம் said...

இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிகெட்டில் மோதும் போது சில அறிவுகெட்ட முஸ்லீம்கள் பாகிஸ்தானை ஆதரித்தால் மற்ற்ஆ அறிவு ஜீவிகள் அவர்களை அண்னியர் என்கிறார்கள்

Adirai khalid said...

wow gouges writings ., tamil tamil tamil? its kinds of gambling and you are doing excellent criticism., please continue
awesome work.... thank you

வால்பையன் said...

முரளிக்கே வாங்க! இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லபட்ட போது, ஒரு குரல் கொடுத்தாரா!? எதை வைத்து தமிழன் என்று கொண்டாடுகிறார்கள்!

மங்குனி அமைச்சர் said...

ஓசில பேர் வாங்குறது தமிழனோட குலத்தொழில் . வர வர மொழிய கூட ஒரு ஜாதி ஆக்கிடாங்க

மர்மயோகி said...

// வால்பையன் said...
முரளிக்கே வாங்க! இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லபட்ட போது, ஒரு குரல் கொடுத்தாரா!? எதை வைத்து தமிழன் என்று கொண்டாடுகிறார்கள்! //

அதாவது முரளிக்கே தெரிகிறது அவர்கள் (விடுதலைப்புலிகள்) ஒரு பயங்கரவாதிகள் என்று..அதனால்தான் அவர்கூட அந்த சமயத்தில் வாய் திறக்கவில்லை..இங்கே தான் அந்த பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் ஆட்டம் போடுகின்றன..ஒருவன் nsa சட்டப்படி இப்போது கம்பி எண்ணுகிறான்..இன்னும் பல கைக்கூலிகள் அரசியல் என்ற பெயரில் தேச துரோகம் செய்து வருகின்றன..அவைகளும் சீக்கிரம் கூண்டுக்குள் அடைபடும்..

மர்மயோகி said...

//மங்குனி அமைசர் said...

ஓசில பேர் வாங்குறது தமிழனோட குலத்தொழில் . வர வர மொழிய கூட ஒரு ஜாதி ஆக்கிடாங்க //
அதுமட்டுமில்லை மங்குனி அமைச்சரே..தமிழ் தமிழ் என்று ஓலமிடும் ஒரு தெலுங்கு கோமாளி..இவன் இதை வைத்துதான் அரசியல் வியாபாரம் செய்கிறான்..விடுதலிப் புலிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை எடுத்த ஜெயலலிதாவின் அடிமையாகவும் - விடுதலைப் புலிகளின் கைக்கூலியாகவும் ஒரே நேரத்தில் எப்படி அவனால் செயல்படமுடிகிறது?

தனி காட்டு ராஜா said...

//ஒரு மலையாள நடிகை, படப்பிடிப்பு விசயமாக இலங்கை செல்லக்கூடாதாம்

ஆனால் ஒரு தமிழ் கிரிக்கெட்டு வீரர் சிங்களனுடன் சேர்ந்து கிரிக்கெட் விளயாடலாமாம்.//

சினிமா "கோமாளிகள்" என்பது சரிதானோ .........

வால்பையன் said...

//அதாவது முரளிக்கே தெரிகிறது அவர்கள் (விடுதலைப்புலிகள்) ஒரு பயங்கரவாதிகள் என்று//


நான் அப்பாவிமக்கள் கொல்லபட்டதை பற்றி தானே பேசினேன், விடுதலைபுலிகள் பற்றி பேசவேயில்லையே!

மர்மயோகி said...

// நான் அப்பாவிமக்கள் கொல்லபட்டதை பற்றி தானே பேசினேன், விடுதலைபுலிகள் பற்றி பேசவேயில்லையே! //
இலங்கையில் நடந்தது தீவிரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே நடந்த ஒரு போர்..! இதில் நம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தைதான் எடுத்துக்கொள்ளவேண்டும்...! ஒரு போரில் அதில் சம்பந்தப்படாத சிலர் பாதிக்கப்படத்தான் செய்வார்கள்..
மேலும் முரளிதரன் உள்நாட்டுக்காரர்..அவருக்குத்தான் தெரியும் அங்கே என்ன நடக்கிறது என்று...வைகோ, சீமான் போன்ற தேச துரோகிகளைப்போல் பணம் வாங்கிக் கொண்டு பேசவில்லை...

Suresh S R said...

superb

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?