Pages

Saturday, August 14, 2010

இந்திய சுதந்திரத்தைக் கொண்டாடுவோம்..அடிமையாக...!!!

இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களுடன்...




நம்மை பல ஆண்டுகளாக அடிமையாக ஆண்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர்கள், ஒரு புதிதான வைரஸ் கிருமியைக் கண்டு பிடித்துள்ளனர்..

"சூப்பர் பக்" என்றழைக்கப் படும் அந்த வைரஸ், எந்த நோய் எதிர்ப்பு சக்திக்கும் கட்டுப் படாதாம்..அந்த நோய்க் கிருமி இந்தியாவில்தான் உருவாகி உள்ளது என்று அந்த நாட்டைச்சேர்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சுதந்திர தினத்தை கொண்டாடும் நமக்கு இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது..மேலும் இந்திய அரசு இது சம்மந்தமாக தமது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.

அதே சமயம், இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவல், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறை சொன்னால் மட்டும், கை கட்டி, வாய் பொத்தி பெருமையாக அதை செய்தியாக வெளியிடுகிறார்களே..அப்போ இந்திய உளவுத்துறையினர் என்ன செய்கின்றனர்..? இந்தியாவுக்கு தீவிரவாதி தாக்குதல் நடத்தப் போவதை சொல்ல இந்த அமெரிக்க நாய் யார்? அவன் ஏன் இந்தியாவில் மூக்கை நுழைக்கிறான்..?


இந்திய உளவுத்துறையினருக்கு இது தெரியாதா? ஏன் இந்திய அரசு உன் வேலையை பார்த்துட்டு போ...என்று சொல்ல தெரியவில்லை? நம்நாட்டில் உளவு வேலை பார்க்க அமெரிக்கன் யார்? நமது உளவுத்துறைக்கு அந்த அளவு திறமை கிடையாதா?

இங்கிலாந்துக்கு எதிர்ப்பை தெரிவிக்கிறோம்..அமெரிக்கனுக்கு அடிமை சேவகம் செய்கிறோம்..

நல்ல சுதந்திரம்தான்..

ஒரு ஆதங்கமான கேள்வி : சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கியமான தினங்களில், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்கிறார்கள் சரி.. கோவில்களில் போலிஸ் பாதுகாப்பும் போடுகிறார்கள் அதுவும் சரி..ஆனால் ஏன் மசூதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசு செய்வதில்லை..இந்தமாதிரி தினங்களில் கோவில்களில் மட்டும்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடுத்துவார்களா?...மசூதிகளில் நடத்த மாட்டார்களா..? ஏன் இந்த பாரபட்சம்?

7 comments :

ஒசை said...

இதுல எந்த பாரபட்சமும் அரசுக்கு கிடையாது. மசூதிகள் வாசலிலும் காவல்துறையினர் அமர்த்தப்படுவதை கவனிச்சது இல்லையா.

ராஜவம்சம் said...

அண்னே நேன்பு நேரத்தில ஏன் இவ்வளவு உஸ்னம்
ரிலாக்ஸ் பிலிஸ்.

ஜெய்லானி said...

@@@ராஜவம்சம்--//அண்னே நேன்பு நேரத்தில ஏன் இவ்வளவு உஸ்னம் ரிலாக்ஸ் பிலிஸ் //

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்

THE UFO said...

//நமது உளவுத்துறைக்கு அந்த அளவு திறமை கிடையாதா?//

//உலகத்தின் சிறந்த பத்து உளவு நிறுவனங்கள்...//--இல் நம்ம இந்திய 'ரா'-வும் ஒன்றுதான்... ஆனால் ஒன்பதாவது இடத்தில்..!

அதுகூட பெருமையாக இருந்திருக்கும்தான்...

ஆனால் இல்லை...

காரணம்...

நம்பர்#1-ல் ஒருத்தன் இருக்கான்...

http://kokarakko.wordpress.com/2010/08/14/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89/

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி சார் , நம் நாட்டு உளவுத்துறையின் செய்திகளை வெளியிட முடியாது , ஏனென்றால் அது கான்பிடன்சியல் , அமெரிக்கா உளவுத்துறை நமக்காக உளவு செய்வது இல்லை , அவர்கள் உளவு பணிகளுக்கிடையில் கிடைக்கும் நம் நாட்டை பற்றிய செய்திகளை நம்மிடம் சொல்கின்றனர் .
காரணம் நமக்கும் , அமெரிக்காவிற்கும் ஒரே எதிரிகள் . ( தீவிரவாதிகள்). எல்லா நாடுகளிலும் உள்ள உளவுத்துறைகள் வேருயந்த நாட்டை பற்றிய செய்தி கிடைத்தாலும் அந்தந்த நாட்டிடம் தெரிவித்து விடுவார்கள் .

மர்மயோகி said...

//மங்குனி அமைசர் said...
மர்மயோகி சார் , நம் நாட்டு உளவுத்துறையின் செய்திகளை வெளியிட முடியாது , ஏனென்றால் அது கான்பிடன்சியல் , அமெரிக்கா உளவுத்துறை நமக்காக உளவு செய்வது இல்லை , அவர்கள் உளவு பணிகளுக்கிடையில் கிடைக்கும் நம் நாட்டை பற்றிய செய்திகளை நம்மிடம் சொல்கின்றனர் .
காரணம் நமக்கும் , அமெரிக்காவிற்கும் ஒரே எதிரிகள் . ( தீவிரவாதிகள்). எல்லா நாடுகளிலும் உள்ள உளவுத்துறைகள் வேருயந்த நாட்டை பற்றிய செய்தி கிடைத்தாலும் அந்தந்த நாட்டிடம் தெரிவித்து விடுவார்கள் . //

அதுசரி..
அப்போ வீரப்பனை பிடிக்க அதிரடிப்படை போன போது அதோ இங்கே அதிரடிப்படை நெருங்கிடுச்சுன்னு அடிக்கடி செய்தி வெளியிட்டு அவன் தப்ப உதவியது ..
ராஜீவ் காந்தியை இந்தியாவைச் சேர்ந்த தேச துரோகிகளின் உதவியுடன் விடுதலைப் புலிகள் கொன்றுவிட்டு தப்பி ஓடியபோது அவைகளை சி பி ஐ நெருங்கும்போதெல்லாம் அவைகளைப் பற்றி அவ்வப்போது பரபரப்பு செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு அவர்கள் தப்ப உதவியது ,
சமீபத்தில் மும்பை ஹோட்டல்களில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற போது நேரடி ஒலிபரப்பு செய்து தீவிரவாதிகளுக்கு உதவியது இதெல்லாம் கூடுமா?
(அமெரிக்க உளவுத்துறை சொன்னால் மட்டும் தீவிரவாதிகளுக்கு அந்த ரகசியம் தெரியாதா என்ன?)

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?