Pages

Saturday, August 21, 2010

மங்குனி அமைச்சருக்கு சில கேள்விகள்..

இதற்குமுன் சிலருடன் கருத்துமோதல்கள் ஏற்பட்டிருந்தது..அப்போதெல்லாம் அவர்களுக்கு கேள்விகேட்டு ஒன்றிரண்டு பதிவுகள் வெளியிட்டிருக்கிறேன்..ஆனால் இந்த பதிவு அத்தகையதல்ல..மங்குனி அமைச்சர் பல சமயங்களில் தமது வாலிப வயது அனுபவங்களை நகைச்சுவையாக பதிவது போல நாமும் முயற்சி செய்து பார்ப்போமே என்ற ஒரு ஆசைதான்...மங்குனி அமைச்சருக்கான கேள்விகளை கடைசியாக பார்க்கலாம்..

எனது எட்டாம் வகுப்பில் ஏற்ப்பட்ட ஒரு நகைச்சுவையான அனுபவம்தான் கீழே வருவது..

அது ஒரு அறிவியல் வகுப்பு..

ஆசிரியர் "சோடியம் பை கார்பனேட்" என்ற ஒரு வேதியல் பொருளைப் பற்றிய பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது அதைப் பற்றி கேள்வி ஒரு மாணவனிடம் கேட்டார்..

அவன் அதை "சோடியம் கை பார்கனட்" என்றே திரும்ப திரும்ப சொன்னான்..

அவனால் "சோடியம் பை கார்பனேட்" என்ற வார்த்தையை சரியாக சொல்லவே இயலவில்லை..

கடுப்பான ஆசிரியர் அந்த வார்த்தையை 100 தடவை இம்போசிசன் எழுதி வரவேண்டும் என்று சொல்லிவிட்டார்..

மாணவனும் ரொம்ப பொறுப்பாக எழுதி இருக்கிராரன்..ஒரு இருபது தடவை எழுதி இருப்பான் போலிருக்கிறது..அவனுக்கு இன்னொரு ஐடியா வந்திருக்கிறது...

அடுத்த நாள் ஆசிரியரிடம் நோட்டை காட்டினான்...ஆசிரியரின் முகம் சிவந்து விட்டது..அவனை வெளுத்து வாங்கி விட்டார்..

அவன் அப்படி என்ன எழுதி இருப்பான் என்று எங்கள் எல்லாருக்கும் ஆர்வம்..



*

*

*

*

*

*

*

அவன் எழுதி இருந்தது  இப்படித்தான்...



சோடியம் பை கார்பனேட்.

                      "

                      "

                      "

                      "

                      "

                      "

                      "



இப்படியே நூறு தடவையும் எழுதியிருந்தால் யாருக்குதான் கோவம் வராது?


இனி மங்குனி அமைச்சருக்கான கேள்விகள்..

கேள்வி : 1



சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற இலங்கை இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வீரர் வீரேந்திர சேவாக் 100 ரன்கள் அடிக்கவிடாமல் இலங்கை பந்துவீச்சாளர் "நோ பால்" வீசினார் என்று பரபரப்பாக பேசப்பட்டது..

"நோ பால்" என்றால் பந்து இல்லை என்று அர்த்தம்..இல்லாத பந்தை எப்படி வீச முடியும்?



கேள்வி : 2


என்னுடைய சிறுவயது நண்பன் ஒருவன்...அவனுக்கு நான்கு வயது இருக்கும்போது அவனது தம்பிக்கு வயது இரண்டு..அதாவது அவனது வயதில் பாதி என்றான். இப்போது அவனுக்கு முப்பது வயது என்கிறான்..அவன் தம்பிக்கு இருபத்தெட்டு வயது என்கிறான்..எனக்கு ஒரே குழப்பம்..இருபத்தி ஆறு வருடங்களுக்கு முன்பு இவன் வயதில் பாதி இருந்தான் அவன்..இப்போ என் நண்பனுக்கு வயது முப்பது என்றால் அவன் தம்பிக்கு வயது பதினைந்து தானே இருக்கவேண்டும்?

17 comments :

Mohamed Faaique said...

கெல்வி 3 . பாதி கதவு திறந்திருக்கு என்றால் பாதி கதவு மூடியிருக்கு என்று அர்த்தம். அப்படிஎன்றால் முழுதாக கதவு திறந்திருக்கு என்றால் முழுதாக கதவு மூடியிருக்கு என்று அர்த்தமா?

மர்மயோகி said...

//Mohamed Faaique said...
கெல்வி 3 . பாதி கதவு திறந்திருக்கு என்றால் பாதி கதவு மூடியிருக்கு என்று அர்த்தம். அப்படிஎன்றால் முழுதாக கதவு திறந்திருக்கு என்றால் முழுதாக கதவு மூடியிருக்கு என்று அர்த்தமா?//

மண்டை காயுது..

மங்குனி அமைச்சர் said...

//தமது வாலிப வயது அனுபவங்களை///

இது என்னப்பா சின்னபுள்ளதனமா இருக்கு , அப்ப என்னைய பாத்தா உங்களுக்கு பெருசு மாதிரி தெரியுதா ???
அவ்வ்வ்வ்வ்வ்......................... நான் யூத்து , நான் யூத்து , நான் யூத்து

மங்குனி அமைச்சர் said...

"நோ பால்" என்றால் பந்து இல்லை என்று அர்த்தம்..இல்லாத பந்தை எப்படி வீச முடியும்?///

ஹலோ , அது இங்கிலீசு நோ பால் இல்லை , "Dr.நோ" பால், நோ என்பவர் ஒரு டாக்டர் (சின்னவயசுல காமிக்ஸ் படிச்சதில்லையா ?) இதில என்ன பிரச்சனைன்னா , நோ வோட பால எடுத்து ஏன் இலங்கை வீரர் போட்டாரு ? அப்படிங்கிறது தான் .அப்புறம் விஷயம் தெரிஞ்ச Dr.நோ இலங்கை கோர்ட்டுல கேஸ் போட்டு இருக்கிறார் . (உஸ் .... அப்பா .......... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு , ஏம்பா மர்மயோகி உனக்கு இன்னைக்கு வேற யாரும் சண்டை போட ஆள் கிடைக்கலையா ?)

மங்குனி அமைச்சர் said...

கேள்வி இரண்டிற்கான பதில்கள்

1 ) உங்க பிரண்டு பொய் சொல்லி இருக்கணும்
2 ) நீங்க பொய் சொல்றிங்க , எப்படின்னா ? உங்க பிரண்டோட தம்பிய விட உங்க பிரண்டு ரெண்டு மடங்கு வயசு ஜாஸ்தி , அப்படின்னா உங்க பிரண்டோட தம்பிக்கு 28 வயசுன்னா உங்க பிரண்டுக்கு 56 வயசு இருக்கணும் .
3 )உங்க பிரண்டோட தம்பி காம்ப்ளான் நிறைய சாப்பிட்டு இருக்கணும்

ராஜவம்சம் said...

ம்ம்ம்ம் நா போயிட்டு அப்பரம் வர்ரே சகோ.

இதுக்கு பதில் சொல்ல இன்னோருத்தர் இருக்காரு அவருக்கு அழைப்பு விடுங்க ..

என்னது யாரா நம்ம சகோ (சைகோ இல்லைங்க)ஜைய்லானிதான்

சைகோ சாரிங்க சகோ ஜைய்லானி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

ஜெய்லானி said...

//இதுக்கு பதில் சொல்ல இன்னோருத்தர் இருக்காரு அவருக்கு அழைப்பு விடுங்க .//

போற போக்குல மாட்டி விட்டுடீங்களே பாய்..அவ்வ்வ்..(( ஜெய்லானீஈஈஈ ஃபீலிங்ஸை வெளிய காட்டிக்கதேஏஏஏஎ ))

ஜெய்லானி said...

//"நோ பால்" என்றால் பந்து இல்லை என்று அர்த்தம்..இல்லாத பந்தை எப்படி வீச முடியும்?//

அதானே அவர் ஓடி வந்து வீசுற மாதிரி ஆக்‌ஷன் மட்டுமே காட்டினார் . அவ்வளவுதான் பால் போடல , ஆனா நம்ம பயபுள்ள பால் போட்ட மாதிரி அடிக்க அம்பையர் ”நோ பால்”ன்னு சொல்லிட்டாரு இதாம்பா மேட்டர்...

ஜெய்லானி said...

//இப்போ என் நண்பனுக்கு வயது முப்பது என்றால் அவன் தம்பிக்கு வயது பதினைந்து தானே இருக்கவேண்டும்? //

அவர் சரியா தான் சொன்னாரு பாஸ் நீங்கதான் கொழம்பிட்டீங்க ..பாருங்க கேள்வியை

//அவனது தம்பிக்கு வயது இரண்டு..அதாவது அவனது வயதில் பாதி என்றான். //

அதாவது நண்பருக்கு அப்ப வயசு 4 ஓக்கே ,அந்த நேரத்துல அவர் தம்பி க்கு வயசு 2 சரியா சொன்னாரு .அப்ப ரெண்டு வருஷ கேப்பில பிறந்த வரு அதான் என்னில் அப்ப உள்ள வயசில் பாதின்னு சொன்னாரு.

இப்ப அவருக்கு வயசு 30 , ரெண்டு வருஷம் கம்மியா இருந்தா 28 தானே வரும் .15 எப்படி வரும் ..

இதுக்குதான் என்னை மாதிரி எல் கே ஜி மட்டுமே படிக்கனும்ங்கிறது . அதிகம் படிச்சா மண்டை குழப்பம்தான் வரும் ..ஓக்கே காஃபி பிளிஸ்

ஜெய்லானி said...

நிஜாம் பாய் , இப்பிடி சும்மா கிடப்பவனை (என்னை சொன்னேன்) உசுப்பி விடாதீங்க . ஏற்கனவே உடம்பு ரண களமா இருக்கு (சொறிஞ்சி..சொறிஞ்சி ) இப்ப இது வேறயா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்

Mohamed Faaique said...

முதலில் 4 வயது என்கிறார்.. பின்பு 28 வருடம் கழித்து 30 வயது என்கிறார். இவர் பேச்சு மாறியிருக்கிறார்.
எனவே..
இவர் பொய் சொல்லியிருப்பார்

Unknown said...

மண்டை காயுது....
"
"
"
"
"

முத்து said...

இப்படி தான் கோத்து விடனும் பாஸ்,அதுவும் சரியான ஆளை தான் கோத்து விட்டு இருக்கீங்க.மங்கு சரியா பதிலை சொல்லு இல்ல நீ காலி

பெசொவி said...
This comment has been removed by the author.
பெசொவி said...

//"நோ பால்" என்றால் பந்து இல்லை என்று அர்த்தம்..இல்லாத பந்தை எப்படி வீச முடியும்?//

அந்த பவுலருக்கு பந்தைப் பத்தி எதுவுமே சொல்லத் தெரியலை. அதுனால "பந்தைப் பத்தி தெரிஞ்சுக்குங்க" அப்படிங்கறதை இங்கிலிஷ்ல Know Ball-ன்னு சொல்லி இருக்காரு அம்பயர். இப்ப புரிஞ்சுதா?

August 22, 2010 7:11 AM

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள்
"mohamed faaique"
"மங்குனி அமைச்சர் "
"ராஜ வம்சம்"
"ஜெய்லானி"
"கலாநேசன்"
"முத்து"
"பெயர் சொல்ல விருப்பமில்லை"
ஆகியோர்களுக்கு நன்றி..

வால்பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?