Pages

Tuesday, September 21, 2010

எச்சரிக்கையா..? மறைமுக தூண்டுதலா?

ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் ஒரு வழக்கு..பாப்ரி மஸ்ஜித் இருக்கும் இடம் யாருக்கு சொந்தம் என்பது..!

இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு இருந்த புனிதத்தலங்களுக்கான இடம் அவைகளுக்கே சொந்தம் என்றொரு சட்டம் இயற்றபட்டும், அப்போதிருந்த ஆட்சியாளர்களின் சட்ட முறைகேடுகளால் இந்த வழக்கு இன்றும் தொடர்கிறது.


அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இந்த ஆர் எஸ் எஸ் மத வெறியர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என்பதையும் இங்குள்ள ஆட்சியாளர்களும், நீதிமன்றங்களும் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் பெரும் அவலம்..
 
வரும் செப்டெம்பர் 24 ம் தேதி இந்த வழக்கு முடிவுக்கு வரும் - ஒரு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கபட்டிருக்கிறது..


தீர்ப்பு எப்படி இருப்பினும் ஏற்றுக்கொள்கிறோம் என்று இந்தியாவின் இறையாண்மையை பேணும் அனைவரும் எற்றுகொண்டிருக்கின்றனர்..சில மத வெறியர்கள்தான், அது இராமன் பிறந்த இடம் அது எங்களுக்குத்தான் சொந்தம் என்று இன்றும் அலறிக்கொண்டிருக்கின்றன...



பாபரி மஸ்ஜிதை இடித்த
 பயங்கரவாதிகளில் ஒருவன்

உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல்தான் 1992 ம் ஆண்டு அநியாயமாக பாபர் மஸ்ஜிதை இடித்து தள்ளி, இங்குள்ள மதவெறி மிருகங்கள் வெறியாட்டம் போட்டு, இந்தியாவின் மதிப்பை வெளிநாடுகளில் சீர்குலைத்தன..அந்த மிருகங்கள் இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தும் அவர்களின்
ஆசைப்படிகூட, அந்த இடத்தில் கோவில் கட்டமுடியவில்லை..காரணம் அந்த மிருகங்களுக்கூட தெரிந்திருக்கிறது..அது ராம ஜென்ம பூமி அல்ல என்று..அப்படி இருந்தும் அப்பாவி மக்களின் உணர்ச்சியை தூண்டி, மத வெறியைத்தூண்டி மிருக
வெறியாட்டம்  போட்டு ஓட்டுப்பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றன அத்வானி, நரேந்திர மோடி போன்ற நர வெறி மிருகங்கள்..

இப்போது, தீர்ப்பு நெருங்கி வரும் வேளையில், இந்திய பிரதமர் முதல், தமிழக முதல்வர் வரையிலான அரசியல்வாதிகள், "பாபரி மஸ்ஜித் பற்றிய தீர்ப்பு வரும் நாளான, செப்டெம்பர் 24 ம் தேதி அன்றும், மக்கள் கலவரங்களில் ஈடுபடாமல் அமைதி காத்திட வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருந்தாலும், அதை மதித்து நடக்க வேண்டும்" என்றும் அறிக்கைமேல் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்..


ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவேண்டியது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் கடமை..அதுவும், இதியாவில் ஓட்டுப்பிச்சை வாங்கி, இந்திய அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வரும் அரசியல்வாதிகள் கட்டாயம் மதிக்கவேண்டும்...இதை பிரதமர், முதல்வர் சொல்லித்தான் ஆகவேண்டுமா?

இப்படித்தான் ஒவ்வொரு தீர்ப்புக்கும் இவர்கள் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிரார்களா?

இன்று அறிக்கை விடும் அனைவருக்கும் தெரியும் யார் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மிருகத்தனமும் பொறிக்கித்தனமும் செய்தார்கள் என்று..அந்த மிருகங்களை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்..

அதுமட்டுமல்ல, இன்றைய செய்திகளில், கலவரத்தை கட்டுப்படுத்த, சுமார் 72 கோடி ரூபாய்க்கு லத்திகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என்று செய்திவேறு..

எந்தக்காலத்திலும் நீதி மன்ற தீர்ப்பை மதிக்காத இந்த மிருகங்கள், இவர்களது அறிக்கையை கேட்டு சும்மா இருந்த விடுவார்களா?

இவர்களின் அறிக்கை எச்சரிக்கையாகத்தோன்றவில்லை.. மாறாக, மறைமுக தூண்டுதலாகத்தான் தெரிகிறது..

4 comments :

idroos said...

Nanbar marmayogie neengal kooriya karuthukkal anaithum unmai....

Iruppinum sila naagarigamatra varthaigalai thavirkkalam.

மங்குனி அமைச்சர் said...

அதுமட்டுமல்ல, இன்றைய செய்திகளில், கலவரத்தை கட்டுப்படுத்த, சுமார் 72 கோடி ரூபாய்க்கு லத்திகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என்று செய்திவேறு..////

இவ்ளோ லத்திகள என்ன செய்யப் போறாங்க , அது சும்மா கீழ தான கிடக்கும் அதப் போயி எதுக்கு காசு குடுத்து வாங்கணும் ? இதுலயும் ஊழல் பண்ணவா ? (சாரி மர்மயோகி , இதுக்கு சீரியஸ் ஆக பதில் சொன்னாலும் ஒரு பயல் காதுலையும் ஏறப் போவது இல்லை )

மர்மயோகி said...

நன்றி நண்பர் முசமில் இத்ரூஸ் அவர்களே..
சட்டத்தை மதிப்பதில்லை...அரசியல் இலாபங்களுக்காக இந்தியாவையே ரணகலாமாக்கிக்கொண்டிருக்கும் "இதுகளை" மனித ஜென்மத்தில் சேர்க்கவே மனமில்லை...அத்வானி என்பவனின் ர(த்)த யாத்திரையும், பால்தாக்கரே என்ற ரவுடியின் மும்பை கலவரங்களும், நரேந்திர மோடி என்ற ஒரு கொடிய ஓநாயின் குஜராத் வெறியாட்டமும்தான் இன்றைய இந்தியாவின் தீவிரவாதங்களுக்கெல்லாம் காரணம்..இன்னும் அந்த வெறிபிடித்த மிருகங்களே குண்டு வைத்துவிட்டு, அதையும் முஸ்லிம்கள் மீது பழி போடும்போது...என்னவென்று சொல்வது..இவைகளை மிருகங்கள் என்று சொல்வதுகூட மிருகங்களுக்குத்தான் அவமானம்..இவைகள் கேவலமான பிறவிகள்..

மர்மயோகி said...

மங்குனியாரே...
லத்திகள் - பாபரி மஸ்ஜித் உடைக்கப்படும்போது எக்காளமிட்டு ஆண் பெண் என்று பாராமல்.. அனைவரையும் கட்டிபிடித்து கொண்டாடினாளே உமா பாரதி.. அவளைப் போன்ற மிருகங்களை விரட்ட (?) உபயோகப்படும்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?