Pages

Monday, October 18, 2010

ராம் லீலா

முதலில் ஒரு குட்டிக்கதை.

அமெரிக்க ட்வின் டவர் இடிக்கப்பட்ட வழக்கு வருகிறது. வழக்குத் தொடர்ந்தவர் ஜார்ஜ் புஷ். இடித்தவர் ஒசாமா பின்லாடன்.  ட்வின் டவர் இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற அந்த வழக்கு  பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட பின்பு, அதற்கான தீர்ப்பு வழங்கப்படுகிறது. 
நீதிமன்ற தீர்ப்பில் தனக்கு நியாயம் கிடைக்கும்..சட்டப்படி அது தனக்குத்தான் சொந்தம் என்ற எதிர்பார்ப்பில் புஷ் காத்திருக்க, ஒசாமாவோ அதைப்பற்றி துளியும் கவலை கொள்ளாமல் சாதாரணமாக இருக்கிறார்..
தீர்ப்பு வழங்கப்படுகிறது...

தீர்ப்பைக்கேட்ட ஜார்ஜ் புஷ் அதிர்ச்சி அடைகிறார்..ஒசாமாமோ இனிப்பு வழங்கி "இந்த தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு தெரியும்" என்று கொண்டாடுகிறார்..அதற்கான விளக்கத்தையும் கொடுக்கிறார். அந்த விளக்கம் கடைசியில்.

ராம் லீலா நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.

அதன் முடிவில் ஒரு அநியாயமும் நடந்தது.

ராம் லீலா எனபது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொண்டாடும் நிகழ்ச்சி. அது அவர்களது தனிப்பட்ட உரிமை.
ஆனால், ராம் லீலா நிகழ்ச்சியில் சிலர் ராமன், சீதை மற்றும் அனுமான் போன்ற வேடமணிந்து வந்தனர், அவர்களை, இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கும் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் , பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி போன்றோர் வணங்கி தமது மதசார்பையும், அறிவு முதிர்ச்சியற்ற தன்மையையும் காட்டியுள்ளனர்.

கடவுள் என்பவன் பிறப்பதில்லை.
அப்படி இருக்கும்போது, அந்த வேடமிடுவதால் வேடமிட்டவர்கள் எப்படி கடவுளாவார்கள்..?
இப்படித்தான் இருக்கிறது இந்தியாவில் மதச்சார்பின்மை..

தீபாவளிக்கு போனஸ் வழங்குகிறார்கள்.. 
திருவிழாக்களுக்கு சிறப்பு ரயில்கள் பஸ்கள் விடப்படுகின்றன
அரசு அலுவலகங்களில் சாமிபடங்கள் பூஜை செய்யப்படுகின்றன.

இப்படி ஒரு குறிப்பிட்ட மதச்சடங்குகளை பின்பற்றிக் கொண்டு மதச்சார்பற்ற நாடு என்று மக்களை ஏமாற்றி வருகிறார்கள்..

இந்த ராமனால்தான் இந்தியாவில் பெரும்பாலான குழப்பங்கள்

மதக்கலவரங்கள், குண்டு வெடிப்புக்கள், ரயில் கவிழ்ப்புக்கள், மசூதி இடிப்புகள், நீதிபதிகளின் தடுமாற்றம், 
இன்னும் தமிழ் நாட்டின் முக்கிய ஒரு திட்டமான சேது சமுத்திர திட்டத்திற்கு பெரும் இடையூறாக இருப்பது ராமர் பாலம் என்ற ஒரு கற்பனைப் பாலமே..அப்படி அது உண்மையாக இருந்தாலும் ஒரு நல்ல திட்டத்திற்காக அதை இடித்ததால்தான் என்ன? 

இனி குட்டிக்கதையில் ஒசாமா பின்லாடன் தந்த விளக்கம்.

"இந்த வழக்கில் ட்வின் டவர் இருந்த இடம் மூன்றில் இரண்டு பங்கு ஒசாமாவுக்கும், ஒரு இடம் ஜார்ஜ் புஷ்ஷுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். காரணம் இதற்க்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள் அலஹாபாத் ஹை கோர்ட்டில் பாபரி மஸ்ஜித் நில வழக்கில் தீர்ப்பு வழங்கியவர்கள்.."

3 comments :

மங்குனி அமைச்சர் said...

உள்ளேன் ஐயா

ஜெய்லானி said...

// இந்தியாவின் மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கும் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் , பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி போன்றோர் வணங்கி தமது மதசார்பையும், அறிவு முதிர்ச்சியற்ற தன்மையையும் காட்டியுள்ளனர்.//

இஃப்தாரில தொப்பி போட்டுகிட்டு (( ஹி..ஹி.. )) கஞ்சி குடிக்க வரதை விட்டுடீங்களே சார்.. அப்படியே ஒரு நோன்பு அவங்களை வைக்க சொன்னா நல்லா இருக்குமே..!!

மர்மயோகி said...

நன்றி மங்குனி அண்ட் ஜெய்லானி.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?