Pages

Wednesday, October 27, 2010

பெண்கள் படிக்ககூடாத (பெண்களை பற்றிய) ஒரு பதிவு!

பெண்கள் பற்றியது ஆனால் பெண்கள் படிக்ககூடாத பதிவு என்றால்..உங்கள் ஆர்வம் புரிகிறது...அதற்கான பதிலை கீழே விளக்குகிறேன்..

அருந்ததி ராய் என்றொரு எழுத்தாளர்,  மிகப் பிரபலமான ஒரு எழுத்தாளர்அவர் சமீபத்தில் பேசிய பேச்சுக்கள் தான் இப்போது ஹாட் டாபிக்..."காஷ்மீர்  இந்தியாவின் ஒரு அங்கமாக எப்போதும்  இருந்தது  கிடையாது" என்றொரு வாதத்தை வைத்திருக்கிறார்..

ஏறத்தாழ ஒரு  60  வருட காலமாக இந்தியாவின் அங்கமாக இருக்கும் காஷ்மீரை இந்தியாவின் அங்கமல்ல என்று சொல்லவைக்கும் தைரியம் அவருக்கு  எங்கே இருந்து வந்தது.?.ஒருவர் பிரபலாகிவிட்டால் அவர் உளறுவதெல்லாம் அறிவுக்கு ஏற்ற பேச்சு கிடையாது..இது தமது பிரபலத்தை தக்கவைக்கும் ஒரு உளறல்..ஆனால் அது நாட்டுக்கு ஊரு விளைவிக்கும் வண்ணமாக அமைந்துவிட்டதுதான் ஆபத்தாகிவிட்டது..

இப்படித்தான் குஷ்பு என்றொரு நடிகை, "திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்" என்றதொரு ஆபாசமான கருத்தை முன் வைத்து நாறிப் போனது நமக்கெல்லாம் தெரியும்..

அவள் ஜஸ்ட் ஒரு நடிகை, உடலைக் காட்டி, கண்டவனுடன் நடுரோட்டில் கட்டிப் புரண்டு, காசுக்காக மானமிழந்து நடித்து பிரபலனானவள்..இவளை போய் இது போன்ற கலாச்சாரம் சம்பந்தப்பட்ட கேள்வி கேட்பவன் உலகமகா முட்டாள்...

அந்த குஷ்பு கூடத்தான் நமது சாரு நிவேதிதா என்றொரு உலகம் போற்றும் (?) எழுத்தாளர்,  மாமேதை ஞானி போன்றோர் "out look"   என்றோதொரு பத்திரிகை நடத்திய விவாத மேடையொன்றில் பங்கேற்று பெருமை அடைந்துள்ளனர். அதுவும் சாரு அதை தனது வெப் சைட்டில் வெளியீட்டு ஜென்ம பலனை அடைந்து விட்டார்.

அந்த விவாதத்தில் சாரு பேசிய ஆங்கிலம் கிண்டலுக்கானது எனபது பற்றிய ஒரு பெண் எழுதிய கடிதத்திற்கு - பாவம் அந்த பெண்ணை சாரு உண்டு இல்லை என்று ஆக்கி விட்டார்.
தமிழை தாய் மொழியை கொண்டவன் தமிழில் பிழையாக  பேசினால்தான் தவறு..ஆனால் ஆங்கிலத்தில் பிழையாக பேசிவிட்டால் ஏதோ உலகமகா ஜோக்கை கேட்டது போல விழுந்து விழுந்து சிரிக்கிறோம்..

ரோட்டில் வசிப்பவன் பேசும் கேவலமான  பேச்சை எல்லாம் "சென்னை தமிழ்"  - (அதாவது "மெட்ராஸ் பாஷையாம்") என்று கொண்டாடும் நாம் தமிழை திருத்த வக்கற்று ஆங்கிலத்தில் இலக்கணப் பிழை காணுவது இன்னும் நாம் ஆங்கில அடிமைத்தனத்தில் இருந்து மீளவில்லை என்றே தோன்றுகிறது..

ஆனால் அது ஒரு புறம் இருக்கட்டும்

தனது ஆங்கிலத்தை குறை கூறிய அந்த பெண்ணிற்கு பதிலடி என்ற பெயரில் சாரு எழுதி இருக்கும் பதில் - எந்த ஒரு ஆபாச கட்டுரைக்கும் - சளைத்ததல்ல..
இந்த கட்டுரை மூலம் சாரு மிகவும் தரம் தாழ்ந்து இருக்கிறார். அவர் உபயோகப் படுத்தி இருக்கும் வார்த்தைகள் ஒரு ஆபாச எழுத்தாளன் மட்டுமே அல்லது சாலையில் "மெட்ராஸ் பாஷை" பேசும் பொறுக்கிகள் மட்டுமே 
 உபயோகிக்கும் வார்த்தைகள் .

எந்த ஒரு நல்ல பெண்ணும் கேட்டால் அருவருப்படையும் வார்த்தைகள். பெண்கள் படிக்கூடாத பதிவுதான் அது.(ஸ்ஸ்ஸ் ...அப்பாடா..தலைப்பைக் கொண்டு வந்தாச்சு...) 

சரி..நிஜமாகவே பெண்கள் படிக்கூடாத ஒரு ஜோக்....

மகள் : அம்மா..அந்த ஆள் அந்த மரத்தில் ஏற சொல்லி பத்து ருபாய் கொடுத்தாம்மா..
அம்மா : இடியட்..அவன் உன் பாண்டீஸ் பாக்குறதுக்காக அப்படி பண்ணி இருக்கான்..
மகள்: ஆனால் நான் முட்டாள் இல்லைம்மா..அதுனாலதான் பாண்டீஸ் போடல..



20 comments :

மங்குனி அமைச்சர் said...

சாரு,,,, ஹி.ஹி.ஹி.ஹி................. சாரு .........

மங்குனி அமைச்சர் said...

அப்புறம் அந்த ஜோக்கு ???????????? கண்பாமா இன்னைக்கு ஹிட்ஸ் நிறைய கிடைக்கும் மர்மயோகி

பொன் மாலை பொழுது said...

/ இவளை போய் இது போன்ற கலாச்சாரம் சம்பந்தப்பட்ட கேள்வி கேட்பவன் உலகமகா முட்டாள்.//

மிக்க சரியான வாதம். உண்மையும் கூட.

ஆனால்

// ரோட்டில் வசிப்பவன் பேசும் கேவலமான பேச்சை எல்லாம் "சென்னை தமிழ்" - (அதாவது "மெட்ராஸ் பாஷையாம்") என்று கொண்டாடும் நாம் தமிழை திருத்த வக்கற்று ஆங்கிலத்தில் ..... ///

// இந்த கட்டுரை மூலம் சாரு மிகவும் தரம் தாழ்ந்து இருக்கிறார். அவர் உபயோகப் படுத்தி இருக்கும் வார்த்தைகள் ஒரு ஆபாச எழுத்தாளன் மட்டுமே அல்லது சாலையில் "மெட்ராஸ் பாஷை" பேசும் பொறுக்கிகள் மட்டுமே உபயோகிக்கும் வார்த்தைகள் .//

ஏதோ தவறாக படுகிறது. உங்கள் புரிந்து கொள்ளுதல் இன்னமும் சற்று விரிவடைந்தால் நல்லது.
சென்னைத்தமிழ்- மெட்ராஸ் பாஷை - இது வட்டார வழக்குகள் மற்றும் பிற மொழிகள் கலந்த ஒரு கலவையான தமிழின் வட்டார வடிவம்தான். ஒவ்வொரு பகுதியன் தமிழும் சற்று மாறுபடும். இங்கே வட தமிழகத்தில் சில மாவட்டங்களில் கூட இந்த வகை பேச்சு மொழிதான் இன்றுவரை நிலவுகிறது.

பல பணக்கார குடும்பங்களில் கூட இந்தவகை பேச்சுத்தான் வழக்கத்தில் உள்ளது. நீங்கள் நினைப்பது போல அது ஒன்றும் ரோட்டில் பொறுக்கிகள் மட்டும் பேசும் மொழில்லை. நான் கும்பகோணதுக்காரன், படித்து வேலைக்காக சென்னையில் வந்தவன். சுமார் முப்பது வருடங்களாக இங்கு வாழ்பவன். ஆரம்பத்தில் உங்களை போலவே இம்மொழி, வார்த்தை பிரயோகங்கள் மீது எனக்கு வெறுப்பும் கோபமும் இருந்தது உண்மை. ஆனால் நிறைய மக்களிடம் பேசி பழகும் போதுதான் இதன்மீது எங்கிருந்த வெறுப்பு மாறியது.
இன்று அம்மொழி பேசுவோர் பற்றி எனக்கு எந்த ஒரு கேவலமான எண்ணமும் இல்லை.
ரோடில் ஒரு ரௌடி பேசுகிறான் அல்லது சாரு போன்ற கிறுக்கன் கண்டதையும் எழுதுவான் என்பதற்காக நீங்கள் சென்னை தமிழை கேவலமாக நினைக்காதீர்கள் எழுதாதீர்கள்.

பொன் மாலை பொழுது said...

ஒரு தலைப்பில் ஏதோ சொல்லவந்தீர்கள், ஆனால் " பெண்கள் படிக்கூடாத ஒரு ஜோக்...." என்று அந்த படத்தை இட்டு ஏன் தடம் மாறினீர்கள்? இங்கு வலைத்தளத்தில் நிறைய பெண்மணிகளும் வாசகர்கள் ,பதிவர்களாக இருபது நீங்கள் அறியாததா? இது போன்ற ஒரு படத்தை உங்கள் வீட்டு பெண்களிடம் காட்டமுடியுமா?

கோபம் வருகிறது அல்லவா?

அதுதான், அதேதான் .
அதே உணர்வுடன்தானே நீங்கள் இங்கு எழுதவும் வேண்டும் நண்பரே!

வெறும் ஹிட் கொடுத்து இங்கு அவார்ட் வாங்கி ஆகபோவது ஒன்றுமில்லை என்று தெரிந்தும்,இது போல ஒரு படம் கிடைத்தது என்பதற்காக அதனை வெளியிட்டு நமை நாமே ஏன் கேவலப்படுத்திகொள்ள வேண்டும் ?

மர்மயோகி said...

நன்றி திரு மங்குனி..

மர்மயோகி said...

நன்றி திரு கக்கு மாணிக்கம்

மெட்ராஸ் பாஷை பற்றிய உங்களது விளக்கத்திற்கு நன்றி..சாருவின் கட்டுரையையும் சென்னையில் சாலையில் வசிக்கும் பொறுக்கிகள் கூக்குரலிடும் வார்த்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தல் உங்களுக்கு சென்னை பாஷை என்றழைக்கப் படும் பாஷையின் தரம் புரியும்..அதை தமிழ் என்று சொல்வது மிககேவலம்..நாம் தமிழ் நாட்டில் தலை நகரில் இருந்து கொண்டு, செம்மொழி மாநாடு நடத்திக்கொண்டு இது போன்ற பாஷைகளை எவ்வாறு அனுமதிப்பது என்று தெரியவில்லை..மேலும் ஆரம்பத்தில் சென்னைக்கு வரும் பலரும் இந்த பாஷையை பேசினால்தான் நம்மை சென்னைக்காரன் என்று நம்புவார்கள் என்று ஒரு தாழ்வு மனப்பான்மையே காரணம்..நிறைய குடும்பத்தில் அவ்வாறு பேசுவதற்கு காரணமும் இது போன்ற மனநிலையின் தொடர்ச்சியே..இவர்கள்தான் சாலை விதிகளை மீறுவது, காவல்துறையினரை தரமற்ற வார்த்தைகளால் திட்டுவது போன்ற ஒழுக்ககேடுகளுக்கும் காரணம்.

அடல்ட் ஜோக் பற்றி குறிப்பிடீர்கள்...நன்றி..
எனது வலைப்பூவிற்கு பெண் பாலோயர்கள் இல்லை என்ற தைரியத்திலேயே அதை வெளியிட்டேன்..இருந்தாலும் தவறுதான் . மன்னிக்கவும்..

மர்மயோகி said...

திரு கக்கு மாணிக்கம் அவர்களே..அந்த படம் நம் தமிழ் நாட்டு நடிகைகளின் படங்களை விடவா ஆபாசமாக உள்ளது?

பொன் மாலை பொழுது said...

என் கருத்துக்களை புரிந்துகொண்ட நட்புடன் பதில் எழுதிய உங்களின் நேர்மைக்கு நன்றி. இல்லையேல் இங்கேயும் பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்திருக்கும். அதனை மிக அழகாக தவிர்த்த உங்கள் புத்திசாலிதனம் பெரும்தன்மை "சென்னைத்தமிழ" யும் புரிந்துகொள்ள வேண்டும்.

// சாருவின் கட்டுரையையும் சென்னையில் சாலையில் வசிக்கும் பொறுக்கிகள் கூக்குரலிடும் வார்த்தைகளையும் ஒப்பிட்டு பார்த்தல் உங்களுக்கு சென்னை பாஷை என்றழைக்கப் படும் பாஷையின் தரம் புரியும்.//

சாருவை திட்டி திட்டி அவனை இன்னமும் முழு கிறுக்கனாக ஆக்குங்கள் அதுபற்றி எனக்கு அக்கறை இல்லை.
ஆனால் இருக்க இடமின்றி, வாழ வழி இன்றி சாலை வழிகளின் இரு புறமும் வசிக்கும் அந்த மக்களை ஏன் சாருவின் பொருட்டு கேவலபடுத்தவேண்டும்? அவர்கள் உழைத்து வாழும் பிறவிகள். சாருவைபோல ஓசியில் உடல் வளர்த்து, ஓசியில் மது அருந்தி, ஓசியில் ஜட்டியும் பனியனும் அணிந்துகொண்டு தன்னை பெரிய "டுபுக்கு" ஆக பந்தா காட்டும் பிறவிகள் அல்ல. அவர்கள் சமுதாய அமைப்பில் வேண்டுமானால் "கீழ்தட்டு"மக்களாக இருக்கலாம். ஆனால் மனிதாபிமானத்தில் உயர்ந்து நிற்பவர்கள்.

ஒரு சென்னை ரவ்டி அந்த மொழியில் பேசுகிறான் என்பது இயல்பான ஒன்று. அதனால் மட்டுமே அது கேவலமானதாக போய்விட முடியாது அல்லவா? அவன் பேசும் அதே அர்த்தத்தில் பிறர் அல்லது மற்ற மேல்தட்டு மக்கள் "தங்கள் வட்டார வழக்கில்" பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சென்னை தவிர நாட்டின் மற்ற பிற இடங்களில் வசிக்கும் "ரோட்டோர மக்கள்" இப்படிதான் தங்களின் மொழியை கொண்டுள்ளனர்.

// மேலும் ஆரம்பத்தில் சென்னைக்கு வரும் பலரும் இந்த பாஷையை பேசினால்தான் நம்மை சென்னைக்காரன் என்று நம்புவார்கள் என்று ஒரு தாழ்வு மனப்பான்மையே காரணம் //

இதைபடித்து என்னால் சிரிக்கத்தான் முடிந்தது.
சென்னையில் உள்ளவர்களில் 90% மக்கள் அணைவரும் தமிழ் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வந்தவர்கள்தான்.
இவர்களில் எவரும் சென்னை தமிழை தங்கள் மொழியாக சுவீகரிக்க வில்லை. அவரவர்கள் தங்களின் வழக்கப்படிதான் பேசி வாழ்கின்றனர். ஆனால் சென்னை தமிழை புரிந்து கொள்வார்கள். பேசமாட்டார்கள். பேசினால் மரியாதை குறையும் என்ற பயம் தான்.
எனக்கு சென்னைத்தமிழ் நன்றாக வரும்.எவரிடமும் பேசுவதில்லை. ஆனால் அதன் மீதுள்ள ஒரு ஈர்ப்பினால் இங்கு வலைத்தளத்தில், சில நண்பர்களிடம் அப்படி பின்னூட்டம் எழுதி கிண்டல் அடிப்பது உண்டு. அதில் பழக்கம் இல்லாதவர்களுக்கு அம்மொழி எரிச்சலை உண்டாக்கும் என்பதும் தெரியும். நீங்களும் அப்படிதான் . சரிதானே?!

MoonramKonam Magazine Group said...

நெத்தியடி!

வால்பையன் said...

வரலறு காஷ்மீர் தனிநாடு தான் என சொல்கிறது, ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற போது யாருடன் இணைய பிரியப்படுகிறீர்கள் என கேட்ட போது அவர்கள் தனியாகவே இருக்க சம்மதித்தார்கள், பாகிஸ்தான் ஊடுருவலை தடுக்க இந்தியாவின் உதவியை கேட்க போய், திண்னையில் அமர்ந்த இந்தியா இன்று காஷ்மீர் எனக்கு சொந்தம் என்கிறது!

வால்பையன் said...

//காசுக்காக மானமிழந்து நடித்து பிரபலனானவள்//

மானம் அவமானமெல்லாம் அவரவர் சம்பந்தபட்டது, ஆதாம், ஏவாளை படைக்கும் போது துணியோடு இருந்தார்கள்னும், மற்றவர்கள் வரும் போது பர்தாவோடு இருந்தார்கள் என்றும் குரானில் இல்லையே!.

வால்பையன் said...

//தமிழை தாய் மொழியை கொண்டவன் தமிழில் பிழையாக பேசினால்தான் தவறு..ஆனால் ஆங்கிலத்தில் பிழையாக பேசிவிட்டால் ஏதோ உலகமகா ஜோக்கை கேட்டது போல விழுந்து விழுந்து சிரிக்கிறோம்//

சரியா நீங்க படிக்கலைன்னு நினைக்கிறேன், அந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் தான் பேசனும்னு விதி எதுவும் இல்லை, மற்றவர்கள் பேசினார்கள் என்பதற்காக வீண் சவடால் விட்டு ஆங்கிலத்தில் பேசி சொதப்பியது சாரு தான். ஏன் தமிழில் பேசவில்லை என உங்கள் கேள்வி இருந்திருக்க வேண்டும்!

வால்பையன் said...

கடைசி படத்தில் இருக்கும் நடிகை யார்!?

ரெசிஸ்டண்ட் ஈவில் படத்தில் நடித்தாரே அவரா!?

சாமக்கோடங்கி said...

சென்னை மொழியை அவர்கள் பிறந்ததிலிருந்தே பேசிப் பழகிக் கொள்கிறார்கள். அதில் எந்தத் தவறும் இல்லை.. வெளிநாடுகளிலும் இவ்வாறு மருவிய வட்டார மொழிகள் இருக்கின்றன. அந்த நாடுகளிலும், ஒரு பகுதியில் இருப்போர் இன்னொரு பகுதியில் வசிப்போரின் வழக்கு மொழியை அறிந்து கொள்ள சிரமப் படுகின்றனர்.. ஆகவே சென்னைத் தமிழ் மருவிய வட்டார மொழியே தவிர அசிங்கப் படுத்தப்பட்ட மொழியல்ல, அதைப் பேசுவதினால் தமிழுக்கு எந்த இழுக்கும் இல்லை.. கக்கு மாணிக்கத்துடன் ஒத்துப் போகிறேன்..

/அடல்ட் ஜோக் பற்றி குறிப்பிடீர்கள்...நன்றி..
எனது வலைப்பூவிற்கு பெண் பாலோயர்கள் இல்லை என்ற தைரியத்திலேயே அதை வெளியிட்டேன்..இருந்தாலும் தவறுதான் . மன்னிக்கவும்.. //

பெருந்தன்மை..!!

//திரு கக்கு மாணிக்கம் அவர்களே..அந்த படம் நம் தமிழ் நாட்டு நடிகைகளின் படங்களை விடவா ஆபாசமாக உள்ளது? //

படத்தில் இல்லை.. எழுத்தில்..

அப்புறம் நீங்கள் குறிப்பிட்ட அந்த சாக்கடை மனிதனின் பதிவைப் படித்துப் பாதியில் வாந்தி வருவதைப் போல உணர்ந்து வெளியில் வந்து விட்டேன்.. கண்டிப்பாக அந்தக் கடிதத்தை ஒரு பெண் எழுதியிருக்க வாய்ப்பில்லை.. அவனைப் பற்றிப் பேசி யாரும் பெரிய ஆள் ஆக்க வேண்டாம்..

சாமக்கோடங்கி..

மதுரை சரவணன் said...

சர்ச்சைக்குறிய தலைப்பை வைப்பதில் அனைவருக்கும் ஆர்வம் அதிகமாகி வருகிறது. ... சில விசயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஜோக் தவிர்த்து இருக்கலாம்... (இந்த பதிவில் ).... வாழ்த்துக்கள்

mani said...

"எங்கள் மாட்சிமை பொருந்திய பிரிட்டிஸ் சாம்ராச்சியத்தின் அங்கமாக 150 வருடங்களுக்கும்மேல் உள்ள, எங்கள் மகாராணி உருவாக்கிய இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டுமாம்,அது சுய ராச்சியமாம், எத்தனை கொழுப்பு அவர்கழுக்கு"இந்திய சுதந்திரப்போராட்டத்தியாகிகள் குறித்து எட்டப்பனும் அவன்போன்றோரும் இப்படித்தான் கொக்கரித்திருப்பார்கள்,நண்பரே!

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள்
திரு மங்குனி அமைச்சர்
திரு கக்கு மாணிக்கம்
திரு மூன்றாம் கோணம்
திரு வால் பையன்
திரு பிரகாஸ் (எ) சாமக் கோடங்கி
திரு மதுரை சரவணன்
திரு மணி
ஆகிய அனைவருக்கும் மிக்க நன்றி.
ஒவ்வொன்றும் எதும்போது இதுபோன்றே அமைந்து விடுகிறது
..இனி வரும் பதிவுகளில் தங்களது ஆலோசனைகளுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள முயற்ச்சிக்கிறேன்.மீண்டும் நன்றி..

idroos said...

Charu thannai thane medhai endru azhaithukkollumpodhu enakku siripu varugiradhu

Adriean said...

அருந்ததி ராய் பற்றி நீங்கள் கூறியவற்றோடு முழுமையாக உடன்படுகிறேன். இலங்கையில் கூட இவர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பேசியதாக அறிந்தேன்.

மர்மயோகி said...

நன்றி திரு முசம்மில் இத்ரூஸ் , திரு சந்திரன்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?