Pages

Wednesday, February 17, 2010

மனிதனை மனிதனாகப் பார்க்கலாம்..நடிகர்களை?



சமீபத்தில் நடிகர் அஜித் அளித்த பேட்டி இப்போது பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்து பார்த்து இருக்கலாம்...

சினிமாக்காரன் பேட்டி (பெட்டி) என்றால் எதையும் யோசிக்காத நமது ஜனநாயகக்காவலர்களான நமது தமிழ் பத்திரிக்கைகள் ஏதோ அபூர்வமான பேட்டி போல ஆளாளுக்கு அட்டைப்படத்துடன் தலைப்புசெய்தியாக வெளியிட்டு மகிழ்ந்து கொண்டார்கள்..மற்றும் தமது வியாபாரத்தையும் பெருக்கிக்கொண்டுவிட்டர்கள்..

செய்தி ஒன்றுமில்லை..." நடிகனையும் மனிதனாக பாருங்கள்" இதுதான் அந்த நடிகர் சொன்னது.. இதுக்கு என்னமோ ஒரு அதிசய பொன்மொழிபோல .."தல உருக்கம், மற்றும் கால் கை, கண்ணு உருக்கம் எனபது போல ஏகப்பட்ட பில்ட் அப் வேறு...
சரி அவர் சொல்வது போல நடிகனை மனிதனாகவே பார்க்கலாம்.....எப்போது..?

நீ ஒரு மனிதன் போல நடி..அப்போது உன்னை ஒரு மனிதனாக பார்க்கிறோம்...

திரைப்படங்களில் உங்களைப்போன்ற நடிகர்களை ஈசியாக மிரட்டிவிட முடியுமா? இவர்தான் முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கிறார் தம்மை விழாக்களுக்கு வருமாறு மிரட்டல் வந்தது என்று..ஆயிரம் பேர் வந்தாலும் ஒரு ஆளாக நின்று விரட்டி அடிக்கிறீங்க...(அது என்னப்பா எத்தனை பேர் அடிக்க வந்தாலும்..மொத்தமா வர்றது இல்லை..தனித்தனியாத்தான் வந்து அடிவாங்கிட்டு போறானுங்க) எந்த எடத்துக்கு போனாலும் உன்னை யாரும் வெல்ல முடியிறது இல்லை...உங்களமாதிரி வெத்துவேட்டு நடிகனுங்க படங்களை (நான் அஜித்தை மட்டும் குறிப்பிடவில்லை..அவரைப்போல உள்ள எல்லா நடிகர்களையும்தான்) பாத்துட்டு உங்க கட் ஒவுட்டுக்கு பூஜை பண்றது பாலபிஷேகம் பண்றது எல்லாம் அடித்தட்டு மக்கள்தான்...
சாலையோரங்களில் வசிக்கும் படிப்பறிவு இல்லாத, தினமும் குடித்துக்கொண்டு பொறுக்கித்தனம் செய்யும் மக்கள் (மாக்கள்)தான் உங்கள் படங்களை பார்த்து விட்டு, மேலும் பொறுக்கித்தனமும் ரவுடித்தனமும் செய்துகொண்டு இருக்கிறார்கள்...

கதாநாயகன் எவ்வளவுதான் பொறுக்கித்தனமும் ரவுடித்தனமும் செய்தாலும்..அதற்கு ஒரு வியாக்கியானம் கொடுத்து அவன் நல்லதுக்காகத்தான் அப்படி செய்தான் என்று பார்க்கும் மக்களை முட்டாள்களாக்கி.. தமது ரசிகனை மேலும் மேலும் பொறுக்கித்தனம் செய்யத்தூண்டும் இவர்கள் என்று மனிதனாக திரையிலும் நடிக்கிறார்களோ அப்போது உங்களை நாங்கள் மனிதனாக பார்க்கிறோம்..

அதுவரைக்கும்....நீங்களே உங்கள் வில்லன்களைப்பார்த்து சொல்வதுபோல்..."பொத்திக்கிட்டு இரு"

1 comments :

priyamudanprabu said...

கதாநாயகன் எவ்வளவுதான் பொறுக்கித்தனமும் ரவுடித்தனமும் செய்தாலும்..அதற்கு ஒரு வியாக்கியானம் கொடுத்து அவன் நல்லதுக்காகத்தான் அப்படி செய்தான் என்று பார்க்கும் மக்களை முட்டாள்களாக்கி.. தமது ரசிகனை மேலும் மேலும் பொறுக்கித்தனம் செய்யத்தூண்டும் இவர்கள் என்று மனிதனாக திரையிலும் நடிக்கிறார்களோ அப்போது உங்களை நாங்கள் மனிதனாக பார்க்கிறோம்..

//

மிகசரி

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?