Pages

Saturday, February 20, 2010

அமெரிக்க அடிவருடிகள்இந்தியாவைப்போல அமெரிக்காவும் ஒரு நாடு..பல்வேறு தரப்பட்ட மக்கள் அங்கு வசிக்கிறார்கள்..என்ன..இயற்கை அவர்களுக்கு சற்று சாதகமாக உள்ளது..

அதே செல்வங்களும் இயற்கை வளங்களும் நம் நாட்டிலும் உள்ளன..

ஆனால் நம்மிடையே உள்ள அடிமை புத்தி எல்லாவற்றையும் அமெரிக்க நாட்டுடனேயே ஒப்பிட்டு பார்க்க வைக்கிறது..

ஊடகங்கள் அமெரிக்க கைக்கூலியாக மாறி நம்மை மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றன..

எந்த ஒரு விசயமானாலும் அமெரிக்கர்கள் இப்படித்தான் செய்கிறார்கள் என்றும் அதனால்தான் அவன் இவ்வளவு வசதியாக வாழ்கிறான் என்றும் நம்மிடம் செய்திகளை திணிக்கிறார்கள் அந்த மூளைகெட்ட ஜென்மங்கள்..

இந்திய குடும்ப வாழ்க்கைமுறை, பண்பாடு கலாச்சாரம் போன்றவை எல்லா உலகமக்களாலும் விரும்பப்படுபவை..ஆனால் செல்வத்தால் மட்டுமே உயர்ந்து நிற்கும் மேலை நாட்டவரின் குடும்பம் பண்பாடு மற்றும் கலாசாரம் மிகவும் சீர்கெட்டு இருப்பதை மூளை உள்ள எவருமே ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.

என்னதான் அவர்கள் செல்வச்செழிப்பில் வாழ்ந்தாலும், அங்கேயும் ஹோம்லெஸ் என்று அழைக்கப்படும் வீடில்லாதோர், திருடன், வழிப்பறி கொள்ளைக்காரன் போன்றோர் அங்கும் இருக்கவே செய்கின்றனர்..அங்கே குடும்ப வாழ்க்கை முறை கெட்டதால்தான், மதெர்ஸ் டே, பாதெர்ஸ் டே, அண்ணன் டே, தங்கச்சி டே, காதலர் தினம் இன்னும் என்னனமோ கருமாந்திர தினம் என்று கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். அதைத்தான் இங்கே காப்பியடித்து எல்லா நாசகார தினங்களையும் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு இங்கே (மேலும் அதிகமாக) குடிப்பதற்கு ஒரு தினம் வேண்டும்..

இங்கே யார் தனது தாயையும் தந்தையையும் மனைவி மக்களையும் வருஷக்கணக்கில் பிரிந்து இருக்கிறோம்?

நம் மக்களின் அடிமை புத்தி மேல் நாட்டவர்கள் என்று அழைக்கப்படும் அந்நியர்கள் எது செய்தாலும் அதில் ஒரு கவர்ச்சியை காண்கிறது.

டி வி க்களிலும்கூட உலகச்செய்தி என்று போடும்போது, அமெரிக்க கொடி, ஜார்ஜ் புஷ் மற்றும் அமெரிக்க கட்டிடம் எதாவது ஒன்றைக்காட்டி உலகச்செய்தி என்கிறான்...ஏன் இந்தியா இந்த உலகத்திலேயே இல்லையா?

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் செய்திகளுக்கு இங்குள்ள டி.வீ க்களும் செய்திதாள்களும் கொடுக்கும் முக்கியத்துவம் இருக்கே...ஏதோ இவங்களுக்கு இதனால் பெரிய புண்ணியம் என்பதுபோல் வரிந்துகட்டிக்கொண்டு செய்திகளைக்கொடுத்து மக்களை குழப்புவது..(அமெரிக்ககாரன் அமெரிக்காவுல ஜனாதிபதியவுறது அவ்வளவு கஷ்டமா?)

அப்புறம் சினிமாக்கூத்தாடிகள்..இவனுங்க பண்ற அநியாயம் இருக்கே..அமெரிக்ககாரன் சினிமா ஸ்டூடியோ வைத்து இருக்கும் இடம் பேர் ஹாலிவுட்..இவன் கோடம்பாக்கத்துக்கு கோலிவுட்டாம், பம்பாய்க்கு பாலிவுட்டாம் (மும்பைன்னு மாத்திட்டாங்களே.. அப்போ மூளிவுட்டா?) தெலுங்குக்கு டோலிவுட்டாம்.. அட வெக்கங்கெட்ட நாய்களா..உங்களுக்கு சொந்த அறிவு இல்லை?

இந்த ஆஸ்கார் விருது..ஏதோ கடவுளே கொடுக்கிறமாதிரி அவனவன். ஆஸ்கார் ஆச்காருன்னு அடிச்சுக்கிறானுங்க..அட மடப்பசங்களா இந்தியாவுல இந்த கூத்தாடிகளுக்கு, இங்குள்ள ஜனாதிபதி வேலையத்துப்போயி, சிறந்த நடிகன் சிறந்த நடிகைன்னு கொடுக்குரானுகளே..அது மாதிரி அங்கே உள்ள கூத்தாடிகளுக்கு அந்த நாட்டுக்காரன் கொடுக்கிற ஒரு விருது...அதுக்கு இங்கே உள்ள இந்த அடிமைகள் ஏன் அடிச்சுகிரான்னு தெரியல..இவனுங்கதான் தேச பக்தியப்பத்தி பக்கத்துக்கு பக்கம் வசனம் பேசிட்டு இந்திய நாடு தர்ற விருதைவிட அமெரிக்காகாரன் தர்ற விருதுக்காக படமெடுத்துக்கொண்டு இருக்கிறானுங்க..அவன் இவங்கள சீண்டுறதே இல்லை..(எ. ஆர் ரஹ்மானுக்கு கொடுத்த விருது அமெரிக்கா நாட்டுக்காரன் நம்ம நாட்டை கேவலப்படுத்தி எடுத்த படத்தில் இசையமைத்ததற்காக...அந்த இசைகூட விஜய் படத்தில் வரும் "எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே " என்ற பாடலின் ட்யூன் தான் - அப்போ அந்த இசையை இங்குள்ள எவனும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை..அமெரிக்ககாரன் அவார்ட் கொடுத்தவுடன் என்னமா கொண்டாடுரானுங்க).

இப்படி சினிமாக்காரனுங்களும் மீடியாக்களும் போட்டி போட்டுக்கொண்டு நம்மை அமெரிக்கா அடிமையாக்க கைக்கூலி வாங்கிக்கொண்டு வேலை செய்கிறார்கள்..

நாமும் பல்லை இளித்துக்கொண்டு பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்..

4 comments :

ஜெய்லானி said...

எல்லாத்துக்குமே அமெரிக்காவை பார்க்கும் நம் மடமக்கள் ஒரு விசயத்தில் கோட்டை விட்டார்கள். அது தண்ணி அடிப்பது.அவனிடம் குவாட்டரை தந்தால் அதை நாள் முழுதும் நக்கி கொண்டு இருப்பான்.அதே நம்ம ஆள் முழு பாட்டலையும் ஒரே மூச்சில் குடித்து விட்டு ரோட்டோரத்தில் விழுந்து கிடப்பான்.
இன்னும் எழுதுங்க...

ஜீவன்பென்னி said...

உலகில் உள்ள வளங்களில் 20% சதவிதத்தை 5% அமெரிக்க மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதிகமா இருக்கின்ற 15% கட் பண்ணிட்டா எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தால் 15% சதவீதத்த வேற ஒருத்தன் எடுத்துக்கிட்டு புதுசா ஆட ஆரம்பிப்பானுங்க. இது உலகமயமாக்கத்தின் ஆட்டம். அடுத்த வேலை உணவுக்கு வழியில்லாத போதுதான் இது அடங்கும்.

குலவுசனப்பிரியன் said...

//இந்திய குடும்ப வாழ்க்கைமுறை, பண்பாடு கலாச்சாரம் போன்றவை எல்லா உலகமக்களாலும் விரும்பப்படுபவை..ஆனால் செல்வத்தால் மட்டுமே உயர்ந்து நிற்கும் மேலை நாட்டவரின் குடும்பம் பண்பாடு மற்றும் கலாசாரம் மிகவும் சீர்கெட்டு இருப்பதை //
இதுவும் வெகுசன ஊடகங்கள் திணித்த கருத்துக்கள்தானே?

பதிவுலகத்திற்கு அண்மை காலத்தில்தான் வந்திருக்கிறீர்கள். உங்கள் எண்ணம் மாறலாம்.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பண்புகள் (sophistication) ஏனோ நம்மைவிட்டு போய்விட்டன.

சாலை விதிகளைக்கூட மதிக்காத பொதுநலம் கருதா மக்களும், கூப்பிடு தூரத்தில் உள்ள ஈழத்தில் நடக்கும் கொடுமையை எடுத்து சொல்வதை விட்டு அமெரிக்க அரசியல் பேசும் ஊடகங்களும், ஊழல் மலிந்த அரசும், அதற்கு துணைபோகும் வாக்காளர்களும் என்று நம்மிடையே இன்று பல சரவல்கள் உள்ளன.

சாதியம், பெண் அடிமை மிகுந்த சூழலில் எப்படி குடும்பம், கலாச்சாரம் என்று நாம் பெருமைபட முடியும்.

தீமையை சாடும் அதே வேளை நல்லவைகளை போற்றலாம் அல்லவா?

மர்மயோகி said...

நன்றி திரு குலவுசனப்பிரியன் அவர்களே..
நான் நிச்சயமாக நினைத்துக்கொண்டு இருந்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்..

டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் நல்லதைப் போற்றுவோம் தீமையை சாடுவோம் என பதியலாம் என்று நினைத்திருந்த நேரத்தில் தங்களது பின்னூட்டமும் வந்துள்ளது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது..(மாற்றிவிட்டேன்)

நல்லது..பெண்ணடிமைத்தனம், சாதியம் பற்றி கூறியிருக்கிறீர்கள்.. கட்டுரை அதைப்பற்றியதல்ல..நாம் நம்மை இன்னும் பண்படுத்திக் கொள்ளாமல் அந்நிய மோகத்தில் மூழ்கி இருப்பதைபற்றியது..

பதிவுலகத்துக்கு இப்போதுதான் வந்திருக்கிறேன்..மேலும் உங்களது ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கி ஆதரியுங்கள்..மிக்க நன்றி.

மற்றும் பின்னூட்டமிட்ட ஜீவன் பென்னி, ஜெய்லானி ஆகிய நண்பர்களுக்கும் நன்றி..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?