Pages

Friday, February 26, 2010

நமீதாவின் மச்சான்களும் ஆபாச விகடனும் ..!

இந்தியாவுக்கே தேசபக்தியை கற்றுக் கொடுத்தவரும், சட்டசபைக்கு குடித்துவிட்டு வரும் குடிமகன் என்றும் புகழப்பட்டவரான நடிகர் விஜயகாந்தால் அறிமுகம் செய்யப்பட்ட அற்புதமான ஒரு நடிகைதான் நமீதா..

பாவம் வயிற்றுப் பிழைப்புக்காக தன் உடம்பைக்காட்ட வந்த அந்தப்பெண்ணை ஒரு நடிகை என்றே யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை..இரண்டாம்தர வேடங்களிலும் ஆபாச வேடங்களிலும் நடித்தாலும் தான் வானத்தில் இருந்து  குதித்தவராக கற்பனை செய்துகொள்ளும் (எல்லா நடிகைகளும் அப்படித்தான் நினைத்துக்கொள்கிராளுங்க) அந்த நடிகைக்கு...சினிமாகாரனுங்களுக்காகவே முதல்வராக இருக்கும் கருணாநிதியின் சொந்த டி.வீ இல் "மானாட மயிலாட" என்கிற ஆபாச நிகழ்ச்சியில் நடுவராக (நடுவரும் ஆபாச உடைதான் அணிவார்கள்) பங்கேற்கும் வாய்ப்பும், மக்களுக்கு அதை பார்த்துதொலைக்கும் தொல்லையும் ஏற்ப்பட்டது.

அதில் அந்த ஆபாச நடிகை உச்சரித்த அதிசய வார்த்தைதான் "மச்சான்" ! .இதற்கும் முன் தமிழில் அப்படியொரு வார்த்தையே இல்லை என்பது போலவும், மச்சான் என்கிற வார்த்தை நமிதா கண்டுபிடித்த புனிதமான சொல் போலவும் - தமிழகத்தின் ஆபாச வியாபாரியான ஆனந்த (ஆபாச) விகடன் கொண்டாடி வருகிறான்.

இந்தவார ஆனந்த (ஆபாச) விகடனின் கேவலப் பக்கங்கள்...

ரஜினி என்கிற நடிகரால் (அவரது மகள் திருமண நிச்சயதாரத்தத்திற்கு நேரடியாக அழைக்கப்படாமல்) அலட்சியப்படுத்தப் பட்ட முதல்வர், வெக்கங்கெட்டு வீல்சேரில் அந்த நிச்சயதார்த்தத்திற்கு சென்றது பற்றிய செய்தி..(இதுவும் அவரை அவமானப்படுத்துவற்காக வெளியிட்டிருப்பானோ?)

அஜித் என்கிற நடிகர் ஏதோ கூட்டத்தை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு பேசிய சில வார்த்தைகளை (அதன் பிறகு அந்த "தல" முதல்வரின் காலில் விழுந்ததை கண்டும் காணாமல் விட்டுவிட்டு) அதற்கு இவனாகவே பல்வேறு அர்த்தங்கள் கற்பித்து அந்த நடிகர் புகழ் பாடுகிறான்.

யாரோ ஒரு ஹிந்தி ஆபாச நடிகையின் பல்வேறு கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு, இவளுக்கு ரகசிய சிநேகிதன் யாரு (பாவம் அந்த சின்னபெண்ணுக்கு அறுபதை தாண்டிய ரஜினிதான் பிடிக்கும் என்று ப்ரோக்கர் வேலை வேறு) படுக்கை அறையில் என்ன பண்ணுவாள், சின்னப் பையன்களை அவளுக்கு பிடிக்கும் என்று மாமா வேலை செய்கிறான்..

அப்புறம் எந்த எந்த நடிகை எவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறாள் என்கிற கேவலம் கெட்ட விசயங்களையும் கிசு கிசு என்கிற பெயரில் வெளியிடுகிறான்..


ஒரு தலையங்கத்தில், தி மு க செயற்குழுவில் கலந்து கொண்ட அ தி மு க கட்சி எம் எல் ஏ க்களை வெட்கங்கெட்டவர்கள் என்று திட்டும் ஆபாச விகடனுக்கு , ஒரு காலத்தில் சுதந்திரத்திற்காக செய்திகளை வெளியிட்டோம் என்றும் பீத்திக்கொண்டு, இன்று வியாபாரத்திற்காக, நடிக நடிகைகளுக்கு புரோக்கர் வேலை பார்க்கும் பத்திரிக்கையாக மாறிவிட்டு இவர்களை குற்றம் சொல்ல ஒரு தகுதியும் இல்லை..


நடிகர் நடிகை என்பவர்கள் தன் சுய தேவைகளுக்காக வெட்கம் மானம் இழந்து நடு ரோட்டில் கட்டி பிடித்து ஆபாசமாக நடிக்கக்கூடியவர்கள்..இவர்களால் எந்த உபயோகமான ஒரு காரியமும் நடப்பது இல்லை..

இவர்கள் புகழ்பாடி, அரசியலுக்கு இவர்கள்தான் வரவேண்டும் என்று, ஈனத்தமான காரியங்களில் ஈடுபடும் ஆனந்த (ஆபாச) விகடன் போன்ற கேவலமான பத்திரிக்கைகள் - தம்மை, ஜனரஞ்சக பத்திரிகை என்றும், பழம்பெருமை வாய்ந்த பத்திரிகை என்றும், தன்னைத்தானே சொல்லிக்கொள்வதற்கு துளி கூட தகுதி இல்லை..மேலும் தமிழகத்தின் நம்பர் ஒன் பத்திரிகை என்றும் சொல்லி, தமிழக மக்களை கேவலப்படுத்தவேண்டாம்..

வியாபாரம் வியாபாரம் என்று மக்களை ஏமாற்றும் இந்த ஆபாச வியாபாரிகள் திருந்துவது நடக்குமா?
 
என்னடா இவ்வளவு பேசிட்டு இவனும் ஆபாசப்படங்களை போடுரானே என்று நீங்கள் முணுமுணுப்பது நன்றாகவே கேக்குது..ஆனா அப்போதானே நீங்கல்லாம் பாப்பீங்க..ஹி ஹி

5 comments :

தமிழ் உதயம் said...

என்னடா இவ்வளவு பேசிட்டு இவனும் ஆபாசப்படங்களை போடுரானே என்று நீங்கள் முணுமுணுப்பது நன்றாகவே கேக்குது..ஆனா அப்போதானே நீங்கல்லாம் பாப்பீங்க..ஹி ஹி


இந்த நெருக்கடி பவளவிழா கண்ட ஆனந்த விகடனுக்கும் இருக்கு. பத்து இடுகை போட்ட மர்மயோகிக்கும் இருக்கு. அப்புறம் நமிதா படம் நல்லாவே இல்ல. அசிங்கம். கண்ணை மூடிட்டு தான் படிச்சேன்...ஹி ஹி

மர்மயோகி said...

நன்றி தமிழ் உதயம் அவர்களே..
கவனிக்கவும் பத்து இடுகை இட்ட மர்மயோகி இதை வைத்து வியாபாரம் பண்ணவில்லை...ஆனால் பவளவிழ கண்ட விகடன் வருடந்தோறும் அசிங்கத்தை திணித்து வியாபாரம் செய்கிறான்..
இதில் யாருக்கும் நெருக்கடி இல்லை..

Dr.Rudhran said...

enrilirunthu intha maarram enbathaiyum kuurnthu nokkungal

மர்மயோகி said...

நன்றி திரு ருத்ரன் அவர்களே..

நான் ஆரம்ப நாட்களில் இருந்து ஆனந்த விகடன், குமுதம் போன்ற இன்னும் என்னென்ன தமிழ் பத்திரிகைகள் வருகிறதோ அவைகளின் தொடர்ந்த வாசகன்....தங்களைப்போன்றவர்களிப்பற்றியும் அந்த பத்திரிக்கைகள் மூலமாகத்தான் அறிந்தேன்..
என்றிலிருந்து இந்தத் மாற்றம் என்பதை கூர்ந்து கவனிக்க சொல்லி இருக்கீர்கள்..தற்சமயம் ஆனந்த விகடனில் "பொக்கிஷம்" என்று ஒரு பகுதி வெளியாகி வருகிறது..அதில் அதன் கடந்த கால செய்திகளை நினைவு கூர்கிறார்கள்..அவை அத்தனையும் பழையகால நடிகர்களின் பேட்டி என்கிற அதே பழைய குப்பைகள்தான்..இந்த குப்பைகளைத்தான் பொக்கிஷம் என்று மீண்டும் நம்மீது திணிக்கிறார்கள்.

ஊடகங்கள்தான் மாற்றத்தை உருவாக்குபவை..ஆனால் மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக ஆபாசங்களைத் திணிப்பது அவைகளின் நோக்கமாக இருக்கக்கூடாது என்பதுதான் என் ஆசை. எல்லாருக்கும் விபச்சாரம், சாராயம் போன்றவை மீது ஆசைதான்..சிலர் கட்டுபடுத்திக் கொள்கிறார்கள் சிலர் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்..அதற்காக இந்த பத்திரிக்கைகள் விபச்சார தொழிலையும் செய்வார்களா? (ஆனால் தற்போது அதைத்தான் செய்வதாகத் தோன்றுகிறது) .

RAVI said...

போட்டோ சுமார்தான்...
பத்திரிக்கைகளை வம்புக்கு இழுப்பதில் நம்பர் ஒன்னு நாந்தேனுங்க மச்சான்... ஹி..ஹி...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?