Pages

Friday, February 19, 2010

சில கேள்விகள்!


முதல்வரின் அன்றாடப்பணிகள் :


நமது தமிழக முதல்வர் அவர்கள் தினமும் ஒரு அறிக்கை (தானாகவே தயாரித்துக்கொண்ட கேள்வி பதில் அறிக்கைகள் வேறு) விடுகிறார், பல்வேறு பாராட்டு விழாக்களில் கலந்து கொள்கிறார், சினிமாவிற்கு கதை வசனம் எழுதுகிறார், சம்மந்தப்பட்ட நடிக நடிகைகளை சந்திக்கிறார், வாரம் இரண்டு சினிமாக்கள் பார்த்துவிடுகிறார், அதைப்பாராட்டி பேட்டியும் அளிக்கிறார், புதிதாகக்கட்டப்பட்டு வரும் தலைமைச்செயலகத்தை அடிக்கடி பார்வை இடுகிறார், துணைவியார் வீட்டுக்கு செல்கிறார், அறிவாலயம் செல்கிறார், முரசொலியில் அன்றாடம் உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதுகிறார், கலைஞர் டி வியை நிர்வகிக்கிறார், அதில் மானாட மயிலாட போன்ற அறிவை வளர்க்கும் நிகழ்ச்சியை தினமும் பார்த்து ரசிக்கிறார், தினமும் சினிமாக்காரர்களை சந்திக்கிறார், அவர்களுக்கு எல்லா சலுகைகளையும் வழங்குகிறார் (கூடவே வயது முதிர்ந்த இரண்டு நடிகர்கள் - கமல் மற்றும் ரஜினி - இப்போது புதிதாக மம்முட்டியும்) அவர்களது எல்லா பிரச்சினைகளையும் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறார் (விபச்சார வழக்கு உட்பட)...

இப்படி சுறுசுறுப்பாக செயல்படுவதாக புகழப்படும் முதல்வரின் பணிகளில்..எங்காவது மக்கள் நலப்பணிகள் என்று ஏதாவது உண்டா...?

இருந்தா சொல்லுங்களேன்..ப்ளீஸ் !

குமுதத்தின் குறுக்கு புத்தி..


கடந்த இரண்டு வாரகாலமாக தமிழகத்தின் நம்பர் ஒன் ஆபாச புத்தகமான குமுதத்தில் நடிகர் ஜெயராம் என்பவரைப்பற்றி கண்டனக்கட்டுரைகள் வந்தவண்ணமாக இருக்கின்றன..என்னவென்றால் ஒரு டி.வீ. நிகழ்ச்சியில் அந்த நடிகர் தனது வீட்டில் வேலை பார்க்கும் ஒரு தமிழ் பெண்ணைப்பற்றி கிண்டலாக அவளைக் கறுப்பி என்று சொல்லிவிட்டாராம்...(தமிழகப் பெண்களில் யாருமே கருப்பாக இல்லை பாருங்கள்)..உடனேயே தமிழைக் காக்க புறப்பட்ட குமுதம் அவரை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது..இதையே சாக்காக வைத்து, போனியாகாதப் படங்களைத்தந்து முகவரியற்று கிடந்த சீமான் என்பவன் அவர் வீட்டை தாக்கி அப்புறம் கம்பி எண்ணியது தனிக்கதை.

இதே தமிழ் சினிமாக்காரர்கள் மலையாளத்து பெண்களையும், தெலுங்குக்காரர்களையும் எவ்வளவோ கிண்டலடித்திருக்கிறார்கள்..அது இந்த தமிழினக்காவலர்களுக்குத் தெரியாதா...அல்லது அவர்கள் மனிதர்கள் இல்லையா?

சரி அப்புறம் நடிகர் ஜெயராம் வீட்டில் வேலை செய்த அந்தப் பெண்ணை அவர் அப்படி கிண்டலாக பேசி இருந்தாலும் அது அந்த நிகழ்ச்சியோடு போயிருக்கும்..அதை தமிழகம் முழுவதும் எல்லாருக்கும் தெரியப்படுத்தி..அந்த பெண்ணை மேலும் கேவலப்படுத்தி தன் வியாபாரத்தை பெருக்க அதை இந்த குமுதம் பயன்படுத்திக்கொண்டது..

அப்புறம் ஒரு கேள்வி..அந்த பெண்ணை நடிகர் ஜெயராம் இன்னமும் வேலைக்கு வைத்துக்கொண்டு இருப்பான் என்று எதிர்பார்க்கலாமா? அல்லது அந்த பெண்தான் இனிமேலும் அந்த வீட்டில் வேலை செய்வாரா?

எப்படியோ. தனது வியாபாரத்துக்காக ஒரு ஏழைப்பெண்ணை தமிழகமெங்கும் அவமானப்படுத்தி..அவள் எதிர்காலத்துக்கும் உலை வைத்தாயிற்று..

ஆனந்த விகடனின் அரைவேக்காட்டுத்தனம்


சினிமாவில் கூத்தடிப்பவனை எல்லாம் வி.ஐ.பி என்று கொண்டாடும் தமிழகத்தின் ஆபாச முகவரி ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கும் ஒரு கட்டுரை..

ஒரு நடிகர் (ரஜினி) இன்னொரு நடிகருக்கு (கமல்) ஒரு ஓவியம் பரிசாக வழங்கி இருக்கிறார்.. இதற்கு இந்த அரைவேக்காட்டு விகடன் அட்டைப்படத்தோடு செய்தி போட்டு கொடுத்து இருக்கும் தலைப்பு "உயிரைக்குழைத்து ஓவியம் வரைந்தேன்"

ஓவியம் வரைவதற்கு உயிரை எதுக்கு கொடுக்கணும்? ஒரு ஓவியனிடம் காசை கொடுத்து இந்த மாதிரி ஒரு ஓவியம் வரைந்து கொடு என்றால் வரையப்போகிறான். (அதைத்தான் அந்த நடிகனும் செய்து இருக்கிறார்). இப்படி ஒன்றுக்கும் ஆகாத விசயங்களை மக்களிடம் திணித்து அவர்களிடம் காசு பிடுங்கும் இந்த ஆபாச விகடனின் விலை 17 ருபாய்..ஒரு குப்பையை இவ்வளவு விலைகொடுத்து வாங்கிக்கொண்டு தான் இருக்கிறோம்..

எல்லா அசிங்கத்தையும் தனக்குள் வைத்திருக்கும் ஒரு கழிவறைதான் ஞாபகம் வருகிறது இந்த பத்திரிக்கைகளை பார்க்கும்போது.

சமன்பாடு

நிகழ்ச்சி 1.நடிகர் ரஜினி என்பவர் தனது மகள் திருமண நிச்ச்சயதார்த்ததிர்க்காக (இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி போல அவன் அவன் வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறார்கள் - ப்ளாக்கர்ஸ் உள்பட) அவரது தைரிய லெட்சுமி ஜெயலலிதாவை நேரடியாகவும், அன்றாடம் அவரையே (ரஜினியால் எவ்வளவு அவமானப்பட்டாலும்) புகழ்ந்து கொண்டிருக்கும் தமிழினத்தலைவர் (திரையுலகத்தின் தலைவர்கூடங்க) கருணாநிதியை, தனது குடும்பத்தார் மூலமாகவும் (இதற்கு விளக்கம் - சூரியன் அருகில் சென்றால் சுட்டு விடுமாம்) அழைத்தார்.

நிகழ்ச்சி 2.

சமீபத்தில் நடந்த திரைப்படத்துறையினர் நடத்திய முதல்வருக்கான பாராட்டு விழாவில் நடிகர் அஜித் நடிகர்களை விழாவில் கலந்துகொள்ள தம்மை மிரட்டினார்கள் என்று பேசி கைத்தட்டல் வாங்கிகொண்டார்..

நிகழ்ச்சி 3.

ரஜினியும் அஜித்குமாரும் நேற்று (18/02/2010) முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்... (செய்தி உபயம் மங்குனி அமைச்சர் - ஓகேயா மங்குனி அமைச்சரே)

நேற்று ரஜினியை சூரியன் சுடவும் இல்லை..அஜித்குமாரை யாரும் மிரட்டவும் இல்லை

3 comments :

மங்குனி அமைச்சர் said...

ஹி ஹி ஹி ஹி ....... இதல்லாம் வேணாம்னு சொன்னா யாரும் கேட்க மாட்டேன்கிரிங்க, பொது சேவைல இப்படி வர்ற புகழலாம் எனக்கு புடிக்காது

பாரு(று) (எந்த "று" தெரியல அதான்) உனக்கு எதிரா இன்னொருத்தன் கிளம்பபோறான் பாரு(று)

மர்மயோகி said...

கிளம்புங்கயா கிளம்புங்க..
சிநிமாக்கரனுங்களுக்கும், ஆபாச பத்திரிக்கைகளுக்கும் எதிரா யாரு கிளம்பினாலும் சந்தோஷம்தாங்க மங்குனி அமைச்சரே ...

jawaharlal said...

MARAN BROTHERS HAVING 51% SHARE IN VIKATAN GROUPS.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?