Pages

Saturday, February 20, 2010

இந்தப்பதிவு சுமார்தானே?


இன்று காலை அலுவலகம் வந்தவுடன் வேலையை தொடங்குமுன் ஒரு பதிவாவது பதிந்து விட்டு வேலையை தொடங்கலாம் (வேலை ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்) என்றுதான் வந்தேன்..

காலையில் குமுதம் பத்திரிக்கையை படிக்கும்போதே இன்னைக்கு குமுதத்தை ஒரு பிடி பிடிக்கலாம் என்றுதான் வந்தேன்..
பாருங்க..அட்டைப்படத்துல ஒரு நடிகையோட ஆபாசப்படம் (அட்டைல நடிகர் நடிகை படம்தான் போடணும் என்று இந்தியா பிரஸ் ரிஜிஸ்ட்ரார் எதாவது சட்டம் போட்டு இருக்காங்களா?) அதுலேயே சுருதி என்ற நடிகையின் பாய் பிரண்டைப் பற்றிய தலைப்பு...

சரி அட்டைதான் ஏதோ கவர்ச்சிக்காக போட்டு இருக்கான்னு பாத்தா..எல்லா பக்கமும் சினிமா சினிமாதாங்க..
அட்டைய திருப்புனவுடனேய ஒரு கவர்ச்சிப்படம்..ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்தி என்னவென்றால்..முன்னாள் நடிகை ராதாவின் மகள் செம ஹாட்டுன்னு ஒரு இயக்குனர் சொல்லி இருக்கான்..இதுதான் செய்தி..
இதை தெரிஞ்சு மக்களுக்கு என்ன யூசுன்னு கேக்குரீங்கள?
ஒருநாளைக்கு அவ வீட்டுக்குப் போய் நீங்க ரொம்ப ஹாட்டாம் .நானும் ஹாட்டுதான் வாங்க இன்னிக்கு என்கூட ஜாலிய இருக்கலாம்னு கேட்டு அவ வந்தா "பேமென்ட்டை" குமுதம் ஆபீஸ்ல கொடுத்துடலாம்..அப்படிதானே?

அடுத்த அடுத்த பக்கங்கள்? அசினோட கவர்ச்சி படம், சுருதியும் சித்தார்த்தும் லவ் பண்றது (குமுதம் வீட்டு பெண்கள் லவ் பண்ணா அதை செய்திய போடுவானா?) திரிஷா, இலியான போன்றவர்களின் ஆபாச படங்கள்..கிசு கிசு என்ற பெயரில் அடுத்தவனின் அந்தரங்கம், நடிகைகளின் படங்களை போட்டு அங்க அவயங்களை வர்ணிப்பது...ஹ்ம்ம் இப்படி எல்லாப்பக்கங்களும் ஆபாச குப்பைகளே மலிந்து கிடக்கிறது...இப்படி பத்திரிகை மூலம் மாமா வேலையை இவர்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்...இந்த அசிங்கம் பிடித்தவர்களால் எந்தவொரு மாற்றமும் நடந்து விடப்போவது இல்லை..

சரி விசயத்துக்கு வருவோம்..
ஐயோ இந்த செல் போனை கண்டுபிடித்தவன் யாரடா?

ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு எவ்வளவு நிம்மதியாக இருந்தோம்...
அப்பொழுதும் இது போன்ற வேலைகள் நடந்து கொண்டுதானிருந்தன..இந்த செல் போன் வந்தவுடன்..எவ்வளவு பொய்கள்..எவ்வளவு தொந்தரவுகள்..அப்பப்பா...
காலை அலுவலகம் வந்ததில் இருந்து எந்த வேலையும் பார்க்க விடாமல் தொடர்ந்து போன் வந்துகொண்டே இருத்தால் இன்று பதிவிடமுடியவில்லை...தப்பித்தோம் என்று பெருமூச்சு விடவேண்டாம்..

அடுத்த பதிவில் பிடுச்சுடுறேன்..ஓகேயா?

2 comments :

ஜெய்லானி said...

//காலையில் குமுதம் பத்திரிக்கையை படிக்கும்போதே இன்னைக்கு குமுதத்தை ஒரு பிடி பிடிக்கலாம் என்றுதான் வந்தேன்..///
புதுசா இப்பதான் நீங்க புக் படிக்கிறீங்கனு நான் நினைக்கிறேன். வாசகர்களை விட வாசகிகள்தான் அதுக்கு அதிகம்.

மர்மயோகி said...

ஜெய்லாணி அவர்களே. நானும் சிறுவயது முதல் இந்த ஆபாச புத்தகங்களை படித்துதான் வருகிறேன்..ரொம்ப நாளாக மனதில் தேங்கி இருந்த ஆதங்கங்களை - வலைப்பக்கம் கிடைத்தவுடன் - கொட்டிதீர்த்து வருகிறேன்.. முன்பெல்லாம் விரும்பி படித்துகொண்டிருந்த அதே பத்திர்க்கைகளை..இப்போது வெறுப்புடன்தான் படிக்கிறேன்...இந்தப்பதிவில் அவர்களை எல்லாம் மனமார திட்டவேண்டும் என்கிற ஒரு காரணத்திற்காக...

அப்புறம் வாசகிகள்தான் அதிகம் என்று சொன்னீர்கள்...அரைகுறை ஆடையும், ஆபசமும்தான் பெண்ணுரிமை என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இப்போது எல்லாம் நன்றாகத்தான் இருக்கும்...அவர்களுக்கு அதன் பாதிப்பு தெரியும் வரை.

நன்றி..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?