Pages

Friday, February 19, 2010

தமிழக முதல்வரும்..கூத்தாடிகளும்

இன்றைய மாலை நாளிதழ்களில் தலைப்புச் செய்திகள்..
ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் தாக்குதல். ரஜினி மற்றும் அஜித்திற்கு கண்டனம்.
ஸ்டண்ட் மாஸ்டர் வீட்டில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பிறகுதான் மேற்கண்ட இரண்டு நடிகர்களும் முதலமைச்சரை சந்தித்துள்ளனர்.

பெரும்பாலான நடிகர்கள் தற்போதைய முதல்வர்களை சந்தித்துவிட்டு வரும்போது மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு என்று சொல்கிறார்கள்...பத்திரிக்கைகளும் அதற்கு முக்கியத்துவம் வழங்கி செய்திகள் வெளியிடுகின்றன.
அதற்கு பின்னணியில் இது போன்ற ஏதோ ஒரு குற்றச்செயல்கள் நிச்சயமாக இருக்கின்றன எனபது முதல்வரை இந்த நடிகர்கள் சந்தித்துவிட்டு வந்த பிறகு செய்தித்தாள்களை பார்த்தாலே நாம் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு பெரும் பொறுப்பில் இருக்கும் ஒரு முதல்வருக்கு, இந்த கூத்தாடிகளை சந்திப்பதே அன்றாட வேலையாகி விட்டது..

இவர்கள் ஒன்றும் புனிதமான ஆத்மா கிடையாது..ஒரு சினிமா நடிகனோ நடிகையோ..அவர்களது அந்தரங்கமும், கடந்தகால மற்றும் நிகழ்கால வாழ்க்கையும் சராசரி மனிதனை விட மிக கேவலமான பக்கங்களை உடையதை யாரும் மறுக்க முடியாது.
ஒரு விபச்சாரியைக்கூட யாரும் நடு ரோட்டில் வைத்து கட்டிபிடித்து விடமுடியாது..அதற்கு அவளும் உடன்படமாட்டாள். அதற்கென்று ஒரு தனிமையான இடம் மற்றும் நேரம் இந்த நேரத்தில்தான் ஒரு விபச்சாரியுடன்கூட அந்தரங்க தொடர்பு வைத்துக்கொள்ள முடியும்..
ஆனால் ஒரு நடிகையை ஒரு நடிகன், 100 பேருக்கு மேற்பட்ட மக்களுக்கு மத்தியில் சிறிதும் கூச்சமின்றி கட்டிபிடிக்கிறான் முத்தமிடுகிறான்..ஏன் முதலிரவு முடித்து குழந்தைகூட பெற்றுக்கொள்கிறான்.. இன்னும் சில இல்லை இல்லை..எல்லா நடிகைகளும் கதைக்குதேவைப்பட்டால் கவர்ச்சியாகவும், முத்தம் கொடுத்தும் நடிக்கத்தயார் என்று வெட்கமில்லாமல் ஆபாசபேட்டி அளிப்பதுண்டு..

தந்தை டைரக்சன் செய்யும் படத்தில் ஒரு மகன் இன்னொரு பெண்ணை தந்தை சொல்படி ஆபாசமாக பேசி கட்டிபிடிக்கிறான் (உதாரணம்:எஸ்.எ சந்திரசேகர், விஜய் மற்றும் டி.ராஜேந்தர் - சிலம்பரசன் ).. ஒரு படத்தில் தந்தையும் மகனும் ஒரு பெண்ணுக்காக போட்டி போடும் அவலம் (உதாரணம்:சத்யராஜ், சிபி). தந்தை தான் பெற்ற மகளையே இன்னொரு ஆணுடன் கட்டிபிடித்து நடிக்க சொல்லும் கேவலம் (உதாரணம்:பாக்யராஜ் - அவர் மகள்) இப்படி வெட்கங்கெட்டு திரியும் இந்த கூத்தாடிகளைத்தான் இந்த தமிழகமும் தமிழ் பத்திரிக்கைகளும் கலைஞர்கள் என்று கொண்டாடுகிறது. அவர்களது ஆபாசபடத்தை அட்டையில் போட்டுத்தான் தன் பத்திரிக்கை வியாபராத்தைகூட செய்கிறார்கள். இந்த கூத்தாடிகளினால் சாதாரண மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் கிடையாது..மாறாக அவரகளது பணமும் நேரமும்தான் இவர்களால் திருடப்படுகிறது..

இப்படிப்பட்டவர்களைத்தான் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் தமிழக முதல்வர் (முதல்வர் அதே துறையில் இருந்து வந்தவர் என்றாலும்) தனது அலுவல்களை விட்டு இவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். இந்த நடிகர்ளைப்போல ஒரு சாதாரண மனிதன் ஒரு முக்கியமான பிரச்சினைக்கு இந்த முதல்வரை அவ்வளவு சுலபமாக சந்தித்துவிட முடியுமா?

இவர்களை ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுப்பது ஆபாச ஆட்டம் போட்டு கோடியில் புரளும் இந்த கூத்தாடிகளா அல்லது அப்பாவி நடுத்தர மக்களா?

4 comments :

ஜீவன்சிவம் said...

உங்கள் கோபம் நியாயமானது...பொதுவா இது எல்லா தமிழனுக்கும் இருக்ககூடிய
உணர்வு தான். ஆனால் எல்லாத்தையும் ஏற்றுகொள்ள பழகிவிட்டார்கள்....
யாருக்கு சார் நேரம்...அவனவன் பொழப்ப பார்கறேக்கே இங்கே நேரமில்லை

மர்மயோகி said...

நன்றி ஜீவன் சிவம்...பொழப்பை பார்பதற்கு நேரமில்லை என்று சொல்கிறீர்கள்...ஆனால் அந்த பொழைப்பை விட்டு விட்டே..நாம் இவர்களின் படங்களை பார்க்க நம் நேரத்தை வீணாக்குகிறோம்..

அதேபோல நமக்கு ஏன் இந்த வேலை என்று போவதால்தான், எந்த உபயோகமும் இல்லாத இந்த நடிகர்களால் தங்களது சுய வேலைக்காக ஒரு முதவரை சுலபமாக அணுக முடிகிறது.. ஒரு பொதுநல காரியத்திர்க்கூட உங்களால் முதல்வரை சுலபமாக அல்ல அல்ல...கடினமாக முயற்சி செய்தே நெருங்க முடியுமா?

அட் லீஸ்ட் நமது கோபத்தை..பதிவிலாவது கட்டுவோம் நண்பரே..

vasan said...

Dear Marmayohi,
Very apt remarks about the Cine artist and our CM nexus. DMK had grown with the respective Media`s exclusive support (Drama, News paper, Audio, Stage dance, Cinema and now TV) we the tamils are branded as the matinee idol`s crazy and believe what they say in the screen. We seldom never ubderstand the difference of REAL & REEL both in politics and cinema and the POLITICIAN and THE ACTORS capitalising our foolishness. Try to reveal thier mask and let us see their faces.Both are the STAGE actors who act for their wealth only.

மர்மயோகி said...

thanks for your comments mr. vasan..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?