Pages

Monday, July 26, 2010

பூவரசியும், அப்துல் கபூரும்..

கடந்த ஒருவாரகாலமாக அல்லோலப்படும் செய்தி பூவரசி என்கிற ஒரு பெண் தன கள்ளக்காதலனை (நன்றி - தினத்தந்தி ) பழி வாங்குவதற்காக அவரது மகனை இரக்கமற்ற முறையில் கொன்றிருக்கிறாள்..

காயல்பட்டினம் என்ற ஊரைச் சேர்ந்த அப்துல் கபூர் என்கிற ஒருவன், அதிக சக்தி பெறுவதற்காக, ஒரு சின்னஞ்சிறு குழந்தையை நரபலில் கொடுத்திருக்கிறான்..

பூவரசி விவகாரத்தை - ஒருவிதத்தில் - நியாயப்படுத்தும் ஒரு சாரர்கூட, அவள் மீது அளவுகடந்த வெறுப்பில்தான் உள்ளனர்..பத்திரிக்கைகளும் அவளை படுபாதக கொலைகாரி என்று செய்தி வெளியிடுகின்றன..

ஆனால் இந்த அளவு அப்துல் கபூர் பற்றி அவைகள் செய்தி போடுவதில்லை..ஏன்? பூவரசி செய்த கொடுமைக்கு சற்றும் கூட குறையாமல்..ஏன் இன்னும் கொடுமையாக கொன்றிக்கும் அந்த வெறி நாய் அப்துல் கபூரை மனிதன் என்று எப்படி ஏற்றுக் கொள்வது?

அந்த இரு மிருகங்களும் தாம் செய்த கொலைகளை ஒப்புக் கொண்டுவிட்டன..இரக்கமற்ற இந்த இரு மிருகங்களையும் விசாரணை என்று இழுத்தடிக்காமல் - கடுமையான தண்டனையை உடனே வழங்க வேண்டும்... அதற்க்கான சட்டங்களை உடனே இயற்றவேண்டும்..

இருவரையும் சாக்கடையில் மூழ்கடித்து சாகடிக்கவேண்டும்..

விசாரணை என்ற பெயரில் நாட்களைக் கடத்துவதால் நாளைக்கு மனித உரிமை என்ற பெயரில் சில ஜென்மங்கள் இதற்காக வக்காலத்து வாங்கி அவைகளது தண்டனையை குறைக்கவோ விடுதலை வங்கிக் கொடுக்கவோ முயலக்கூடும்..என்னுடைய ஆசை எல்லாம் இவர்களுக்கு வக்காலத்து வாங்குவோரைக்கூட மிருகங்களாகக் கருதி கேவலப்படுத்தி தண்டனை கொடுக்கவேண்டும்...இவர்களுக்காக யாரும் வாதாட வரக்கூடாது..

இப்படி செய்தால்தான் நாளைக்கு இந்தமாதிரி காரியங்களை செய்ய யாரும் அஞ்சுவார்கள்..

தினமும் வெளிவரும் செய்திகளில்...

கள்ளத்தொடர்பு, கள்ளக்காதலனோடு ஓடிப்போகுதல், புருஷனை ஆள்வைத்துக் கொல்லுவது, காதலனோடு ஓடிப்போவது, திருமணத்திற்கு முன் செக்ஸ், இந்த செய்திகள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன...

ஹ்ம்ம்...33% இடவொதுக்கீடு எதில் பெண்களுக்கு இருக்கிறதோ இல்லையோ..தினமும் காலையில் செய்திகளையும் ஆபாச tv க்களையும் பார்க்கும்போதும், பெண்கள் தாங்களாகவே 50% உரிமையை எடுத்துக் கொண்டார்களோ என்று தோன்றுகிறது...

9 comments :

பொன் மாலை பொழுது said...

அப்துல்கபூர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர். பூவரசி அப்படியல்ல. காமத்தால் மதிகெட்ட ஒரு காட்டேரி .
இதுதான் வித்தியாசம் அண்ணே !

மங்குனி அமைச்சர் said...

நூறு குழந்தைகள் எரிந்து சாம்பலானதர்க்கு இன்னும் பதில் கிடைக்க வில்லை .

Tirupurvalu said...

This is business technic for daily & weekly papers my dear friend .Poovarasi story some kick for writters they can write any story inside.Kappor story nothing can add

மர்மயோகி said...
This comment has been removed by the author.
மர்மயோகி said...

// கக்கு - மாணிக்கம் said...
அப்துல்கபூர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர். பூவரசி அப்படியல்ல. காமத்தால் மதிகெட்ட ஒரு காட்டேரி .
இதுதான் வித்தியாசம் அண்ணே ! //
நன்றி திரு கக்கு மாணிக்கம் அவர்களே..பூவரசி காமத்தால் மதிகெட்டவள்தான்..ஆனால் காமம் தீர்ந்த பின்புதான் இந்த கொடுமையைப் புரிந்திருக்கிறாள்..
அதே போல் அப்துல் கபூர் மனநிலை பாதிக்கப்பட்டவன் அல்ல..அப்படி மன நிலை பாதிக்கப்பட்டவன் என்றால் குழந்தையை கொன்று புதைத்த இடத்தை அடையாளம் காட்ட முடியாது..இன்னொன்று..மனநிலை பாதித்தவன் என்பதால் அவன் செய்யும் தவறுகள் இப்படி கொடூரனமானவையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் உயிர் வாழவேண்டிய அவசியமில்லை..ஒரு காட்டு மிருகமோ பாம்போ நம்மை தாக்கும்போது அதைக் கொல்லத்தான் செய்வோம்..இவர்களும் இப்படித்தான்..

மர்மயோகி said...

//மங்குனி அமைசர் said...
நூறு குழந்தைகள் எரிந்து சாம்பலானதர்க்கு இன்னும் பதில் கிடைக்க வில்லை //.

கும்பகோணம் சம்பவத்தை சொல்கிறீர்களா ? அது சம்மந்தப் பட்டவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்றாலும் அவர்கள் அறிந்து செய்யவில்லை..யாரும் இப்படி ஒரு கொடூர விபத்து நேரவேண்டும் என்று விரும்புவதில்லை...அது ஒரு விபத்து...
ஆனால் இப்போது நடந்திருப்பது? மிகப்பெரிய பயங்கரம்...இவர்கள் மனிதர்கள் அல்ல..சுட்டுக்கொள்ளப்படவேண்டிய மிருகங்கள்...

மர்மயோகி said...

//Tirupurvalu said...
This is business technic for daily & weekly papers my dear friend .Poovarasi story some kick for writters they can write any story inside.Kappor story nothing can add //

இப்படி ஆபாசத்தையும், விபத்துக்களையும் மட்டுமே நம்பி பத்திரிக்கைகளை விற்கும் பினந்தின்னிகளை - இவைகளை ஆர்வமாய் வாங்கி படிப்பதின் மூலம் நாம்தான் வளர்த்து விடுகிறோம்..மாற்றம் எப்போது வரும் நண்பரே?

Adirai khalid said...

தற்போதைய ஊடகங்கள் பெண்காமத்தையும், பொய், புரட்டு, போலி, பகட்டு ஆபசம்
போன்றவைகலையே விற்று பொழைப்பு நடத்துகிறது

உண்மையை உறக்கச்சொல்லும் ஊடகங்கள் காணக்கிடைப்பது அறிது

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி said...

//மங்குனி அமைசர் said...
நூறு குழந்தைகள் எரிந்து சாம்பலானதர்க்கு இன்னும் பதில் கிடைக்க வில்லை //.

கும்பகோணம் சம்பவத்தை சொல்கிறீர்களா ? அது சம்மந்தப் பட்டவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்றாலும் அவர்கள் அறிந்து செய்யவில்லை..யாரும் இப்படி ஒரு கொடூர விபத்து நேரவேண்டும் என்று விரும்புவதில்லை...அது ஒரு விபத்து...
ஆனால் இப்போது நடந்திருப்பது? மிகப்பெரிய பயங்கரம்...இவர்கள் மனிதர்கள் அல்ல..சுட்டுக்கொள்ளப்படவேண்டிய மிருகங்கள்... ///


இல்லை மர்மயோகி , லஞ்சம் வாங்கிக்கொண்டு பள்ளிக்கு அனுமதி தந்தவர்கள் தான் முழு குற்றவாளிகள் எனபது எனது கருத்து

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?