Pages

Sunday, October 10, 2010

எந்திர(ன்) ஜாலம்



ன் பிக்சர்சின் எந்திரன், சன் டி வி, கே டி வி, சன் நியூஸ் டி வி, சன் மியூசிக் டி வி, ஆதித்யா டி வி பத்தாதற்கு, தினகரன் நாளிதழ், குங்குமம், வண்ணத்திரை வார இதழ்கள் என்று அவர்கள் சம்மந்தப்பட்ட ஊடகங்களின் அலறல் ஒரு புறம், அவை அல்லாத, சினிமா செய்திகளுக்கென்றே அலையும் ரஜினி புராணம் பாடும் ஆபாச, மற்றும் ஜால்ரா பத்திரிக்கைகளின் ஊளைகள் ஒருபுறம், தமிழ் ப்ளாக்கர்ஸ் சிலரின் இலவச விளம்பரம், இப்படி ஆளாளுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டிருந்த எந்திரன் என்கிற திரைப்படம் ஒருவழியாக வெளியாகி ஒருவாரம் ஆகிவிட்டது.
டம்  முடிந்ததற்கான விழா, பாடல் கேசட்டுகள் வெளியீட்டுக்கான விழா, டிரைலர் வெளியீட்டுக்கான விழா, டிக்கெட்  கொடுப்பதற்கான விழா என்று எல்லா கருமாந்திரங்களுக்கு விழாவும் எடுத்து, ரஜினி ரசிகர்கள் என்ற முட்டாள்களிடம் கொள்ளையும் அடித்தாகி விட்டது.
கடந்த ஒருவாரங்களில் அவர்கள் செலவழித்த பணத்தை (ஏறக்குறைய நூற்றைம்பது கோடி ரூபாய்) எடுத்து இலாபமும் சம்பாதித்திருப்பார்கள்...
ஏனென்றால் ஒருவாரமாக சென்னையில் ஏன் தமிழ் நாட்டில் இந்த படத்தை தவிர வேறு எந்த படமும் ஓடவில்லை..
எந்திரன் திரைப் படத்தை பார்க்காதவன் தமிழ் நாட்டில் வசிக்கவே லாயக்கற்றவன் எனபது போல ஒரு பிம்பத்தை உருவாக்கி, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரையில் ஏறக்குறைய அனைவரையும் பார்க்கவைத்ததில் சன் பிக்சர்காரர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்றுதான் சொல்லலாம்...
கடைசியில் அந்த கருமாந்திர படத்தை நானும்தான் பார்த்துவிட்டேன்..
ந்த ஆர்ர்ப்பாட்டமும் இல்லாமல் அறிமுகமாகிறார் ரஜினி என்று பத்திரிக்கைகள் பீற்றிக் கொள்கின்றன..ஆனால் அந்த கதாநாயகனை, அவன் உருவாக்கிய  ரோபோவை வைத்தே கடவுள் என்று சொல்லவைத்து பிராயச்சித்தம் தேடிக்கொள்கிறார்கள்..
அந்த வசீகரன் என்ற விஞ்ஞானிக்கு சந்தானம், கருணாஸ் ஆகிய இரோண்டு லூசு உதவியாளர்கள்..அந்த லூசு   உதவியாளர்களை வைத்துக்கொண்டா இவ்வளவு அறிவு வாய்ந்த ஒரு ரோபோவை அந்த விஞ்ஞானி உருவாக்கினார் என்று என்னும்போது டைரக்டரின் அறிவை எண்ணி மெய் சிலிரிக்கிறது..இந்தமாதிரி லூசு விஞ்ஞானிகள் எங்காவது இருக்கிறார்களா? 
அப்புறம் ரஜினி பத்து ஆண்டுகளாக அந்த ரோபோவை உருவாக்க ஆய்வுக்கூடத்திலேயே பத்து ஆண்டுகள் செலவளித்தார் என்றால் அவருக்கு என்ன வயது இருக்கும்? அவர் எப்போது ஐஸ்வர்யா ராயை காதலிக்க ஆரம்பித்தார்? 
ப்புறம் என்னமோ ஐஸ்வர்யா ராய் ரஜினிக்காகவே வானத்திலிருந்து வர வழைக்கப்பட்டவள் போல ரஜினிக்கு ஐஸ்வர்யா ஜோடி என்று இங்குள்ள மாமாப்  பத்திரிக்கைகள் குதூகலித்தன..ஏறக்குறைய பத்து வருடங்களாக, இந்த மாமாக்கள் அவளை ரஜினிக்கு கூட்டி  கொடுக்க அலைந்தன.
.அதற்குள் அவள், பிரசாந்த், அஜித், மம்மூட்டி, அப்பாஸ், மோகன்லால்,இன்னும் செந்தில், நாசர், எஸ் வி சேகர், விக்ரம், விவேக் ஓபராய், பிரிதிவி ராஜ் இன்னும் ஏன் இதே படத்திலேயே கலாபவன் மணி ஆகியோருடன் சேர்ந்து நடித்துவிட்டாள்..
அதுவும் ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் காதல் காட்சிகளில் நடிப்பது, நமக்கே ஒரு வித கூச்சம் வருகிறது..."ஹை ஸ்வீட் ஹார்ட்" என்று ரஜினி சொல்வது மிகக் கேவலமாக இருக்கிறது.. தனது தந்தையை விட அதிகவயதுள்ள ஒருவனுடன் நெருங்கும்போது எப்படி அவளால் ஒன்றி நடிக்க முடியும்? அதுதான் அவளுக்கு சுத்தமாக நடிப்பே வரவில்லை..
ஏற்கனவே பாபா என்ற படத்தில் தான் நடிக்காததற்கு "பணம் முக்கியமில்லை..எனக்கு முக்கியத்துவம் தரவேண்டும்" என்று சவடால் விட்ட ஐஸ்வர்யா ராய், இந்த படத்தில் என்னத்தை கிழித்து விட்டார்..அதிகம் சம்பளம் பெற்றதைத்தவிர?
"மனிதன் படைத்ததிலேயே உருப்படியான விஷயம் ரெண்டுதான்...ஒண்ணு நான், இன்னொன்னு நீ.." என்று ஒரு காட்சியில் ரோபோ உளறுகிறது..ரோபோவை ஒரு மனிதன்  படைத்ததாக காட்டுகிறார்கள்..இதில் ஐஸ்வர்யா ராயை யார் படைத்தது..என்ன ஒரு லூசுத்தனமான ஒரு வசனம்?
இப்படித்தான் "பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும்" என்று ஒரு வசனம் சிவாஜி படத்தில்(அப்போ இந்த படத்திற்ற்கு கூட்டம் கூட்டமாக போகிறவர்கள் எல்லாம் பன்னிகளா?  )...இதையும் இந்த மாமாப் பத்திரிக்கைகள் கொண்டாடின..அது ஏற்கனவே "கிரி" என்ற  படத்தில் அர்ஜுன் பேசும் வசனம்..அதை திருடி சிவாஜி படத்தில் சேர்த்து பேர் வாங்கிக் கொண்டார்கள்..
ஒளிப்பதிவை ஆகா ஓகோ என்று புகழும் முட்டாள்களா...அதற்குரிய கேமரா இருந்தால் நல்ல தெளிவான ஒளிப்பதிவு கிடைக்கும்,..இதற்ருக்கு கேமரா மேனுக்கு எந்த திறமையும் தேவையே இல்லை..
நூறு மனிதனுக்குள்ள அறிவும் திறமையும் உள்ள ரோபோவால், நூற்றுக்கணக்கான ரோபோக்களுக்குள் ஊடுருவி இருக்கும் மனிதனை ஸ்கேன் பண்ணி கண்டு பிடிக்கமுடியவில்லை...தலையை சுற்றவைத்து கண்டுபிடிப்பது பெரிய முட்டாள்தனமில்லையா?
அப்படி கண்டுபிடித்த பிறகும் அவனைக் கொல்வதர்க்குமுன் நம்பியார்போல வசனம் பேசிக்கொண்டிருப்பதும் தமிழ்படங்களில் காலங்கலாமாக ஒரு கேனத்தனமான வழக்கமாக உள்ளது..அதை அப்படியே இந்த படத்திலும் காப்பியடித்திருக்கிறார்கள். 
 அதே போல இறுதிக்காட்சியில் ரோபோ தன்னையே அழித்துக் கொள்வதும் டெர்மினேட்டர் என்ற படத்தின் அப்பட்டமான காப்பி...
இதை எப்படி புதுமை என்று வெட்கமில்லாமல் பேட்டி கொடுக்கிறார்களோ?
என்னமோ ஹாலிவுட் தரம் ஹாலிவுட் தரம் என்கிறார்களே..அது என்ன ஹாலிவுட் தரம்? 
கொரில்லா பெண்ணை காதலிப்பது,   காருக்கு பேய் பிடிப்பது இது மாதிரி லூசுத்தனம் தான் ஹாலிவுட் தரம்.  ஒருவனுக்காக ஊரையே அழிப்பது . இதைத்தான் பிரம்மாண்டம் ஹாலிவுட் தரம் என்று இந்த ஊரு அடிமைகள் கொண்டாடுகின்றன..ஜேம்ஸ் பாண்ட் என்ற கதாபாத்திரத்தை கொன்றதற்காக அந்த கதாசிரியரை முற்றுகை இட்டவர்கள்தான் அந்த அமெரிக்க முட்டாள்கள்..
எந்திரனிலும் அப்படித்தான்...ஒரு ஐஸ்வர்யா ராயை அடைவதற்காக, ஒரு ஊரையே நாசம் செய்கிறது அந்த ரோபோ..அது  பத்தாது என்று, அந்த ரோபோவை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும்ஆயிரக்கணக்கான  போலீஸ்காரர்கள் போய் ரோபோவுடன் மோதி சாகிறார்கள்..
மிக சாதாரணமான கதை, ஒரு பெண்ணுக்காக ஒரு ரோபோ ஊரையே நாசம் செய்யும் கதைதான்..அந்த ரோபோவை யாராரளும் வெல்லமுடியாது என்கிறார்கள்..விஞ்ஞானி வசீகரன் கண்டுபிடித்தது ஒரு எந்திரன்தான் - மந்திரன் அல்ல...அனால் அது செய்யும் கூத்தெல்லாம் மந்திரவாதிகளைப் போலத்தான் இருக்கிறது.தான் பத்தாண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய ரோபோ-வை, இராணுவத்திற்கு பயன்படுத்தப் போவதாக கூறும் விஞ்ஞானி, அதை ஐஸ்வர்யா ராயுடன் சும்மாவாவது அனுப்பி வைப்பது அசல் தமிழ் சினிமாத்தனம்..
அது தனது காதலியை காதலிப்பதாக தெரிந்தவுடன், அதை ஒரு சிறு ப்ரோக்ராம் மூலம் செயலிழக்க செய்துவிடலாம்..ஆனால் அதை ஆட்டை வெட்டுவது போல கோடாலியால் வெட்டுவது, அப்புறம் அந்த உபகரணங்களை வேறு ஒரு தயாரிப்புக்கு பயன்படுத்தாமல், கார்பொரேசன் குப்பைக்கு அனுப்புவது என்ன லாஜிக்கோ..அதுமட்டுமிலாமல் அதை தேடி, இன்னொரு பெரிய விஞ்ஞானி அந்த குப்பைக்கு போவது இன்னும் ஒரு முட்டாள்தனம்..
...
கடைசியில் நீதிமன்றக் காட்சியும் பழைய எம்  ஜி ஆர், சிவாஜி  போன்ற நடிகர்களின் படங்களில் வரும் மிக அரதப்  பழசான காட்சிதான்...
இப்படி ஒரு லூசுத்தனமான மிக சாதாரணமான ஒரு கதையை, பிரம்மாண்டம்  என்ற போர்வையிலும், கிராபிச்கிலும் , அதிகப்படியான விளம்பரத்திலும் மக்களை முட்டாளாக்கி விட்டார்கள்..
கடைசியாக எந்திரனைப் பற்றிய ஒரு குறுந்தகவல்...
காதலித்தால்..
ரோபோ என்றால்  கூட
கடைசியில் வருவது...
.
.
.
.
சாவுதான்..!

34 comments :

idroos said...

Vanakkam Marmayogie,
aiswariya-rajni kadhal kaatchigalil nadikkumpodhu aruverppaagathaan ulladhu..indha padathai paartha abishek bachan arumaiyana padam ena paaratiyadhu melum aruverupaaga ulladhu kaadhu koosuthu.

idroos said...

Sarasari manithargalidam irukkum unarvo,than maanamo
cinemakaara kanavangalidam illamal irupadhu vindhai

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடின்னா அடி நெத்தியடி.....!

CINE IMAGES said...

vaikala....

better luck next time

மர்மயோகி said...

@முசமில் இத்ரூஸ்
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் போன்றோர்கள் நடித்த எந்த திரைப்படமும் வெற்றிகரமாக ஓடியதில்லை..காரணம் ஓடக்கூடிய படங்களை தேர்வு செய்யக்கூடிய திறமையோ அறிவோ அவர்களுக்கு கிடையாது..ஐஸ்வர்யா ராய் தனது அழகையும், அபிஷேக் பச்சன், அமிதாப்பின் மகன், மற்றும் ஐஸ்வர்யா ராயின் கணவன் என்ற வகையில் மட்டுமே பிரபலமானவர்கள்..எனவே எந்திரனை மட்டுமல்ல..பாபவைக்கூட நல்ல படம் என்றுதான் சொல்வார்கள்..சினிமாக்காரர்கள் மூளையற்ற ஜென்மங்கள்..

மர்மயோகி said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
சன் பிக்சர் காரர்கள் நமக்கு அடித்த அடி? பார்க்க வைத்து விட்டார்களே..

மர்மயோகி said...

@CINE IMAGES
உங்கள் கமெண்ட் புரியவே இல்லை..எந்திரன் படம் பார்த்ததுபோல இருக்கிறது..

ஞாஞளஙலாழன் said...

>இதில் ஐஸ்வர்யா ராயை யார் படைத்தது

நண்பரே, இது கூட உங்களுக்குப் புரியவில்லையா?பாவம் தமிழ் சினிமா.

திரைப் படத்தில் ரஜினியை ரஜினியாக ஏன் பார்க்கிறீர்கள். ஒரு கேரக்டர்-ஆகப் பாருங்கள்.
ரஜினி என்கிற ஒருவரின் மூலம் தமிழ் சினிமா ஒரு நல்ல உயரத்துக்கு சென்றிருக்கிறது என்று பெருமை படுவதை விடுத்து எல்லாவற்றிலும் குறையே சொல்லிக்கொண்டிருக்க வேண்டாமே.

சினிமாவில் அங்காடித்தெரு போன்ற ரியலிஸ்டிக்-ஆனா படங்களும் வேண்டும். லாஜிக் மேஜிக் என்றெல்லாம் இல்லாத சூப்பர் ஹீரோ படங்களும் வேண்டும். அப்போது தான் அது முழுமை பெரும்.

ஜெய்லானி said...

நேர்மையான விமர்சனம் .. நெத்தியடி சும்மா நச்சுன்னு இருக்கு .. இதை படிச்சிட்டு எவனாவது படம் நல்லா இருக்குன்னு சொன்னா அவனை விட லூசு யாரும் இல்லை ..!! :-))

படத்தை படமா பாக்காம நிஜ கடவுளை பாத்த மாதிரி ஆஹா ஓஹோன்னு புகழ்கிறவன் இருக்கும் வரை ..தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாது.:-)

VJR said...

சன் டிவிக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை. அவன் படம் நல்லாருக்குன்னு வாய்கிழிய கத்துறான். நீ நல்லா இல்லன்னு கத்துற. மொத்தத்துல நீங்க ரெண்டு பேரும் மக்கள கேனயன்னு நெனச்சீங்களா?

யூ ஸ்டுபிட் கய்ஸ், படம் நல்லா இருந்தா பாப்பாங்க. நல்லா இல்லன்னா பாபா கததான்.என்னமோ எல்லா ரஜினி படமும், சன் டீவி படமும் ஓட்றமாதிதான், ஒங்க இடியாடிக்ட் ஆக்ட் இருக்கு.

இதுல ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் காமனா முட்டாள், அது இதுன்னு பேர் வெக்கிறீங்க. யார் சார் ஒங்களுக்கு அந்த ரைட்ஸ் குடுத்தது. நீங்க ஒங்களோட வாழ்க்கைய கரெக்டா லீட் பண்ணுங்க, மீதி தானா நடக்கும்.

ரசிகர் அது இதுன்னு எந்த ஆக்டிவிட்டீஸும் இல்லாம நாட்டக் குட்டிச்சுவராக்குற நாதாரிங்கள லட்சக்கணக்குல காட்டமுடியும், அதே சமயம் எதோ வருசத்துக்கு ஒரு முறை தன் சந்தோசத்த ஒரு விழாவாக் காட்டிட்டு, மத்தவங்களுக்காக வாழ்ற லட்சக்கணக்கான ரசிகர்களையும் காட்டமுடியும்.

அதனால ரொம்ப புத்திசாலின்னு நெனச்சு, முட்டாத்தனத்த காட்டாதீங்க.

அதுவும் சில நேரத்துல அவன், இவன், முட்டாள்ன்னு எப்படிதான் எழுத வருதோ?

raja said...

நியாயமான கோபம்தான்....அதுக்காக அவங்கள தாறுமாறா தாக்கக்கூடாது.. இதே அநாகரிகத்தான் அவங்களும் செய்யுறாங்க... ஆனாலும் முழுவதுமாக என்னால் நிராகரிக்கமுடியல.. தொடர்ந்து எழுதுங்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

இன்று தட்ஸ்தமிழ் தளத்தில் வந்த செய்தி.

http://thatstamil.oneindia.in/news/2010/10/10/rajini-fan-suicide-attempt-enthiran.html

//எந்திரன் படம் பார்க்க மனைவி மறுப்பு-தற்கொலைக்கு முயன்ற ரஜினி ரசிகர்//

///"எக்கச்சக்க கூட்டமாக இருக்கிறது, இன்னும் கொஞ்ச நாள் கழித்துப் போகலாம்" என்று கூறி தடுத்துள்ளார் மனைவி. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிணக்காக மாறியுள்ளது.படம் பார்க்க செல்ல முடியாத ஏக்கமும், மனைவியுடனான சண்டையும் சேர்ந்து வினோத் குமாருக்கு வெறுப்பை ஏற்படுத்த, வெள்ளிக்கிழமை மாலையில் திடீரென தூக்கு மாட்டிக் கொண்டார் அவர்.///

இதுபோன்ற ரசிக வெறியர்களை எண்ணி மனம் நொந்து கொள்கிறேன்... வேறென்ன செய்ய...

இந்த செய்திக்கு வந்த ஒரு கமென்ட், கவலையை மறந்து சிரிக்க வைத்தது...

////பதிவு செய்தவர்: தூக்கு கயிறு வியாபாரி
பதிவு செய்தது: 10 Oct 2010 8:49 pm

இந்த படத்தைப் பாக்க முடியாதவனும் தூக்கு மாட்டிக்கிறான். பார்த்தவனும் தூக்கு மாட்டிகிறான். என்னவோ சன் பிக்சர்ஸ் இந்த மாதிரி நிறைய்ய தூக்கு ஸ்பெசல் படங்களா கொடுக்கனும்னு கேட்டுக்குறேன்.

இவண்:- தூக்கு கயிறு வியாபாரிகள் நல சங்கம்////

மர்மயோகி said...

@VJR
நண்பர் VRJ அவர்களே
அவன் எனபது ஒருமையை குறிக்கும் சொல்..அது ஒன்றும் மரியாதைக்குறைவான சொல் கிடையாது..நடிகனை, எப்போதும் அவன் இவன் என்றுதான் பேச்சு வழக்கில் குறிப்பிடுகிறோம்..அப்புறம், ரசிகன் என்பவன் 100 % முட்டாள் தான் இதில் மாற்றுக் கருத்து கிடயாது..

மர்மயோகி said...

@ஞாஞளஙலாழன்
நண்பர் ஞாஞளஙலாழன் (ஸ்ஸ் என்ன பேருப்பா...)
சினிமா எனபது ஒரு கேவலமான தொழில்...இதில் எப்படி உயரத்தை அடையமுடியும்? முதல்வர்கள் கட்சித்தலைவர்கள் சினிமா மூலம் வந்து இருக்கலாம், ஆனால் இவைகள் எல்லாம் தமிழர்களின் முட்டாள்தனத்தையும் அறியாமையையும் தான் காட்டுகிறது..சினிமாவில் நல்ல சினிமா என்பதே கிடையாது..எல்லாமே ஆபாச குப்பைகள்தான்..

மர்மயோகி said...

@ஜெய்லானி
நன்றி திரு ஜெய்லானி அவர்களே

மர்மயோகி said...

@raja
நன்றி திரு raja அவர்களே..தங்களது ஆலோசனைக்கும் நன்றி..

மர்மயோகி said...

@mohamed ashik
நன்றி திரு நன்றி திரு raja அவர்களே..தங்களது ஆலோசனைக்கும் நன்றி..muhamed ashik அவர்களே...
இப்படிப்பட்டவர்கள்தான் நாளைய இந்தியா என்று நாம் பீற்றிக்கொண்டிருக்கிறோம்...உருப்படுமா?

மர்மயோகி said...

@மர்மயோகி
சினிமாவில் ரஜினியை ரஜினியாக பார்க்காமல் கேரக்டராக பார்க்க சொல்கிறீர்களே..அவர்கள் கேரக்டராகவ நடிக்கிறார்கள்...ஒவ்வொரு பாடல்களிலும் இந்த கவிஞர்கள் அவர்களுக்கு எவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறார்கள்...விழாக்களில் எவ்வளவு பேர் ஜால்ரா தட்டுகிறார்கள்..அதெல்லாம் உங்களுக்கு தெரியலையா?

மங்குனி அமைச்சர் said...

ஹி.ஹி.ஹி.... யோவ் நீ பலே கில்லாடியா ? எப்படியோ படத்த பாத்திட்டிங்க , நடக்கட்டும் , நடக்கட்டும்

ஷர்புதீன் said...

செந்தில் ஒரு படத்துல 52 இட்லியையும் தின்னுட்டு ,கடைசில ஒரு இட்ட்ளிகூட நல்லா இல்லைன்னு சொல்லுவாரு., அது போல்தான இது., (எப்படியும் சேரன் இன்னொரு நல்ல படம் எடுக்க போவதில்லை. புரியாதுதா நான் சொல்ல வருவது...?!!)

பாலா said...

என்னதான் சினிமா ஒரு கேவலமான ஒரு தொழிலாக இருந்தாலும், மக்களுக்கு அதனை வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, இந்த ஆபாசக்குப்பையை சென்று பார்த்த உங்களின் தியாகத்தை என்னவென்று சொல்வது?

Swin said...

Hello Sir...
Nan Rajini Rasigan Alla....

Oru Padaipaliyin Padaippaga Maddum Parungal..
Intha Padaththai Sirantha Padam yenru Solla Villai
Oru Poluthu Pokku padam Avalothan..


Ungal Kannukku Nallathey Theriyatha?
Kuraiyai Maddum Kandu Pidithu solkirerkal..?


..

M.Mani said...

அருமையான பதிவு. பைத்தியக்காரத்தமிழர்களே சினிமாவில் நடிப்பவர்கள் கூத்தாடிகள். அறிஞர்கள் அல்ல. தனக்குத்தானே அறிஞர், கலைஞர். மக்கள் திலகம் என்று பட்டம் சூட்டிக்கொண்டு சில வருடங்களில் முதலமைச்சர் ஆகி தமிழகத்தை நாசமாக்குவார்கள். இனியேனும் உண்மையான அறிஞர்கள் பின் நடப்போம்.

subra said...

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருந்த மாட்டங்கள்
டோய்

மர்மயோகி said...

@ஷர்புதீன்
சாக்ரடீஸ் தத்துவங்கள் எனக்கு புரியவில்ல சாக்ஸ்..

மர்மயோகி said...

@பாலா
நண்பர் பாலா அவர்களே..
சினிமாவை ஒரு பொழுதுபோக்கு என்பதோடு விட்டுவிடாமல்...அதை பார்த்துதான் ஆகவேண்டிய என்ற ஆவலைத்தூண்டிய சன் பிக்சர்காரர்களின் வியாபாரத்தந்திரத்தில் சிக்கியவர்களில் நானும் ஒருவன்..வேறு வழிஇல்லை..படத்தை நண்பர்களோடு பார்க்க வேண்டிய கட்டாயம்..அவர்கள் செய்த விளம்பர அத்து மீறல்களை, படம் பார்த்தபின் உணர்ந்து சொன்னேன்..இது தியாகமெனில் சந்தோஷமே..நன்றி..

மர்மயோகி said...

@Swin
நண்பர் swin அவர்களே..
சினிமாக்கள் மக்களை முட்டாள்களாக்குவதொடு பெரும் சமுதாய சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கிறது..இதில் சிறந்த படம் கெட்ட படம் என்று எதுவும் இல்லை..எல்லாமே தரம்தாழ்ந்தவைகள்தான். இவைகளின் நிறைகள் என்று நான் ஏன் சொல்ல வேண்டும்..இவர்கள் மக்களை எப்படி முட்டாளாக்கி படம் காட்டுகிறார்கள் என்பதைத்தான் சொல்லவேண்டும்..நான் நான் சொன்ன குறைகள் குறைவுதான்..இன்னும் ஏராளமான - ஏன் படம் முழுவதுமே குப்பைகள்தான்...அதை விளக்கிக்கொண்டிருக்க நேரம் இல்லை...

மர்மயோகி said...

@Manickam
நன்றி திரு manickam அவர்களே..
ஒரு சாதாரண படத்தை பிரம்மாண்டம் என்று அநியாய செலவு செய்து, மக்களையும் ஏமாற்றி உள்ளார்கள்..

மர்மயோகி said...

@subra
நன்றி திரு subra அவர்களே..
பெரியாருடைய சிஷ்யர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் கருணாநிதியே இதை போய் ஒரு நல்ல படம் என்கிறார்..ஹ்ம்ம் என்னத்தை சொல்வது..?

ஷர்புதீன் said...

உங்களின் profile-லில் உள்ளதை படித்துவிட்டு எனது பின்னூட்டத்தை படிக்கவும்.
புரியவில்லை எனில் மறுபடியும் ENTHIRAN பாக்கவும்,. வேற என்ன தண்டனை தர?

--

மர்மயோகி said...

@ஷர்புதீன்
என் ப்ரோபைலை நீங்க சரியாக பார்க்கவும் அதில் சினிமாபற்றிய செய்திகள் ஏதும் இல்லை...

7.FI7TY said...

அருமையான பதிவு, தொடரட்டும் உங்கள் சேவை

மர்மயோகி said...

நன்றி திரு 7.FI7TY அவர்களே

Jegan said...

அருமையான பதிவு

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?