Pages

Friday, October 29, 2010

எந்திரன் கதை என்னுடையது!!!


பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர் என்பவர், சமீபத்தில் வெளியாகிய எந்திரன் என்ற திரை படத்தின் கதை தன்னுடைய கதை என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இவர் குமுதம் பத்திரிகை குழுமத்தின் "மாலைமதி" என்ற பத்திரிகையில் 1995  ஆம் ஆண்டு எழுதிய ஒரு கதையைத்தான் இப்போது எந்திரன் என்ற  பெயரில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வெளியிட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். அதன் ஒரிஜினல் பிரதி தம்மிடம் இல்லை என்பதனால் இத்தனை நாட்களாக வழக்கு தொடரமுடியவில்லை என்றும், அது தற்சமயம் அவருக்கு கிடைத்துவிட்டதனால் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்றுதான், இரு நாட்களுக்கு முன்பு ஒருவர், எந்திரன் கதை தன்னுடையது என்றும் வழக்கு தொடுத்திருந்தார்..

ஒரு படம் பிரபலமானால் அது என்னுடைய கதை என்று கிளம்புவது இப்போது பேஷனாகி விட்டது..அது அவர்களது பிரபலத்திருக்கோ, அல்லது படத்தை மேலும் பிரபலமாக்குவதர்கான தந்திரமோ தெரியவில்லை..


ஹ்ஹ்ம்ம் இதுமாதிரி தெரிந்திருந்தால் நானும் ஒரு 10  வருடங்களுக்கு முன்பே எந்திரன் என்று ஒரு கதையை எழுதி இருக்கலாம்...பிரபலமாகியாவது இருப்போம்..!!!


9 comments :

idroos said...

Endhiran moola kadhai isaac asimov(robokkalin thandhai) inudaiyadhu niyayapadi avarthaan valakku thodaravendum.
"Indha murai rajiniyai aen thittavillai???.

மர்மயோகி said...

பாவம் அவனும் இமயமலைக்கு ஓடிவிட்டான்..திரும்பி வந்து இன்னொரு படமெடுக்கட்டுமே...

MoonramKonam Magazine Group said...

அப்புடி போடு அரிவாளை !

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி நாம ரெண்டு பேரும் ஏற்காடு போயிட்டு வரும்போது 1999 ல ஒரு கதை உங்க கிட்ட சொன்னனே , அதுல வர்ற கேரக்டர்ஸ் பேர மாத்தி பாருங்க அப்படியே இந்திரன் கதை ??????????

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட முசமில் இத்ரூஸ், மூன்றாம்கோணம், மங்குனி அமைச்சர் ஆகிய அனைவருக்கும் நன்றி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே எந்திரன் கதை உண்மையிலேயே என்னுடையதுண்ணே, நம்ம கடைப் பக்கம் வந்து பாருங்க்களேன், கதைல 50%க்கு மேலே சரியா இருக்கு!

http://shilppakumar.blogspot.com/2010/09/blog-post_06.html

மர்மயோகி said...

நன்றி திரு பன்னிக்குட்டி ராமசாமி..

போளூர் தயாநிதி said...

parattugal
polurdhayanithi

மர்மயோகி said...

நன்றி திரு போளூர் தயாநிதி அவர்களே..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?