Pages

Saturday, December 18, 2010

போலீஸ்காரராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்..

கு‌ற்ற‌ச் செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடுபவ‌ர்களை ‌திரு‌த்‌தி ந‌ல்வ‌ழி‌க்கு கொ‌ண்டு வருவதுதா‌ன் கா‌வ‌ல் துறை‌யின‌ரி‌ன் வேலை... ஆனா‌‌ல் அ‌ந்த‌க் காவல் துறையே இ‌ப்படி நட‌ந்து கொ‌ண்டா‌ல் எ‌‌ப்படி?




சே‌த்து‌‌ப்ப‌‌ட்டு ‌ஹாரிங்டன் ரோடு சி‌க்ன‌ல் அருகே ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்தபோது ‌த‌ண்‌ணீ‌ர் கே‌ன்களை ஏ‌ற்‌றி‌க் கொ‌ண்டு ஒரு ‌மி‌னி டெ‌ம்போ வ‌ந்தது.அ‌ப்போது ஓ‌ய்வறை‌யி‌ல் ஓ‌ய்வு எ‌‌டு‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ர் ஒருவ‌ர்,அ‌ந்த ‌மி‌னி டெ‌ம்போவை பா‌ர்‌த்து‌வி‌ட்டா‌ர். ஓடோடிச் செ‌ன்று அ‌ந்த வாக‌ன‌த்தை ம‌றி‌த்து,மிர‌ட்டு‌ம் தொ‌னி‌யி‌ல் ஒரு த‌‌ண்‌‌ணீ‌ர் கேனை கொடு‌த்து‌வி‌ட்டு செ‌ல் (இலவசமாக) எ‌ன்று சொ‌ன்னது‌ம், வ‌ண்டி‌யி‌ல் இரு‌ந்த வா‌லிப‌‌ர் ஒருவ‌ர் ஒரு த‌ண்‌ணீ‌ர் கேனை தனது தோ‌ளி‌ல் சும‌ந்தபடி அ‌ந்த ஓ‌ய்வறை‌யி‌ல் வை‌‌த்து ‌வி‌ட்டு செ‌ல்‌கிறா‌ர். இது  நே‌ரி‌ல் க‌ண்ட ஒரு    கா‌ட்‌சி.

இது ஒரு சாம்பிள்தான்! இ‌ப்படி செ‌ன்னை‌யி‌ல் எ‌த்தனையோ இட‌ங்க‌ளி‌ல் இத்தகைய விதவிதமான மிரட்டல் பறிப்புகள் நட‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறது. ‌சில நா‌ட்களு‌க்கு மு‌ன்பு ஒரு ‌நிறுவன‌த்‌தி‌ல் இரு‌ந்து எ‌ண்ணெ‌‌ய் உ‌ள்பட அ‌த்‌தியாவ‌சிய பொரு‌ட்களை ஏ‌ற்‌றி‌க் கொ‌ண்டு செ‌ன்றது ஒரு ‌மி‌னி டெ‌ம்போ. அ‌ந்த வாகன‌‌த்தை ‌நிறு‌த்‌திய போ‌க்குவர‌‌த்து காவ‌ல‌ர் ஒருவ‌ர் 2 ‌லி‌ட்ட‌ர் எ‌ண்ணெ‌யை கொடு‌த்து‌வி‌ட்டு போ எ‌ன்ற ‌மி‌ர‌ட்ட, அதைத் தொட‌ர்‌ந்து அ‌ந்த ஓ‌ட்டுந‌ர் 2 ‌லி‌ட்ட‌ர் எ‌ண்ணெ‌ய் பா‌க்கெ‌‌ட்டை கொ‌டு‌த்து ‌வி‌ட்டு செ‌ன்று ‌வி‌ட்டா‌‌ர்.

ஓ‌சி‌யி‌ல் ‌தினமு‌ம் ‌பிழை‌ப்பு நட‌த்துவதுதா‌ன் பெரும்பாலான போ‌க்குவர‌த்து காவலர்க‌ளி‌‌ன் வேலை எ‌ன்று அ‌ந்த வாகன‌த்‌தி‌‌ன் ஓ‌ட்டுந‌ர் சொ‌ல்‌கிறா‌ர். பல மாத‌ங்களாக ‌இ‌ந்த ‌பிழை‌ப்பு நட‌த்‌‌தி வரு‌ம் அ‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ரி‌ன் செயலை ‌நிறுவன‌த்‌திட‌ம் சொ‌ல்‌லி இரு‌க்‌கிறா‌ர் ஓ‌‌ட்டுந‌ர். ''இ‌னிமே‌ல் அ‌ந்த காவலரு‌க்கு எ‌ண்ணெ‌ய் கொடு‌க்க வே‌ண்டா‌‌ம்'' எ‌ன்று கூ‌றி அனு‌ப்‌பியது அ‌ந்த ‌நிறுவன‌ம்.

வழ‌க்க‌ம் போ‌ல் அ‌ந்த வாகன‌ம் கு‌றி‌‌ப்‌பி‌ட்ட‌இடத்‌தி‌ல் வரு‌ம் போது ‌நிறு‌த்திய அ‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ர், அதே 2 ‌லி‌ட்‌ட‌ர் எ‌ண்ணெ‌ய் கொடு டயலாக்கை எடுத்த்விட்டுள்ளார். ஆனால் கொடு‌க்க மறு‌க்‌கிறா‌ர் அ‌ந்த ஓ‌ட்டுந‌ர். உடனே ஆ‌‌‌த்‌திர‌த்‌தி‌ன் உ‌‌ச்‌சி‌க்கே செ‌ன்ற அ‌‌ந்த காவல‌ர், வ‌‌ண்டி‌யி‌ன் ஆர்சி பு‌க்,லைசெ‌ன்‌ஸ், இ‌ன்சுர‌‌ன்‌ஸ் பு‌க் ஆ‌கியவ‌ற்றை கொடு எ‌ன்‌கிறா‌ர்.அனை‌த்து‌ம் ச‌ரியாக இரு‌க்‌கிறது. ஒரு நா‌ள் ‌சி‌க்காமலா போவா‌ய் எ‌ன்று ‌மிர‌ட்டி அ‌‌ந்த வாகன‌த்தை அனு‌ப்‌பி வை‌‌த்து‌‌ள்ளா‌ர் அ‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ர்!

வசூ‌லி‌க்கவே ‌பிற‌ந்து‌ள்ளோ‌ம் எ‌ன்பதை போ‌ல் நட‌ந்து கொ‌ள்ளு‌ம் போ‌‌க்குவர‌த்து காவல‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் செ‌ய்யு‌ம் அடாவடிகளை யா‌ர் க‌ண்டு கொ‌ள்வது, த‌ட்டி கே‌ட்பது

சாலை ‌வி‌தி முறைகளை ‌மீ‌றியதாக கூ‌றி பண‌ம் வசூ‌ல் செ‌ய்யு‌ம் போ‌க்குவர‌‌த்து காவல‌‌ர்க‌‌ளி‌ன் தொ‌ல்லை சென்னை நகர‌த்‌தி‌ல் இரு‌ப்பதை ‌விட புறநக‌ர் பகு‌திக‌ளி‌ல் அ‌திகமாகவே உ‌ள்ளது. கொ‌ள‌த்தூ‌ர், அ‌ம்ப‌த்தூ‌ர், செ‌ங்கு‌ன்ற‌ம்,தா‌ம்பர‌ம், ‌‌திருவா‌ன்‌மியூ‌ர் உ‌ள்‌ளி‌ட்ட பகு‌திக‌ளி‌ல் அ‌திகாலை நேர‌ங்க‌ளி‌ல் லா‌‌ரி போ‌க்குவர‌த்து அ‌திகமாக இரு‌க்கு‌ம். அ‌ப்போது வசூ‌ல் வே‌ட்டையை ஆ‌ர‌ம்‌பி‌த்து‌‌விடுவா‌ர்க‌ள் இ‌ந்த போ‌க்குவர‌த்து காவல‌ர்க‌ள்.

கொடு‌க்க மறு‌க்கு‌ம் லா‌ரிக‌ள் ம‌ணி‌க் கண‌க்‌கி‌ல் சாலை‌யி‌ன் ஓர‌த்‌தி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம். இதனை நா‌ம் ‌தின‌ந்தோறு‌ம் பா‌ர்‌க்க முடி‌கிறது. அ‌ப்படி ம‌ணி‌க் கண‌க்‌கி‌ல் கா‌த்‌திரு‌ப்பதை ‌விட கே‌ட்டது‌ம் பண‌த்தை கொடு‌த்து ‌வி‌‌ட்டு செ‌ல்லு‌ம் லா‌ரி ஓ‌ட்டுந‌ர்களு‌ம் இரு‌க்க‌த்தா‌ன் செ‌ய்‌கிறா‌ர்க‌ள். போ‌க்குவர‌த்து காவல‌ர்க‌ளி‌ன் இ‌ந்த அடாவடி செய‌ல்கள் பற்றி லா‌ரி ஓ‌ட்டுந‌‌ர்க‌ளிட‌ம் கே‌ட்டா‌ல், க‌ண்டபடி வசைமாரி பொழிகிறார்கள்.


இதேபோ‌ல்தா‌ன் த‌ற்போது செ‌ன்னை‌யி‌ல் போ‌க்குவர‌த்து காவல‌ர்க‌ள் நட‌ந்து கொ‌ள்‌கிறா‌ர்க‌ள். இ‌ப்படி‌ப்ப‌ட்ட அடாவடி செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடு‌ம் போக்குவர‌த்து காவல‌ர்களு‌க்கு யா‌ர் கடிவாள‌ம் போடுவது. ‌திருடனா‌ய் பா‌ர்‌த்து ‌திரு‌ந்தா‌‌வி‌ட்டா‌ல் ‌திரு‌ட்டை ஒ‌ழி‌க்க முடியாது எ‌ன்ற பாட‌ல்தா‌ன் ‌நினைவு‌க்கு வரு‌கிறது.

போலீஸ்காரராய்ப் பார்த்து திருந்தாவிட்டால்..!!!

நன்றி "வெளிச்சம்"


9 comments :

மங்குனி அமைச்சர் said...

மர்ம யோகி ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு ....... ஆனா இந்த பக்காம் ரொம்ப ஜா...........ஸ்த்தி

மோனிஷா said...

திருந்தாத ஈனப்பிறவிகள். சாதாரண மக்களிடமே இவர்களின் அதிகாரம் செல்லுபடியாகிறது.அவர்களின் சாபம் இவர்களின் சந்ததியினரை விளங்காமல் செய்கிறது. அரசியல்வாதிகளின் கூர்க்காக்கள்.

சாமக்கோடங்கி said...

"கொள்ளை"ல போறவனுக...

மர்மயோகி said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி..
பின்னூட்டமிட்ட மங்குனி அமைச்சர், சாமக் கோடங்கி, மற்றும் புதிய பதிவர் "மோனிஷா" ஆகியோர்களுக்கு நன்றி..

"தாரிஸன் " said...

இவனுகள திருத்த முடியாதுப்பா...
நாமளும் இப்படியே பேசிட்டு இருப்போம் அவனுகளும் அப்படியே வாங்கிட்டுதான் இருப்பானுக.....

"தாரிஸன் " said...

//அரசியல்வாதிகளின் கூர்க்காக்கள்//
அருமையான உண்மை மோனிஷா....

வடுவூர் குமார் said...

அரசாங்கம் என்ன செய்கிறது?

surrajkannan.blogspot.com said...

They are decent beggars.

மர்மயோகி said...

நன்றி திரு தாரிசன், திரு வடுவூர் குமார் மற்றும் திரு surraj ஆகியோருக்கு மிக்க நன்றி..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?