Pages

Tuesday, December 28, 2010

காதலிக்கு காதலன் தரும் பரிசு..


ஒரு அலுவலகத‌்‌தி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் மேல‌திகா‌ரி, எ‌ப்போது‌ம் சக ஊ‌ழிய‌ர்களை‌த் ‌தி‌ட்டி‌க் கொ‌ண்டே இரு‌ப்பா‌ர். எத‌ற்கு எடு‌த்தாலு‌ம் எ‌ரி‌ந்து ‌விழு‌ந்து கொ‌ண்டு‌ம், ‌வா‌ய்‌க்கு வ‌ந்தபடி த‌ி‌ட்டி‌க் கொ‌ண்டு‌ம் இரு‌ப்பா‌ர். இதனா‌ல் அவருட‌ன் ப‌ணியா‌ற்று‌ம் ஊ‌ழிய‌ர்க‌ள் எ‌ப்போது‌ம் மன வருத்த‌த்துட‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள்.


இதுபோ‌ன்ற சூ‌ழ்‌நிலை‌யி‌ல், ஒருவ‌ர் பு‌திதாக ப‌ணி‌க்கு சே‌ர்‌ந்தா‌ர். அவரையு‌ம் அ‌ந்த மேல‌திகா‌ரி ‌தி‌ட்டி‌த் ‌தீ‌ர்‌த்தா‌ர். ஆனா‌ல், பு‌திய இளைஞ‌னி‌ன் முக‌த்‌திலோ எ‌ந்த பத‌ற்றமு‌ம் இ‌ல்லை, கவலையு‌ம் இ‌ல்லை. எ‌ப்போது‌ம் போல தனது வேலையை அவ‌ர் ச‌ெ‌வ்வனே செ‌ய்து வ‌ந்தா‌ர்.



இதனை‌க் க‌ண்டது‌ம் ம‌ற்ற ஊ‌ழிய‌ர்களு‌க்கு ‌மிகவு‌ம் ‌ஆ‌ச்ச‌ரி‌ய‌ம். எ‌ன்ன‌ப்பா அவ‌ர் உ‌ன்னை அ‌ப்படி ‌தி‌ட்டு‌கிறா‌ர். ஆனா‌ல் அதை ‌நீ க‌ண்டுகொ‌ண்டதாக‌க் கூட தெ‌ரிய‌வி‌ல்லையே. எ‌ப்போது‌ம் முக‌த்தை ‌சி‌ரி‌த்தபடியே வை‌த்து‌க் கொ‌ண்டு வேலை செ‌ய்ய உ‌‌ன்னா‌ல் ம‌ட்டு‌ம் எ‌ப்படி முடி‌கிறது எ‌ன்று கே‌ட்டா‌ர்க‌ள்.




இத‌ற்கு அ‌‌ந்த ஊ‌ழிய‌ர் அ‌ளி‌த்த ப‌தி‌ல், அந்தத் தெருவின் முனையில் இரு காதலர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தை சுட்டிக் காண்பித்து ‘‘அங்கே பாரு‌ங்க‌ள்! புரியும்’’ என்றார்.



அங்கே பார்த்தும் புரியாத விழிகளோடு ‘‘புரியவில்லையே!’’ எனக் குழப்பமாகச் சொன்ன ஊ‌‌ழிய‌ர்‌க‌ளிட‌ம் கேட்டார், ‘‘அந்தக் காதலன் தன் காதலியிடம் ஏதோ ஒன்றைக் கொடுக்க முயற்சி செய்கின்றான், தெரிகின்றதா?’’



‘‘ஏதோ பரிசுப் பொருள் போல் தெரிகிறது. ஏதோ கோபம் காரணமாக காதலன் எவ்வளவுதான் கொடுக்க முயற்சி செய்தாலும் காதலி அந்தப் பரிசுப்பொருளைப் பெற்றுக்கொள்ளவேயில்லை.’’



பு‌திய இளைஞ‌ன் கூ‌றினா‌ன், ‘‘அந்தப் பெண் அந்தப் பரிசை வாங்காதவரை அந்தப் பரிசுப் பொருள் யாருக்குச் சொந்தம்?’’‘நிச்சயம் அது அந்தக் காதலனுக்குத்தான் சொந்தம்’’என்றுசொன்னார்க‌ள்ம‌ற்றவ‌ர்க‌ள்.



அப்போது...



இந்தப் பதிலைக் கேட்டு சிரித்துக்கொண்டே சொன்னார்.

அதேதான் என் கதையிலும்... மேல‌திகா‌ரி தனது மூர்க்கத்தனத்தையும், கோபத்தையும் என்னிடம் தருவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நான் அதை வாங்கிக் கொள்ளவேயில்லை. அதனால்தான் நான் அ‌ந்த கோப வா‌ர்‌த்தைகளா‌ல் கவலையுற‌வி‌ல்லை. அவ‌ர் எ‌ன்‌னிட‌ம் தந்த கோபத்தை நான் வாங்கிக்கொள்ளவேயில்லை ’’என்றார். இதை‌க் கே‌ட்ட ம‌ற்ற ஊ‌ழிய‌ர்க‌ள் ‌திகை‌த்து‌ நி‌ன்றன‌ர். எ‌ந்த ‌பிர‌ச்‌சினையு‌ம், அத‌ன் ‌மீது நா‌ம் கா‌ட்டு‌ம் ஆ‌ர்வ‌த்தை‌ப் பொறு‌த்தே அமையு‌ம். எதையு‌ம் நா‌மாக ஏ‌ற்று‌க் கொ‌ள்ளாம‌ல் ந‌ம்‌மிட‌ம் வ‌ந்து சேராது. அது ‌தி‌ட்டாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ‌பிர‌ச்‌சினையாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி..

நன்றி "வெளிச்சம்"



 

10 comments :

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

////எ‌ந்த ‌பிர‌ச்‌சினையு‌ம், அத‌ன் ‌மீது நா‌ம் கா‌ட்டு‌ம் ஆ‌ர்வ‌த்தை‌ப் பொறு‌த்தே அமையு‌ம். எதையு‌ம் நா‌மாக ஏ‌ற்று‌க் கொ‌ள்ளாம‌ல் ந‌ம்‌மிட‌ம் வ‌ந்து சேராது. அது ‌தி‌ட்டாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ‌பிர‌ச்‌சினையாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி..///

ரொம்ப ரொம்ப.. சரியா சொன்னிங்க... நல்ல விசயங்க.. நல்லதோ, கேட்டதோ.. நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்..என்பதை... அருமையான எடுத்துக்காட்டுடன், குட்டி கதையாகவே... தந்துட்டீங்க.. நன்றி.. :)

பாலா said...

நான் படித்த ஜென் கதையை வேறொரு வடிவில் சுவாரசியமாக கொடுத்திருக்கிறீர்கள்.
நன்றாக இருக்கிறது. நன்றி நண்பரே.

மங்குனி அமைச்சர் said...

ஹி.ஹி.ஹி............... ஏன் இந்த பொறுப்புணர்ச்சி ????

மர்மயோகி said...

பின்னூட்டமிட்டுள்ள நண்பர்கள் அன்புடன் ஆனந்தி, பாலா, மங்குனி அமைச்சர் ஆகியோர்களுக்கு நன்றி..

நண்பர் பாலா அவர்களே,, இதற்கும் முன்பு தாங்கள் என்னிடம் பின்னூட்டத்தில் கேட்ட கேள்விக்கு, அதே பதிவில் பதிலளித்துள்ளேன், படித்துவிட்டு பதிலளியுங்கள் ப்ளீஸ். நன்றி..

Yoganathan.N said...

//எ‌ந்த ‌பிர‌ச்‌சினையு‌ம், அத‌ன் ‌மீது நா‌ம் கா‌ட்டு‌ம் ஆ‌ர்வ‌த்தை‌ப் பொறு‌த்தே அமையு‌ம். எதையு‌ம் நா‌மாக ஏ‌ற்று‌க் கொ‌ள்ளாம‌ல் ந‌ம்‌மிட‌ம் வ‌ந்து சேராது. அது ‌தி‌ட்டாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ‌பிர‌ச்‌சினையாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி..//
நல்ல 'மேசேஜ்'. சூப்பர். தொடருங்கள்...

மர்மயோகி said...

நன்றி திரு Yoganathan.N. அவர்களே..

உமர் | Umar said...

ஏற்கனவே இந்தக் கதையை அறியாதவர்கள் பயன் பெறுவார்கள். நல்ல முயற்சி. தொடருங்கள்.

மர்மயோகி said...

நன்றி திரு கும்மி அவர்களே..

சாமக்கோடங்கி said...

நல்ல ஒரு கருத்து.. நன்றி..

மர்மயோகி said...

நன்றி சாமக்கோடங்கி ...

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?