Pages

Saturday, June 11, 2011

ஜால்ரா தினத்தந்தியின் தில்லு முல்லு..



சினிமா கூத்தாடிகளை நம்பியும், கொலை கொள்ளை செய்திகள் மற்றும் கள்ளத்தொடர்பு செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவரும் ஒரு கேடுகெட்ட பத்திரிக்கைதான் தினத்தந்தி.

பத்திரிகை தர்மம் என்பது ஆளும் கட்சிக்கு நூறு சதவீதம் ஜால்ரா தட்டுவது என்ற கொள்கை வைத்திருக்கும் தினத்தந்தி, சென்ற ஆட்சியில் கருணாநிதிக்கு ஜால்ரா போட்டுகொண்டிருந்தது..

ஆட்சி மாறி ஜெஎலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் அப்படியே தனது பிளேட்டை திருப்பிப் போட்டு, ஜால்ரா தட்டிக்கொண்டிருக்கிறது..

இப்படி செய்வதாலேயே எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனக்கு பாதிப்பில்லாமல் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறது இந்த கள்ளத்தொடர்பு ஸ்பெசலிஸ்ட் தினத்தந்தி..


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது..

எம்ஜியார் ஆட்சிக்காலத்தில் ஹோட்டல் அதிபர்கள் எல்லாம் எம்ஜியாரை சந்தித்து - உணவுப்பண்டங்களின் விலையை குறைத்து விற்பதாக ஒப்புகொண்டிருக்கிரார்கள் என்று இதே ஜால்ரா பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது..

உதாரணத்திற்கு, ஒரு தோசை விலை ரூபாய் 2.50 விற்பதை குறைத்து ரூபாய் 2 .25 க்கு விற்பதாக போட்டிருந்தார்கள்..

ஆனால் அப்போது தோசையின் விலை ருபாய் 2 தான் விற்றுகொண்டிருந்தார்கள்..அதாவது இந்த செய்தியின் விளைவாக இன்னும் 25 பைசா கூடுதாலாக விற்று அந்த வியாபாரிகள் இலாபம் பார்த்தார்கள்..



நான் பத்திரிகை துறையில் உள்ளவன். "இருந்தால் தினத்தந்தி நிருபராக இருக்கனும்யா..அவனுக்குதான் மச்சம்" என்ற வசனங்களை நீங்கள் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம்..

இப்போது இன்னொரு துரோகம் செய்திருக்கிறது இந்த ஜால்ரா பத்திரிகை..



அதாவது, தமிழ் நாட்டில் இனிமேல் இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருக்குமாம்.


அடப்பாவிங்களா.

ஏற்கனவே சென்னையில் - ஒருமணி நேரம்தான் மின்வெட்டு இருக்கிறது..இப்போ இவன் இரண்டு மணிநேரம் என்று போட்டு இதன்காரணமாக இனிமேல் இரண்டு மணிநேரம் மின்சாரத்தை நிருத்திடுவானுங்களோன்னு பயமா இருக்கு..



பொதுவா கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும்..அங்கே இனி இரண்டு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு என்று அறிவித்ததை பொதுவாக போட்டு, நகரத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிரமம் ஏற்படுத்திவிட்டு - தனது ஆளும்கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தும் இதுபோன்ற பத்திரிக்கைகள்தான் அதிகமாகவும் விற்பனையாகிறது..



தனது சொந்த விஷயத்தை தவிர அடுத்தவனின் படுக்கை அறை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழன் திருந்த வாய்ப்பே இல்லை..




1 comments :

heartripper said...

namma aalunga kalla thodarpu seithi irukaa apdinu paatha piraguthan 1st page ke varuvaanga.Athan

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?