Pages

Monday, June 20, 2011

வெட்டி பதிவர்களும் கேடுகெட்ட பதிவுகளும்



பழிவாங்கும் சிம்பு

காதல் மனைவிக்கு பிரகாஷ் ராஜ் கொடுத்த பரிசு

விஜய்யின் ஆடியோ ரிலீஸ் தேதி

5  நாளில் எல்லாம் முடிஞ்சுடும்

அங்காடி தெரு சிந்துவின் அந்த மகிழ்ச்சி

விஸ்வரூபம் கமல் ஜாதகம் என்ன சொல்கிறது

மணிரத்தினத்தின் அடுத்தபடம்

நடிகை ஸ்வேதா மேனனுக்கு இன்று திருமணம்

விழியே பேசு..வீணடித்து விட்டனர் : வருத்தத்தில் சோனாக்ஷி

ஆட்சி மாற்றம்: சிக்கலில் விஜய்யின் பகலவன்

பிரசாந்தின் மம்பட்டியானுக்காக சிம்பு பாடிய பாட்டு

ஆட்சி மாற்றத்திற்கு விஜய்தான் காரணம் சீமான் பரபரப்பு பேச்சு

சிறுநீரகத்தை மாற்றிய ரஜினி - சிங்கபூர் பத்திரிகை தகவல்

"ஜெய்"க்காக பழிவாங்கும் சிம்பு

ஒத்துகொள்வோமா ஒதுங்கிவிடுவோமா குழப்பத்தில் விஜய்

ரஜினியும் திமுகவும் அதிமுகவும்

மைக்கேல் ஜாக்சனின் எங்கேயும் காதல் பாடல்

ஹன்சிகா எனக்க ஒட்டைவடைக்கா..எக்ஸ்குளுசிவ் பேட்டி

ரஜினி தமிழக மக்களின் நாடித்துடிப்பு.. 


மேற்கண்டவை எல்லாம் என்ன வென்று நினைக்கிறீர்கள்..?
சென்றவாரம் முழுவதும் நமது பதிவர்கள் பதிவிட்ட பதிவுகளின் தலைப்புகள்..
சினிமாக்கூத்தாடிகளை வெறும் கூத்தாடிகளாக மட்டும் பார்க்காமல் அவனை தலைவனாகவும், வழிகாட்டியாகவும் கொள்ளும் மடையர்களாக இருக்கும்வரை, எதுவுமே உருப்படாது.


பதிவுலகில் எவ்வளவோ உருப்படியான விஷயங்கள் இருக்க, இப்படி கிறுக்குத்தன பதிவர்களும், ஆபாச பத்திரிக்கைகளின் கட்டுரைகளை காப்பி பேஸ்ட் செய்து அவைகளுக்கு மாமா வேலை பார்க்கும் பதிர்வர்களும் இருந்துகொண்டு சீரழித்துகொண்டிருக்கின்றனர்.
சிநிமாக்கூத்தாடிக்கள் என்னவோ புடுங்கிக்கொண்டு போகட்டும்,,உனக்கென்ன அதைப்பற்றி..
உன் தாய் தந்தையைவிட, சகோதர சகோதரனைவிட, மனைவி குழந்தையைவிட,சினிமாக்காரன் அவ்வளவு முக்கியமாக போய்விட்டானா?
ஏனிந்த கேடுகெட்ட  பிழைப்பு?
உங்களுக்கு  பதிவிட நல்ல விசயங்களே கிடையாதா?
அப்படி மூளை வேலை செய்யவில்லை  என்றால் சும்மா இருங்கள்..அல்லது எவனாவது பொறுக்கி நடிகனின் படத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்றுக்கொண்டிரு..
இங்கே வந்து உன் கேடுகெட்ட புத்தியை காட்டி மற்றவர்களை வீணாக்காதீர்கள்  


20 comments :

கோவை நேரம் said...

அசத்தல் ....

மர்மயோகி said...

நன்றி கோவை நேரம்..

அகல்விளக்கு said...

200% Agreed wit ur points...

மர்மயோகி said...

மிக்க நன்றி திரு அகல் விளக்கு..எனது தரப்பில் இதுபோன்ற பதிவுகள் வந்தாலும் நீங்கள் சுட்டி காட்டுங்கள்.. உங்களது கண்டனங்களை தெரிவியுங்கள்...

”தளிர் சுரேஷ்” said...

சினிமா பதிவு போட்டால்தானே நிறைய பேர் படிக்கிறார்கள்! நான் போட்ட நல்ல விஷயங்களை படித்தவர்களைவிட காப்பி பேஸ்ட் செய்து போட்ட சினிமா பதிவுகளுக்கு வறவேற்பு அதிகம். மற்றபடி உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடுதான். நன்றியுடன். சுரேஷ்.

Unknown said...

This is perfect answer to them...........But no use no one will listen to you because

"TAMIL NAATTU MAKKALAI APPADITHAAN AAKKI VAITHIRUKIRAARGAL"

WILL SEE

மர்மயோகி said...

நன்றி திரு thalir
இப்படி சொல்லி சொல்லித்தான் சினிமாக்காரர்களும் ஆபாச படங்களையும் கேவலமான சினிமாக்களையும் எடுத்து ஆபாச வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்..
மற்றவர்கள் இதைத்தான் படிக்கிறார்கள் என்பதற்காக நமது எண்ணங்களை ஏன் மாற்றவேண்டும்?

மர்மயோகி said...

நன்றி Abu Sana

ஜீவன்சிவம் said...

அப்படி பார்த்தால் சினிமாவை ஆராத்திதோ, திட்டியோ அதிகம் பதிவிடுவது நீங்கள் தான்.
ஊருக்கு தான் உபதேசமா...? நாடே பொங்கி எழுந்த அண்ணா ஹசாரே பற்றிய என் பதிவுக்கு
மொத்தம் வருகையே 100 க்கும் குறைவு தான். அன்றோடு பதிவு பக்கம் வருவதையே நிறுத்தி கொண்டேன்

மர்மயோகி said...

நன்றி திரு ஜீவன் சிவம்
சினிமாவை ஆராதித்து எந்த பதிவும் போட்டதாக நினைவில்லை..
இருந்து தவறென்றால் தவறுதான்.
அன்னாஹசாரே நரேந்திரமோடிக்கு வால்பிடித்தபோதே அவர் மீதுள்ள மரியாதை போயிற்று..அவருடன் இன்னொரு ஆர் எஸ் எஸ் சாமியார் ராம்தேவ் பாபா சேர்ந்தவுடன் ச்சீ என்றாகிவிட்டது..
ஹிட்ஸ் குறைவு என்பதற்காக நீங்கள் பதிவை நிறுத்திவிடாதீர்கள்..
பதிவிட ஆரம்பித்த புதிதில் எனக்கு தமிழ்மணம் தமிளிஷ் போன்ற திரட்டிகளில் இணைப்பது பற்றி ஒன்றுமே தெரியாது..அப்போதெல்லாம் என் பதிவையும் பலர் படிப்பார்கள் என்றெண்ணியே நான் நிறைய பதிவுகளிட்டு வந்திருக்கின்றேன்..
இப்போதுதான் தெரிகிறது அதை நான் மட்டுமே படித்து வந்திருக்கிறேன் என்று..சில நாட்கள் கழித்துதான் நண்பர் ஒருவர் திரட்டிகளில் இணைப்பது பற்றி விளக்கினார்..
அதேசமயம் நான் யாரிடமும் ஓட்டுப்போடுங்கள் என்று கெஞ்சியதும் கிடையாது. இந்த பதிவுகளின் மூலம் நிறையபேரின் எதிர்ப்புகளைத்தான் சந்தித்திருக்கின்றேன்..இன்னும் என் ஈ மெயிலுக்கு எவ்வளவு ஆபாசமான ஈ மெயில்கள் வருகின்றன எனபது உங்களுக்கு தெரியுமா?
இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளவே தேவை இல்லை..
நீங்கள் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான பதிவெழுதி வந்தீர்களென்றால் உங்கள் பதிவு மற்றவர்களை சென்றடைவதை யாரால் தடுக்க முடியும்?

nirvana said...

Matroru nala ,unmayana pathivu Marmayogie. Thodaratum ungal katooraigal. Ungal pathivugalal nam adutha santhathiyanarku oru vazhi katuthalaga nichayamaga irukum.

http://in.news.yahoo.com/98-kg-gold-rs-12-crore-cash-found-131951352.html


Sai Baba arayil 100 kg thangam, 12 Kodi panam matrum 300 kilo veli . ithai vaithu oru 1000 kudambangalai nala nilaiku kondu vanthirukalam.

sugam said...

அன்புள்ள மர்ம" யோகிக்கு
வாழ்வில் அறுசுவையும் வேண்டும் தானே ......உங்களுக்கு வாழ்கையை எப்பவும் காரணத்தோடு அணுக பிடிபதால் எல்லோரையும் அப்படியே இருக்க வேண்டும் என நினைப்பது மிகவும் முட்டாள்தனமானது .......ஆகவே எல்லோர் கருத்தையும் ஏற்கும் மனபக்குவத்தை அடைய தயவு செய்து நீங்கள் முயற்சி செய்யவேண்டும்

vels-erode said...

Right sir.....I accept your feelings.............

மர்மயோகி said...

நடிகனுக்கு வால் பிடிப்பது, அவன் சம்பாதிப்பதற்கு நீ சாவது, அவன் எந்த நடிகையுடன் ஜோடி சேருகிறான் என்று நீ விவாதம் பண்ணுவது,வெறும் கூத்தாடியை நாளைய தலைவன் என்று கொண்டாடுவது.. இது வாழ்வின் சுவைகளில் ஒன்றா? எது முட்டாள்தனம் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்..

மர்மயோகி said...

நன்றி திரு velumani1

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல சிந்தனை...

Unknown said...

மாப்ள என் கருத்து:

ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட விருப்பம் இருக்கும்....அதே நேரம் அருவருக்கத்தக்க விதங்களிலோ அல்லது ஒரேயடியாக சொம்பு அடிப்பதோ தான் உங்க கோவத்துக்கு காரணம் என்று நினைக்கிறேன்...!

Imran Saheer said...

உங்கள் குமுறல் எனக்கு புரிகிறது. இப்படியான பப்பட பதிவுகளை நானும் வெறுப்பவன்.

ஆனாலும் இது போன்ற பதிவுகளும் வேண்டும் என்பதே எனது கருத்து. அதிகமாக அல்ல அளவாக.

மேலும் புதிய பதிவர்கள் இதனையே உலகாக கொண்டு விடக்கூடாது. அவர்கள் பதிவுகளில் புதிய கருத்துக்கள், யோசனைகளை முன் வைக்க பட வேண்டும். குறிப்பாக கல்வி, கலாச்சாரம், விஞ்ஞானம்,தொழிநுட்பம் என்பன பற்றி பல பதிவுகள் பெருக வேண்டும்.

Sankar Gurusamy said...

யாருக்கு எதைப் பிடிக்கிறதோ அதையே எழுதுகிறார்கள். இந்த பரந்த இணையத்தில் எல்லாவற்றுக்கும் இடம் இருக்கிறது. சினிமா பற்றி எழுதாத வலைத்தளங்களுக்கு 10 பேர் கூட சென்று பார்ப்பதில்லை என்பதுதான் இன்றைய நிலை.

இருந்தாலும் இவை சற்று குறைவாகவும் சமூக பொறுப்புள்ள பதிவுகள் அதிகமாகவும் வந்தால் நன்றாகவே இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

SENTHILKUMARAN said...

காம தாத்தாவை பற்றி ஒரு கட்டுரை

http://www.vinavu.com/2011/06/24/charu/
காம தாத்தாவை பற்றி ஒரு கட்டுரை

http://www.vinavu.com/2011/06/24/charu/

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?