Pages

Wednesday, February 24, 2010

சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர்

இன்றைய தினம் நிச்சயமாய் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான நாளாக இருக்கும்..

பொதுவாகவே கிரிக்கெட்டால் மக்களின் நேரங்கள் அநியாயமாக வீணாகப்போகிறதே என்ற கருத்துடையவன் நான்..

ஆனால் டெண்டுல்கர் தான் தேர்ந்தெடுத்த துறையில் நியாயமான அர்ப்பணிப்புடன் விளையாடி வருவதை யாராலும் மறுக்க முடியாது.

37 வயதை நெருங்கும் டெண்டுல்கர், ஏறத்தாழ 21 வருடங்களாக கிரிக்கெட்டில் விளையாடி, இன்றைக்கு யாருமே நெருங்க முடியாத சாதனைகளுக்கு சொந்தக்காரராக உயர்ந்துள்ளார்..இதற்கெல்லாம் மகுடமாக, இன்று (24/02/2010) சவுத் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிகெட் விளையாட்டில் 147 பந்துகளை சந்தித்து 200  ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

மற்ற எந்த சாதனைகளைவிடவும் இந்த சாதனை பலவகைகளில் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் சச்சின் சாதாரணமான ஒரு அணிக்கெதிராக இந்த இரட்டை சதத்தை எடுத்துவிடவில்லை..உலகிலேயே சிறந்த அணி என கருதப்படும் சவுத் ஆபிரிக்கா அணிக்கெதிராக இந்த சாதனையை புரிந்துள்ளார்..

மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த சயீத் அன்வர், மற்றும் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த காவென்டரி ஆகியோரது சாதனைகளை முறியடித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 ஓட்டங்கள் எடுத்து, உலகிலேயே ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் இரட்டைச் சதங்கள் எடுத்த முதல் (ஏன் ஒரே வீரர் என்றுகூட வைத்துக்கொள்ளலாம்) வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

மற்ற கிரிக்கெட் வீரர்களைப்போல எந்த ஒரு வம்பிலும் கிசு கிசுக்களிலும் சிக்காத ஓர் உண்மையாக வீரராக கிரிக்கெட்டிற்கு தன் அற்பணிப்பை தந்துள்ள சச்சின் டெண்டுல்கர் நிச்சயமாக ஒரு சாதனை வீரர்தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

சுமாரான திறமைகளை மட்டுமே வைத்துக்கொண்டு கிரிக்கெட்டில் இடம் கிடைத்ததே என்பதற்காக தறிகெட்டு ஆடும் ஸ்ரீசாந்த் போன்ற பன்னாடைகளுக்கு மத்தியிலே..இருபது வருடங்களுக்கு மேல் கிரிக்கெட்டில் சாதனைகளுக்கு மேல் சாதனை புரியும் டெண்டுல்கர் பாராட்டுக்கு உரியவர்தான்.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 166 டெஸ்டுகள் விளையாடி, 13447 (248 அதிகபட்சம்) ஓட்டங்கள், அதில் 47 சதங்கள், 54 அரைச் சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 441 மேட்சுகள் விளையாடி 17605 (200 அதிகபட்சம்) ஓட்டங்கள், அதில் 47 சதங்கள், 93 அரைச் சதங்கள் என்று எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் நெருங்க முடியாத சாதனைகளைப் புரிந்தும் எந்த வித ஆணவமோ, அகம்பாவமோ, பெருமையோ கொள்ளாமல் விளையாடி வருவதால்தான் அவர் மேலும் மேலும் சாதனையாளராக இருக்க முடிகிறது.

இவரைபோன்ற விளையாட்டு வீரர்களால்தான் கிரிக்கெட்டை குறைகூறுபவர்கள் கூட ஆர்வமாக கிரிக்கெட் விளையாட்டை பார்கிறார்கள்..

ஆனால், ஸ்ரீசாந்த் என்கிற ஒரு பன்னாடை, இருக்கிற மரியாதை எல்லாம் கெடுத்துவிடுவான் போல இருக்கிறது.

ஒழுக்கமில்லாத பொறுக்கிகளை எல்லாம் எப்படித்தான் இந்த கிரிகெட் வாரியத்தை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களோ.

அப்படி ஒன்றும் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை. எத்தனையோ வீரர்கள் போட்டிபோடும் இந்த விளையாட்டிற்கு, ஸ்ரீசாந்த் என்கிற பன்னாடையால் எந்த ஒரு பங்களிப்பையும் செய்ய முடியாது. கிரிக்கெட் மீது இருக்கிற மரியாதையைத்தான் கெடுக்க முடியும்.

கிரிக்கெட்டில் எல்லாரும்தான் விக்கெட் எடுக்கிறார்கள்..ஆனால் இவன் மட்டும்தான் பொறுக்கித்தனமாக நடந்து கொள்கிறான். (இவன்மேல் எனக்கு மட்டும்தான் கோவம் என்று நினைத்துகொண்டிருந்தேன்..ஆனால் என்னைவிட இவனை கேவலமாக திட்டுபவர்கள் அதிகம் என்று அறிந்தபோது இவனை பதிவில் திட்டுவதில் தவறில்லை என உணர்ந்துகொண்டேன்)

டெண்டுல்கர் போன்ற ஒழுக்கமானவர்கள் விளையாடும் இந்த விளையாட்டில் ஸ்ரீசாந்த் என்கிற களையை பிடுங்கி எறிந்தால்தான் இந்த விளையாட்டு உரிய மரியாதை பெரும் என்பதில் சந்தேகமில்லை.

மிகச்சிறந்த சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் மேலும் பல சாதனைகள் புரிந்து விளையாட பதிப்புலகம் சார்பில் வாழ்த்துவோம்..

4 comments :

அன்புடன் நான் said...

சச்சினுக்கு.... வாழ்த்துக்கள்... அவர் எடுத்த ஓட்டங்கள் 207 அல்ல. 200.

இதில் அடங்கியுள்ளது சாதனையல்ல....
சாதனைகள்!!!

வாழ்க சச்சின்!

மர்மயோகி said...

நன்றி திரு கருணாகரசு அவர்களே..திருத்திக்கொண்டேன்..

Tech Shankar said...

Congrats to Sachin. நன்றி. முடிந்தால் இவைகளையும் பாருங்களேன்!

சச்சின் 200 : சாதனைக் காணொளிகள்

சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக

Jayadev Das said...

இவருகிட்ட 47 One day சதங்கள் இருந்தும் ஒன்று கூட உலகக் கோப்பையை பெற்றுத் தரவில்லை. மேலும் இவரது டெஸ்ட் ஆட்ட புள்ளி விபரம் சொல்கிறது, "இவரது ஆட்டம் அணியின் வெற்றியை நோக்கி இல்லை" என்று. அதாவது இவரது சராசரி அணி வென்றபோதும் [53], தோற்றபோதும் [53] ஒரே மாதிரி இருக்கிறது. விவியன் ரிச்சர்ட்ஸ், ஸ்டீவ் வாக் போன்றவர்கள் தங்கள் அணி வென்ற மாச்சுகளில் சராசரி [80], எல்லா மாச்சுகளின் சராசரி [52]. கபில் போட்டது ஒரே சதம், அது இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வாங்க முக்கிய காரணங்களில் ஒன்று. விவியன் ரிச்சர்ட்ஸ், ஸ்டீவ் வாக், கபில் அணிக்கு விளையாடுபவர்கள். இவன், கவாஸ்கர் மாதிரி ஆட்கள் பணத்துக்கு ஆடுபவர்கள். Waste Fellows.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?