Pages

Sunday, February 21, 2010

நல்ல விசயமும் இருக்குதுல்ல...

நண்பர் திரு குலவுசனப்பிரியன் அவர்கள்..எனது முந்தைய பதிவுக்கான (அமெரிக்க அடிவருடிகள்) பின்னூட்டத்தில் தீமையைச் சாடும் நேரத்தில் நல்லதையும் போற்றலாமே என்று பதிந்திருந்தார்..(நன்றி நண்பரே)..

சாலை விதிகளை மதிக்காத மக்களின் போக்கை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். சாலை விதி மீறுவோர் செய்யும் தவறுகள் என்னவென்று பார்ப்போமா?

1. சிக்னலுக்காக வாகனங்கள் வரிசைகட்டி நிற்கும்போது, பின்னாலிருந்து வண்டிகளுக்கிடையே புகுந்து புகுந்து மற்ற வண்டிகளை இடித்து முன்னுக்கு வந்து நிற்க முயற்சிப்பது. இப்படி நுழையும்போது எங்காவது ஒரு இடத்தில் சிக்கி மற்ற வண்டிகளுக்கும் இடைஞ்சலாய் நிற்பது.

2. க்ரீன் சிக்னல் விழுந்த திசையிலிருந்து வாகனங்கள் கிளம்ப ஒரு நொடி தாமதமானாலும், ரெட் சிக்னல் திசையில் உள்ளவர்கள் வண்டியைக்கிளப்பி விடுகிறார்கள். க்ரீன் சிக்னலை நம்பி வருபவர் காலி!

3. சிக்னலில் மஞ்சள் விழுந்ததும், நாம் நிறுத்த தயாரானாலும் பின்னால் வரும் வண்டிகள் மிரட்டல் ஹாரன் அடித்து நமக்கு பீதியை கிளப்புகின்றன. நாம் வண்டியை நிறுத்திவிட்டால் அவர்கள் வருகிற வேகத்தில் நம் மேலேயே ஏற்றிவிட்டு போய்விடுவார்கள் போல.

4. பஸ் டிரைவர்களுக்கு ஸ்டாப்பில் பஸ்ஸை நிறுத்த யாரவது சொல்லிக்கொடுக்க வேண்டும். மற்ற பஸ்கள் முந்திவிடக்கூடாது என்று சாலையை அடைத்துக்கொண்டு நிறுத்துகிறார்கள்.

5. வாகனங்கள் இடப்பக்கத்தில் முந்தக்கூடாது. (இந்தவிசயத்தில் மட்டும் ஓரளவு ஓகே) சின்சியராக ஹாரன் அடித்து தெரிவித்தபிரகுதான் இந்த விதி மீறலைச் செய்கிறார்கள்.

6. பின்னால் வரும் வாகனங்களைப்பற்றி கவலையேப் படாமல் "திடீர் ப்ரேக்" போட்டு ஆட்களை ஏற்றுவது ஆட்டோக்காரர்களுக்கு உரிய ஸ்டைல். கஸ்டமருக்கு முதல் மரியாதையாம்.

7. தங்கள் பேருந்துக்கு முன்னால் ஏதேனும் டூ வீலர் போனால் பல பஸ் டிரைவர்கள் ஏன் டென்சன் ஆகி, ஆக்சிலட்டரை அமுக்கி, உறுமி பயமுறுத்துகிறார்கள்? பின்னால் பஸ் வந்தாலே பயமாக இருக்கிறது.

8. மீடியனில் காத்திருக்கும் பாதசாரிகள் எல்லாரும் சாலையைக்கடந்து விட்டாலும், வண்டியை கிளப்பி விடக்கூடாது. கடைசியில் உதிரியாக ஒருவர் மட்டும் சாலையில் குதித்து, குடுகுடுவென சாலையைக்கடக்கிறார். பொது ஜனங்களில் பலர் மீடியன்மீது ஏறிக் குதித்து பயமுறுத்துகிறார்கள்.. இது அநியாயம்.

9. செல் போன் ஒரு பெரிய பிரச்சினை. இப்போது ப்ளு டூத் இருப்பதால் பலர் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுகிறார்கள். இவர்களுக்கு உடனேயே லைசென்சை கேன்சல் செய்யவேண்டும்.

10. சென்னையில் பல நடைபாதைகளை கடைகள் அடைத்துகொண்டிருக்கின்றன. அப்புறம் மக்கள் எங்கே நடப்பார்கள். ரோட்டில்தானே? இதை எப்போது சரிசெய்வார்கள் என்று தெரியவில்லை...

தீமையைச் சாடும் நேரத்தில் நல்லதையும் போற்றுவோமே..அதுதான் இந்தவாரம் குமுதத்தில் "எப்போ திருந்துவாங்க" என்கிற தலைப்பில் சாலையோர பாதுகாப்பு மீறலில் நமது மக்களின் போக்கு பற்றி வெளியான கட்டுரை அப்படியே தந்திருக்கிறேன்.....

இவ்வளவும் சொல்லிட்டு நம்ம பன்ச் வெக்கலேன்னா எப்புடீ....


மேற்கண்ட சாலை விதிமீறல் கட்டுரையில் கூட குமுதம் தனது ஆபாச புத்தியை விடவில்லை...இந்தவிசயத்தை சொல்லகூட அவன் ரெண்டு மாடலிங் அழகிகளைத்தான் (அழகிகள் என்றால் தினத்தந்தியில் என்ன பொருள்?) கூட்டிச்சென்று இருக்கிறான்..

அந்த ரெண்டு ஐட்டமும் என்ன சொல்லி இருக்கு தெரியுமா? "நம்மாளுங்க எப்பதான் திருந்துவங்கன்னு தெரியல? " இதையேதான் கட்டுரையோட தலைப்பாகவும் கொடுத்து இருக்கான்..தமிழக மக்களை ரொம்பவும் கேவலமாக மதிப்பதால்தான் இவன் எந்த ஒரு விசயத்துக்கும் பெண்களின் படங்களை போடுகிறான்..


அப்புறம் இன்னொன்னு..இந்த டிராபிக் பத்தி இவ்வளவு சொன்னுச்சுங்களே இந்த மாடல் அழகிகள்..அவளுங்க ரெண்டுபேரும் டிராபிக் விதிய மதிக்காமல்தான் போஸ் கொடுத்து இருக்காளுங்க..அப்போ கூட ஹெல்மெட் போட்டுட்டு போகணும்கிற அறிவு இந்த ஜென்மங்களுக்கு இல்லை..இவளுங்கதான் (அல்லது அந்த குமுதம் காரனாகக்கூட இருக்கலாம்) "நம்மாளுங்க எப்பதான் திருந்துவங்கன்னு தெரியல? " என்று கமென்ட் அடிக்குதுங்க..
இந்த ஜென்மங்கள் எப்போதான் திருந்தப்போகுதோ?...

4 comments :

பித்தனின் வாக்கு said...

நல்ல கட்டுரை. அழகான அறிவுரைகள். இதை எல்லாரும் மதிப்பானுங்களா?. நன்றி.

நமது ஊர் மக்களின் சர்வ சாதாரனமான சுதந்திரங்களில் நீர் தலையிடுகின்றீர். இது எந்த ரூல்ஸ்களுக்கும் கட்டுப்படாத சென்னை மாடுகளைப் பற்றி ஒன்னும் சொல்லவில்லை. அங்க மாடும் மனுசனும் ஒன்னு என்று சொல்லாமல் விட்டு விட்டீரா? .

மர்மயோகி said...

நன்றி பித்தன்..நல்ல பின்னூட்டம்..
இவர்களுடன் ஒப்பிட்டு மாடுகளை அவமானப்படுத்த வேண்டாம்..பாவம் அவைகள் அப்பாவி ஜீவன்கள்..

பெரும்பாலும் சென்னை ஹோட்டல்களில் சட்னியில் புண்ணாக்கு கலப்பதாக அறிந்தேன்..அதை சாப்பிட்டு சாப்பிட்டு மனிதனுக்கும் மாட்டின் புத்தி வண்டு இருக்கலாம்

மங்குனி அமைச்சர் said...

சாமி முடியல விட்ருங்க . ஏதாவது காமெடி கீமடி எழுதுங்களேன்.
எப்பவுமே சீரியஸ் ஆக இருக்காதிங்க அப்புறம் bp வந்துடும் . (யப்பா யாராவது இவருக்கு மந்திருத்து தாயத்து ஒன்னு கட்டுங்கப்பா) எப்புடி அடுத்த தலைப்பு ரெடிபன்னிட்டன.

மர்மயோகி said...

மங்குனி அமைச்சரே..bp means "பெஸ்ட் பதிவரா?" (ரொம்ப ஆசைதாங்கிரீங்களா?) அதுவும் சரிதான்!

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?