Pages

Tuesday, February 23, 2010

சாராய ஸ்பான்சர்கள்...



பழைய எம் ஜி ஆர் படங்களைப் பார்க்கும்போது ஒரு விஷயம் நமக்கெல்லாம் நன்றாகப்புரியும். மது, சிகரெட் போன்ற வஸ்துக்கள் நிச்சயமாக வில்லன்கள் மட்டுமே உபயோகிக்கக்கூடிய ஒன்று என்று.

ஆனால் அவருடைய போட்டியாளராக இருந்த சிவாஜி நல்லவனாக மட்டுமே நடிக்காமல் திருடனாக, குடிகாரனாக நடித்தார்.

ஆனாலும் பொதுவாக, கதாநாயகன், மற்றும் அவனுடைய ஆதரவாளனாக  வரும் காமெடியன் போன்றோர் நிச்சயமாக இதுபோன்ற செயல்கள் ஒரு தீயவன் மட்டுமே செய்யக்கூடியவை என்று வலியுறுத்தும் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்கள்.

தற்கால திரைப்படங்களைப் பார்த்தால் குடிப்பவன், திருடன், கற்பழிப்பு போன்ற கேடுகெட்ட செயல்களில் ஈடுபடுபவன் மட்டுமே கதாநாயகன் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சொன்னால், கதாநாயகனாக வருபவன், வில்லனாக நடிப்பவனைவிட பலமடங்கு தீயவனாகவே இருக்கிறான்.

காதலில் தோற்றால் அவன் ஒயின் ஷாப் பக்கம் சென்று நன்றாக குடித்துவிட்டு (இவன் குடிப்பதுபோல் ஒரு முழு பாட்டிலையும் ஒரே மூச்சில் குடித்தால் அவனுக்கு பாட்டுபாட வேண்டியதுதான்) ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடியாகவேண்டும்.

காதலி வீட்டின் முன்போ, அல்லது காதலியின் முன்போ அவளையும் அவள் குடும்பத்தையும் தரக்குறைவாக பேசவேண்டும். (இதன்பிறகும் அவள் அவனைத்தான் விரும்புவாள்).

அப்புறம் கூட வரும் காமெடியன்கள்...இவன்கள் அறிமுகமே குடிகாரனாகவோ..அல்லது கதாநாயகனிடம் சாராயத்துக்காக இரந்து குடிப்பவனாகவோதான் வருகின்றார்கள்..


ஒருவேளை, கதாநாயகனோ, அல்லது இந்த காமெடியனோ சோற்றுக்கு வழி இல்லாதவனாக இருந்தால் தன் மானம் காப்பதில் ஒழுக்க சீலர்களாகவும், சாராயம் குடிப்பது அதுவும் ஓசியில் என்றால் மிக உரிமையாகவும் வாங்கி குடிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுக்கு அப்புறமும் இவர்களது கொண்டாட்டம் குடிப்பதில்தான் முடிகிறது.

கதாநாயகன் குடிகாரனாக இருந்தால் அவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, தந்தை அவனைகண்டிக்காமல் ஒரு நண்பனாக பழகுவதாகவும், இன்னும் சில படங்களில், தந்தையும் மகனும் சேர்ந்தே குடிப்பதாகவும் கேடுகெட்ட காட்சிகளை திணிக்கிறார்கள்.

அதுவே காமெடியன் என்றால் அவன் தந்தை படும்பாடு கேட்கவே வேண்டாம். தனது தந்தையின் குடும்ப பின்னணியையே கேவலமாக அந்த காமெடியன் பேசி நகைச்சுவை என்கிற பெயரில் கேவலமாக கூத்தடிக்கிறார்கள்.

மொத்தத்தில் சாராயம் குடிப்பது என்பது ஒரு தீங்கான, கொடிய செயலாகக்காட்டாமல், குடிகாரனாக இருப்பதுதான் ஒரு மனிதனுக்கு கவுரவம் என்பதுபோல்..சாராயத்துக்கு இலவச விளம்பரம் செய்யும் இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு, சினிமா ஒரு கருவியாக பயன்படுகிறது.

இந்த காமெடியன்களின் நகைச்சுவைக்காட்சிகள்தான் பெரும்பாலும்  டி விக்களில் நகைச்சுவைச் சேனல்களில் ஒளிபரப்பப்படுகிறது. இதுபோன்ற காட்சிகளைத்தான் தாய்மார்கள் தமது குழந்தைககளையும் பார்க்கவைக்கிறார்கள்...சிறுவயதிலேயே இதுபோன்ற காட்சிகளைப்பார்த்து வளரும் குழந்தைகள்  இது போன்ற செயல்களால் தவறு ஏதும் இல்லை என்ற மனநிலையில்தான் பின்னாட்களில் வளரும் என்பதை நாம் அறியவேண்டாமா?

இதில், விவேக், கருணாஸ், கஞ்சா கருப்பு, வடிவேல் போன்ற கேடுகெட்ட நடிகர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

கலை என்கிற பெயரில் மக்களை படுபாதகத்தில் தள்ளும் இதுபோன்ற திரைப்படங்களுக்குத்தான், மத்திய அரசும், மாநில அரசும், விருதுகள் வழங்கி இவர்களை கவுரவித்துக்கொண்டிருக்கிறது..

சாராயத்தின் மூலம்தான் அரசுக்கு வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது என்பதற்காக மக்கள் நலனைப்பற்றி சிறுதும் கவலைப்படாமல் தெருவெங்கும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருப்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?

4 comments :

ஜெய்லானி said...

///இதில், விவேக், கருணாஸ், கஞ்சா கருப்பு, வடிவேல் போன்ற கேடுகெட்ட நடிகர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

கலை என்கிற பெயரில் மக்களை படுபாதகத்தில் தள்ளும் இதுபோன்ற திரைப்படங்களுக்குத்தான், மத்திய அரசும், மாநில அரசும், விருதுகள் வழங்கி இவர்களை கவுரவித்துக்கொண்டிருக்கிறது..///


நடித்தவர்க்கு தரும் பதம ஸ்ரீ விருத விட்டுட்டீங்கலே சார்

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள். இதைப் பார்த்து இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் கெட்டுப் போகின்றார்கள் என்பது இதை வீட கவலை தரும் விஷயம். நன்றி.

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட ஜெய்லானி, பித்தன் ஆகிய நண்பர்களுக்கு மிக்க நன்றி..

Kavippillai said...

நன்றாக கூறினீர்கள் !
இது போல் நிழலில் வருபவர்களை நம்பி நினைவுகளை இழப்பவர்கள் திருந்தட்டும் !
குடி குடியை கெடுக்கும் குடிப்பதை திரையில் பார்ப்பவர்களின் வாழ்கையையும் கெடுக்கும் !

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?