Pages

Wednesday, February 17, 2010

சாருலதா ஐ பி எஸ்சும் தமிழ் பத்திரிக்கைகளின் வியாபாரமும்!


நமது தமிழ் பத்திரிக்கைகளின் சமீபத்திய வியாபாரம்..சாருலதா என்கிற போலி ஐ பி எஸ் பற்றி..நீங்களும் அதைப்பற்றி பரபரப்பாக படித்து இருப்பீர்கள்..விறுவிறுப்பாகவும் சுவராஸ்யமாகவும் எழுதி இருப்பார்கள் (அவங்களுக்கு வேற என்ன சமூக அக்கறைன்னு கேக்குறீங்களா?..அதுவும் சரிதான் - அதுக்காக நம்ம வேலைய நிறுத்திட முடியுமா....?)

இப்போது அந்த பெண்ணைப்பற்றி பரபரப்பாக செய்தி போட்டு காசு பார்க்கும் பத்திரிக்கைகைகள் இன்னும் அடுத்த ஒரு அசிங்கமான வியாபாரம் வந்த பிறகு இதை மறந்து விடுவார்கள்..

வாரம் மற்றும் வாரம் இருமுறை வரும் (பலான) பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குமுதம், நக்கீரன் போன்ற எழுத்து வியாபாரிகள் என்ன செய்வார்கள் என்று பார்போமா?

நக்கீரன் - இவளது வாழ்க்கை வரலாறு என்று சில அந்தரங்க அசிங்கங்களை (கற்பனையாக) வெளியிட்டு காசு பார்த்து, கடைசியில் இவள் சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் இப்படி மாறினாள் என்று எழுதுவான்.

ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் - சிறுவயதிலேயே இவள் மிகவும் புத்திசாலிப்பெண் என்றும், ரஜினி ரசிகை என்றும் (கெட்டவனோ நல்லவனோ - யாரவது பிரபலமாகிவிட்டால் அவனை ரஜினியுடன் சம்மந்தப்படுத்திப்பார்ப்பதில் இந்த விகடன் குரூப்புக்கு அப்படி என்ன சந்தோஷமோ?) எழுதி அவள் செய்கையை நியாயப்படுத்துவதுபோல் இவளிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்தான் இதற்குக்காரணம் என்று முடித்துவிடுவான்..

குமுதம் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் - இவன் உள்ளதிலேயே இவளது கவர்ச்சியான படத்தைப்போட்டு தனது அரிப்பை தீர்த்துக்கொண்டு , இப்போது இவள் ஆன்மீகத்தின் பக்கம் திருந்திவிட்டால் என்று, இவள் இப்படி ஆனதற்கு சமூகம்தான் காரணம் என்றும் குற்றத்தை சமூகத்தின் பக்கம் திருப்பிவிடுவான்

கள்ளத்தொடர்பு ஸ்பெசலிஸ்ட் தினத்தந்தி இவளுக்கு பெரிய அரசியல்வாதிகளுடனும் அதிகாரிகளுடனும் அந்தரங்க தொடர்பு ஏற்படுத்தி சந்தோசமடைவான்.

அரசு விசாரணையும் இவளைசுற்றியே நடைபெறும்...

அப்புறம் இவளிடம் போலிஸ் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவர்களும் பத்திரிக்கைகளுக்கும் டி வீ களுக்கும் பேட்டி கொடுத்து தனது ஏமாளித்தனத்தை பறைசாற்றிக்கொள்ளுவான்.

அது இருக்கட்டும்...

எனது கேள்வி என்னவென்றால் ..இவளிடம் போலிஸ் வேலைக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு இப்போது புகார் கொடுத்து இருக்கும் அதி மேதாவிகளைப்பற்றிதான்...

லஞ்சம் கொடுத்து போலிஸ் வேலைக்கு செல்ல ஆசைப்படும் இவர்கள் யோக்கியமானவர்களா?

இந்த பெண்ணைப்பற்றி சரியாக விசாரிக்காமலேயே யாரோ ஒரு அதிகாரியுடன் பார்த்ததை வைத்து மட்டும் அவளை நம்பி பணம் கொடுத்த இவர்கள் போலிஸ் வேலைக்கு லாயக்கானவர்கள்தானா?

ஏமாற்றியதற்காக இந்த பெண்ணை கைது செய்து இருக்கும் போலிஸ், லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக இவர்கள் மீது அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

1 comments :

ஜீவன்பென்னி said...

"ஏமாற்றியதற்காக இந்த பெண்ணை கைது செய்து இருக்கும் போலிஸ், லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக இவர்கள் மீது அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? "


இந்தியாவுல அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. லஞ்சம் வாங்கி கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறையினால் கைது செய்யப்பட்டவர்களுக்கே ஒரு தண்டனையும் இல்ல.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?