Pages

Wednesday, February 24, 2010

புவி வெப்பமடைதலை தடுக்கும் செம்மறி ஆடுகள்!

புவி வெப்பமடைதலை தடுக்க உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மனிதனுக்கும், இயற்கைக்கும் நடக்கும் ரகசிய யுத்தம் இது.

பல்வேறு வழிகளில் புவி வெப்பமாவதை தடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. செம்மறி ஆடுகளின் ஏப்பம், புவி வெப்பமாவதை தடுப்பதாக தற்போது கண்டறியப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவின் செம்மறி ஆடுகள் கூட்டுறவு ஆராய்ச்சி மைய ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்துள்ளது.

பசுமை இல்லா வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்துவதில் சில விலங்கினங்கள் நமக்கு உதவுகின்றன.

குறிப்பாக மீத்தேன் வாயுவை கட்டுப்படுத்துவதில் இவை பங்காற்றுகின்றன. மாடுகள் இந்தப் பணியில் உதவுவதாக ஏற்கனவே அறியப்பட்டு இருந்தது.

தற்போது இந்தப் பட்டியலில் செம்மறி ஆடுகளும் சேர்ந்துள்ளன.

செம்மறி ஆடுகளின் குடல் பகுதியில் வாழும் நுண்ணுயிரிகள், மீத்தேன் வாயுவை அதிகமாக குறைக்கின்றன. குறிப்பாக ஆடுகள் ஏப்பமிடும் சமயத்தில் அதிகப்படியான மீத்தேன் உள்ளிழுக்கப்படுகிறது.

இதனால் குறிப்பிட்ட அளவில் காற்றில் மீத்தேன் அளவு உறிஞ்சப்படுவதால் புவி வெப்பமடைவது தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக ஆஸ்திரேலிய ஆய்வுக்குழு ஆடுகளில் பல்வேறு செயற்கை மாற்றங்களை ஏற்படுத்தி ஆய்வு செய்து வருகிறது. அங்குள்ள ஆடுமேய்க்கும் இடையர்களையும் ஊக்குவித்து வருகிறார்கள்.

ஏனெனில் ஆடுகள் அதிகம் ஏப்பமிட்டால் நமக்கு ஏற்படும் ஆபத்து குறையுமே!

4 comments :

மங்குனி அமைச்சர் said...

ஒரு ஒரு மேட்டர்க்கும் டைம் கேப் விடுங்க (மூச்சு விடகூட முடியல )
நம்ம ப்ளாக் க பார்கள

மர்மயோகி said...

அய்யா..மன்குனியாரே இது குவாட்டர் அல்ல மூச்சு விட்டு குடிப்பதற்கு.. பதிவு அய்யா பதிவு...மனதில் உள்ளதை அப்பொழுதே கொட்டிவிட வேண்டும் அல்லவா (சரக்கு உள்ளே இறங்காமலே..ஹி ஹி..)

அமர பாரதி said...

ஆஹா அருமையான பதிவு. ஆடுகளுக்கு பெருங்காயமும் உருளைக் கிழங்கும் அதிகமால கொடுத்தால் ஏப்பம் அதிகமாகும். அப்படியே நிறைய மீத்தேன் வாயுவையும் உள்ளிழுக்கும். அப்படியும் ஏப்பம் வரவில்லையென்றால் வயிற்றைப் பிடித்து அமுக்கலாம்.

வேர்ட் வெரிபிகேஷனை எடுத்து விடுங்கள். புண்ணியமாகப் போகும்.

மர்மயோகி said...

நன்றி திரு அமரபாரதி அவர்களே..

வோர்ட் வெரிபிகேஷனை எடுத்தாச்சு...ஓகே யா?

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?