Pages

Tuesday, January 4, 2011

26/11 மும்பை தாக்குதலுக்கு காரணம் ஆர் எஸ் எஸ்..

26/11/2008 யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது...

தீவிரவாதிகள் மும்பை ரயில் நிலையத்தையும் மற்றும் மும்பை ஹோட்டல்கள் சிலவற்றிலும் புகுந்து பொதுமக்களையும் ஏராளமான போலீஸ்காரர்களையும் சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்தின்போதுதான், மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரேயும் அதே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹேமந்த் கர்கரேதான், மாலேகான் குண்டு வெடிப்புக்கு காரணமான ஆர் எஸ் எஸ் வெறியர்களைக் கண்டு பிடித்து ஒரு பெண் சாமியாரையும் இன்னும் அது தொடர்பான ஏராளமான ஆர் எஸ் எஸ் வெறியர்களையும் கைது செய்து விசாரணை வலயத்துக்குள் கொண்டு வந்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு அந்த மத வெறியர்களிடம் இருந்து ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. இது சம்மந்தமாக பிரதமரை சந்திக்க இருந்த வேளையில்தான் அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.



அவர் கொல்லப்பட்டவுடன், மகாராஷ்ட்ராவுக்கு சம்மந்தமில்லாத - குஜராத் முதல்வன் நரேந்திர மோடி என்ற பயங்கரவாதி ஹேமந்த் கர்கரேயின் குடும்பத்திற்கு ஒரு கோடி கொடுப்பதாக அறிவித்ததும் - அதை வேண்டாம் என்று கர்கரேயின் மனைவி மறுத்து அவனை அவமானப்படுத்திய சம்பவமும் நடந்தது..



மும்பை தாக்குதல் குறித்து, சந்தேகம் எழுப்பிய அப்போதைய மத்திய அமைச்சர், அந்துலே - ஆர் எஸ் எஸ் வெறியர்களின் எதிர்ப்பினால் பதவி விலக நேரிட்டது.



சென்ற டிசம்பரில்கூட, காங்கிரசின் பொது செயலாளர் திக் விஜயசிங்
- கர்கரே கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், தன்னை கொலை செய்ய சில ஆர் எஸ் எஸ் வெறியர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் சொன்னார் என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு ஆர் எஸ் எஸ் வெறியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



அசீஸ் பர்னி என்பவர் எழுதி வெளியிட்டுள்ள "RSS ka shadayantra, 26/11" என்ற புத்தக வெளியீடு விழாவில் பேசிய காங்கிரசின் பொது செயலாளர் திக்விஜய சிங்  மும்பை தாக்குதலுக்கு, ஆர் எஸ் எஸ், மொசாத் மற்றும் சி ஐ எ வின் பங்குள்ளதுஎன்று பேசியுள்ளார்.
 
 
மேலும் அறிய  இங்கே சொடுக்கவும்.  





0 comments :

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?