Pages

Monday, January 3, 2011

எஸ் எம் எஸ் பயங்கரவாதம்..!

முதலில் ஒரு கதை (உண்மையான கதையாகக்கூட இருக்கலாம்..)



ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் கம்பெனிகளில் வேலை செய்வோருக்கு முதலில் காபி, டீ போன்ற பானங்களை இலவசமாகவே கொடுத்து வந்திருக்கிறார்கள்...நாமும்தான் இலவசம் என்றால் போதுமே கணக்கு வழக்கு இல்லாமல் வாங்க தயங்கவே மாட்டோம்..


இப்போது கூட அரசு அலுவலகங்களில் பார்க்கலாம்,,டீ குடிப்பதற்கென்றே அரை மணி நேரம் எடுக்கும் பொறுப்பான அதிகாரிகள் நெறையபேர் இருக்கிறார்கள்..

இப்படி ரெகுலராக டீ, மற்றும் காபி கொடுத்து வந்தவர்கள் ஒரு நாள் திடீரென்று அவைகளுக்கு விலை நிர்ணயித்து விட்டார்கள்...

முதலில் அதற்கெல்லாம் காசு தரமுடியாது என்று மறுத்து குடிக்காமல் இருந்தவர்கள் கூட, அதை தவிர்க்க முடியாமல் காசு கொடுத்து டீ, காபி குடிக்கவேண்டிய சூழ்நிலையை ஆங்கிலேயன் ஏற்படுத்தி சென்று விட்டான்..


அதுபோலத்தான் எஸ் எம் எஸ் என்று இன்று மொபைல் போனில் ஏறுபடுத்தி மக்களை எஸ் எம் எஸ் அடிமையாகி வைத்து இருக்கிறான்...

இப்போதெல்லாம் பண்டிகைக் காலங்களுக்கு ஒரு நாள் முன்போ அல்லது அதற்க்கு அடுத்த நாளோதான் எஸ் எம் எஸ் வாழ்த்துக்கள் வருகின்றன...




காரணம், சாதாரணமாக ஒரு எஸ் எம் எஸ்ஸுக்கு பத்து பைசா என்று offer கொடுக்கும் நிறுவனங்கள் இந்தமாதிரி விசேஷ தினங்களுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்க ஆரம்பித்து விடுகின்றன..


இவ்வாண்டு தொடக்கத்தில் டிசம்பர் 31, 2010 - ஜனவரி 01, 2011 ஆகிய நாட்களில் அனுப்பப்படும் அனைத்து எஸ் எம் எஸ் களுக்கும் ஒரு ரூபாய் அல்லது ஒரு ருபாய் ஐம்பது காசு கட்டணம் நிர்ணயித்தன.


மொபைல் போன்களில் எஸ் எம் எஸ் அறிமுகப் படுத்திய கால கட்டங்களில் (அப்போது அவுட் கோயிங் கால்களுக்கு ருபாய் இரண்டும், இன்கமிங் கால்களுக்கு ரூபாய் ஒன்றும் இருந்ததது) முற்றிலும் இலவசமாகத்தான் இருந்தது..


பேசும் வசதிகளுக்கு கட்டணம் குறைய குறைய எஸ் எம் எஸ் அனுப்பும் வசதிக்கு கட்டணம் நிர்ணயிக்க ஆரம்பித்து, மக்களை அதற்கு முழுமையான அடிமையாக்கி வைத்திருக்கிறார்கள்..
அதிகமதிகம் எஸ் எம் எஸ் வாழ்த்துக்கள் அனுப்பப்படும் பண்டிகைக் காலங்கள், புத்தாண்டு போன்ற காலங்களில் எஸ் எம் எஸ் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்று கட்டணம் வசூலித்து கொள்ளை லாபம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்...



குறுந்தகவல்கள் பெரும்பாலும் தேவையற்ற செய்திகளாக இருந்தாலும் அதன் மூலம் இந்நிறுவனங்கள் கோடிக்கணக்கில் இலாபம் பார்கின்றன. புத்தாண்டு தொடக்கம், மற்றும் பண்டிகைக் காலங்களில் அனுப்பப்படும் கோடிக்கணக்கான தகவல்களில் பெரும் லாபம் ஈட்டிய இந்நிறுவனங்கள், இன்னும் பேராசைப் பட்டு அதிக கட்டணம் நிர்ணயித்தன...


எனவேதான் இந்த ஆண்டு புத்தாண்டு வாழ்த்து தகவல்கள் மிகவும் குறைந்து காணப்பட்டது.



இது போக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்படும் மிக சாதாரணமான கேள்வி கேட்டு எஸ் எம் எஸ் அனுப்பவைத்து அதிலும் கொள்ளை லாபம் ஈட்டும் பயங்கரவாதத்தை செய்து வருகின்றன இந்த மொபைல் போன் சேவை நிறுவனங்கள்..

ஏதோ சலுகை வழங்குவதுபோல் இவர்கள் காட்டும் பந்தா எல்லாம் நிஜ ஏமாற்று வேலைதான்..

3 comments :

sivakumar said...

நல்லா சொன்னீங்க மர்மயோகி. இவனுங்கள பயங்கரவாதின்னு சொல்றத விட பிச்சக்காரன்னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும்.
//மொபைல் போன்களில் எஸ் எம் எஸ் அறிமுகப் படுத்திய கால கட்டங்களில் (அப்போது அவுட் கோயிங் கால்களுக்கு ருபாய் இரண்டும், இன்கமிங் கால்களுக்கு ரூபாய் ஒன்றும் இருந்ததது) முற்றிலும் இலவசமாகத்தான் இருந்தது.// இரு வருடங்களுக்கு முன்பு கூட நாளுக்கு 100 குறுஞ்செய்திகள் இலவசமா அனுப்புற வசதி இருந்தது.

மங்குனி அமைச்சர் said...

என்ன மர்மயோகி சார் ..... உங்க கேர்ள் பிரண்டு கூட சண்டையா ????

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் தமிழ் வினை, மங்குனி அமநிச்ச்சர் மற்றும் வருகை தந்த அனைவருக்கும் நன்றி..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?