Pages

Wednesday, January 12, 2011

மரணம் எந்த நேரத்திலும் வரலாம் என்று நினைத்திருந்தால் இந்த நிலை வருமா ?

பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும் எனபது உலக நியதி...


எத்தனையோ கொடிய நோய்களுக்கு மருத்துவம் கண்டுபிடிக்கும் விஞ்ஞானத்தால் மரணத்தை வெல்ல எந்த ஒரு கண்டுபிடிப்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை..கண்டுபிடிக்கவும் முடியாது..

இதை எல்லாம் தெரிந்திருந்தும் மனிதன் இதை உணராமல், பொருளுக்கும் பெண்ணுக்கும் மண்ணுக்கும் பேராசைப்பட்டு பல்வேறு தவறுகளையும் குற்றங்களையும் செய்து வருகிறான்..

மரணத்திர்ற்குபின்பு தனக்கு எதுவும் சேராது என்பதை மனிதன் என்றுதான் உணரப்போகிறானோ...?


கீழ்க்கண்ட செய்தியைப் பாருங்களேன்:


ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிழக்கு வீதியைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவரின் தந்தை, இரண்டு மாதத்துக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது உடலை சென்னிமலை உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள மணிமலைகரடு மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.இறந்தவர் பயன்படுத்திய மெத்தை, தலையணையை, உடல் புதைத்த இடத்தில் குடும்பத்தினர் போட்டு விட்டு வந்து விட்டனர்.

சுடுகாட்டில் போதிய இடவசதி இல்லாததால், அந்த இடத்தை சென்னிமலை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், கடந்த 15ம் தேதி தீ வைத்து எரித்தனர். அங்கிருந்த மெத்தை, தலையணையையும் அவர்கள் எரித்தனர்.இறந்தவரின் வீட்டில், ஆயுத பூஜைக்காக சுத்தம் செய்த போது அவரது டைரி கிடைத்தது. அதில் யாருக்கு எல்லாம் பணம் கடன் கொடுத்துள்ளார்; வட்டி வரவு வந்தது; பணம் வரவேண்டியது; எங்கெங்கு பணம் வைத்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்.


தான் படுத்திருந்த மெத்தையின் உள்ளே 500 ரூபாய் நோட்டு தாளாக மூன்று லட்சம் ரொக்கத்தை வைத்துள்ளதாக அதில் எழுதியிருந்தார். உடனடியாக குடும்பத்தினர் மயானத்துக்கு ஓடிச் சென்று தேடினர். அங்கு மெத்தை எரிக்கப்பட்டு சாம்பலாகி கிடந்தது கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.மூன்று லட்ச ரூபாய் ரொக்கம் மூன்று மாதமாக சுடுகாட்டில் அனாதையாக கிடந்தும், அது யாருக்கும் கிடைக்காமல் தீயில் எரிந்து நாசமானது, சென்னிமலை பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. சென்னிமலை பகுதியில் இச்சம்பவத்தால் சுடுகாட்டில் உள்ள மற்ற மெத்தை, தலையணைகளை சிலர் கிழித்து பார்த்து வருகின்றனர்.
 
இதுக்குத்தான் நம்பிக்கை உரியவர்களிடம் ஒருவார்த்தை சொல்லிவைக்க வேண்டும் என்பது.

3 comments :

கோவி.கண்ணன் said...

//சென்னிமலை பகுதியில் இச்சம்பவத்தால் சுடுகாட்டில் உள்ள மற்ற மெத்தை, தலையணைகளை சிலர் கிழித்து பார்த்து வருகின்றனர்//

:)

தொப்பையாக யாரும் அந்தப் பக்கம் செல்லாமல் இருந்தால் சரி

Unknown said...

இருந்தும் கொடுக்கல செத்தும் கொடுக்காம போயிட்டாரே மனுஷன்!

பொன் மாலை பொழுது said...

இறந்தவரின் படுக்கை,உடைமைகளை மயானத்திற்கு கொண்டு செல்ல மாட்டார்களே.இது என்ன வினோத பழக்கம் தெரியவில்லை.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?