Pages

Monday, January 24, 2011

சிறுத்தை - தமிழில் ஒரு பக்கா தெலுங்கு படம்..!


மனிதனை மனிதன் என்று சொல்லாமல் மிருகங்களின் பெயர்களில் அழைப்பதே பெருமையாகக் கருதும் உலகம் இது..அதானால்தான் பொறுக்கிகளும், அரசியல் வாதிகளும், சிநிமாக்கூத்தாடிகளும், இந்திய தேச விரோதிகளும் அதிகாரத்திலும், பணபலத்திலும் வெற்றி பெறுகிறார்கள்..


சிங்கம் மாதிரி ராஜா, புலி மாதிரி வீரம், , யானை மாதிரி பலம், நரி மாதிரி தந்திரம், பூனை போல பயம், நாய் மாதிரி நன்றி, என்று மிருகங்களே உதாரணமாக இருக்கிறன்றன...மனிதனாக ஒருத்தனையும் காணோம்..

சூர்யா சிங்கம் என்று நடித்தால், அவர் சகோதரர் சிறுத்தை என்று நடிக்கிறார்..

கதை என்ன?

யாராலும் தட்டிக் கேட்கமுடியாத பயங்கரமான ஒரு மாபியா கும்பல்..ஒரு ஊரையே அடக்கி வைத்திருக்கிறார்கள்...கஞ்சா கடத்தல், வெடிகுண்டு சப்ளை, கட்டப் பஞ்சாயத்து, கற்பழிப்பு என்று அனைத்து பொறுக்கித்தனங்களும் உள்ள ஒரு கிழவன்தான் அந்த ஊரையே ஆட்டிப் படைக்கிறான்.

மந்திரிகள், போலிஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் அவனது கட்டளைக்கு அடிமைகள்...

இப்படிப் பட்ட ஊருக்கு பணி மாற்றமாகி  வரும் ஒரு ஐ பி எஸ் அதிகாரிதான் ரத்னவேல் பாண்டியன் (கார்த்தி).

ஒரே ஒரு விஷயம் - ரத்தினவேல் பாண்டியனாக கார்த்தி வரும் காட்சிகளில், பொறுக்கிகளை அடித்து துவம்சம் செய்கிறார்..இது போன்ற போலிஸ் எங்காவது இருந்தால் வடசென்னையில் பொறுக்கித்தனம் செய்துகொண்டு தரைப்படைகளை அடித்து துவம்சம் செய்ய அனுப்பலாம்..ஆனால் அப்படி எந்த போலிஸ் இருக்கிறது?


மாபியா கும்பலின் கொட்டத்தை அடக்கும் அவர் அந்த ஊர் மக்களின் அன்பை சம்பாதிக்கிறார். இந்த நிலையில் அவரை அந்த மாபியா கும்பல் வெட்டி சாய்க்கிறது..அரை குறை உயிருடன் இருக்கும் அவரை, சில விசுவாசிகள் காப்பாற்றி சென்னையில் வைத்து வைத்தியம் பார்க்கின்றனர்.

அவர் போலவே தோற்றம் கொண்ட ஒரு திருடன்..

அவனது அறிமுகம் தரைப்படைகளுக்கும் பொறுக்கிகளுக்கும் உற்சாகமளிக்கும்..இவ்வளவு பொறுக்கித்தனம் பண்ணும் பொறுக்கியைத்தான் உத்தமனாக இந்த கூத்தாடிகள் இப்போது அறிமுகப் படுத்தி வருகிறார்கள்..விளங்கிடும்..

போலிஸ் அதிகாரியின் ஒரே மகளுக்கு தந்தை உயிருக்கு போராடுவதை மறைத்து இந்த பொறுக்கியை அந்த குழந்தையின் தந்தை என்று சொல்லி அவனிடம் சேர்த்து விடுகிறார்கள்..இந்த சமயத்தில் பொறுக்கியின் ஒரிஜினல் புத்தி தெரிகிறது..ஒரு அழகான குழந்தையை வைத்துக் கொண்டு அந்த பொறுக்கி குடிக்கிறது அந்த குழந்தையை விரட்டுகிறது...

ஆனால் படத்தை ஓட்டனுமே..அதற்காக அந்த பொறுக்கிக்கு போலிசின் கதை சொல்லப்படுகிறது..பொறுக்கி திருந்துகிரானாம்...

அந்த பொறுக்கியை, மெல்லிடையாள் தமன்னா போன்ற -surf - சோப்பில் வெளுக்கப்பட்ட அழகிகள் விரும்புவது, இது போன்ற முட்டாள்தனமான சினிமாக்களில் மட்டுமே பார்க்க முடியும்..




தமன்னா ஒரு பொறுக்கியின் மேல் காதல் கொள்வதாகக் காட்டும் காட்சிகள் பைத்தியக்காரத்தனம் மட்டுமல்ல,, ஒரு பொறுக்கியை அன்னை தெரசா போலவும், இன்னும் பெரிய பெரிய மகான்கள்  ரேஞ்சுக்கு உயர்த்துவதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்...எல்லாவற்றுக்கும் குதிக்கும் சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இப்போது மட்டும் ம.......... புடிங்கிக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ...?




இருவரின் நடிப்பும் சகிக்க முடியவில்லை..பழைய எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி போன்றவர்கள் நடித்த படங்களைவிட காதல் காட்சிகள் மிக கேவலமாக உள்ளன...

சந்தானம் மட்டுமே சிரிக்க வைக்கிறார்..அவனும் பொறுக்கியாக வருவதால் - பொறுக்கிகள் நல்லவர்களாக காட்டப்படும் விபரீதமே இது போன்ற தரமற்ற குப்பைகள்..

பொறுக்கியாக வரும் கார்த்தி போலிஸ் வேடமிட்டு மாபியா கும்பலை அடக்குவது செம காமெடி..அதுவரைக்கும் டெரர் ஆக இருந்த வில்லன் கோஷ்டி வடிவேலு ரேஞ்சுக்கு இறங்கி - இவனிடம் ஏமாறுவது வடிவேலு போன்ற காமெடி நடிகர்களுக்கு ஆபத்துதான்..

இந்த படத்தை தெலுங்கில் இருந்து ரீ மேக் செய்தார்களாம்..பணம் இருப்பதால் எதையும் செய்யாலாம் என்ற முட்டாள்தனம்தான் காரணம்..இவ்வளவு செலவளித்து எதற்கு ரீ மேக் பண்ணனும்...அப்படியே தெலுங்கிலேயே வெளியிட்டு இருக்கலாம்...மற்ற செலவாவது மிஞ்சி இருக்கும்....

ஒரு தெலுங்கு படத்தில் அனைவரும் தமிழ் பேசுவது போன்ற உணர்வே மிஞ்சுகிறது..

எவ்வளவு கேனத்தனமாகவும், கிறுக்குத்தனமாகவும்,லூசுத்தனமாகவும் ஒரு படத்தை எடுக்க முடியுமோ அவ்வளவு கேனத்தனமாகவும், கிறுக்குத்தனமாகவும், லூசுத்தனமாகவும் எடுக்கப்பட்ட ஒரு படம்தான் இது.


சிறுத்தை, மக்களை ஏமாற்றும் ஒன்றுக்கும் உதவாத சீரியஸ் காமெடி குப்பை..


3 comments :

மங்குனி அமைச்சர் said...

அதெல்லாம் விடுங்க மர்மயோகி ............. இன்னும் கொஞ்சம் கிளாமரா ரெண்டு தமனா படம் போட்டு இருக்கலாம்ல ????

"ராஜா" said...

செம்ம ரிவீட்டு படத்துக்கு

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும், மற்றும் வருகை புரிந்தோருக்கும் நன்றி..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?