Pages

Thursday, January 27, 2011

ஆடுகளம் - தமிழில் ஒரு புதிய கதைக்களம்...



தனுஷ் என்பவன் நடிக்கும் அனைத்துப் படங்களும் வெறும் ஆபாசக் குப்பைகளாகவும்,முட்டாள்தனமாகவும்,  பொறுக்கிகளுக்கான படங்களாகவுமே அமைந்துள்ளன..

தெருப் பொறுக்கிகள் மட்டுமே ரசிக்கக்கூடிய படங்களில் இருந்து ஆடுகளம் மாறுபட்டுள்ளது...

தமிழக முட்டாள் இயக்குனர்களிடம் இருந்து, எந்தவிதமான காம்ப்ரமைசுக்கும் இடமில்லாமல் ஒரு வித்தியாசமான முயற்ச்சியை இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் கையாண்டு வெற்றிபெற்றுள்ளார்..

தரைப்படைகளுக்கான குத்துப் பாட்டு, கொலைவெறி சண்டை, போன்ற நாகரீகமற்ற காட்சிகள் அறவே இல்லாமல், இயற்கையான கதைதான் ஆடுகளம்.

சேவல் சண்டையில் யாராலும் வெல்லமுடியாதவரான சேட்டைகாரனின் சீடன்தான் கருப்பு என்கிற தனுஷ்.

ஒரு சண்டையில் பின்வாங்கி விட்ட சேவலை அறுக்க சொல்லி கருப்பிடம் சொல்லிவிடுகிறார் சேட்டைக்காரன். பல சண்டைகளில் வெற்றிபெட்டுவிட்ட அந்த சேவலை அறுக்க மனமில்லாமல் தனுஷ் அதை - சேட்டைக்காரனுக்குத் தெரியாமல் - வளர்த்து வருகிறார்.

முக்கியமான ஒரு நேரத்தில் - அதை தனுஷ் சண்டைக்குவிட, வேண்டாம் என்று மறுத்த சேட்டைக்காரன், தனக்கும் அந்த சேவலுக்கும் சம்மந்தம் இல்லை என்று அந்த இடத்திலேயே அறிவித்து விடுகிறார். ஆனால் அந்த சண்டையில் தனுஷின் சேவல் வெற்றிபெற்று விட, அப்போது அந்த சந்தோஷத்தை கொண்டாடமுடியாமல் சேட்டைக்காரனுக்கு பொறாமை பிடிக்க, அதன் பிறகு நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் - ஆச்சரியப் படும் விதமாக எடுக்கப் பட்டிருக்கிறது..

கதைக்கு சம்மந்தமில்லாததுதான் என்றாலும், தனுஷ் தபசி சம்மந்தப் பட்ட காட்சிகளும் மிகை படுத்தப் படாமல், கதையை ஒட்டி வருவதுபோல் அமைந்திருப்பது டைரக்டரின் திறமை..

நடித்திருப்போர் அனைவரும் ஒரு மதுரை பக்கத்தில் உள்ள கிராமவாசிகளை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள்..

ஆரம்பத்திலேயே சேவல் சண்டை கிராபிக் என்று அறிவித்து விடுவதால் அதையும் ஒன்றும் சொல்ல முடிவதில்லை..

ஆனால் சேவல் சண்டைக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் என்ன சம்மந்தம்?..உலகெங்கும் இதுபோன்ற மிருகங்களை வைத்து பந்தயம் கட்டி சண்டை செய்வது நடந்துகொண்டுதானிருக்கிறது..

அதற்காக பாரதியார் எழுதிருக்கிறார், தொல்காப்பியர் எழுதி இருக்கிறார் என்று சொல்வது, தமிழரின் பண்பாடு என்று சொல்வதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது.. இந்த தமிழர்கள் எப்போதுதான் யதார்த்தத்திற்கு வரப்போகிறார்களோ தெரியவில்லை..

சேவல்களுக்கு தமிழ் தெரியுமா ஆங்கிலம் தெரியுமா ஹிந்தி தெரியுமா...

அரசே தடை செய்திருக்கிறது என்கிறார்கள்..அதாவது அரசுக்கு விரோதமான ஒரு செயலை தமிழன் செய்தான் என்பதில்தான் என்ன பெருமை....



இதிலுமா உங்களின் மொழிவெறி?





2 comments :

மங்குனி அமைச்சர் said...

பார்ரா ....... மர்மயோகி திட்டாம ஒரு பட விமர்ச்சனமா ???

சாமக்கோடங்கி said...

தனுஷ் தான் ஆள் அனுப்பி தனக்குத் தெரியாமல் தனது கோழியை வாங்கி வரச்சொன்னார் என்று தெரிந்ததும், உடனே அந்தக் கோழியின் காலைப் பிடித்து அருகில் இருக்கும் மரப்பலகையில் ஓங்கிப் பலமுறை அடித்துக் கொன்று தூக்கி வீசும் காட்சியும், அதில் அமைக்கப் பட்டிருந்த உண்மையான கோழியின் கதறல் பின்னணி இசையும் கண்கள் கலங்க வைத்து விட்டன.. வீரத்தை காமிக்க வேண்டுமானால் ஒருத்தனுக்கு ஒருத்தன் மல்யுத்தம் செஞ்சு சாக வேண்டியது தானே.. கொடும்பாவிகள் வாயில்லாப் பிராணிகளை வதைக்கிறார்களே..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?