Pages

Monday, February 14, 2011

யுத்தம் செய் - இன்னுமொரு "அஞ்சாதே"எவ்வளவு திறமையான இயக்குனர் என்று பெயர் பெற்றாலும், எந்த இயக்குனரும் மூன்று படங்களுக்குமேல் தமது திறமையை தொடரமுடிவதில்லை...

இயக்குனர் மிஷ்கினும் அந்த வகையிலேயே வருகிறார்...

ஒரு இன்வெஸ்டிகேஷன் கதைதான்...

ஆனால் ஏறக்குறைய எல்லாக் காட்சிகளும் - ஏன் கதை அமைப்புகூட அவரது முந்தைய படமான "அஞ்சாதே" யை நினைவூட்டுவதை தவிர்க்கமுடியவில்லை..


ஊரில் உள்ள இளம்பெண்கள் காணாமல் போவது அஞ்சாதே படத்தின் கருதான்

பெண்கள் காரில் கடத்தப் படும் காட்சியும் அந்த படத்தில் காட்டப்படும் அதே டெக்னிக்தான்..

மொட்டைபோட்ட கொலைகாரனும் அதே படத்தில் வந்ததுதான்

வெட்டப்பட்ட கைகள் ஊரின் மையப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட காவல்துறை எல்லைக்குள் கிடப்பது - ராஜேஷ்குமார் நாவல்களை நினைவூட்டுகிறது..


ஊரின் மையப்பகுதியில் அட்டைப் பெட்டியில் வெட்டப்பட்ட கைகள், - மற்றும் அடிக்கடி இளம் பெண்கள் காணாமல்போவது
இந்த இரு வழக்குகளும் - சி பி சி ஐ டி அதிகாரி ஜே கே என்கிற - சேரனிடம் வருகிறது..ஏற்கனவே தனது தங்கையை இதே போல காணாமல் போய் வாடிக்கொண்டிருக்கும் அவர், இந்த வழக்கை துப்பறிந்து யார் இதற்கெல்லாம் காரணம் என்று கண்டு பிடிக்கிறார்..

பெண்களை கடத்தி, வயதான பணக்காரர்களுக்கு - ஆபாசக் காட்சி வைப்பது காவல் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளே என்றும்,

காணாமல் போன சில பொறுக்கிகளின் கைகளை வெட்டி அட்டைப் பெட்டியில் வைப்பது இன்னொரு கும்பல் என்றும் கண்டுபிடிக்கும்போது - ஆரம்பத்தில் குழப்பமாகத் தெரிந்த சில சம்பவங்கள் ஒன்றோடொன்று இணையும்போது நமக்கு மிகத்தெளிவாக புரியும்படி காட்டி இருப்பது - நல்ல இயக்கம்தான்.


படத்தில் சண்டைக் காட்சிகள்கூட - அஞ்சாதேயை நினைவூட்டுகின்றன.

அஞ்சாதே படத்தில், ஆஸ்பத்திரியில் போலிஸ் அதிகாரி நரேனை அடிக்கவரும் வில்லன்கள் ஒவ்வொருவராக வந்து அடிபடுவார்கள்..

அதே போலத்தான் இதிலும் போலிஸ் அதிகாரி சேரனை அடிக்கவரும் பொறுக்கிகள் ஒவ்வொருவராக வந்து அடி வாங்குகிறார்கள்..

கதாநாயகனுக்கு ஜோடி இல்லாமல் காட்டி இருப்பதும் - படம் தரைப்படைகளுக்கான படம் இல்லை என்றாலும்,

ஒரு ஆபாச நடனம் - அமீர் - மிஷ்கினின் முன்னாள் நண்பர் சாருநிவேதிதா - வரும் காட்சி யாருக்கென்று தெரியவில்ல..

"வாள மீனுக்கும்" , "கத்தாழக் கண்ணால" போன்ற பாடல்கள் போல இந்த ஒரு பாடலும் (கன்னித்தீவு கண்ணா - கட்டழகு பெண்ணா ) ஒரு செண்டிமெண்டாக இருக்கலாம். திறமையை நம்புபவர்கள் ஏன் செண்டிமெண்டை விடமாட்டேன் என்கிறார்கள் என்று தெரியவில்லை.பெண்களைக் கடத்தி வந்து லைவ் செக்ஸ் ஷோ பார்பவர்களுக்கும், அதை செய்பவர்களுக்கும் நல்ல தண்டனையை சொல்லி இருக்கிறார்கள்..அந்த மாதிரி இந்த ஊரில் செய்தால் ஒரு பொறுக்கி நாய் கூட இருக்க மாட்டான்..ஆனால் அவனெல்லாம் அரசியல்வாதியாக இருக்கிறானே?இந்த படத்திலும் சாராயம் முக்கிய பங்கு வகிக்கிறது...

ஒரு முக்கிய கதாபாத்திரமாக வரும் - போஸ்ட் மார்ட்டம் செய்யும் டாக்டர் வரும் காட்சி முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கிறார்..சுடப் பட்டு சாக இருக்கும்போது கூட குடித்துவிட்டு சாகிறார்....

இவங்களெல்லாம் திருந்தவேமாட்டான்கள் போல இருக்கிறது..படம் முழுவதும் ஏதோ மஞ்சள் கலரிலேயே இருக்கிறது...மணிரத்னம் இருட்டில் எடுப்பதுபோல மிஷ்கின் மஞ்சளாக எடுப்பார் போல இருக்கிறது...என்னடா இது புது ட்ரெண்டா இருக்கு..?சேரனும் மற்றும் படத்தில் வருபவர்களும் சரியாக பொருந்துகிறார்கள்..


ஒளிப்பதிவு, இசை, இயக்கத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் என்றாலும்  - யுத்தம் செய் - அஞ்சாதேயின் மறுபதிப்புதான் ..!3 comments :

bandhu said...

அப்படியா சொல்கிறீர்கள்? யுத்தம் செய் மற்றும் அஞ்சாதே மேகிங் ஒரே மாதிரி இருக்கிறது. அது படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. அடிப்படையில் இரண்டு கேஸ்கள் சேரனிடம் வருவதில்லை. ஒன்று மட்டுமே. இதே கேஸ் கொஞ்சம் கொஞ்சமாக பெரியதாகி அதன் இன்னொரு பரிணாமத்தை காட்டுகிறது!
I consider this as one of the most brilliantly made movie! But i agree that you may not think like that!

மர்மயோகி said...

பகிர்வுக்கு நன்றி திரு bandhu அவர்களே..

manjoorraja said...

இந்த படம் ஏனோ மனதில் நிற்கவில்லை. டிவிடியில் பார்த்ததாலும் இருக்கலாம்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?