Pages

Wednesday, February 23, 2011

பஸ் தினமா...பன்னாடைகள் தினமா?


நேற்றைய தினம் - சென்னை போலிசாரின் தடையையும் மீறி,  பச்சையப்பா கல்லூரி மாணவர்கள், பஸ் தினம் என்ற பெயரில் கூத்தடித்திருக்கின்றார்கள்..

பஸ் தினம் எதற்கு கொண்டாடப் படுகிறது? அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? ..

ரவுடித்தனம் செய்வதற்கும், அடாவடித்தனம் செய்வதற்கும்தான் பஸ் தினம் என்ற பெயரில் அராஜகம் செய்து வருகின்றனர்.

சாதாரண நாளிலேயே பஸ்களின் படிக்கட்டுகளிலும் மேற்கூரையிலும் அபாயகரமான முறையில் பயணிக்கும் இவர்கள், பஸ் தினம் என்ற பெயரில், பேருந்து ஓட்டுனரையும் நடத்துனரையும் படாதபாடு படுத்திவிடுகின்றனர். அதுமட்டுமல்ல அன்று பயணிக்கும் பயணிகளுக்கும் கடும் பிரச்சினையை ஏற்படுத்தி விடுகின்றனர்.

பஸ்ஸின் மேற்கூரையில் நின்றுகொண்டு விசிலடித்துக்கொண்டு கூத்தடிப்பது, சாலையில் பஸ்ஸை நிறுத்திவைத்துக்கொண்டு பொறுக்கித்தனமாக நடனமாடுவது என்று அநியாயமாகக் கூத்தடிப்பது இதுதான் பஸ் தினத்தின் லட்சணம்.

இதுபோன்ற போருக்கித்தனங்களுக்கு திராவிட கட்சிகளும் - ஆபாச பத்திரிக்கைகளும்தான் காரணம்.

மாணவாகள் நினைத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்று தங்கள் தேவைகளை அவர்கள் சாதித்துக் கொண்டதுதான் காரணம்.

மாணவர்கள் என்ற பெயரில் அவர்கள் கிழிப்பது என்ன?

சக மாணவர்கள் சந்தித்துகொண்டால் அவர்கள் பேசிக்கொள்வது இந்தியாவின் பொருளாதரத்தை வளமாக்குவது பற்றியும், ஆட்சியாளர்களின் அநியாயங்களைப் பற்றியுமா பேசிக்கொள்கிறார்கள்?

பிகர் மடிப்பது எப்படி? அபிமான நடிகனின் அடுத்தப் படம் பற்றி பேசுவது , அவனுக்கு ஜோடியாக நடிப்பவளின் உடலமைப்பு பற்றி பற்றி பேசுவது , பான்பராக் போட்டு சாலையில் துப்புவது, தம் அடிப்பது இப்படித்தான் அவர்கள் தங்களது மாணவப் பருவத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு டிவி நிகழ்ச்சியிலும் சாதனை செய்கிறோம் என்ற பெயரில், சினிமா பாடல்களுக்கு ஆபாச நடனமும், அருவருக்கத்தக்க பாடல்களும் பாடிக்கொண்டிருக்கிறார்கள்..

தேவையற்ற விசயங்களுக்கெல்லாம், ஸ்ட்ரைக் என்ற பெயரில் ரவுடித்தனம் செய்வது, சாலையில் செல்லும் பஸ்களை மரிப்பது, கல்லெறிந்து பஸ் கண்ணாடிகளை உடைப்பது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது இதுதான் இவர்களது வேலை.

நடுரோட்டில் ஆபாசக் கூத்தடித்தவர்களை களைந்து போகச்சொன்னால் கல்லூரி வாசலில் நின்றுகொண்டு போலிஸ் அராஜகம் ஒழிகன்னு கோசம் போடுகிறார்கள்..

யார் அராஜகம் செய்கிறார்கள் என்று அறியக்கூடாத அளவுக்கு முட்டாள்களாக இருப்பவர்கள் எப்படி மாணவர்களாவார்கள்? அவர்களால் எப்படி இந்த நாடு உருப்படும்?

பஸ் தினம் என்று கொண்டாடுகிறார்களே, அந்த பஸ்சுக்கு என்ன தெரியும்? இவன் நமக்காகதான் இந்த விழா கொண்டாடுகிறான் என்று தெரிந்து அவன ஒழுங்கா காலேஜ் கொண்டுபோய் சேர்க்குமா?


இல்லை வேறு யாருக்காக இந்த பஸ் தினம்?

இவர்கள் காலித்தனம் செய்வதற்கு வேலைக்கு செல்லும் பொதுமக்களின் நேரத்தையும், அவர்களுக்கு சிரமத்தையும் கொடுப்பது மட்டுமல்லாமல், பொது சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கிறானே?

இவன்தான் நாளைய இந்தியாவா? நாளைய எதிர்காலமா?
மாணவன் என்றால் ஒரு நாகரீகம் வேண்டாம்? இன்றைய மாணவர்கள் எனப்படுவோர், ரவுடியிசம் செய்வதைத்தான் - ரவுடியைப் போல் பேசுவதுதான் - மாணவனுக்கான அடையாளம் என்பதுபோல செயல்பட்டு வருகிறார்கள்..

எல்லா ரவுடித்தனமும் செய்துவிட்டு மாணவன் என்ற பெயரில் தண்டனைகளில் இருந்து தப்பி விடுகின்றனர்.

பஸ் தினம் இன்னும் என்னன்னவோ கழிசடை தினம் என்று கூத்தடிக்கும் இவர்களை போலிஸ் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் மட்டும் போதாது, பத்திரிக்கைகளும், மக்களும் இவர்களுக்கு துளி கூட ஆதரவு வழங்கக்கூடாது.

12 comments :

Rajesh Rajangam said...

ji ithukelam kovapata manava samuthayam mannuli panbattum agirum.ivaithan than avargalai uyirpithu kondirukirathu!

வேடந்தாங்கல் - கருன் said...

இவனுங்க திருந்தமாட்டானுங்க பாஸ்..

இராகவன் நைஜிரியா said...

அன்பு மர்மயோகி..

வேண்டும் என்று செய்கின்றீர்களா... இல்லை தெரியாமல் செய்கின்றீர்களா எனப் புரியவில்லை.

நீங்க அனுப்பும் மெயில் அட்ரஸ் எல்லாவற்றையும் bcc இல் போட்டு அனுப்புங்க.

இதுக்கு மத்தவங்க பதில் கொடுத்து கொடுத்தே.. என் இன்பாக்ஸ் நிறையுது.

மத்தவங்க கஷ்டத்தை புரிஞ்சுக்காத நீங்க எல்லாம் இது போன்ற இடுகை எழுதுவதே தேவையில்லாதது.

அன்புடன்

இராகவன்.

alpha said...

arumaiyana pathivu....

மர்மயோகி said...

@ Rajesh Rajangam
நன்றி திரு Rajesh Rajangam,
என்னங்க நீங்களும் இப்படி சொல்றீங்க? மாணவர்கள் உயிப்புடன் இருப்பது படிப்பில் காட்டும் திறமையால்தான்..
இப்படி ரவுடித்தனத்தை காட்டுவதற்கு, படிக்கத்தேவை இல்லை..

மர்மயோகி said...

@ வேடந்தாங்கல் - கருண்

என்ன செய்வது நண்பா?

மர்மயோகி said...

@ இராகவன் நைஜீரியா

இனி உங்களுக்கு வராது சார்..நன்றி..

மர்மயோகி said...

@ அல்பா

நன்றி திரு alpha

வசந்தா நடேசன் said...

லுசுல விடுங்க சார்!!

karurkirukkan said...

correcta soneenga boss - nachunu

http://karurkirukkan.blogspot.com/2011/02/5_21.html

மர்மயோகி said...

நன்றி திரு வசந்தா நடேசன்
நன்றி திரு karurkirukkan

AZIFAIR-SIRKALI said...

sariyaana netti adi
azifair-sirkali.blogspot.com

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?