Pages

Saturday, February 19, 2011

சோனியாவின் மறுமணமும் ரஜினி கேட்ட கேரியர் சாப்பாடும்..

மேற்கண்ட இந்த தலைப்பு ஹிட்சுக்காக மட்டுமின்றி..இன்னும் நிறையபேர் பாரக்கவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியதுதான்.

இதை மறைக்கவேண்டிய அவசியம் இல்லை.

அதிகமானோர் பார்க்கவேண்டும், நமது எண்ணங்களை அவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே இதை நாம் எழுதுகிறோம்.

ஏனென்றால் இந்தகால தமிழ் பத்திரிக்கைகள் தமது விற்பனையை அதிகரிக்க இது போன்ற கேவலமான செய்திகளே அதிகம் வெளியிடுகின்றன.

வலைப்பதிவில் இந்த ஆபாசத் தலைப்பை போட்டுவிட்டு உள்ளே நமது கருத்துக்களை எழுதுகிறோம்.

ஆனால் குமுதம், ஆனந்த விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர், ஜூனியர் விகடன் போன்ற ஆபாசப் பத்திரிக்கைகள் இதையே தொழிலாக செய்து வருகின்றன.

சோனியா அகர்வால் என்றொரு நடிகை. ஒரு சினிமா இயக்குனரை மணம் செய்து விவாகரத்தும் செய்துவிட்டாள்.

அவள் மறுமணம் செய்வாளா, அல்லது தனியாக வசிப்பாளா என்று இவனுக்கு என்ன அக்கறை?

நடிகைகளுடன் ஒருநாளாவது படுத்துவிட வேண்டும் என்று அலைவோருக்கு இது போன்ற செய்திகளை இவன் மறைமுகமாக தெரிவித்து மாமா வேலைபார்கின்றான்.

இதே செல்வராகவனின் மறுமண நிச்சயதார்த்தத்திற்கு வந்த ஒரு நடிகன் ரஜினி. அவனுக்கு என்ன அவசரமோ..சாப்பாட்டை கேரியரில் அனுப்ப சொன்னானாம்? இது சாதாரண கூலித் தொழிலாளிகூட பார்சல் சாப்பாடு வாங்கிபோவான்.

இதில் என்ன அதிசயம்?

இந்த கேவலமான பத்திரிக்கைகளின் மாமா வியாபாரம் பற்றி ஒரு நண்பர் அனுப்பிய பதிவு கீழே..


எனக்கு வெகு நாட்களாக ஒரு சந்தேகம். இந்தப் புலனாய்வு பத்திரிக்கைகள், (எதைப் புலனாய்வு செய்கின்றன என பிறகு பார்ப்போம்) என்ன சமூக அவலங்களைப் புலனாய்வு செய்து கிழிக்கின்றன என்று. நானும், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், ஜூனியர் விகடன் என அனைத்தையும் பார்த்துவிட்டேன். புலனாய்வு செய்கிறேன் பேர்வழி என பெண்களின் புலன்களை ஆயும், புலனாய்வு வேலையில் ஈடுபட்டுள்ளன இந்தப் பத்திரிக்கைகள். ஜூனியர் விகடன் எனப் பெயர் வைத்திருந்தாலும், இந்தப் புலன் ஆய்வு வேலைகளில் ஜூனியர் விகடன் தான் சீனியர்.

சில வாரம்களுக்கு முன்பு 'பாழாகும் பாடி' என்ற செய்தி வெளியாகியிருந்தது. அதாவது பாடி, போரூர் ஆகிய இடங்களில் போலீசு துணையுடன் விபச்சாரம் நடப்பதாகவும், அதனால் பொது மக்களுக்கு அசிங்கமான பல இடையூறுகள் ஏற்படுவதாகவும் எழுதியிருந்தனர். அந்த செய்தியை முழுதாய் படித்தால், "பசங்களா... சென்னைல எங்க விபச்சாரம் நடக்குதுனு தேடி அலையாதீங்க, போரூர்லயும், பாடிலயும் நல்லா நடக்குது"னு அறிவிப்பது போல் இருந்தது. சரி, அதை விடுங்கள். அதைவிடக் கொடுமை, அந்த செய்திக்கு அவர்கள் வெளியிட்டிருந்தப் படம் தான். முக்கால் பக்கத்துக்கு, கால்வாசி உடையுடன் நிற்கும் ஒரு பெண்ணின் படம்.

சரி செய்திக்குதான் படம் இப்படியென்றால், அந்தச் செய்தியின் முந்தையப் பக்கமான நடுப்பக்கத்தில் அரை நிர்வாணமாய் நிற்கும் நடிகையின் படம்!!!!எதற்கு இப்படியொரு அரைகுறை படம்? விடலைப் பையன்களும், இன்னும் சிலரும் அந்தப் படத்தைப் பார்த்து பத்திரிக்கையை வாங்குவதற்காகத் தானே? அடப் பாவிகளா, இதைத்தானே அந்த போரூர் மற்றும் பாடி ஏரியாக்களின் மாமாக்களும் செய்கிறார்கள்? விபச்சாரம் செய்யும் பெண்ணைக் காண்பித்து தொழிலுக்கு அழைக்கிறார்கள். அவர்களுக்கும் ஜூனியர் விகடனுக்கும் என்ன வித்தியாசம்? அவர்களாவது வயிற்று பிழைப்புக்கு செய்கிறார்கள். ஆனால் விகடனோ அதே வேலையை, சில பிரதிகள் அதிகம் விற்க வேண்டி செய்கிறது. சொல்லப்போனால் ஜூனியர் விகடன் 'அந்த' தொழில் செய்பவர்களைவிட இன்னும் மோசம்.பாடியிலும், போரூரிலும் விபச்சாரம் நடக்கிறது குடும்பப் பெண்கள் நடமாட முடியவில்லை. குடும்பத்துடன் வெளியே செல்ல முடியவில்லை என்றெல்லாம் மக்கள் புலம்புவதாய் செய்தி வெளியிட்டிருக்கும் விகடனுக்கு சில கேள்விகள். "உங்கள் ஜூனியர் விகடனை, குடும்பத்தை அருகில் வைத்துக் கொண்டு படிக்க முடியுமா? எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் நீங்கள் செய்யும் 'பெண் புலன் ஆய்வு'தான் தென்படுகிறது.

போரூர், பாடி போன்ற இடங்களை விபச்சாரம் செய்பவர்கள் கெடுக்கிறார்கள் என புலம்பியிருக்கிறீரே, பத்திரிக்கை ஊடகத்தை ஏதோ ஷகீலா படம் போல் மாற்றும் உங்களை எவன் தட்டிக் கேட்பது?

போலீசையும், விபச்சாரிகளையும், மாமாக்களையும் குறை சொல்லவும், திட்டவும் உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? இந்தப் பதிவுக்கு நான், "விபச்சாரம் செய்யும் விகடன்" எனப் பெயர் வைத்ததில் என்ன தப்பு இருக்கிறது?நான் 'ஒரு' செய்தியை உதாரணமாய் காட்டியிருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் இருமுறை வரும் இதுபோன்ற இதழ்களில், பலமுறை அசிங்கங்கள் நடக்கின்றன. ஜூவியில் மட்டுமல்ல. அனைத்து புலனாய்வு பத்திரிக்கைகளும் ஈடுபட்டிருப்பது புலன்களை ஆய்வதில் தான். நக்கீரன் இதற்கு கொஞ்சமும் சலைத்ததள்ள. நித்தியா நந்தா விவகாரத்தில் ஆபாஸகாட்ச்சிகளை விவரமாக பார்க்க வேண்டும் என்றால் சந்தாதார்ர் ஆகுங்கள் என்று கடைவிரித்த்தை அனைவரும் பார்த்தோம்தானே. எனவே இவர்கள் புலன் ஆய்வு செய்வதை விட சதை ஆய்வு வியாபாரம் செய்வதுதான் அதிகம்.


இப்போது தெரிகிறதா இந்த பத்திரிக்கைகள் ஜன நாயகத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றன என்று?
 

30 comments :

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஒவ்வொரு வரியும் சுளீர்!
இந்த பத்திரிக்கைகள் நான் படித்து பல நாட்கள் ஆகிவிட்டன.

வேடந்தாங்கல் - கருன் said...

பத்திரிக்கைகளுக்கு சவுக்கடி...

மர்மயோகி said...

நன்றி திரு "பெயர் சொல்ல விருப்பமில்லை"
நன்றி திரு "வேடந்தாங்கல் - கருன்"

கலை என்ற பெயரில் சினிமாக்காரன் ஒரு பக்கம் கூத்தடித்துக் கொண்டிருக்கிறான் - கோடி கோடியாக சம்பளத்துடன், அரசின் அனைத்து சலுகைகளும் அவனுக்கு கிடைக்கின்றன..
அதே போல பத்திரிகை என்ற பெயரில் இங்கே தமிழகத்தில் ஏறக்குறைய விபச்சாரம்தான் நடக்கிறது..
இவைகளை என்று மக்கள் முற்றிலுமாக புறக்கனிக்கின்றனரோ அன்றுதான் உருப்படுவோம்..

velu said...

its exposing ur feelings, very good.... keep it up

வால்பையன் said...

// வந்த ஒரு நடிகன் ரஜினி. அவனுக்கு என்ன அவசரமோ..சாப்பாட்டை கேரியரில் அனுப்ப சொன்னானாம்? //


ரஜினி ஒரு மனிதன்!

ரஜினியால் எங்கேயாவது கூண்டோடு மக்கள் செத்து போனாங்களா?

யாரையாவது இதை செய் அதை செய்ன்னு தவறான வழி காட்டினாரா!?

அவன் இவன் என சொல்லுமளவுக்கு உங்களுக்கு கோவம் வருமளவுக்கு உங்கள் சோத்தில் எத்தனை முறை மண்ணை போட்டுள்ளார்!

எனக்கு நடிகர்கள் பிடிக்காது, அது அவர்களை கொண்டாடுவதை விரும்புவதற்காக, தனிபட்ட முறையில் அவர்கள் மனிதர்கள் தானே, உங்களுகெல்லாம் மனிதநேயம் என்று வரும்?

தமிழ் 007 said...

நண்பரே பத்திரிக்கைகளை மட்டும் குற்றம் சொல்வது சரியாகாது!

இது போன்ற கேவலமான தலைப்புகளையும், கவர்ச்சி படங்களையும் பார்த்துவிட்டு அதை வாங்கும் மக்களுக்கு அறிவு எங்கே போனது.

"எரிவதை பிடிங்கினால் கொதிப்பது தானாக அடங்கும்"

தமிழ் 007 said...

மக்களாகிய நாம் திருந்தினால் பத்திரிக்கைகாரர்கள் தானாக திருந்துவார்கள்.

வால்பையன் said...

//கேவலமான தலைப்புகளையும், கவர்ச்சி படங்களையும் பார்த்துவிட்டு அதை வாங்கும் மக்களுக்கு அறிவு எங்கே போனது.//

இது பதிவுகளுக்கும் பொருந்துமா!?

Guna said...
This comment has been removed by the author.
Guna said...

நானும் குமுதம் , விகடன் பற்றி எழுதி இருக்கிறேன். ஆனால் இது போல் எழுத முடியவில்லை.உங்களுடன் ஒரு விவாதம்..இந்த பத்திரிகைகள் மட்டும் அல்ல நாள் இதழ்கள் கூட இந்த மாதிரி யுக்கித்யை கடை பிடிக்கின்றன. ஆனால் உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அனைவருக்கும் தெரியும்.. இந்த பத்திரிகைகள் எவ்வளவு நாளாக இப்படி செய்கின்றன என்று. ஆனால் மீண்டும் மீண்டும் படிப்பது யார் குற்றம்? தெரிந்தே தான் வாங்கி படிக்கிறோம். அதாவது சாரு நிவேதிதா வலை எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் .. ஆனால் இன்னமும் நாம் படித்து கொண்ண்டு தன இருக்கிறோம்.. அவர் வக்கிராமாக என்ன எழுதி இருக்கிறார் என்று படிக்க நமக்குள் இருக்கும் வக்கிர புத்தியோ அல்லது ஒரு கவர்ச்சியோ அல்லது அவரை திட்டவோ மீண்டும் படித்து கொன்ன்டே இருப்பது போல..உண்மையை சொல்லுங்கள் நீங்கள் இந்த பத்திரிகைகளி படிப்பதை நிறுத்தி விடீர்களா? அல்லது நீங்கள் எதனை பேரிடம் புதிய தலைமுறை போன்ற பத்திரிகைகளை படியுங்க என்று சொல்லி இருக்குறீர்கள்? அல்லது நீங்கள் படித்து இருக்குறீர்கள்?இந்த இடுகை .. அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பை போல .. நீங்கள் சொன்ன பத்திரிகைகளும் பயம் படுத்துகின்றன .. ( ஏன் என்றால் இதற்கு முன்னர் த்ரிஷா அஜித் பிரியாணி என்று ஒரு தலைப்பை கொடுத்து நீங்கள் இட்ட இடுகை க்கு திரு .ஜீவன் சிவம் தனது நியாயமான கருத்தை வெளியிட்டார் ) நீங்களும் அப்படி இல்லாமல் இருந்தால் மிக்க மகிழ்ச்சியே :)( நானும் இது போல் ரஜினிய கமலா என்று ஒரு தலைப்பை கொடுத்து பரிசோதித்து பார்த்து இருக்கின்றேன்)..ஆனால் வால் பையன் கூறிய கருத்தை நானும் ஆதரிக்கிறேன் . அவன் இவன் என்று நீங்கள் கூறுமளவுக்கு , தனிப்பட்ட முறையில் அவர் உங்களது குடியை கெடுக்க வில்லை என்று நெனைக்குறேன் ..

நடுநிலையாக பார்த்தால் உங்கள் இடுகையில் கூறப்பட்டது நிஜம் .. மற்றும் உங்களது கோபமும் நியாயம் ..இதற்கான மாற்றம் உங்களிடம் இருந்து பிறக்கும் என்றால்.. மகிழ்ச்சியுடன் உங்களை வரவேற்கிறேன் .. மற்றவர்களும் அப்படியே என்றும் நினைக்குறேன்.தொடர்ந்து உங்களது நியாமான கோபமான ( கனிமொழியின் கைது நாடகம் போன்ற ) வலைபதிவை தொடர வாழ்த்துக்கள் ..

இதை மீண்டும் புதிய இடுகையாக இடுகிறேன்.... மட்டற்ற வலைபூ நண்பர்கள் உங்களுக்கும் எனக்கும் அவர்களது கருத்துகளை கொடுக்க ...

மர்மயோகி said...

@ velu அவர்களுக்கு
நன்றி திரு வேலு அவர்களே..

மர்மயோகி said...

@ வால்பையன் அவர்களுக்கு
நான் ஏற்கனவே பல பதிவுகளில் விளக்கமளித்திருக்கிறேன்
அவன் எனபது ஒருமையைக் குறிக்கும் சொல்..அவர் எனபது பன்மையை குறிக்கும் சொல்
அடிமைகள் தான் அவனை அவர் என்றும் - அவர் என்பதை அவர்கள் என்றும் விளித்து தமது அடிமைத்தனத்தை காட்டி, தமிழையே மாற்றி விட்டார்கள்..
ரஜினி - தன திரைப் படங்கள் மூலம் சாராயம் குடிப்பது, சிகரட்டை தூக்கிபோட்டு பிடிப்பது இன்னும் காலித்தனம் செய்வதை தவறு இல்லை என்பதுபோல் மாற்றி பல வருடங்கள் ஆகிவிட்டது..தெருவோரப் பொறுக்கிகளின் இன்றைய பொறுக்கித்தனத்தில் பெரும்பாலும் ரஜினியின் பாதிப்பு இருப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும்.
இன்று தெருவோரப் பொறுக்கிகளின் அபிமானத்தைப் பெற்ற அஜித், விஜய் தனுஷ் போன்றோர்கள் இந்தமாதிரி அறிமுகத்தையே தருகிறார்கள்.
படம் முழுவதும் பொறுக்கித்தனமும், ரவுடித்தனமும் செய்துவிட்டு, கடைசி காட்சியில் நான் நன்மைக்குதான் செய்தேன் என்று ஸ்க்ரீனைப் பார்த்து வசனம் பேசுவது இந்த கேவலமானவர்களின் தந்திரம்.
ஒருகாலத்தில் எம் ஜி ஆர் போன்றோரின் படங்களில் கதையின் நாயகன் என்பவன் சிகரெட் குடிப்பதைக்கூட பெரும் பாவம் என்பதுபோல் காட்டியது பொய், இன்று அறிமுகக் காட்சியிலேயே குடித்துக்கொண்டும், பொறுக்கித்தனம் புரிந்துகொண்டும் வருவதையே பெரிதாகக் காட்டும் இதுபோன்ற கேடுகெட்ட காட்சிகளை ரஜினி யை வைத்து படமெடுக்கும் ஆபாச வியாபாரிகள் செய்ததுதான்
ரஜினி என்னைத்தான் தனியாக குடியைக் கெடுக்கணும் என்று அவசியம் இல்லை..

வால்பையன் said...

//படம் முழுவதும் பொறுக்கித்தனமும், ரவுடித்தனமும் செய்துவிட்டு, கடைசி காட்சியில் நான் நன்மைக்குதான் செய்தேன் என்று ஸ்க்ரீனைப் பார்த்து வசனம் பேசுவது இந்த கேவலமானவர்களின் தந்திரம்.//

உங்கள் பதிவுகளை எழுதிவிட்டு தலைப்புடன் மீண்டும் ஒருமுறை படித்ததுண்டா!?

வால்பையன் said...

அவன் என்பது ஒருமை
அவர் என்பது பன்மையா?

உங்களிடம் தான் தமிழ் பயிலனும் போல!

நெஞ்சை தொட்டு சொல்லுங்க, உங்கள் நடைமுறை வாழ்கையில் இதை பின்பற்றுகிறீர்களா!?

மர்மயோகி said...

@தமிழ் 007 அவர்களுக்கு

இப்படி ஒவ்வொருத்தரும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான் நண்பரே..

மூலைக்கு மூலை சாராயக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு - குடி குடியைக் கெடுக்கும் என்பான்

சிகரெட்டை கட்டுக்கட்டாக தயாரித்து விற்றுக்கொண்டே - சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு என்பான்

பான் பராக் என்ற பொறுக்கிகளின் போதைப் பொருட்களை பொட்டிக் கடைதோறும் தொங்கவிட்டுக்கொண்டு சுவர்களை அசிங்கம் செய்யாதே என்பான்.

இவை போன்ற பொறுக்கிகளின் பொருட்கள் இருக்கும் வரை தெருவோரப் பொறுக்கிகள் உற்பத்தியாகிக் கொண்டேதான் இருப்பான்.

இவைகளை ஒழித்தால்தான் பொறுக்கித்தனம் பெருமளவில் ஒழியும்..

மர்மயோகி said...

@ Guna அவர்களுக்கு

நன்றி திரு Guna அவர்களே.

நாம் தலைப்பை சற்று ஆபாசமாக இடுவது - எல்லாரும் நமது பதிவைப் படிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே, நாம் வியாபாரம் செய்துகொண்டிருக்கவில்லை..மற்றபடி பத்திரிக்கைகாரன் செய்வது 100% வியாபாரம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்

மற்றவர்களை படிக்கவைப்பதர்க்கு நாம் அவர்களின் யுக்தியையே பயன் படுத்த வேண்டியுள்ளது..அவ்வாறு பழக்கப் படுத்திவிட்டார்கள்.

நாம் அன்றாடம் பத்திரிக்கைகள் வாங்குவது செய்திகளை தெரிந்துகொள்வதற்காக மட்டுமே, மற்றபடி - நாம் விரும்பும் செய்திகளை மட்டுமே தருவதற்கு, இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே பத்திரிக்கைகள் கிடையாது..வேறு வழி இல்லை..

மற்றபடி நீங்கள் சொல்வது சரி..நான் என்னை மாற்றிக்கொள்ள முயற்ச்சித்து வருகிறேன்..கோபத்தில் அதுமாதிரி வந்து விடுகிறது..நன்றி..

மர்மயோகி said...

@ Guna மற்றும் வால்பையன் ஆகியோருக்கு

ரஜினியை அவன் என்று சொன்னதற்கு உங்களது ஆதங்கத்தை வெளியிட்டிருந்தீர்கள்.

இதே பதிவில் சோனியா அகர்வாலை அவள் என்று சொன்னதற்கு நீங்கள் எதுவும் சொல்லவில்லை..

இதை எந்த வகையில் சேர்ப்பது..?(ஆணாதிக்கம் என்று சொல்லவரவில்லை..ஹஹஹா.).

வால்பையன் said...

//இதே பதிவில் சோனியா அகர்வாலை அவள் என்று சொன்னதற்கு நீங்கள் எதுவும் சொல்லவில்லை..//


அதுவும் தாம்னே தப்பு!

பதிவின் நடுவில் உறுத்தியது இது தான், மற்றபடி உங்கள் பதிவில் நீங்கள் கருத்துகந்தசாமி வேலை தான் பார்பீர்கள் என தெரிந்திருப்பதால் நான் முழுமையாக படிக்கவில்லை!

வால்பையன் said...

உங்க வயசு என்னான்னு எனக்கு தெரியாது, நீங்க ரஜினியை விட மூத்தவரா அண்ணே!?

விஜய்கோபால்சாமி said...

@வால்பையன்: வால், இவர் ரஜினியை ஒருமையில் அழைத்தது ஏன் உங்களுக்கு உறுத்துது?

எந்தக் கிராமத்துலயாவது யாராவது சினிமா கதையை மத்தவங்களுக்குச் சொல்லும் போது “ரஜினி சார் நாலாவது மாடியிலேந்து குதிப்பார். அப்போ பொன்னம்பலம் சாம் ஐஸ்வர்யா ராய் மேடத்த இழுத்துக்கிட்டுப் போயிட்டிருப்பார். இவரு பொன்னம்பலம் சார் முன்னாடி குதிச்சு ஐஸ்வர்யாராய் மேடத்தக் காப்பாத்துவார்”ன்னுல்லாம் கதை சொல்றது இல்லை.

திரையில தெரியிற எல்லா ஆம்பளையும் “அவன்” தான், எல்லா பொம்பளையும் “அவள்” தான். சினிமாவில இருக்கறவன் ஆதாயத்துக்காக கமல் சார், ரஜினி சார், விஜய் சார், அஜித் சார்னு சொல்றதையெல்லாம் நாமளும் பின்பற்ற ஆரம்பிச்சா எழுதுற அத்தனையுமே ரொம்ப செயற்கையா இருக்கும். கண்ணறாவியாவும் இருக்கும்.

வால்பையன் said...

@ விஜய்

எழுத்தை சொல்லவில்லை, அதில் இருக்கும் வன்மைத்தை தான் குறிப்பிடுகிறேன்!
எதிரியாக பாவிக்கும் தன்மையை தான் சாடுகிறேன்!

அவர் என்ன கதையா சொல்லிகிட்டு இருக்காரு இங்க, லாஜிக் பேச!

Guna said...

@ வால்பையன் -

"நாம் தலைப்பை சற்று ஆபாசமாக இடுவது - எல்லாரும் நமது பதிவைப் படிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே, நாம் வியாபாரம் செய்துகொண்டிருக்கவில்லை..மற்றபடி பத்திரிக்கைகாரன் செய்வது 100% வியாபாரம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்"இதை தாங்களும் பயன்படுத்துவதால் தாங்களும் சந்தர்ப்பவாதி ஆகுறீர்கள் என்று எடுத்து கொள்ளலாமா?ஒருவனை புகை பிடிக்காதே என்று சொல்வர்தர்க்கு முதலில் நாம் புகை பிடிகாதவானாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.ஒரு சிறிய புள்ளியும் , ஒரு பெரிய புள்ளியும் இருந்தால் முதலில் நம் கண்ணனுக்கு தெரிவது என்னவோ பெரிய புள்ளிதான் .. அதனால் தன அவன் என்ற வார்த்தையை தெரிவித்தேன். அவள் என்ற சொல்லுக்கு கண்ட்டிகாதது தவறு தான் ... எனவே தற்போது " அவள்" என்ற சொல்லுக்கும் நான் உங்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கிறேன்.

இது ரஜினி , சோனியா பற்றிய இடுகை அல்ல , பத்திரிகை பற்றிய இடுகை என்பதால் இதோடு ரஜினி பிரச்சனையை பேச விரும்பவில்லை.

"அவன்" "அவள்" ஒருமை பன்மை மன்னிக்கவும் . இது தவறை மறைபதற்க்காக நீங்கள் கொடுத்த பதில் என்று எடுத்து கொள்கிறேன். இது உணமி என்று உங்களுக்கும் தெரியும். மாமா வருகிறான் , சித்தப்பா வருகிறான் , அத்தை வருகிறாள் என்று நீங்கள் வார்த்தைகளை கண்டிப்பாக பயன் படுத்தி இருக்க மாட்டீர்கள்.இடுகையில் நீங்கள் சொல்ல வந்தது நன்று. ஆனால் கருத்துக்கள் உங்கள் இடுகையை விட்டு திசை திரும்பி வேறு தலைப்புக்கு செல்வாதாக நினைக்குறேன்.அதனால் இத்துடன் இந்த இடுகைக்கு கருத்துரையை நிறுத்திகொள்கிறேன்.நன்றி.

வால்பையன் said...

//இதை தாங்களும் பயன்படுத்துவதால் தாங்களும் சந்தர்ப்பவாதி ஆகுறீர்கள் என்று எடுத்து கொள்ளலாமா? //

அய்யா!
நான் அதையே செய்து விட்டு அப்படி செய்பவர்களை குறை கூறவில்லை

//ஒருவனை புகை பிடிக்காதே என்று சொல்வர்தர்க்கு முதலில் நாம் புகை பிடிகாதவானாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.//


அதே பதில் தான் இதற்கும், நான் செய்வதை பிறர் செய்கிறார்கள் என குறை கூறவில்லை, அப்படி செய்பவர்களை தான் கேட்கிறேன், அதுவும் குறை கூறவாதாக இல்லை, உங்கள் கருத்து அதில் அடிபடும் என்ற ஆதங்கத்தில்!

****

கேள்வி எனக்கானது போல் இருந்ததால் நான் பதில் சொல்ல வேண்டியதாயிற்று! உங்கள் கேள்விகள் இந்த பதிவு எழுதியவருக்கு போல!

நன்றி

மர்மயோகி said...

வால்பையன் அவர்கள் விட்டால் கருத்துக்களை சொல்லிக்கொண்டே போவார்..நன்று.. திரு விஜய்கோபால்சாமி அவர்கள் சொல்வதுபோல, நம் காலத்துக்கு முந்திய எம் ஜி ஆர், சிவாஜி போன்றோர்களையே அவர்களது திரைப் படங்களைப் பற்றிய பேச்சு வரும்போது அவன் இவன் என்றுதான் சொல்லிக்கொள்வது வழக்கம்..
விவாதத்தை அவரே முடித்துக்கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டதால் இதற்குமேல் இழுத்துகொண்டிருப்பது சரியாகப்படாது எனபது என் கருத்தும்கூட..
எனவே,
பின்னூட்டமிட்ட, திட்டிய, வாழ்த்திய, ஆதரவு வழங்கிய, வந்து பார்த்து சென்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி..

SANTHOSHI said...

உங்களுடைய தாக்கம் நியாயமானதே...ஆனால் அதற்காக மரியாதையற்ற வார்த்தைகளை உபயோகப் படுத்த வேண்டாமே...

ஆகாயமனிதன்.. said...

//இப்போது தெரிகிறதா இந்த பத்திரிக்கைகள் ஜன நாயகத்தை எவ்வாறு தாங்கிப் பிடிக்கின்றன என்று?//

இப்ப தெரியுதா ஏன் நான் இதையெல்லாம் வாங்கிப் படிப்பதில்லை என்று # விளம்பரம்

மர்மயோகி said...

நன்றி SANTHOSHI
நன்றி ஆகாய மனிதன்

பாலா said...

வால் பையன் அவர்களின் கருத்துக்களோடு நான் ஒத்து போகிறேன். வெகு காலமாக உங்களின் பதிவுகளை நான் படித்து வருகிறேன். ஆனால் கருத்து தெரிவித்ததில்லை. உங்களின் நோக்கம் நன்றாக இருந்தாலும் அதில் இருக்கும் வார்த்தை பிரயோகங்கள் கொஞ்சம் உறுத்துகிறது. பொதுவில் பேசும்போது அவன் , அவள் மாதிரியான வார்த்தைகளை தவிர்ப்பதே நாகரிகமானது என்பது என் கருத்து. அவர்கள் அயோக்கியர்களாகவும், பொறுக்கிகளாகவே இருக்கட்டும். நாம் நாகரீக மனிதர்தானே. நீங்கள் கொடுக்கும் இலக்கண விளக்கங்கள் எத்தனை தடவை கொடுக்க முடியும். முடி என்றாலும் மயிர் என்றாலும் ஒன்றுதான். ஆனால் நடைமுறையில் நாம் எதை பயன் படுத்துகிறோம்? இந்த வார்த்தை பிரயோகங்கள் தற்செயலானவைதான், எந்த உள் நோக்கமும் அல்ல என்பதை உங்கள் மனசாட்சியை கேட்டு உறுதி படுத்தி கொள்ளுங்கள். மற்றபடி இது உங்கள் வலைத்தளம் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.

பாலா said...

மற்றபடி வியாபாரம் என்று வந்துவிட்டால் லாப நஷ்ட கணக்கு மட்டுமே பார்ப்பார்கள். நியாய அநியாயங்கள் எல்லாம் பார்க்க மாட்டார்கள். நல்ல பத்திரிக்கைகளை தேர்ந்தெடுத்து படிப்பது நம் கையில்தான் உள்ளது.

மர்மயோகி said...

நன்றி திரு பாலா
கருத்து தெரிவிக்கதவர்களையே கருத்து தெரிவிக்க வைத்தது இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள்தான் என்கிறீர்களா? ;)

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?