Pages

Tuesday, February 22, 2011

இன்றைய நாளிதழ்....



20/02/2011 - தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் - "இன்றைய நாளிதழ்" என்றொரு தினப்பத்திரிக்கை வெளியீட்டுவிழா சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராஜர் (வெள்ளைக்காரனை விரட்டிவிட்டு - அவன் கொடுத்த பட்டங்களை பெயருடன் சேர்த்து பெருமையடிப்பதிலும், அவரகளது சிலைகளை பாதுகாத்து பெருமையடிப்பதிலும் தமிழனுக்கு நிகர் தமிழனேதான்) கலையரங்கத்தில் நடைபெற்றது..

ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் நானும் கலந்துகொள்வதற்காக சென்றேன்..சர் பிட்டி தியாகராஜர் கலையரங்கம் முகவரி கண்டுபிடிப்பது சிரமம் என்றுதான் எண்ணி இருந்தேன்...ஆனால் அதற்க்கு வேலையே வைக்காமல், சங்கத்தலைவரை - விடிவெள்ளியே , வழிகாட்டியே என்று புகழ்ந்து அரசியல்வாதிகளுக்கு வைப்பதுபோல வழி நெடுகும் கட்அவுட்களைவைத்து நமக்கு சிரமம் கொடுக்காமல் சுலபமாக வழிகாட்டி விட்டார்கள்..

அப்போதுதான் நினைத்துக் கொண்டேன்..ஏதாவது ஒரு சங்கம் நாமும் ஆரம்பித்து அதற்கு கொஞ்ச காலம் தலைவனாக இருக்கவேண்டும் என்று..ஹ்ம்ம் வேறு எப்படி பிரபலமாகுவதாம்?

சரி மேட்டருக்கு வருவோம்..போனவுடன் நல்ல கவனிப்புதான். ஆளுக்கொரு பேட்ஜ் கொடுத்தார்கள். அப்புறம் டிபன் காபி போன்றவைகள்..பிறகு கலைநிகழ்ச்சி என்ற பெயரில் பள்ளிகூட சிறுமிகளை பாரத நாட்டியம் என்ற பெயரில் சினிமாப் பாடல்களுக்கு நடனம் ஆட வைத்தார்கள்..

விழா ஆரம்பிபதற்கு முன்னமே - மேடையில் ஒருவர் கருப்புக்கண்ணாடி போட்டு தனியாக அமர்ந்திருந்தார்..எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று ரொம்ப நேரம் குழப்பமாக இருந்தது..அப்புறம் விழா நோட்டிசை பார்த்த பின்புதான் அவர் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜேப்பியார் என்று தெரிந்தது..அவர் ஏன் அவ்வளவு சீக்கிரம் வந்தார்?

பிறகு ஜெயலலிதாவின் ஜால்ரா கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா. பாண்டியன், - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி தங்கபாலு, நடிகர் மற்றும் இயக்குனர் கே.பாக்யராஜ், போன்றோர் மேடைக்கு ஒவ்வொருவராக வந்தார்கள்.

பிறகு பத்திரிகை வெளியீட்டு விழாவிற்காக முதலில் குத்துவிளக்கு ஏற்றினார்கள்...சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியும், அகில இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவருமான திரு ஜி.என்.ரே, அவரது துணைவி திருமதி ரே ஆகியோர் குத்து விளக்கு ஏற்ற, அதைத்தொடர்ந்து மற்றவர்கள் விளக்கை பற்றவைக்க, ஏனோ நடிகர் பாக்யராஜை யாரும் கண்டுகொள்ளவில்லை..

முதல் பிரதியை திரு ஜி.என் ரே வெளியிட - கே. வி தங்கபாலு பெற்றுக் கொண்டார். ஜி.என் ரே அவருக்கு தமிழ் தெரியாததால் ரொம்ப நேரம் பத்திரிக்கையை பார்வையாளர்களுக்கு காட்டிக்கொண்டே இருந்தார். தங்கபாலுவும் தன்னிடம் தருவார் என்று காத்து இருது, கடைசியாக பெற்றுக்கொண்டார்.

"இன்றைய நாளிதழ்" முதல் பிரதியை தங்கபாலு ரூபாய் ஆயிரம் கொடுத்து பெற்றுக்கொள்ள, ஜேப்பியார் இன்னொரு பத்திரிக்கைய ரூபாய் பத்தாயிரம் கொடுத்து வாங்கினார். நாங்களெல்லாம் அதன் அசல் விலையான ரூபாய் இரண்டு மட்டும் கொடுத்து வாங்கிக்கொண்டோம்.

ஜேப்பியார் பத்தாயிரம் கொடுத்துவாங்கியதர்க்கு - தினமும் இதுபோல் வாங்கினால் நன்றாக இருக்கும் என்று டைமிங் காமெடி செய்தார் அதன் ஆசிரியர் திரு ரவீந்திரதாஸ்.

நடிகர் பாக்கியராஜ் வருடசந்தாவான ருபாய் எழுநூறு செலுத்தி சந்தாதாரர் ஆகினார்.

இதற்கிடையே வந்தார் விடுதலை சிறுத்தைகளின் தலைவர் - திருமாவளவன்.

மேடையில் பேசிய அனைவரும் பத்திரிகை தொழிலின் கஷ்டங்களை எடுத்துரைத்தனர்.

பாக்யராஜ் வழக்கம்போல - குட்டி குட்டி கதைகளின் மூலம் நகைச்சுவையாக பேசினார்.

இக்காலப் பத்தரிக்கைகள் சினிமாக்கள் பற்றியும் ஆபாசமாகவும் வருவதைப் பற்றியும் பேசிய பத்திரிக்கையின் ஆசிரியர், டி. ரவீந்திரதாஸ், அதற்க்கு மாற்றாக இந்த பத்திரிகை வெளிவரும் என்றார்.

- அவரை ஆசிரியராகக் கொண்ட - தமிழ் நாடு பத்திரிக்கையாளர்களின் சங்க மாத இதழான " தமிழ் தென்றல் " எப்போதும் பழைய நடிகர் நடிகைகளின் புகழ்பாடியே வரும்..ஹ்ம்ம் இது எப்படி இருக்கப் போகிறதோ..?

முதல் பத்திரிகையில் முதல் பக்கத்தில் -" 70 இடம் கேட்கிறது காங்கிரஸ் - கூட்டணியில் இழுபறி " என்ற தலைப்பில் வெளியான செய்தியை மேடையிலேயே மறுத்தார் தங்கபாலு. " நாங்கள் தி மு க கூட்டணியில்தான் இருக்கிறோம், இன்றுதான் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது" என்றும் சொன்னார்.

முன்னதாக பேசிய டி. ரவீந்திரதாஸ், இந்த பத்திரிகை, எகிப்து, துனிசியா, போன்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சிபோல இன்னுமொரு புரட்சி இந்தியாவிலும் வர இந்த பத்திக்கைமூலம், ஏற்படலாம் எனபது போல பேசியதற்கு,

"இந்தியாவில் அத்தகைய புரட்சியை - 100 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளைக்காரனை எதிர்த்து காங்கிரஸ் செய்துவிட்டது, அதன் தாக்கம்தான் இப்போது எகிப்திலும் மற்ற அராபிய நாடுகளிலும் பரவியுள்ளது" என்று புத்திசாலித்தனமாக சமாளித்தார்.

அதேபோல கூட்டணி பற்றிய செய்திக்கு மேடையிலேயே மறுப்பு தெரிவித்த திருமாவளவன், "எங்கள் கூட்டணியில் குழப்பம் இல்லை - நாங்கள்தான் தெளிவாக இருக்கிறோம் - ஏற்கனவே அ.தி. மு க வுடன் அக்ரீமென்ட் போட்ட (புதிய தமிழகம்) ஒருவர் இரண்டு இடங்கள் போதாதும் ஒன்பது இடங்கள் வேண்டும் என்கிறார்..அங்கே சேருவாரா இங்கே சேருவாரா என்று குழப்பிக் கொண்டிருந்தவர் (பா.ம.க) கல்யானத்திருக்கு அழைக்க சென்றும் ஒப்பந்தம் போட்டுவிட்டு வந்துவிட்டார்" என்றும் குறிப்பிட்டார்.

மற்றபடி அவரவர் தங்களைப் பற்றி புகழும் ஒரு மேடையாகத்தான் இருந்தது..

இன்றைய நாளிதழின் அன்றைய நாளிதழ் மட்டுமே பார்த்தேன்..தொடர்ந்து அதன் தரத்தைப் பாப்போம்..



5 comments :

சக்தி கல்வி மையம் said...

அப்போதுதான் நினைத்துக் கொண்டேன்..ஏதாவது ஒரு சங்கம் நாமும் ஆரம்பித்து அதற்கு கொஞ்ச காலம் தலைவனாக இருக்கவேண்டும் //////

உங்க சங்கத்தில எனக்கு எதாவது பதவி கொடுப்பீங்களா?

மர்மயோகி said...

இதுமாதிரி போஸ்டர் அடிச்சு ஒட்டினிங்கன்ன உங்களுக்கு துணை முதல்வர் ...இல்லே இல்ல துணை தலைவர் போஸ்ட் தர்றேன்..

வசந்தா நடேசன் said...

//"இந்தியாவில் அத்தகைய புரட்சியை - 100 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளைக்காரனை எதிர்த்து காங்கிரஸ் செய்துவிட்டது, அதன் தாக்கம்தான் இப்போது எகிப்திலும் மற்ற அராபிய நாடுகளிலும் பரவியுள்ளது" என்று புத்திசாலித்தனமாக சமாளித்தார்.// தங்கபாலுவா இப்படி சொன்னார், நம்பமுடியவில்லை, இல்லை, இல்லை...

மர்மயோகி said...

அன்புள்ள வசந்தா நடேசன் அவகளுக்கு

தங்கபாலு அப்படி பேசியதை நான் நேரில் பார்த்தேன் நண்பரே..

Vediyappan M said...

எல்லாம் சரிதான். அது என்ன “ஜெயலலிதாவின் ஜால்ரா கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா. பாண்டியன்”-என்று சொல்கிறீர்?. தேர்தல் வருவதே யாருடன் யார் சேர்ந்து ஜால்ரா அடிக்கலாம் என்பதற்குதானே, அப்படி என்றால் மற்றவர்களெல்லாம் அடிப்பது ஜால்ரா இல்லையா? மாதம் ஒரு ஜால்ரா அடிக்கும் பா.ம.க என்ன ஆச்சு?, மக்களோடுதான் கூட்டணி என்ற தே.மு.தி.க என்ன ஆச்சு?, தன் இனத்துக்கு எத்தகைய தலைகுனிவு வரும்போதும் ஆட்சியில் இருந்து பின்வாங்காத கருணாநிதி, தன் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களில் ஒருத்தனை அதுவும் மத்திய மந்தியாக இருப்பவனை திகார் சிறையில் அடைத்தபிறகும் , குற்றத்தை ஒப்புக்கொள்வதைபோல அமைதிகாத்து, ஆட்சியில் இருந்து பின்வாங்காத அதே கருணாநிதி, தேர்தல் சீட்டுக்காக அமைச்சரவையில் இருந்து விலகுவதாக (அதுவும் திட்டமிட்ட நாடகம்) அறிவித்து போக்கு காட்டிய கருணாநிதியின் மெகா ஜால்ராவை பற்றி என்ன சொல்லபோறீங்க? . நீங்கள் குறிப்பிடும் பத்திரிக்கை வெளியீடு அன்று மற்றவர்கள் வரவில்லை அதனால் அவர்களைப்பற்றி குறிப்பிடும் அவசியம் வரவில்லை என்று தப்பிக்க வேண்டாம். கம்யூனிஸ்ட்கள்தான் இன்றைய நாளில் 100கு 10 சதவீதமாவது கொஞ்சம் மனசாட்சியோடு மிகச் சில காரியங்களை முன்னெடுத்துக்கொண்டு போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பதால் இவ்வளவு கேள்விகள்

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?