Pages

Thursday, February 17, 2011

"கனிமொழி கைது" - நாடகம் நடக்கிறது..


இன்றைய அனைத்துப் பத்திரிக்கைகளிலும் தலைப்பு செய்தி, "கனிமொழி கைது" என்பதுதான்.

பார்கிறவன் எல்லாம் ஏதோ ஸ்பெக்ட்ரம் விசயத்தில் இவர் பெயர் அடிபட்டதே..அதனால்தான் கைது செய்து இருப்பார்களோ என்றுதான் நினைத்திருப்பான்..

ஆனால் கனிமொழி கைது செய்யப் பட்டது - இலங்கையில் கைதாகி இருக்கும் 109 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தடையை மீறி நடைபெற்ற ஒரு சிறு ஆர்பாட்டத்திற்காக.

இந்த கைது செய்யபடுவதினால் எந்தவித பாதிப்பும் இல்லை..அவர்களை வேனில் ஏற்றி, ஒரு மண்டபத்தில் வைத்து சாயந்திரம் வீட்டுக்கு அனுப்பிடுவார்கள்..இதை இந்த பத்திரிக்கைகள் அனைத்தும் இவ்வளவு பெரிதுபடுத்துவானேன்..

நிச்சயமாக இதில் வியாபாரத்தந்திரம் மட்டும் இல்லை..

அரசியல் தந்திரமும் ஒளிந்திருக்கிறது..தேர்தல் நெருங்குகிறது..

ஸ்பெக்ட்ரம் ஊழல் தமிழகத்தின் ஆளும் கட்சியான தி மு கவின் கழுத்துக்கு கத்தியாக மேலே தொங்கிக்கொண்டிருக்கிறது..

இப்போது இவர்களுக்கு தமிழக மீனவர்களின் மீது அனுதாபம் வராமல் என்ன செய்யும்...

இவர்களுக்கு  ஓட்டு வேண்டும்..பத்திரிக்கைகளுக்கு காசு வேண்டும்...

நடிகை நடிகன் என்று கூத்தாடிகளின் ஆபாசப் படத்தைப்போட்டு விற்பவனுக்கு, மக்கள் எக்கேடுகெட்டால் என்ன...?தமிழனுக்கு தமிழனே எதிரி என்று வசனம் பேசும் சினிமாக்கூத்தடிகளும் இப்போது தமிழனை விடுதலை செய் என்று கூத்தடிக்கின்றன..மும்பையில் தமிழனை விரட்டுவதர்கேன்றே ஆரம்பிக்கப்பட்ட - பயங்கரவாத கட்சியான சிவா சேனாவின் தாய் கட்சியான இன்னொரு பயகரவாத கட்சி - பார "தீய" ஜனதா குண்டன்களும் போராட்டம் என்கிறான்..

எல்லாம் ஓட்டுப் பிச்சைக்கான ஒத்திகைகள்தான் .


இலங்கை நமது அண்டைய நாடு..

அங்கே விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் எப்போதும் உண்டு..

எல்லை மீறுகிரவனை பிடிக்கத்தான் செய்வான்..

இந்த வேஷதாரிகள் இங்கே குதித்தவுடன் விடுதலை செய்து விடுவானா?

தவறு எங்கே என்று ஆராய வேண்டும்

நாம் எவ்வளவு கூச்சலிட்டும் இலங்கை அரசு தொடர்ந்து மீனவர்களை கைது செய்தும் கடலோர எல்லைகளில் தாக்கியும் வருவது ஏன்?

நாம் ஒருதலைப் பட்சமாக, மீனவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என்றும் , இலங்கை ராணுவம், தவறு செய்வதற்காக மட்டுமே இருக்கிறது என்பதுபோல் கூக்குரலிட்டுக் கொண்டிருக்காமல்,

நாமும் எல்லைக் கட்டுப்பாட்டை மதித்து நடந்தால் இதுபோன்ற துன்பங்கள் நிகழாமல் தற்காத்துக் கொள்ளலாம்.

இங்கே அரசியல்வாதிகளும், சினிமாக்கூத்தடிகளும் தங்கள் சுயநலத்துக்காக இங்கே குதித்துக்கொண்டும், கூச்சலிட்டுவிட்டும், பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஏ சி காரில் வீட்டுக்கு சென்று ஜாலியாக இருந்து விடுவான்.

அரசியல்வாதியின் வேலைகள் எல்லாம், அடுத்த தேர்தல் வரைக்கும், சிநிமாக்கூத்தாடியின் கூச்சல் எல்லாம் தங்கள் படம் வெளியாகும்போது மட்டும்தான்.36 comments :

sakthistudycentre-கருன் said...

இதேல்லாம் அரசியல்ல சகஐமப்பா...

மர்மயோகி said...

அப்படியே எத்தனை நாளைக்குதான் கூத்தடித்துக்கொண்டிருப்பார்கள் நண்பரே?

sakthistudycentre-கருன் said...

இத்தனை பேர் இருக்காங்க..ஏன் கம்மேன்ட்ஸ் போட மாட்டேன்கிறாங்க?/// நான் கமென்ட், ஓட்டும் சேர்த்து போட்டுட்டேன்..

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

sakthistudycentre-கருன் said...

இங்கே அரசியல்வாதிகளும், சினிமாக்கூத்தடிகளும் தங்கள் சுயநலத்துக்காக இங்கே குதித்துக்கொண்டும், கூச்சலிட்டுவிட்டும், பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஏ சி காரில் வீட்டுக்கு சென்று ஜாலியாக இருந்து விடுவான்./////தமிழனுக்கு தன்மானம் இருந்தா அதை தன்னோட ஓட்டுல காமிக்கனும்..

ரங்குடு said...

கொஞ்ச நாள் முன்னே பழ.நெடுமாறன் இதுமாதிரி ஸ்டண்ட் எல்லாம் செஞ்சு கைதாகி விடுதலயாவார்.

அப்புறம் கலைஞர் போய் கடற்கரையில் படுத்திக்கிட்டு 3 மணி நேரம் உண்னவிரதம் (??) இருப்பார்.
எதிக்கட்சியாயிருந்தால், டெல்லிக்குத் தந்தியடிப்பார்..

இப்போ கனிமொழி இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்காங்க.

நாளை காங்கிரஸுடன் கூட்டணி உறுதி ஆச்சுன்னா, இலங்கை சமாசாரமெல்லாம் காத்தோட போயிடும்.

கூட்டணியில் இழுபறி வந்ததுன்னா, இதையே ஊதி பெருசு பண்ண கலைஞர் தயார்.

மக்கள் வழக்கம் போல் வாயிலே எதையோ வெச்சுக்கிட்டு ஓட்டுப் போட தயார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கைதென்றதும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தது பற்றியோ என நினைத்தேன்.ஆனால் இது ,தந்தையின் உண்ணாநோன்பு நாடகம் போன்றதே!
எல்லாம் தேர்தல் சுரத்தால் வரும் ஆட்டம்.
கோடிக்கணக்கில் முழுங்கிவிட்டு இந்தப் பூனையும் போல போடும் வேடம்; அப்பப்பா ...அப்பரை முழுங்கும் நடிகை....
என்ன? குடும்பமோ?

சி.கருணாகரசு said...

கொஞ்ச நாளுக்கு முன்னாடிதான் அங்க போயி பரிசு கொடுத்து ... பரிசு பெற்ற காணொளியை பார்த்தேன்...

என்னத்த சொல்ல?!?!

மர்மயோகி said...

@ Sakthistudycenter - கருண் - நண்பரே பின்னூட்டமிட்டதற்கு நன்றி..தமிழன், தமிழன் என்று மொழிவாரியாகப் பிரித்துப் பேசுவதனால்தான் பிரச்சினை..காரணம் இந்தியாவிலும்தான் எத்தனையோ மதவேறியாட்டங்கள், ஜாதிக்கலவரங்கள்..அப்போதெல்லாம் குதிக்காத இந்த ஓட்டுப் பொறுக்கிகளும், சினிமாகூத்தாடிகளும் தமிழன் என்ற ரீதியில் குதிப்பது அப்பட்டமான வியாபாரம்தான்..
மனிதன் என்று பார்க்க சொல்லுங்கள்..அவன் பக்கத்துவீட்டுக்காரனிடம் கூட சண்டையிட்டுக்கொண்டுதானிருப்பான்...

மர்மயோகி said...

@ ரங்குடு - அவர்களுக்கு

நண்பரே, தமிழன் என்றால் ஓட்டுப் போடுவதற்கும் பழம்பெருமைகளை பேசி மாய்வதர்க்கும் மட்டுமே என்ற உண்மையை நிரூபித்து வருகிறார்கள்

மர்மயோகி said...

@ யோகன் - பாரிஸ் அவர்களே,

பத்திரிக்கைகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்கின்றன..ஒன்று மக்களை yemaatri பரபரப்பு வியாபாரம், இரண்டு ஆளுங்கட்சிக்கு ஜால்ரா...

மர்மயோகி said...

@ கருணாகரசு - அவர்களே

தேர்தல் முடிந்ததும் மீண்டும் அந்த காட்சிகளை நீங்கள் பார்க்கலாம்..

Jayadev Das said...

நீங்க சொல்லியிருப்பது 100% சரி. இந்த நாடகம் காமடியில், மஞ்சள் துண்டு போட்ட மூணு மணிநேர உண்ணாவிரதத்தையே தோற்கடித்து விடும் நாடகம். நம்மை வைத்து இன்னும் எவ்வளவுதான் காமெடி பண்ணுவார்களோ தெரியவில்லை.

உருத்திரா said...

காங்கிரஸ் கைநழுவிப் போனாலும், தமிழ் நாட்டு மக்கள் கைநழுவிப் போகக் கூடாது,அதற்குத்தான் இந்தக் கூத்து,
தமிழ் நாட்டு மக்கள் என்ன கூத்துத் தயார் பண்ணியிருக்கிறார்கள் என்பது,தேர்தலுக்கு அப்புறம்தான் தெரியும்.

Kumar said...

இராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்ககா நடத்திய போரை கண்டித்து இங்கே உள்ள சில ஆட்கள் அமெரிக்க தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்யும் போது மட்டும் உங்களுக்கு குளு குளு வென்று இருந்ததா..?
இனம் வேறு மதம் வேறு என்பதை முதலில் புரிந்து எழுதுங்கள்..

kavitha said...
This comment has been removed by the author.
kavitha said...

உங்க அம்மா எந்த சிங்களவனுக்கு முந்தானை விரிகி படுட?

Chandran said...
This comment has been removed by a blog administrator.
கும்மி said...

அரசியல்வாதிகள் நடிக்கிறார்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்பதில் நான் 'சிறிது' முரண்படுகின்றேன். நீங்கள் அதிராம்பட்டிணத்தில் படித்தவர் என்று நினைக்கின்றேன். அங்கிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் கோட்டைப்பட்டிணத்தில் உங்களுக்கு நண்பர்கள் யாரும் இருந்தால் கொஞ்சம் விசாரியுங்கள். நேற்று பெட்ரோல் குண்டு வீச்சில் முகம் கருகி, நீந்தி கரை சேர்ந்த மீனவர் ராஜா முகம்மது எந்தப் பகுதியில் மீன் பிடித்தார் என்று. மணமேல்குடியில் முத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரித்து அறியுங்கள்.

மீனவர்கள் பற்றிய கட்டுரைகளில் முக்கியமானதாக தெஹல்காவின் நேற்றைய கட்டுரை இருக்கின்றது. மீனவர்கள் செய்யும் தவறுகளையும் உள்ளடக்கி அந்தக் கட்டுரை உள்ளது.

http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne260211THE_BOLD.asp

நானும் ஓரிரு நாட்களில் விரிவான பதிவு ஒன்றினை இடுகின்றேன். அப்பொழுது கோட்டைப்பட்டிணம் பெட்ரோல் குண்டு வீச்சு பற்றி நீங்கள் விசாரித்து அறியும் தகவல்களை பின்னூட்டத்தில் எதிர்பார்க்கின்றேன்.

நன்றி.

மர்மயோகி said...

@ நன்றி திரு jayadev Das அவர்களே.
கைது என்கிற சம்பிராதய நிகழ்வை பத்திரிகைகாரர்களும் பெரிது படுத்தி, தம்மை இழிவு படுத்திக் கொள்கின்றன

மர்மயோகி said...

@ திரு உருத்திரா

நன்றி உருத்திரா அவர்களே, அரசியல்வாதிகளில் மக்கள் நலம் பார்ப்போர் 100% இல்லவே இல்லை என்றுதான் தோன்றுகிறது..

மர்மயோகி said...

@ திரு kumar அவர்களுக்கு

இராக், ஆப்கானிஸ்தானில் நடந்த அல்ல...இன்னும் நடந்து கொண்டிருக்கிற அமெரிக்க அராஜகத்தை எதிர்ப்பு என்ற பெயரில் ஏதோ சம்பிராதயாமாக போராட்டம் நடத்திவிட்டு - புஷ் , ஒபாமா போன்ற பயங்கரவாதிகள் வரும்போது, இந்த அரசின் செயல்பாட்டையே அவன் கைகளில் கொடுத்தவர்கள்தான் நாம்..

விடுதலைப் புலிகளுக்கான ஆதரவில் மட்டும் சாதாரண கிரிக்கெட்காரனைக் கூட கிரிக்கெட் விளையாடவிடாமல் (அதுவும் முத்தையா முரளிதரனைப் பற்றி எந்த எதிர்ப்பும் இல்லை) அப்படி என்ன மொழி வெறி..இது நிச்சயம் ஓட்டுப் பிச்சைக்கான முன்னோட்டம் தான்

மர்மயோகி said...

@ பேரழகி kavitha

kavitha என்பவள் மலேசியாவில் பிழைக்க சென்று ஓவர்ஸ்டேயில் இருந்து அகதியாக அடைக்கலம் பெற்று - தன்னை விபசாரி என்று http://oretamil.blogspot.com/2011/02/i-am-bitch என்ற தனது பதிவில் சொல்லி இருக்கின்றாள்.!

இவளது ip address கண்டு பிடிப்பது சுலபம்..இஸ்லாத்தைப் பற்றியும், முகமது நபியைப் பற்றியும் எழுதிய இவளது பின்னூட்டத்தை நான் அழிக்கவில்லை..

நான் மிரட்டலுக்காக இதை சொல்லவில்லை..

முகமது நபி அவர்களை நாங்க உயிருக்கும் மேலாக மதிக்கிறோம், அவரைப் பற்றி எந்த நாயும் கேவலமாக பேசினால் அவர்கள் மீது நிச்சயமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்..அதுவும் தன்னை விபச்சாரி என்று பகிங்கிரமாக ஒப்புக்கொண்டு http://oretamil.blogspot.com/2011/02/i-am-bitch.html என்ற பிளாக்கில் எழுதி இருக்கும் ஒரு item இப்படி சொல்லி இருப்பது மன்னிக்க முடியாத குற்றம்..இவள் இதே ப்ளாக்கில் உடனேயே மன்னிப்பு கேட்க வேண்டும்...

இல்லையெனில் இது மலேசியா அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்..

மர்மயோகி said...

@ Chandran அவர்களே

தங்களது கருத்துக்கு நன்றி..

அமேரிக்கா நாட்டுக்கு சென்ற நமது மத்திய அமைச்சர்கள், ஏன் அப்துல் கலாம் போன்றோர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கேவலமாக நடத்தப்பட்டபோது இந்நாட்டு ஓட்டுபொறுக்கிகளும், தமிழ் காவலர்களும், தமிழ் சினிமாக்கூத்தாடிகளும் இது போன்ற வீரியமான போராட்டத்தை நடத்தவே இல்லை..தமிழனுக்கான போராட்டம் எனபது ஒரு வியாபாரம்தான்..நன்றி..

மர்மயோகி said...

@ திரு கும்மி அவர்களுக்கு

என் கேள்வி என்னவென்றால் - ஒரு அரசு, தொடர்ந்து இதுமாதிரி மீனவர்களை கைது செய்வது ஏன்?

மீனவர்கள் தமது நாட்டு எல்லைக்குள்ளேயே மீன் பிடிப்பதைக் கூட இலங்கை கடலோரப் படையினர் தாக்குகிறார்கள் என்றால் அவர்கள் அவர்களது எல்லையைத்தாண்டி நமது கடல் எல்லைக்குள் வந்திருக்கவேண்டும்..அப்படி என்றால் இந்தியாவில் கடலோர காவல் படையினர் சும்மா பார்த்துக்கொண்டு இருக்கிறார்களா? (தமிழ் பக்தி என்ற பெயரில் இந்தியாவை கேவலபடுத்துவதர்காக "ஆம்" என்றுகூட சொல்வார்கள்....)

கும்மி said...

// ஒரு அரசு, தொடர்ந்து இதுமாதிரி மீனவர்களை கைது செய்வது ஏன்? //

முதலில் ராஜா முகம்மது அவர்களை சந்தித்து பேசி விட்டு வாருங்கள். அதன் பிறகு இதன் முழு பிரச்னையும் புரியும். உங்கள் பதிவுலக நண்பர் இப்படிக்கு நிஜாம், கோட்டைப்பட்டிணம் பகுதியைச் சார்ந்தவர்தான். அவருடன் சென்று கூட உண்மை அறிந்து வரலாம். உண்மையிலேயே உண்மை நிலவரம் தெரிய வேண்டுமெனில் மீனவர்களோடு பேசினால்தான் தெளிவு கிடைக்கும். இல்லாவிட்டால், வெற்று கோஷம் போடும் அரசியல்வாதி போல், விஷயம் தெரியாமல் ஹிட்சுக்காக பதிவெழுதியது போல் ஆகிவிடும். உங்களுடைய நோக்கம் அப்படி இருக்காது என்று எண்ணுகின்றேன். மீனவர்களோடு பேசியபின்பு பதில் சொல்லுங்கள். அதற்கு முன்பு நீங்கள் கூறினால் அவை வெறும் அனுமானமாகவே இருக்கும். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

மர்மயோகி said...

//எல்லை மீறுகிரவனை பிடிக்கத்தான் செய்வான்..
இந்த வேஷதாரிகள் இங்கே குதித்தவுடன் விடுதலை செய்து விடுவானா? தவறு எங்கே என்று ஆராய வேண்டும்
நாம் எவ்வளவு கூச்சலிட்டும் இலங்கை அரசு தொடர்ந்து மீனவர்களை கைது செய்தும் கடலோர எல்லைகளில் தாக்கியும் வருவது ஏன்? //chand
பிரச்சனையின் உண்மை தன்மை பற்றி சரியாக சிந்திக்கும் உங்கள் நேர்மைக்கு ************* மர்மயோகி.
உண்மை என்னவென்றால் தமிழக மீனவர்கள் பலகாலமாவே தொடர்ந்து இலங்கை தமிழ் மீனவர்களின் வயிற்றில் அடித்து வந்துள்ளனர்.தொப்பிள் கொடி உறவு என்று சொல்லி இலங்கை தமிழர்களுக்காக முதலை கண்ணீர் வடிப்பவர்களுக்கும், வைகோ, சீமான் கனிமொழி போன்றவர்களுக்கும் இலங்கை தமிழர்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.தமிழக அரசியல் வாதிகள் தமிழக மீனவர்கள் அப்பாவிகள் தங்கள் எல்லையில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது இலங்கை கடற்படை வந்து அவர்களை பிடித்துக் கொண்டு சென்று சித்ரவதை செய்வதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைய முயற்ச்சிக்கிறார்கள்.
http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/16578-2011-02-15-23-00-14.html

நன்றி chandran அவர்களே..நங்கள் "தலைவணங்குகிறோம்" என்ற சொல்லை மனிதர்களுக்கு சொல்வதை ஏற்பதில்லை..வணக்கம் எனபது படைத்த இறைவனுக்கு மட்டுமே எனபது எங்கள் மதத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கை எனவே தங்களது பின்நூட்டத்த்தை நீக்கிவிட்டேன் ..நன்றி..

Chandran said...

நீங்கள் அந்த சொல்லை ஏற்பதில்லை என்பது எனக்கு முதலே தெரிந்திருக்கவில்லை உங்களுக்கு சங்கடம் ஏற்படுத்தியதிற்காக வருந்துகிறேன்.
சோதிலிங்கம் பத்திரிக்கையாளரினால் எழுதப்பட்ட ஒரு இலங்கை மீனவரின் கருத்து-
இலங்கை அரசுக்கு இந்தியாவே உதவி செய்து புலிகளை அழித்து இலங்கையை காப்பாற்றியது என்றும் இதன் அடிப்படையில் இலங்கையின் வட கிழக்கு பிரதேசம் இந்தியாவின் ஒரு பிரதேசம் என்ற எண்ணப்பாட்டினை இந்திய மீனவர்களும் கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவித் தொழிலாளிகள் இவர்கள் நாட் கூலிக்காக இந்திய முதலாளிகளுக்காக வேலை செய்பவர்கள் இவர்கள் கொண்டு வரும் ரோலர்களில் மிகப் பெரும்பான்மையானவைகள் ஒரு இரு முதலாளிகளின் சொத்துக்கள் இந்த முதலாளிகளே இந்த மீனவர்களுக்கான ஆசிரியர்களாகும் இவர்களின் அறிவூட்டலாலே இவர்கள் இலங்கை கடற்பரப்பை நாடுகின்றனர்.
கடற்கரையில் நின்று பார்த்தால் இவர்களைத் தெரியும் தூரத்துக்கு யாழ் தீவுப்பகுதிக்கு வந்து மீன்பிடிப்பார்கள்.யாழ் பிரதேசத்தில் கரையில் இவர்களது வள்ளம் ரோலர் வராத குறை ஒன்றுதான்.
இவர்களது மீன்பிடி வலைகளின் ரோலர் முறையினாலும் இதற்காகப் பயன்படுத்தும் எலக்ரோனிக் முறைகளாலும் இவர்கள் மீன் உள்ள இடம்பார்த்து தமது வள்ளங்களை ஓட்டுவார்கள். இவர்கள் எந்த நாட்டுக்குள் போகிறோம் என்று யோசிப்பதில்லை எங்கே மீன் இருக்கிறதோ அது எல்லாம் இந்தியா என்ற நினைப்பு கொண்டவர்கள். இவர்கள் சிலரை சுட்டு கொன்றாலும் இவரது சடலம் அடுத்த நாள் சவக்காலைக்கு போகுதோ இல்லையோ இன்னோருவர் அந்த வள்ளத்தில் அடுத்தநாள் யாழ் தீவுப்பகுதிக்குள் வந்து விடுவார்கள் இப்படியாகவே தான் இவர்களது தொழில் முறையை இந்த முதலாளிகள் வைத்துள்ளனர்.
இந்திய கடலின் வளங்களை மீன்வளத்தை இந்த ரோலர் முறையே அழித்து விட்டது. இப்போது எமது கடல்பிரதேசத்தை அழிக்க ஆரம்பித்துவிட்டனர் இன்று எமது பாரம்பரிய மீன் இனங்களில் பல இன்று இல்லை என்பது பலருக்கு தெரியாதவிடயம் காரணம் இவர்களது ரோலர்களேயாகும். இந்த மீன்வளம் அழிவது கண்டு இலங்கை அரசு அமுலுக்கு கொண்டுவந்த கட்டுப்பாடுகளை மதித்தே நாம் கடலில் மீன்பிடிக்கிறோம் ஆனால் இவற்றை எல்லாம் மீறி இந்திய மீன்பிடி முறைகள் உள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். சிங்கள மீனவர்கள் கூட எமது பிரதேசத்திற்க்குள் வந்தால் தூண்டில் வலை மட்டுமே பயன்படுத்துவார்கள் இதனால் எமக்கு துன்பமில்லை இந்த சிங்கள மீனவர்கள் கடலில் பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள் பின்னர் கிழமைகழித்தே வருவார்கள் இவை எமக்கு துன்பமில்லை ஆனால் இந்திய ரோலர்கள் ஒரு முறை வந்தால் அதுவும் புளோரசன் லைட்டுடன் வந்தால் முழுமீன்களும் அந்த வலையை நோக்கி போய் அவர்களது சுரண்டல் வலைக்குள் விழுந்து கடள்வளமே அழிந்து விடுகின்றது. இந்த துன்பகரமான செய்தியை நாம் பல தடவைகள் இலங்கை கடற்படைக்கும் அரசுக்கும் பல தடவைகள் சொல்லியும் எதுவும் செய்ய முடியாமல் போயிருந்தது
இதன் ஒரு கட்டமாக நாம் வட பகுதி இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தவும் தீர்மானித்தோம் இதில் தீவுப்பகுதி வடமராட்சி சுழிபுரம் மீனவக்குடும்பங்கள் ஈடுபடவும் இருந்தோம்.எமக்கு இவர்களால் ஏற்ப்படும் முக்கிய பாதிப்பில் இவர்களால் வெட்டப்படும் வலைகளும் முக்கியமானவையாகும் இப்படி பலதடவைகள் எமது வலைகள் வெட்டப்பட்டதைல் எம்மால் இந்த வலைகளை மீள வாங்க முடியாது.இந்திய பிரதேசத்தில் இப்போது மீன்வளம் இல்லாது போய்விட்டது காரணம் இவர்களது ரோலர் பாவனையும் இவர்களது பிரதேசம் ஆழ்கடலமாகும் ஆனால் எமது பிரதேசம் கண்ட மேட்டு பிரதேசம் இங்கு நண்டு றால் கணவாய் பல மீனினங்கள் தாராளமாக உருவாகும் இடமாகும் இப்போது நாம் முரல் என்ற மீனினத்தை முற்றாக இழந்துவிட்டோம்.

மர்மயோகி said...

நன்றி திரு Chandran அவர்களே
இப்படி ஒருதலைப் பட்சமாக இங்கே ஓட்டுப் பொறுக்கிகளும், சினிமா கூத்தாடிகளும் தத்தமது வியாபாரத்திற்காக கூக்குரளிட்டுக்கொண்டிருக்கிரார்கள்..தமது சரக்கை விற்கமுடியாத- தற்கொலைகளையும் தீக்குளிப்புகளையும் ஊக்குவித்துக் கொன்றுக்கும் கொலைகாரர்களான சீமான், வைகோ, நெடுமாறன் போன்றோகளுக்கும் வேறு வேலை இல்லாததால் இந்த விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டு கோழைகளை வீரன் என்றும் - இங்கே பப்ளிசிட்டி செய்து விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்..
மறுபக்கத்தில் இலங்கையில் உள்ள மீனவர்களும் மனிதர்கள்தானே என்று யோசிப்பதில்லை..காரணம் அவன் ஓட்டுப் போடமாட்டான்..

மர்மயோகி said...

@ kavitha
வந்தேறி விபச்சாரி kavitha வே..நீ கோழைத்தனமாக பின்னூட்டத்தை அழித்துவிட்டால் தப்பித்துவிடலாம் என்று நினைக்காதே..உனது பின்னூட்டம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்கப்பட்டுள்ளது..மன்னிப்புகேட்டால் உன்னை விட்டு விடுகிறேன்..

இல்லையென்றால் நீ நிச்சயம் தண்டிக்கப் படுவாய்..நான் பத்திரிக்கைகாரன்..மலேசியா அரசாங்கத்துடன் தொடர்பு உடையவன் . இன்றுவரை உனக்கு கெடு.

இன்னும் இரண்டு நாளில் உன் முழு முகவரி, தொலைபேசி, மொபைல் நம்பருடன் உன்னை தொடர்பு கொள்கிறேன்..அப்புறம் உனக்கு கேடுதான்..

இது மிரட்டல் இல்லை..நீ என்னை எவ்வளவோ திட்டினாய்..நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..ஆனால் நீ எங்களது உயிரைவிட மேலான எங்களது நபியை விமர்சித்துவிட்டாய்..உன்னை விடமாட்டேன்...

மன்னிப்புகேள்..இல்லை நீ தப்பிக்க முடியாது

தமிழ்தோட்டம் said...

ஆமாங்க இதெல்லாம் அரசியலில் சகஜம்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

kavitha said...

im sorry.....etho unarci vasam pattu eluti vitten

மர்மயோகி said...

நன்றி kavitha அவர்களே
நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு என்னை திட்டுங்கள், நான் தவறு செய்யும் பட்சத்தில் ஏற்றுக் கொள்கிறேன்..எல்லாரும் தவறு செய்பவர்கள்தாம்..
நீங்கள் என்னை திட்டுவதாலோ நான் உங்களை திட்டுவதாலோ நம் இருவருக்கும்தான் பாதிப்பு..
முகம்மது நபி அவர்கள் உலக சமுதாயத்திற்கான வழிகாட்டியாக வந்தவர்கள்..அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்களே கூட - அவரது சித்தாந்தை எதிர்தவர்கள்கூட - அவரது சொந்த வாழ்வில் எந்த குற்றமும் கண்டு பிடிக்கவில்லை..
அதனால் அவரை யார் தவறாக விமர்சித்தாலும், இஸ்லாமியர்களாகிய எங்களால் பொறுக்கமுடியாது.
உங்களுக்கு என்மீதோ, அல்லது எனது கட்டுரைகள் மீதோ கோபம் இருக்கலாம். அதை தனிப்பட்ட என்மீது காட்டுங்கள்.
நானும் உங்களை சற்று தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறேன் -இதெல்லாம் எங்களது நபி அவர்களை நீங்கள் தகாத வார்த்தைகளினால் விமர்சித்ததினால் வந்த கோபம்தான் - இன்னும் நீங்கள் என் தாயை விமர்சித்துள்ளீர்கள்..ஆனால் நான் உங்களை மட்டும்தான் விமர்சித்துள்ளேன்..நன்றாக கவனிக்கவும்.இருந்தாலும் அதுவும் தவறுதான்.. அதற்காக நானும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.மற்றபடி உங்கள்மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. நாமெல்லாம் வலைப்பதிவர்கள் நமது கருத்துக்களை உணர்வுகளை பலர் படிக்கும் வண்ணம் பதிந்துகொண்டு இருக்கிறோம்..இதில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை காட்டுவதால் என்ன லாபம்?
முகம்மது நபி மீது - உங்களுக்கு ஏன் இந்த கோபம்? அவர்களை பற்றிய உங்களுக்கு தவறான சிந்தனை இருந்தால் எங்களிடம் நீங்கள் கேட்கலாம்..தவறில்லை..விளக்கம் தர தயாராக இருக்கிறோம்..
தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதற்கு மிக்க நன்றி..

SANTHOSHI said...

என்னங்க இது இன்னும் இரண்டு நாட்களுக்குத்தான் இந்த செய்தி...அப்புறம் இது மாறிவிடும்..அதான் கிரிக்கெட் வந்துருச்சே...இனி எல்லோரும் அதில கண்ணும் உயிருமாய் ஆகிவிடுவார்கள்....:-))

மர்மயோகி said...

நன்றி சந்தோஷி அவர்களே..
நானும் இப்போ கிரிக்கெட்தான் பார்க்கப்போகிறேன்..

kavitha said...

சரி...உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. என் தவறுக்கு உண்மையாக வருந்துகிறேன். மறப்போம் மன்னிப்போம்..

மர்மயோகி said...

நன்றி கவிதா அவர்களே..
உங்களது கேள்விகளையோ, சந்தேகங்களையோ.எனது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி கேட்கலாம்
நன்றி
எனது ஈமெயில் முகவரி : marmayogie@gmail.com

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?