ஒரு சின்சியரான தொழிலதிபர், விடுமுரைக்கொண்டாட்டத்திற்காக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, பல பல பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் ஆபாசக் கதைக்கு பெயர்தான் எங்கேயும் காதல்..
தலைப்பு மகா பொருத்தம்..காரணம், காதல் என்றாலே காமம்தான்.
அது என்ன சின்சியரான தொழிலதிபர்..? அவன் வேலையை அவன் பார்க்காமல் வேறு யார் பார்பார்கள்?
இங்கே சின்சியராக இருப்பானாம்,...வெளிநாட்டில் பெண்களை அனுபவிக்க நாயைப்போலஅலைவானாம்..இந்த கேடுகெட்ட விஷயத்தை ஒரு கதையாக சொல்வதில் இங்குள்ள ஆபாச வியாபாரிகளுக்குதான் எவ்வளவு பெருமை?
வெளிநாட்டுக்காரிகள் இந்த கூத்தாடிகளுக்காக மட்டும் அலைவதுபோல் காட்டியிருப்பது மகா கேவலம். விபச்சாரிகள் யாரிடமும் பணத்துக்காக படுக்கைகளை பகிர்ந்து கொள்வார்கள்..இதை காதல் என்று சொல்வதன் மூலம் காதல் என்றால் காமம் என்பதை நிரூபணம் செய்கிறார்கள்..
ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய பெண்ணை சந்தித்து அடுத்தடுத்த காட்சிகளில் அவளுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் கதாநாயகன், பிறகு பிரிந்துகொள்வதற்கு பார்ட்டி வைத்து பிரிகிறார்கள்..
இதற்கிடையே இன்னுமொரு கதை..அதாவது கதாநாயகனுடைய தந்தையின் காதல் கதை..
அவரது காலத்தில் காதலியை பார்பதற்கே நாள் கணக்கிலும், அவளுடன் பேசுவதற்கு மாதக்கணக்கிலும் காத்திருக்கவேண்டியதையும் காட்டுகிறார்கள்..
இந்த காலம் போல் செல்போன் வசதியோ, மற்ற தொடர்பு வசதிகளோ கிடையாது..அவளை பார்க்கவேண்டுமென்றால் அவளது ஊருக்கு ரயில் பிடித்து சென்று நாள்கணக்கில் காத்திருந்து அவள் எப்போது வெளியே வருவாள் அவள் வரும்போது தன்னை கவனிக்க வைக்க என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் விளக்கி,
இன்றைய காதல் "எல்லாவற்றையும் முடித்த பிறகுதான்" அந்த பெண்ணுடைய பேரையே கேட்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்..
அதே போல ஒரு பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு பிறகு அவளிடம் "உன் பெயர் என்ன?" என்று கேட்கும் ஒரு அருவருப்பான காட்சியும் உண்டு..
கடைசியில் பிரிந்த இருவரும் தங்கள் பழகிய நாட்களை எண்ணி வேதனை அடைகிறார்கள்..அந்த கதாநாயகிக்கு திருமணம் ஆனாலும் தன காதலனை (தன்னுடன் முதலில் (?) உடலுறவு கொண்டவனை) மறக்க முடியவில்லை..தனது கணவனிடம் சொல்லிவிட்டு இவனை தேடி வருகிறாள்..
அவனும் அதே போல இவளை தேடி வர, இருவரும் இணைகிறார்கள்..
இந்த கேவலமான கதை "லவ் ஆஜ் கல்" என்னும் ஹிந்திப் படத்தின் கதை.
எங்கேயும் காதல் என்ற தமிழ்படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது இந்த படத்தின் அப்பட்டமான காப்பி போல தெரிகிறது..
ஏதோ சொந்தமாக கதை எழுதி இயக்கியதுபோல "பிணத்துக்கு ஆடும்" கூட்டத்தை சேர்ந்த இயக்குனர் பிரபுதேவா சொல்லிவருகிறார்ர்ர்...
படம் வந்தால் இவங்களது சாயம் வெளுத்துவிடும்..
3 comments :
"பிணத்துக்கு ஆடும்" கூட்டத்தை சேர்ந்த இயக்குனர் பிரபுதேவா"
மிகுந்த ஆட்சேபனைக்குரியது
ரைட்டு
நன்றி
rajeshkumar
நன்றி
விக்கி உலகம்
Post a Comment
பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?