Pages

Sunday, February 28, 2010

இந்தியாவில் வசிப்பவரெல்லாம் இந்தியரா?

 பால்தாக்கரே என்கிற ரவுடி மும்பையில் தமிழர்கள் தொழில் செய்யக்கூடாது என்பதற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்து, மக்களுக்கு வெறியூட்டி பிழைத்துக் கொண்டிருப்பவன். பிறகு இந்தி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டினான். அவனுக்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும், அவனைக்கைது செய்து உள்ளே தள்ள மத்திய அரசுகளுக்கு தைரியம் இல்லாமல் போய்விட்டது.


தற்போது, ஆஸ்திரேலிய, மற்றும் பாகிஸ்தான் கிரிகெட் அணிகள் விளையாட வந்தால் தடுப்போம் என்று சொல்லும் அந்த ரவுடியை மத்திய அமைச்சர் சரத் பவார் சந்தித்து விட்டு செல்கிறார்..இப்படித்தான் ரவுடிகளிடம் ஒரு அரசு நடந்து கொள்ளுமா?

ஒரு பொறுக்கியோ ரவுடியோ சட்டத்தை மீறினால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்யாமல், அந்த ரவுடியிடம் போய் சரி சமமாக உட்கார்ந்துகொண்டு பேச்சுவார்த்தை செய்வது ஒரு முதுகெலும்புள்ள அரசு செய்யுமா?

இதனால்தான் அவன் குடும்பத்தில் இருந்தே மேலும் மேலும் ரவுடிகள் வளர்ந்து அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த பொறுக்கிகளை தட்டிக் கேட்க வக்கின்றி அரசு அறிக்கைகளும் பேச்சு வார்த்தைகளும் நடத்திகொண்டிருக்கின்றன.


ஒரு கீழ்க்கண்ட கதை ஞாபகம் வருகிறது.
ஒரு வெளிநாட்டவன் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு இந்தியா வந்தான். பல இடங்கள் சுற்றிப்பார்த்து பிறகு தன் தாய் நாட்டிற்குத் திரும்பிசென்றான்..

அப்போது தன் நாட்டில் அவன் அவனது இந்திய நண்பனை சந்தித்தான். அந்த இந்திய நண்பன் கேட்டான் "எங்களது நாடு உனக்குப் பிடித்திருந்ததா? எப்படி இருக்கிறது?"

அவன் சொன்னான்.." ஆமாம் .. இந்திய எனக்கு மிகவும் பிடித்தது ..அருமையான ஒரு நாடு, நல்ல இயற்கை வளங்கள் நிறைந்த நாடு, சரித்திரங்கள் நிறைந்த நாடு " என்று சொன்னான்.

மீண்டும் அந்த இந்திய நண்பன் கேட்டான், " அங்கே இந்தியர்கள் எப்படி உள்ளனர்...? அவரகளது பழக்க வழக்கங்கள் உனக்கு பிடித்திருக்கிறதா? " என்று.

அதற்கு அவன் " இந்தியரா? நான் அங்கே எந்த ஒரு இந்தியனையும் சந்திக்கவே இல்லையே..நான் சந்தித்தது எல்லாம், காஷ்மீரில், கஸ்மீரிகளையும் , பஞ்சாபில் பஞ்சாபிகளையும், மற்றும் பீகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா போன்ற இடங்கள் முறையே பீகார், மகாராஷ்ட்ரியன், தமிழன், மலையாளி போன்றவர்களைத்தானே சந்தித்தேன் - இன்னும் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், சீக்கியன் போன்றவர்களையும் சந்தித்தேன் " என்று ஏளனமாகச் சொன்னானாம்.

பாருங்கள் எவ்வளவு சீரியசான ஜோக் என்று..

அப்புறம் எனக்கு வந்த ஒரு குறுந்தகவல் ஒன்று கீழே..

" நாம் வசிக்கும் நாட்டில் பிஸ்சா மிக சீக்கிரமாக நம்மை வந்தடைகிறது...ஒரு ஆம்புலன்சை விட, போலிசை விட ?

கார் லோன் 5% தான்..ஆனால் எஜுகேசன் லோன் 12%.. அரிசி விலை 40 ருபாய், சிம் கார்டு இலவசம்..!"


நன்றாக இருக்கிறது அல்லவா?

சொல்வோம் " நானொரு இந்தியன்..!" என்று..


ஜெய் ஹிந்த் !!!

4 comments :

Tech Shankar said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

priyamudanprabu said...

நன்றாக இருக்கிறது அல்லவா?

சொல்வோம் " நானொரு இந்தியன்..!" என்று..


ஜெய் ஹிந்த் !!!
///\

சரியா சொன்னீங்க

மர்மயோகி said...

நன்றி Tech Shankar, மற்றும் பிரியமுடன் பிரபு...

Jayadev Das said...

//" நாம் வசிக்கும் நாட்டில் பிஸ்சா மிக சீக்கிரமாக நம்மை வந்தடைகிறது...ஒரு ஆம்புலன்சை விட, போலிசை விட ?

கார் லோன் 5% தான்..ஆனால் எஜுகேசன் லோன் 12%.. அரிசி விலை 40 ருபாய், சிம் கார்டு இலவசம்..!"//

வேடிக்கையான கொடுமை

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?