Pages

Tuesday, January 25, 2011

ராமாயணம் - ரூம் போட்டு யோசித்தது..!!!

நாங்களெல்லாம் பள்ளிக்கூடப் படிப்பு படிக்கும்போது, அப்போது பிரதானமாக சொல்லித்தரப்படுவது இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளைத்தான்..


மதச் சார்பற்ற ஒரு நாட்டில் இது போன்ற மதப் பிரச்சாரங்கள் கூடாது என்று எவனும் அப்போது எதிர்க்கவில்லை..கல்வித் துறையில் இருந்த காவிகள் அப்போது இந்த கதைகளை பிஞ்சு நெஞ்சங்களில் விதைத்து இன்று அது விஷமாகி இந்திய ஒருமைப்பாட்டுக்கே வினை வைக்கும் விசயமாகி வளர்ந்து நிற்கிறது..

சரி விசயத்திற்கு வருவோம்..

நாங்கள் படிக்கும்போது சொல்லிக்கொடுக்கப்பட்ட ராமாயண கதையில், அயோத்தியை ஆண்ட தசரதன் என்ற மன்னனுக்கு, நாற்பதாயிரம் மனைவிகள் என்றும், அவனுக்கு நெடுநாட்களாக குழந்தை வரம் இல்லை - எனவே ஒரு முனிவரை சந்தித்து அவரிடம் குழந்தை வரம் கேட்டதாகவும், அவர் ஒரு கனியை கொடுத்து அவனது மனைவிமார்களுக்கு கொடுத்ததால் குழந்தை வரம் கிடைக்கும் என்றும் சொன்னாராம். அதன்படி பிறந்த குழந்தைகள்தான், ராமன், இலட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்கனன் ஆகியோர்..

அதன் பிறகு ராமன் சீதாவை லவ் பண்ணியதும், வில்லை முறித்ததும், காட்டுக்கு வனவாசம் சென்றதும் கதைகள்..அது வேண்டாம் இப்போது...

மேற்கண்ட விசயத்துக்கே வருவோம்..

தசரதனுக்கு நாற்பதாயிரம் மனைவிகள் என்கிறார்கள்...

அப்படியென்றால்..இப்படி வைத்துகொள்ளலாம்

தசரதனுக்கு  ஒரு சுமார் இருபது வயதில் முதல் கல்யாணம் நடக்கிறது...

இப்படி ஒரு நாளைக்கு ஒரு கல்யாணம் என்றாலும் - அன்றே அவர் மனையுடன் (ஒரு நாள் மட்டும்) வாழ்வது என்றாலும், மொத்தம் 109 வருடங்கள் ஆகும்..ஆக..நாற்பதாயிரம் கல்யாணம் முடியும்போது, தசரதனுக்கு வயது 129.

இப்படி ஒவ்வொரு மனைவியையும் அவர் மணமுடிக்க ஒரு நாள் மட்டும் எடுத்திருப்பரா? பெண்ணைப் பார்க்கணும், அவளது குணங்களை அறியணும்..இதற்கே மாதக்கணக்கில் ஆகிவிடும்..அதுவும் இந்த காலத்தைப் போல அப்போது செல்போன் வசதியோ, ஏன் வாகன வசதியோ கிடையாது..ராமன் பிறந்தது, திரோத யுகம்..திரோத யுகம் ஏறக்குறைய ஏழு லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்றும் சொல்கிறார்கள்..

ஹ்ம்ம் பல்லக்கில்தான் போகவேண்டும்..இப்படி ஒரு பெண்ணை பார்பதற்கு குறைந்தது ஒரு மாதம் என்றாலும், நாற்பதாயிரம் பெண்களையும் பார்பதற்கும், பார்த்து மண முடிப்பதற்கும் 40000 மாதங்கள் ஆகிவிடும்..அப்படிப்பார்த்தால் 3333 வருடங்கள் ஆகி விடுகிறது.

முதலில் ஏழு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவு மக்கள் தொகை இருந்ததா என்றும் தெரியவில்லை. 40000 பெண்களை மணமுடிக்க வேண்டும் என்றால் ஒரு நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் அவர் மண முடித்திருக்கவேண்டும்..அப்படியென்றால் அந்த நாட்டில் வேறு ஆண்களே கிடையாதா?

சரி இவ்வளவு பெண்களை மணமுடித்தும் குழந்தை தர இயலாதவனை அந்த பெண்கள் எப்படி ஏற்றுக் கொண்டு இருந்தார்கள்.

ஏறக்குறைய 3000 வருடங்கள் கழித்து அவருக்கு தனக்கு குழந்தை பெற இயல்லது என்று தெரிந்து, செயற்கை முறையில், அதாவது ஏதோ ஒரு கனி மூலம் தன மனைவிகளுக்கு குழந்தை பெற வைக்கிறார்..

அதுவும் நான்கு மனைவிகளுக்கு மட்டுமே நான்கு குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றன...பாவம் மற்ற 39996 பெண்கள்..

சரி ராமனைக் கடவுளின் அவதாரம் என்கிறார்கள்..

அப்படியென்றால் கடவுளைப் பெற்றவன் கடவுளுக்கெல்லாம் கடவுளாக இருக்கவேண்டுமே...ஆயிரக்கணக்கில் மனைவிகள் இருந்தும் குழந்தை பெற முடியாதவன் எப்படி கடவுளாக முடியும்?

கடவுளுக்கே ஒரு முனிவர்தான் ஒரு கனியைக் கொடுத்து (அந்தகால சாமியார் போலிருக்கிறது.) குழந்தை பெற வைக்க வேண்டியுள்ளது...


இதற்கு பிறகும், தனது காதோரத்தில் லேசான நரை முடியைப் பார்த்து ஆட்சியை ராமனிடம் ஒப்படைக்க தசரதன் முடிவு செய்தானாம்.


3000 வருடங்களுக்கு பிறகுதான் அவருக்கு நரையே வந்து இருக்கிறது..

அப்படியே பார்த்தாலும் கடவுளுக்கு நரை எப்படி வரும்?

அவருக்கு இளமை முதுமை உண்டா?

தசரதன் நல்லாட்சி தந்தார் என்றும் படித்திருக்கிறேன்...ஏறக்குறைய 3000 வருடங்கள் மனைவிகளுக்கே செலவழித்தால் எப்படி ஆட்சியில் கவனம் செலுத்தி இருக்க முடியும்..மூன்றாயிரம் வருடங்களும் ஒரு நாளைக்கு ஒரு மனைவிதான் என்கிறபோது, குடும்பத்தையே சரிவர கவனிக்க முடியாது..இதில் எப்படி ஆட்சி செய்திருக்க முடியும்...?ஹ்ம்ம் தல சுத்துது..



எனக்கு தெரிந்த கணக்கை வைத்து இப்படி யோசித்திருக்கிறேன்..

யாராவது வெவரமானவர்கள் இருந்தால் கொஞ்சம் விளக்குங்களேன்..பிளீஸ்..


6 comments :

Sathish said...

இதே தான் எனக்கும் ரொம்ப நாளா சந்தேகம்... நீங்க இன்னும் விரிவா சொல்லிட்டீங்க..

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர் Sathishkumar மற்றும் வருகை தந்த அனைவருக்கும் நன்றி..

சாமக்கோடங்கி said...

ஒரே கொழப்பமா இருக்கே...

kavitha said...

போடா துலுக அன்ஜெடி கறேன் நாய்

Rajasekaran said...

kadavula petha kadavula irukkanuma appa abdul kalama pethavaru atom a kandu pudichavara ennappa...........

Unknown said...

வால்மீகியின் ராமாயணத்தில் தசரதனுக்கு மூன்று மனைவியர் தவிர வேறு மனைவியர் இருப்பதாய் எங்குமே குறிப்பிடவில்லை. தசரதனின் அந்தப் புரத்தில் நூற்றுக் கணக்கான பெண்கள் இருந்து வந்தார்கள் என்று சொல்லப் பட்டாலும், அவர்கள் எல்லாருமே மனைவியர் என்று எங்குமே குறிப்பிடப் படவில்லை. அந்தப் புரத்தின் வேலைகளைக் கவனிக்கும் பெண்கள், அந்தரங்கத் தாதிமார், மற்றும் தசரதனின் உறவின் முறைப் பெண்கள் என்ற அளவில் மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கின்றது.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?