Pages

Friday, February 25, 2011

யார் ராஜதந்திரி? கருணாநிதியா? ஜெயலலிதாவா?

தமிழக சட்ட சபை தேர்தல் நெருங்க நெருங்க - எதிர்பாராத அல்லது (பழகிப் போனதால்) எதிரிபார்த்த சம்பவங்கள் நிறயவே சம்பவங்களும், கேலிக்கூத்துகளும், சந்திப்புகளும் நடைபெறுவதைக் காணலாம்.


சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாராலும் வெறுக்கப்பட்ட ஒரு கட்சி இருந்ததென்றால் அது டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க தான்.

ஆரம்ப காலங்களில் மரங்களை வெட்டியே தமது கட்சியை வளர்த்த ராமதாஸ், அதன் பிறகு மரம் விட்டு மரம் தாவும் வானரம்போல ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு நிலையை எடுக்க ஆரம்பித்தார்.

ஒரு தேர்தலில் அவருக்கு கருணாநிதி அண்ணனாகவும், அடுத்த தேர்தலில் ஜெயலலிதா சகோதரியாகவும் தென்படுவார்.

இவரது இந்த சந்தர்ப்பவாத அரசியலால் மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பா.ம. க. இன்று கல்யாணப் பத்திரிகை கொடுக்கப்போய் தி.மு.க தலைவரிடம் 31 இடங்கள் பெற்று வந்து இருக்கிறது.

இரண்டு நாடாளுமன்ற தேர்தல்கள், ஒரு சட்டசபைத்தேர்தல் என்று தொடர்ந்து கூட்டணி வைத்திருக்கும் காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை இழுபறியாக இருக்கும் நிலையில் - துரோகம் செய்துவிட்டு சென்ற பா.ம.க வுக்கு எந்தவித அவகாசமும் இல்லாமல் தொகுதிகள் பிரித்து கொண்டுத்து இருப்பது ஒரு ராஜதந்திரமாகுமா?

ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக பெரும் நெருக்கடிகளை சந்தித்துவரும் கருணாநிதிக்கு காங்கிரசின் கூட்டணி உண்டா இல்லையா என்று குழப்பத்தின் காரணமாக, ராமதாசை தன்னுடன் வைத்துகொள்ள முடிவெடுத்ததில் முட்டாள்தனமான விளைவே இந்த அவசர தொகுதிப் பங்கீடு.

அதுபோல விடுதலை சிறுத்தைகளுக்கும் கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ம.க., விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகள் தமிழக நலனைத்தவிர்த்து, தமிழீழ ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கான பகிங்கரமான ஆதரவாளர்கள்.

இவர்களுடன் கூட்டணிவைக்கும் திமுகவுடன் காங்கிரஸ் சேருமா எனபது சந்தேகமே. அப்படி சேர்ந்தாலும் அதுவும் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியே.

அப்புறம் அதிமுக..

இந்தியாவின் நலனினோ, தமிகத்தின் நலனிலோ சிறுதும் அக்கறை இல்லாத வைகோ என்பவனை அடிமையாக வைத்திருந்தாலும், ஜெயலலிதாவும் சாதுர்யமாக காங்கிரசின் கூட்டணியை விரும்புகிறார்.

அதேபோல கருணாநிதி போல அவசரகோலத்தில் முடிவெடுக்காமல், கூட்டணியை பலமாக்க விஜயகாந்த் போன்றோர்களுக்கு முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தகுதிக்கேற்ப தொகுதிகள் பங்கீடுகள் நடைபெறுகின்றன.

கடந்த ஐந்தாண்டுகளாக, சொகுசு பங்களாக்களில் ஒய்வு பெற்றும், வெறும் அறிக்கைப் போர்களை நடத்தியும் வந்த ஜெயலலிதா, இந்த ஐந்தாண்டு காலங்களில் அதிமுகவின் உண்மையான விசுவாசிகளாக இருந்த பலரை இழந்திருக்கிறார்.

அதையெல்லாம் கடந்து வெற்றிபெற பலமான கூட்டணி அமைப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இதுவரை தனித்து ஆட்சி என்று முழங்கி வந்த விஜயகாந்த், தற்சமயம் சோர்ந்துபோய், ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பது அவரது நம்பகத்தன்மைக்கு விழுந்த ஒரு கரும்புள்ளிதான்.

குடிகாரன் என்றும் இந்த ஜெயலலிதாவால் வர்ணிக்கப்பட்ட இந்த தன்மானத் தமிழன் சீட்டுக்களுக்காகவும், தமது கட்சியை தக்கவைத்துக்கொள்வதர்காகவும் இவ்வளவுதூரம் கீழே இறங்கி வந்திருப்பது - எல்லாராலும் வித்தியாசமான அரசியலை தருவார் என்ற நம்பிக்கையை தகர வைத்துவிட்டது.

திமுக கூட்டணியிலிருந்து விலகவும் முடியாது அதே சமயம் அவர்களை மிரட்டியும் வைக்க வேண்டும் என்ற இரட்டை நிலைப்பாடுடன், ராஜா கைது, கலைஞர் டி வி ரெய்டு போன்ற மிரட்டல்களை கையாண்டு அதிக சீட்டுகளைப் பெற முயல்கிறது காங்கிரஸ்.

இவரகளது இந்த அரசியல் விளையாட்டுக்களை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே கவனித்துக் கொண்டிருக்கிறது.

இதில் யார் ராஜதந்திரி என்பதை விட, ஓட்டளிக்கப் போகும் நாம்தான் சிறந்த ராஜதந்திரி என்று இவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்.

அதைவிடுத்து, காசுக்கும், குவாட்டருக்கும் ஓட்டுப் போடும் பொறுக்கிகள் மட்டுமே ஓட்டுப் போட்டால், அரபு நாடுகளைப் போன்ற எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே நல்லதொரு அரசு உருவாகும்..





45 comments :

சக்தி கல்வி மையம் said...

சரியான சாட்டையடி பதிவு...

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

தனி காட்டு ராஜா said...

Good one :)

sathishsangkavi.blogspot.com said...

Very Good Post...

Unknown said...

rendum bannaadaigalthaan enna seivadhu
azifair-sirkali.blogspot.com

Unknown said...

இதில் யார் ராஜதந்திரி என்பதை விட, ஓட்டளிக்கப் போகும் நாம்தான் சிறந்த ராஜதந்திரி என்று இவர்களுக்கு நிரூபிக்க வேண்டும்.//
யாருக்கு ஓட்டு போடலாம் என்பது தானே எல்லோர் முன்னிலும் உள்ள பிரச்சனை. எல்லோருமே ஊழல் வாதிகள்தான். கேப்டன் ஆட்சியை மட்டும் இன்னும் பார்க்கவில்லை. ராமதாஸ் ஆட்சியை பார்க்கவே வேண்டாம் அவர் சுயநலவாதி.

vels-erode said...

நான் என்னமோ நினைச்சேன்…..பரவால்ல, சரியான கணிப்புத்தான் உங்களுது…

வசந்தா நடேசன் said...

//அதன் பிறகு மரம் விட்டு மரம் தாவும் வானரம்போல //ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக பெரும் நெருக்கடிகளை சந்தித்துவரும் கருணாநிதிக்கு காங்கிரசின் கூட்டணி உண்டா இல்லையா//இந்தியாவின் நலனினோ, தமிகத்தின் நலனிலோ சிறுதும் அக்கறை இல்லாத வைகோ என்பவனை அடிமையாக வைத்திருந்தாலும், ஜெயலலிதாவும் சாதுர்யமாக//விஜயகாந்த், தற்சமயம் சோர்ந்துபோய், ஜெயலலிதாவுடன் //

எதார்தங்களை அழகாக அலசியிருக்கிறீர்கள்.. தொடருங்கள். நன்றி..

தமிழ்மலர் said...

நல்ல பதிவு

ஜீவன்சிவம் said...

எப்படி யோசித்து ஓட்டு போட்டாலும் இதில் எதோ ஒரு பன்னாடைக்கு தானே போடவேண்டும். வேறு வழியே நமக்கில்லையே..

rangarajan said...

Super.. The day is not far when we are going to rise like Arabs..

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்ல பதிவு

மர்மயோகி said...

@ வேடந்தாங்கல் கருண்
நன்றி திரு வேடந்தாங்கல் கருண் அவர்களே

மர்மயோகி said...

@ தனிக்காட்டு ராஜா..
நன்றி திரு தனிக்காட்டு

மர்மயோகி said...

@ சங்கவி

நன்றி சங்கவி..

மர்மயோகி said...

@ AZIFAIR- SIRKALI

நன்றி திரு AZIFAIR-SIRKALI

மர்மயோகி said...

@ கே.ஆர். விஜயன்

நன்றி கே.ஆர். விஜயன் அவர்களே

உங்கள் கருத்து சரி என்றாலும், விஜயகாந்திடம் இருந்த உறுதி போனபிறகு அவர்மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது..

மர்மயோகி said...

@ velumani1

நன்றி திரு velumani1 அவர்களே..ஆனா நீங்க என்ன நெனைச்சீங்கன்னு சொல்லவே இல்லையே..

மர்மயோகி said...

@ வசந்தா நடேசன்

நன்றி திரு வசந்தா நடேசன்

மர்மயோகி said...

@ தமிழ்மலர்

நன்றி தமிழ்மலர்

Jayadev Das said...

//குடிகாரன் என்றும் இந்த ஜெயலலிதாவால் வர்ணிக்கப்பட்ட // நேற்றிரவு கொஞ்சம் ஜாஸ்தியா போயிருக்கும்னு நினைக்கிறேன், ..............நான் தூக்கத்தைச் சொன்னேன் என்று கலைஞர் ஒரு முறை சொன்னார், அதற்க்கு மிரண்டு போய் இந்தம்மா எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக நான் வாழ் நாளில் குடியைத் தொட்டதே கிடையாது என்று அலறியடித்துக் கொண்டு அறிக்கை விட்டார். அம்மா மூஞ்சியைப் பாத்தா லைட்டா அடிப்பாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஒரு குடிகாரி இன்னொருவரை குடிகாரன் என்று சொல்வது நகைப்பாக இருக்கிறது.

Jayadev Das said...

நம்ம நாட்டில் கிட்டத் தட்ட எல்லா பயல்கலுமே சந்தர்ப்ப வாதிகள் தான். இங்கே ஜெ. கருணா ரெண்டு பேருக்குமே எந்த முடிச்சவிக்கி மொள்ளமாரி வேலை செய்தாவது ஜெயிக்க வேண்டுமென்றுதான் நினைக்கிறார்களே தவிர, நீதி நேர்மை, மக்கள் தொண்டு என்று யாரும் இல்லை. இந்தம்மா வந்தால் சசிக் கலா குடும்பமும் சாதிசனமும் கொழுக்கும், கருணாநிதி வந்தால் அவர் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள கொழுக்கும், மக்கள் வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு சாவதை வழக்கம் போல செய்து கொண்டே இருப்பார்கள். என்றாவது விழித்து ரெண்டு நாய்களையும் ஓட ஓட விரட்டுவார்கள், அப்போது தமிழகம் உருப்படும்.

மர்மயோகி said...

@ ஜீவன் சிவம்

நன்றி திரு ஜீவன் சிவம்..

என்ன செய்யலாம்? கட்சி பேதம் பார்க்காமல் நமக்கு நல்லவர் என்று தெரிந்து ஓட்டுப் போடலாம்..அல்லது "O" பிரிவை பயன்படுத்தலாம்

மர்மயோகி said...

@ rangarajan

நன்றி திரு rangarajan ..

பார்க்கலாம்

மர்மயோகி said...

@ ரஹீம் கஸ்ஸாலி

நன்றி திரு ரஹீம் கஸ்ஸாலி அவர்களே

Vidiyal said...

yes, your right.....

மர்மயோகி said...

@ jayadeve das

நன்றி திரு jayadev das

ரொம்ப கோபமா இருக்கீங்க போல..இந்த கோபத்தை தேர்தலில் காட்டுங்க சார்..

"ராஜா" said...

நல்லா இருக்கு உங்க கருத்துக்கள் ... மக்கள் என்ன பண்ண போகிறார்கள் என்பது தேர்தல் முடிவுள்களில் இருந்துதான் தெரியும் ...

அது சரி உங்க வாக்கு வரும் தேர்தலில் யாருக்கு இருக்கும்?

மர்மயோகி said...

நன்றி திரு ராஜா அவர்களே
எங்கள் தொகுதியில் யார் நல்ல கேண்டிடேட் என்று பார்ப்போம்..அதாவது எரியிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்துதான் வாக்களிக்கவேண்டும்

Accountants Association said...

இந்தியாவின் நலனினோ, தமிகத்தின் நலனிலோ சிறுதும் அக்கறை இல்லாத வைகோ என்பவனை அடிமையாக வைத்திருந்தாலு

திரு மர்மயோகி அவர்களே,
எழுத்து நாகரீகம் எல்லா எழுத்தாளர்களுக்கும் மிக முக்கியமானது. அவன் இவன் என்ற சொற்களை தவிக்கவும். நன்றி.

Saravanan.

Unknown said...

யாரு ராஜா தந்திரி ?
யாரு ராஜ முந்திரி ?
- இது தான் சரியான தலைப்போன்னு தோணுது !

nirvana said...

India’s rules and regulations pertaining to law and elections are mostly derived from what the English people setup hundred years ago. People of today’s India have only two choices when electing candidates. Corrupted & least corrupted candidate. Obviously we will have to elect the least corrupted. Unless the whole setup is changed, India will continue to be like this for 1000 more years to come. FYI Indians won’t revolt like the Egyptians or Tunisians as we have got too many differences against us each other to unite and fight for one common cause. This has been the strength of the politicians so far and they see that people remain the same.

The only way to reform politics and elections is to bring some eligibility requirements for candidates. That’s the only way to filter the dirt and shouldn’t be even given a chance to contest. Even when applying for a LKG admission for a 3 year old kid; they are being fully profiled, I can give tons of examples like this where there are eligibility requirements (Peon’s job - IAS officers). As far I am concerned the below should be some minimum qualifications for candidates.

- Educated to Degree level

- Languages known (Tamil, English for MLA / Tamil, English, Hindi for MP). For any Businessman knowing the local language is an advantage in his business and I am not against Hindi here as we don’t want Dummies like Azhagiri warming up the Parliament benches.


- Worked in a service Industry for minimum 15 years. (Doctors, Engineers, Teachers, Police, Military, NGO’s etc.) The reasons for stressing here for 15 years for experience are that these are the common people who live among common people. They will certainly understand the needs for the people. I also believe15 years of hard work would have shaped them to be a better human being.

- No criminal /Fraud convictions.

- Strictly no one from Entertainment industry unless they have really contributed to social welfare activities of a NGO or business which strives to help people in the following areas like Education, Medical facilities, Providing employment opportunities etc. Also providing they fulfil the above conditions. Conducting marriages for 100 -1000 couples, Building marriage halls, 5 star hotels, Jewellery business, Giving freebies like sarees, dhotis, quarter,biryani won’t be considered as social welfare activities.

- People who served as MLA or MP for 2 terms /10 years shouldn’t contest unless people elect them unanimously for outstanding service. This will indict fear among the MLA’s and MP’s and will be prevent them from involving in scandals and scams. Even bank employees are often transferred between branches as employees can become corrupted. I believe too much money & power can corrupt anyone. Power shouldn’t remain in one’s hands for too long. Even good people can go astray cos of friends and relatives who influence them for their personal gain.

- Everything should be based on Merit & qualification and not on the candidate’s caste/religion. Also the elected candidate should perform and serve to all sects of people irrespective of caste, religion & work.

- Proven results have to be shown in one’s department during their tenure. Eg: A minister in charge of Electricity department should have performed in a way that there has been no disruption in electricity, steps should have been taken against shortages, alternatives and efficient consumption measures must have been implemented.

Aruna said...

திரு மர்மயோகி அவர்களே,
எழுத்து நாகரீகம் எல்லா எழுத்தாளர்களுக்கும் மிக முக்கியமானது.

nonsense

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html

கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு

thennarasu said...

Nagareegam illamal avan Ivan ena vimarsikkum ungalukku ullathai vida viko virku thesapakthi athikam,kadantha sila therthalkalil kootanikku yaaravathu kidaippargalaa ena naakkai thongapottukkondu naayaay alaiyum vakuppu vaatha katchiyai patri yeen oruvari kooda ezhuthavillai.

மர்மயோகி said...

@Accountant Association
நன்றி Accountant Association அவர்களே
தமிழ்நாட்டில் எல்லா சவுகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு, விடுதலைப் புலிகள் நலன் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதாலும், ஒரு தடை செய்யபட்ட இயக்கத்திற்கு ஏன் இவ்வளவு வீரியாமான ஆதரவு? கொடுத்துக்கொண்டிருக்கிறான் என்பதாலும் என் நிலையை மாற்றிக்கொள்ள முடியாது..
எனினும் ஆலோசனைக்கு நன்றி..

மர்மயோகி said...

@ ஆகாய மனிதன்

நன்றி ஆகாய மனிதன்..நீங்கள் சொன்னதுகூட பொருந்தும்தான்..பார்ப்போமே..

மர்மயோகி said...

நன்றி திரு aruna

வைக்கோவின் நிலைப்பாட்டில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை...

மர்மயோகி said...

@ நிலவு

நன்றி நிலவு

மர்மயோகி said...

@ தென்னரசு

நன்றி திரு thennarasu

வைக்கோ ஒரு தடை செய்யப்பட பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளன்.

நீங்கள் சொல்லும் கட்சி பயங்கவாத கட்சியான பார"தீய" ஜனதா கட்சி..அந்த பயங்கர மிருகங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளலாமா ?

Unknown said...

ARASIALLA ETHALLAM SATHARANAM APPA...

மர்மயோகி said...

நன்றி Supreme

சாமக்கோடங்கி said...

என் கோவத்தை தேர்தலில் காட்டுவேன்..

மர்மயோகி said...

நன்றி திரு சாமக்கோடங்கி

பிரேமி said...

நல்ல பதிவு, உங்களின் நியாயமான தாக்கம் தெரிகிறது. நல்ல பதிவு, உங்களின் நியாயமான தாக்கம் தெரிகிறது. "பச்சோந்திகள் அதிகம் வாழும் நாடு நம்நாடுதான்"!

மர்மயோகி said...

நன்றி சந்தோஷி அவர்களே.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?