Pages

Tuesday, March 8, 2011

கருணைக் கொலை வேண்டும்!..தூக்குத்தண்டனை வேண்டாம்....!!!


மும்பை மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றியவர் அருணா என்கிற பெண். ஏறக்குறைய 36 ஆண்டுகள் கோமா நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் அவரை கருணைக் கொலை செய்ய அனுமதி கேட்டு வந்த வழக்கை தள்ளுபடி செய்து இருக்கிறது நீதிமன்றம்..

அதோடு, அவரை கருணைக் கொலை செய்யவேண்டாம், ஆனாலும், அவரை காப்பாற்றும் முயற்ச்சியில் மருத்துவ உபகரணங்களின் உபயோகத்தை குறைத்து இயற்கையாக மரணிக்க வைக்கவேண்டும் என்பதுபோல ஒரு தீர்ப்பு..இதுவும் ஒரு கொலை போன்றதுதான்..



அருணா என்ற அந்த நர்சை, அந்த மருத்துவனமையில் பணியாற்றிய ஒரு கொடூரன், கற்பழிக்க முயற்சி செய்கிறான்..ஆனால் அந்த பெண் மாதவிடாய் பருவத்தில் இருந்ததால், அவளைக் கொடூரமான முறையில் சங்கிலியால் கட்டிவைத்து, தவறான வழியில் புணர்ந்திருக்கிறான்.

இந்த சம்பவத்தால் உடலாலும், மனதாலும் பாதிக்கப் பட்ட அந்த பெண், இன்றுவரை படுத்த படுக்கையிலேயே கோமா நிலையில் மரணத்தை எதிர்நோக்கி இருக்கிறாள்..

இவளை கருணைக் கொலை செய்வதற்கு அனுமதி கேட்கும் அமைப்புகள், இது போன்ற குற்றங்களுக்காக தூக்குத்தண்டனை விதிக்க சொல்வார்களா?

மரணதண்டனையே கூடாது என்று சொல்லும் மனித உரிமை மேதாவிகள் என்ன சொல்கின்றன?




13 comments :

சக்தி கல்வி மையம் said...

நம்மால் என்னசெய்ய முடியும்.. வருத்தபடுவதை தவிர..

Unknown said...

இப்படி சித்ரவதை படுவதை விட கருணைக்கொலையே மேல் நண்பா

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

செருப்பால் அடித்தது போல ஒரு கேள்வி கேட்டு ஒரு விழிப்புணர்வு பதிவு போட்டதுக்கு கை கொடுங்க சகோ.

இங்கே மனிதநேயம் எப்போதோ கொலை செய்யப்பட்டுவிட்டது சகோ.

மிக்க நன்றி சகோ.மர்மயோகி. உயர்ந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் இப்பதிவு.

???நம்மால் என்னசெய்ய முடியும்.. வருத்தபடுவதை தவிர..???--இல்லை சகோ.சக்தி. இதுபோல பதிவு போடலாம்.
இல்லையேல்.............
------------------------------------------------
செயற்கையான ஒரினச்சேர்க்கை தொழில் சட்டப்படி சரியாம். இயற்கையான விபச்சார தொழில் சட்டப்படி தவறாம்.(என்ன ஒரு தெளிவு..?!?!?)

ஓர் ஆண், ஆயிரம் சின்னவீடு வைத்துக்கொள்ளலாமாம், லட்சம் தடவை ஆண் விபச்சாரம் செய்யலாமாம். ஆனால், சட்டப்படி ஒரே ஒரு இரண்டாவது மனைவி மட்டும் கூடவே கூடாதாம். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, மஞ்சள் நோட்டீஸ் விட்டு ஜீவனாம்சம் தராமல் தப்பித்து, நடுத்தெருவிற்கு அனுப்பலாமாம். இது எல்லாம் ஒரு சட்டம்.

பாய்ஃபிரண்டின் பர்ஸிலிருந்து வேண்டிய அளவு பணத்தை முன்பே (முன்பணம்?) கறந்துகொண்டுவிட்டு லாட்ஜ்(அதுவும் அவன் செலவு) சென்றால் அது சட்டப்படி விபச்சாரம் இல்லையாம். ஆனால், 'எல்லாம் முடிந்த பின்' பணம் மட்டும் கேட்டு விட்டால்... அதுதான் விபச்சாரமாம். (?!?!?!)

பசுமாட்டை அது பால் தராவிட்டாலும் தீனி போட்டு சாகும்வரை காப்பாற்ற வேண்டுமாம். ஏழை குடியானவன் சோற்றுக்கு லாட்டரி அடித்து தூக்கு மாட்டலாமாம். ஆனால், பசுவை மட்டும் கசாப்புக்கடைக்கு விற்று காசு பார்த்து அடுத்த பசுமாட்டை வாங்கி ஏழைபால்க்காரன் பிழைத்து மட்டும் விடக்கூடாதாம்.

ஒருத்தனை வாகனத்தில் மோதி கொன்று விட்டு போலீசில் சரணடைந்து விட்டால் அது ஜஸ்ட் விபத்துதானாம். தண்டனை இல்லையாம். ஆனால், போலீஸ் கண்டுபிடித்தால் அதுதான் கொலையாம்.

ஒரு ரூபாய் கொள்ளை அடித்தால்... அவன் திருடனாம். ஆனால், கோடிக்கனக்கான ரூபாய் கொள்ளை அடித்தால் அது ஊழலாம். விசாரணை கமிஷன் நடக்குமாம்.

பழிவாங்க ஒருத்தனை கொன்றால் கொலையாம். தண்டனையாம். அதையே ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தால்...(டெல்லி, வடமாநில சீக்கியர்கள் கொலை, குஜராத் முஸ்லிம்கள் கொலை) விசாரணையோ கைதோ தண்டனையோ கிடையாதாம். அது ரியாக்ஷனாம்.

கள் இறக்கி விற்க தடையாம். ஆனால், டாஸ்மாக்..???--அதுதான் தமிழக அரசின் ஸ்பான்சர்.

சிகரெட் பிடிப்பது தனிமனித உரிமையாம். ஆனால், அந்த நச்சுப்புகை கலக்காத தூய காற்றை சுவாசிக்க விரும்புவது தனி மனித உரிமை இல்லையாம்.

கருவில் வளர்வது ஆணா பெண்ணா என்று அறிந்து கொள்ளும் ஆவல் பெற்றோருக்கு சட்டப்படி தவறாம். ஆனால், அந்த குழந்தையை கருவிலேயே அபார்ஷன் பண்ணி கொல்ல சட்டப்படி தடை இல்லையாம்.

யாரும் பார்க்காமல் நஷ்டப்படும் விளையாட்டுக்கள் எல்லாமே அரசுத்துறையாம். கோடி கோடியாய் கொட்டும் கிரிக்கெட் மட்டும் தனியார் வாரியமாம்.

இதுபோலத்தான், பாதிக்கப்பட்ட நல்லவருக்கு கருணைக் கொலை வேண்டுமாம்...! ஆனால், அதற்கு காரணமான குற்றவாளிக்கு மட்டும் தூக்குத்தண்டனை வேண்டாமாம்....!!! அவனுக்கு 'ஆயுள் தண்டனை'(?) கொடுத்து... 'மாமியார் வீட்டில்', மக்கள் காசில் மனி அடிச்சா சோறு...! எல்லா வகை தினசரிகள், வாரப்பத்திரிக்கைகள், வாராவாரம் சினிமா...! தலைவர் பிறந்தநாளில் ஏழாண்டுகள் கழித்து விடுதலை வேறு...!

போங்கடா நீங்களும் உங்க மொக்கை சட்டங்களும்...!!!
------------------------------------------------
................இதுபோல பின்னூட்டமாவது போடலாமே... சகோ சக்தி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//இப்படி சித்ரவதை படுவதை விட கருணைக்கொலையே மேல் நண்பா//---இப்படி நோயாளி ஒருத்தர் நினைத்து அவரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அது குற்றமாம். ஆனால், டாக்டர்கள் கொன்றால் அது கருனைக்கொலையாம்... தவறில்லையாம்... என்ன ஒரு தெளிவான பார்வை..!
----இப்படியும் கேட்கலாம்.

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள்

திரு வேடந்தாங்கல் கருண் அவர்களுக்கு நன்றி..

மர்மயோகி said...

நன்றி விக்கி உலகம்
ஆனால் ஒரு உயிரைக் கொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை...
கொலைகாரனுக்கான - அரசின் தண்டனையைத் தவிர

மர்மயோகி said...

நன்றி முகம்மது ஆஷிக் அவர்களே
அடேங்கப்பா..
இதையே நீங்கள் ஒரு பதிவாக போட்டிருக்கலாமே சகோதரரே..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//இதையே நீங்கள் ஒரு பதிவாக போட்டிருக்கலாமே சகோதரரே..//---சகோ.மர்மயோகி, மத சம்பந்தமான விஷயம் தவிர மற்ற அனைத்திற்கும், மேற்கத்திய உலகையே பின்பற்றும் நம் சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தில் மட்டும் அப்படி செய்யாமல், சுயமாய் சிந்தித்து நல்ல தீர்ப்பை வழங்கியது பாராட்டத்தக்கது. மாற்றி மட்டும் தீர்ப்பளித்து இருந்தால்... சூடாக பதிவு போட்டு ரவுண்டு கட்டி இருந்திருப்பேன்.

ஆனால், அந்த anal sex நாய்... ஏழு வருஷம் நம்முடைய காசில் சோறு திண்ணுட்டு எப்போதோ வெளியே போய் விட்டதே. அந்த நாய்க்கு ஒரு மரண தண்டனை கேட்க துப்பில்லையே... பெட்டிஷன் போட்ட அந்த எழுத்தாளருக்கு...! (பதிவு போட்டால் இவரை எதிர்த்துதான் போட வேண்டும்...இவர் பிரபலமாக நாம் உதவிடக்கூடாது சகோ. )

இவ்விஷயத்தில், அந்த நர்ஸின் குடும்பமே அவரை கைகழுவி 'சீக்கிரமா செத்தால் போதும்' என்று மறந்துவிட்ட நிலையில், அந்த மும்பை KEM ஹாஸ்பிடல் Dean-ம் மற்ற சக நர்சுகளும் அவரை குடும்பத்தில் ஒருவராய் கன்னுங்கருத்துமாய் 37 வருடங்களாய் கவனிக்குக்கொள்வதும், இந்த தீர்ப்பினால் சந்தோஷப்பட்டு
'அருணா ஜிந்தாபாத்''அருணா ஜிந்தாபாத்'என்று வெற்றி பெற்ற மகிழ்வுடன் அவர்கள் கோஷம் போட்டதும்... நம் நாட்டில் மனிதம் இன்னும் செத்து விடவில்லை என்றே நமக்கு காட்டுகிறது. அதுவரை இதுபோல நல்ல தீர்ப்புகள் வரும் என்றே நம்புவோம். நன்றி சகோ.

தமிழ்வாசி பிரகாஷ் said...

பாவம் அந்த பெண்... அவளின் துன்பம் நம் சட்டத்திற்கு தெரியவில்லை.

வசந்தா நடேசன் said...

//ஆனால், அந்த anal sex நாய்... ஏழு வருஷம் நம்முடைய காசில் சோறு திண்ணுட்டு எப்போதோ வெளியே போய் விட்டதே. அந்த நாய்க்கு ஒரு மரண தண்டனை கேட்க துப்பில்லையே..//

இதற்காக போராடுவதுதான் நியாயம்..

calmmen said...

????????/

மர்மயோகி said...

நன்றி திரு முஹம்மது ஆஷிக்
நன்றி திரு வேடந்தாங்கல் கருண்
நன்றி திரு விக்கி உலகம்
நன்றி திரு தமிழ் வாசி பிரகாஷ்
நன்றி திரு வசந்தா நடேசன்
நன்றி திரு karukirukkan (?????????)
மற்றும் வருகைதந்த அனைவருக்கும் நன்றி..

Adirai Media said...

வைகோவுக்கு வைக்கோல்ன்னு பேரு .. ஹீ ஹீ ஹுப். தாங்கலே... யோகி .அப்புடியே ராமதாசுக்கு ராஸ்கோல்ன்னு வச்சா பொருத்தமாயிருக்கும் ..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?