Pages

Wednesday, March 9, 2011

அந்த "மூன்று" நாட்கள்..

தினசரிகள் :


திமுக காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இழுபறி..காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்கிறது..


கே.வி.தங்கபாலு :

காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது..தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவை அன்னை சோனியா அறிவிப்பார்...

இ.வி.கே.எஸ். இளங்கோவன்:

திமுக ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டது..மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை.. ஆட்சியில் பங்கு வேண்டும்..


கருணாநிதி :

கூட்டணி குறித்து மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது..

ஜெயா டிவி.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி..

குமுதம் ரிப்போர்டர் - ஜூனியர் விகடன் - நக்கீரன் (ஆபாச பத்திரிக்கைகள்)

விஜய் ஆதரவு யாருக்கு..

அஜித் திரிஷா ஜோடி

ரஜினிக்கு ஜோடி யார்?



கருணாநிதி:

கேட்டதை கொடுத்தும் இன்னும் கேட்பது ஏன்?



கே.வி.தங்கபாலு :

காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது..தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவை அன்னை சோனியா அறிவிப்பார்...



இ.வி.கே.எஸ். இளங்கோவன்:

திமுக ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டது..மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை..ஆட்சியில் பங்கு வேண்டும்..



ஜெயா டிவி.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி..



கருணாநிதி:

முதலில் 51 தொகுதியில் ஆரம்பித்து, 60 தொகுதி வந்து பிறகும் 63 தொகுதிகள் வேண்டும் என்றும் அதுவும் அவர்கள் கேட்கும் தொகுதிகள்தான் வேண்டும் எனபது அவர்கள் நமது கூட்டணியை விரும்பவில்லை என்று தெரிகிறது..



ஜெயா டிவி.

தி மு க - காங்கிரஸ் கூட்டணி முறிந்தது..



பிரணாப் முகர்ஜி:

காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்கிறது..



கே.வி.தங்கபாலு :

காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது..தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவை அன்னை சோனியா அறிவிப்பார்...



இ.வி.கே.எஸ். இளங்கோவன்:

திமுக ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டது..மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை.. ஆட்சியில் பங்கு வேண்டும்..



கருணாநிதி:

மத்திய அரசுக்கு, பிரச்சினையின் அடிப்படையில் திமுக ஆதரவு அளிக்கும்



எம்.ஜி ஆர் படங்களில் ரிக்ஷாக்காரனாக சென்னை பாஷை பேசி நடிக்கும் எம் ஜி. ஆர் ஜால்ரா சோ..(அரசியல் நோக்கராம்...) :

கக்க்கும்....ஸ்பெக்ட்ரம் விசாரணையில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள கருணாநிதி மத்திய அரசை மிரட்டுகிறார்.



ஜெயலலிதா காலத்தில் தரைப்படைகளின் அந்தரங்க உறுப்புகளை தரிசித்தவரும், விளக்குமாறு அடி வாங்கியவருமான இன்னொரு அரிசியல் புரோக்கர் சுப்பிரமணிய சாமி..

அடுத்த வாரம் சி.பி.ஐ கனிமொழி கைது செய்யாப்போவுது. அதற்க்கு அடுத்த வாரம் ராசாத்தி அம்மாவை விசாரிக்க போவுது இது சம்மந்தமா ஒபாமா கூட பேசிட்டேன்..அதுக்குதான் கருணாநிதி சென்ட்ரல் கவேர்மெண்டை மெரட்டுது..



தினசரிகள்..:

தி மு க அமைச்சர்கள் ராஜினாமா..நாளை பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுக்கிறார்கள்..


பிரணாப் முகர்ஜி

காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்கிறது..



கே.வி.தங்கபாலு :

காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது..தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவை அன்னை சோனியா அறிவிப்பார்...



இ.வி.கே.எஸ். இளங்கோவன்:

திமுக ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டது..மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை.. ஆட்சியில் பங்கு வேண்டும்



வைக்கோ(ல்) (மனதுக்குள்)

ஆஹா...காங்கிரஸ் அதிமுக வுக்கு வந்துடுமோ..அப்போ நமக்கு கிடைக்கப்போகிற ஒரு சீட்டுக்கும் ஆப்புதானா ...2007 ம வருஷம் அம்மா கிட்டே அப்பாயின்ட்மென்ட் வாங்கி இந்த வருசமாவது பாத்துடலாம்னு பாத்தா முடியாது போல இருக்கே..யாழ்பாணத்துக்கு போய்ட வேண்டியாதுதான்..நம்ம பருப்பு இனி வேகாது..



தா. பாண்டியன் (மனதினுள்..)

ஆஹா நமக்கும் அம்மா ஆப்பு வெச்சுட்டாங்க ...இனிமே கருனாநிதிய பாக்கவேண்டியதுதானா..?



விஜயகாந்த்.(மனசுக்குள்).:



41 சீட் தானா..இல்லே 14 சீட்டா..நம்ப முடியலே..நைட் நாம ஸ்டெடியா இருந்தோமா...அப்புறம் எலெக்சன் முடிஞ்சு இந்த அம்மா நாம குடிச்சுட்டுதான் மீட் பண்ணேன்னு அறிக்கை கொடுக்கப் போகுது..



தினசரிகள்..:



தி.மு.க அமைச்சர்கள் டெல்லி பயணம்..இன்னும் ஒருநாள் அவகாசம் காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது..ஸ்டாலின் அறிவிப்பு..



பிரணாப் முகர்ஜி

காங்கிரஸ் தி.மு.க கூட்டணி தொடர்கிறது..



கே.வி.தங்கபாலு :

காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது..தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வருகிறோம். விரைவில் நல்ல முடிவை அன்னை சோனியா அறிவிப்பார்...



இ.வி.கே.எஸ். இளங்கோவன்:

திமுக ஆட்சியில் ஊழல் மிகுந்து விட்டது..மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை.. ஆட்சியில் பங்கு வேண்டும்



கி.வீரமணி.

கருணாநிதி துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். உலகெங்கும் உள்ள தமிழர்களும் இன்னும் வெவ்வேறு கிரகங்களில் உள்ள தமிழர்களும் இதை வரவேற்றுள்ளனர்..தமிழனின் தன்மானம் வென்றுள்ளது...



டாக்டர் ராமதாஸ்.:

(பயத்துடன்) பா.ம.க சீட்டை குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.. குறிப்பிட்ட 31 இடங்களிலும் பாமக போட்டியிடும். திமுக கூட்டணி அமோக வெற்றி பெரும்..



சுப வீரபாண்டியன்.

கலைஞர் தன்மானத்துடன் காங்கிரஸ் உறவை முறித்துள்ளார்..திமுக கூட்டணி வெற்றிபெற பிரச்சாரம் செய்வேன்..



திருமாவளவன் :

திமுக கூட்டணி வலுவாக உள்ளது..அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம்..



ஜெயலலிதா : (மனதினுள்)

காங்கிரஸ் வந்தா இந்த வைக்கோலையும் கம்யூனிஸ்டுகளையும் கலட்டி விட்டுடலாம்..தேவை இல்லாம இந்த குடிகாரனுக்கு வேற 41 சீட்டு கொடுத்தாச்சே... என்ன பண்றது..?



கருணாநிதி :

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, கூட்டணி தர்மம் ஆகியவற்றை மனதில் கொண்டு காங்கிரசுக்கு 63 தொகுதிகள் கொடுக்கிறோம்..

பாமக ஒன்றும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஒன்றும் விட்டுக் கொடுத்திருக்கின்றன..



மக்கள் :

ஐயா கலைஞரே..நீங்கள் தொகுதியை மட்டுமா விட்டுக் கொடுத்து இருக்கிறீர்கள்...தன்மானம் எங்கேயா போச்சு?






7 comments :

கவிதை வீதி... // சௌந்தர் // said...

63 கொடுத்தது எல்லாம் மிரட்டுலுங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தலைவர் தன்மானத்தை பார்த்தா..
ஊழல் கேஸில் எல்லாம் உள்ள போக வேண்டியதுதான்..
எல்லாம் ஒரு கணக்குதாங்க..

சக்தி கல்வி மையம் said...

ஆகா... அன்னும் சிரிக்கிட்டே இருக்கேன்.

தனி காட்டு ராஜா said...

//உலகெங்கும் உள்ள தமிழர்களும் இன்னும் வெவ்வேறு கிரகங்களில் உள்ள தமிழர்களும் இதை வரவேற்றுள்ளனர்//

:))

வசந்தா நடேசன் said...

உலகத்தை நினைச்சேன், சிரிச்சேன்.. இதை படிச்சி இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன்.. வைக்கோல் தான்

//அப்போ நமக்கு கிடைக்கப்போகிற ஒரு சீட்டுக்கும் ஆப்புதானா ...2007 ம வருஷம் அம்மா கிட்டே அப்பாயின்ட்மென்ட் வாங்கி இந்த வருசமாவது பாத்துடலாம்னு பாத்தா முடியாது போல இருக்கே..// சூப்பர் என்று பார்த்தால்,

கேப்டன் அவரை //41 சீட் தானா..இல்லே 14 சீட்டா..நம்ப முடியலே..நைட் நாம ஸ்டெடியா இருந்தோமா...அப்புறம் எலெக்சன் முடிஞ்சு இந்த அம்மா நாம குடிச்சுட்டுதான் மீட் பண்ணேன்னு அறிக்கை கொடுக்கப் போகுது..// மிஞ்சிட்டார், நல்ல பதிவு, நன்றி.

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட அன்பர்கள்
திரு கவிதை வீதி சௌந்தர்
திரு வேடந்தாங்கல் கருண்
திரு தனிக்காட்டு ராஜா
திரு வசந்தா நடேசன்
இன்னும் பார்த்துவிட்டு சென்ற அனைவருக்கும் நன்றி..

Adirai Media said...

வைகோவுக்கு வைக்கோல்ன்னு பேரு .. ஹீ ஹீ ஹுப். தாங்கலே... யோகி .அப்புடியே ராமதாசுக்கு ராஸ்கோல்ன்னு வச்சா பொருத்தமாயிருக்கும் ..

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?