Pages

Monday, March 14, 2011

ஒழுங்கீனத்தின் வெறியாட்டம்..



வர வர தரைப்படைகளின் தொல்லைகள் தாங்க இயலவில்லை..

இன்று செய்தித்தாள்களில் அந்த செய்தியை படித்தபோது நெஞ்சம் பதறிவிட்டது..

தரைப்படை நாய்கள் சாலைகளில் காற்றாடி விடுகிறேன் என்று நூலில் மாஞ்சா தடவி பட்டம் விடுகின்றன..

நான்கு வயது செரின் பானு என்ற ஒரு பச்சிளம் குழந்தையின் கழுத்தை அறுத்து உயிரைப் பறித்து விட்டது..

பட்டம் விடக்கூடாது என்று எவ்வளவோ தடைகள் இருந்தும் இந்த சாலையோர நாய்கள் அதை மதிப்பதே இல்லை..

இப்படி பல பேர் உயிரை குடித்தும் மனித ஜென்மம் இல்லாத அந்த நாய்கள் அதைப் பற்றி சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை..

காவல் துறையினரும் அதை இலட்சியம் செய்வதை தெரியவில்லை

இது போன்ற மிருகங்களை காற்றாடி விடும்போதே சுட்டுத்தள்ளவேண்டும்..

ஒழுக்கமில்லாத இந்த நாய்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன?



***************



இலவசம் படுத்தும்பாடு..



ஞாயிறன்று சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் கண்ட ஒரு ஒழுக்ககேடான காட்சி.



மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏதோ ஒரு பேக்கேஜ் டூர் சம்மந்தமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்தியது..

அதில் பதிவு செய்பவர்களில் ஒருவருக்கு இலவச டூர் அந்நிறுவனமே தருமாம்..தமிழ்நாட்டுக்காரர்களுக்கு இலவசம் என்றால் போதுமே..கூட்டம் கூட்டமாக கூடிவிட்டனர்..

அதில் நிகழ்ச்சி நடத்தும் ஒரு பெண்மணி, - இளைஞர்கள் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்டோர் இருக்கலாம் - அவர்களை அழைத்து, நீங்கள் நடனமாடவேண்டும், என்று கேட்டுக்கொண்டாள் . அவர்களும் தயாராக இருக்க..எல்லாருக்கும் பெண்களும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று அபிப்பிராயப்பட்டனர் போலும்..

அந்த பெண்மணி, "கேர்ல்ஸ்" யாரவாது வாங்களேன் என்று அழைத்துப் பார்த்தார்..யாரும் வரவில்லை எனத்தோன்ற..

டான்ஸ் ஆடும் பெண்ணுக்கு கண்டிப்பாக கிப்ட் உண்டு என்றவுடன் ஒருத்தி நாக்கை தொங்கப்போட்டு கொண்டு வந்துவிட்டாள்...அந்த முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் கூட்டத்தில் கூச்சமின்றி இடுப்பை அசைத்து அசைத்து ஆடுகிறாள்..



இதெல்லாம்வற்றையும் விட இன்னும் அருவருப்பான விஷயம் நடனம் முடிந்தவுடன், அந்த பெண்ணை அறிவிப்பாளினி கேட்கிறாள் நீங்கள் எந்த காலேஜ் என்று..அவள் சொல்கிறாள் நான் மாரிட் என்று..

ஒஹ்ஹ்ஹ..உங்க கணவர் வந்து இருக்காரா?

எஸ்..

அவனும் வெட்கமின்றி கூட்டத்தினுள் வருகிறான்..

இலவசத்திர்காக எதுவும் செய்யும் வெட்கங்கெட்ட கூட்டம் என்று கூட்டம் முனுமுனுக்கிறது..

31 comments :

அலைகள் said...

verry informative post thank you

Barari said...

ANEETHI NADAPPATHAI KANDAAL KAIYAAL THADUKKA VENDUM ALLATHU VAYAAL ETHIRKKA VENDUM ALLATHU MANATHAAL VERUKKA VENDUM ENDRA NABI MOZI PADI THAANGAL VAYAAL (EZUTHTHAAL) SEIKIREERKAL.ANJAA NENJAN ENDRU VAAZTHUKIREN.

Unknown said...

இவர்களை அரசு நினைத்தால் எப்படியோ அடக்கி விடலாம் ஆனால் ஓட்டு பொறுக்குவதற்க்காக இவர்களை இந்த நாய்கள் கண்டு கொள்வது இல்லை என்பதுதான் உண்மை .

Shankar said...

I am reading your blogs regularly but only today I have become your follower.
Your views are okay but your language needs some moderation.Even though what you have mentioned is despicable, we cannot avoid such things in metropolis.

வால்பையன் said...

//இலவசம் படுத்தும்பாடு..//

ஹஜ் பயணத்திற்கு மான்யம் வாங்குபவர்களையும் வெட்கமில்லாதவர்கள் என்று சொல்றிங்களா தல!?

மர்மயோகி said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள்
thameem
barari
hassan
shankar
வால்பையன்
அனைவருக்கும் இன்னும் பார்த்துசென்ற அனைவருக்கும் நன்றி

வால்பையன் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுபோட்டு வம்பிழுக்க பார்க்கிறார்.
ஹஜ் பயணம் எனபது ஒரு கடமை..அதை செய்ய முடியாதவர்களுக்கு அரசு மான்யம் வழங்கி அனுப்புகிறது...
நான் குறிப்பிட்ட இலவசங்களுக்கும் இதற்கும் நீங்கள் தொடர்புபடுத்தி பார்ப்பது உங்களது உள்மனது வக்கிரத்தை காட்டுகிறது..
அது சரி.. உங்களது நிறுவனத்தை நடிகையை வைத்து திறந்து வியாபாரம் செய்தவர்தானே நீங்கள்..

வால்பையன் said...

//முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுபோட்டு வம்பிழுக்க பார்க்கிறார்.//

மானியம், இலவசம் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

//உங்களது நிறுவனத்தை நடிகையை வைத்து திறந்து வியாபாரம் செய்தவர்தானே நீங்கள்.. //

நான் கேட்ட கேள்விக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இப்போ முடிச்சு போடுறது யாரு?

உங்க பதிவுகளில் நடிகையின் அரை நிர்வாண படம் போட்டு கருத்து சொல்வது எதற்காக?

உங்கள் சொறிதலுக்கு நாங்க தான் கிடைச்சோமா?

மர்மயோகி said...

வெரிகுட் ...
நாங்கள் சொன்னால் மட்டும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்கள்..
ஒரு அரசு மக்களின் புனித கடமையை செய்ய மான்யம் அளிப்பதற்கும், தேவையற்ற இலவசங்களை கொடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு.
இதை மாமேதை வால்பையன் அறியாததல்ல..
உங்களது உள்மனதின் காவி எண்ணம்தான் இந்த கேள்விக்கான காரணம்.
அப்புறம் சொரிதல் என்ற வார்தியாயைத்தவிர உங்களுக்கு வேறொன்றும் தெரியாதா?

வால்பையன் said...

தேவையா தேவையில்லையா என முடிவு செய்ய நீங்கள் யாருங்க?

பக்கத்து நாட்டு பிரதமரா?

நான் காவியா பாவியான்னு எல்லாருக்கும் தெரியும், சும்மா அரிச்சா சொறியிறேன்னு கருத்து கந்தசாமி வேலை பார்க்கும் உங்களையும் எல்லாருக்கும் தெரியும்!

இஸ்லாம் பத்தி சொன்னதும் பொத்துகிட்டு வருதே கோவம்!

வால்பையன் said...

சொரிதல் தவிர நிறைய வார்த்தை தெரியும், உங்க வயது கருதி அதையெல்லாம் சொல்வதில்லை!

மர்மயோகி said...

வால்பையரே என்ன உளறுகிறீர்..
இந்தியாவின் சமாச்சாரங்களை பக்கத்து நாடு பிரதமரா முடிவு செய்கிறார்...
யார் கோபத்தில் இருக்கிறார் என்று நன்றாகவே தெரிகிறது..ஹஹஹா..
நீங்கள் என்னதான் மூடி மறைத்தாலும் உங்களது காவி எண்ணங்கள் உங்களை அறியாமல் வெளிப்பட்டுவிடுகிறது..
எதற்கு வெளிவேஷம்...?
ஏற்கனவே உங்கள் நண்பரின் திருமணத்தில் உங்களது வண்டவாளம் வெளிப்பட்டதே..மறந்து விட்டீர்களா?

ஒழுங்கீனத்தின் வெறியாட்டம்தான் உங்களின் இந்த வேஷம்கூட !

மர்மயோகி said...

//நான் காவியா பாவியான்னு எல்லாருக்கும் தெரியும்//
ஓஹோ..அப்போ காவிக்கு எதிர்பதம் பாவி என்கிறீர்களா? பார்த்தீர்களா ?நீங்கள் என்னதான் மூடி மறைத்தாலும் உங்களது காவி எண்ணங்கள் உங்களை அறியாமல் வெளிப்பட்டுவிடுகிறது...
வேண்டாம் அய்யா..

வால்பையன் said...

:)

உங்களுக்கு இலவசம் தேவையில்லை என்ற போது அத்தோடு நிறுத்திக்கனும், அப்படியல்ல இலவசமே தப்பு என்றால் எல்லா மானியத்தையும் விமர்சிக்கனும்.

அது சரி இது தப்பு என்பது ஒருபக்க சார்பு!

நான் என்ன செய்தேன் என்று பேச நான் ரெடி, என் நண்பன் செய்ததற்கு என்னிடம் நீங்கள் கேள்வி கேட்பது அருமை!

அப்புறம் மீண்டும் காவி என்றதும் சிரிப்பு வந்து விட்டது, சிவனை “ஏன் இந்த கம்முனாட்டி புலித்தோலில் உட்கார்ந்திருக்கு” என்று எழுதிய பதிவு இன்னமும் இருக்கு!

கடவுள் என்ற கருமாந்திரம் எந்த வடிவில் இருந்தாலும் நான் அதை ஏற்பதில்லை!

இதுக்கு மேலயும் காவின்னு சொல்வதால் நான் கண்டுக்கபோறதில்ல!

வால்பையன் said...

//அப்போ காவிக்கு எதிர்பதம் பாவி என்கிறீர்களா? //


ஹாஹாஹாஹா!
காலையிலயே அங்க வெயில் ஜாஸ்தியா!?

சக்தி கல்வி மையம் said...

ஏதோ ... சண்டைபோல...

மர்மயோகி said...

நண்பர் வேடந்தாங்கல் கருண்..இது சண்டையல்ல கருத்து மோதல், எங்களுக்குள் இப்படி நிகழ்வது புதிதல்ல..சுவாரஸ்யமாக இருந்தால் நன்றாக இருக்கும்தானே?

மர்மயோகி said...

//நான் என்ன செய்தேன் என்று பேச நான் ரெடி, என் நண்பன் செய்ததற்கு என்னிடம் நீங்கள் கேள்வி கேட்பது அருமை!//

அட அடா அடா..பங்காளி பங்காளி என்று நொடிக்கொருதரம் சிலாகித்துக் கொள்கிறீர்கள்.. வாய்கிழிய பேசுகிறீர்கள்..

மாட்டிக்கொண்டவுடன் அது நண்பன் செய்த்தது என்று தப்பித்துகொள்ள பர்ர்கிரீர்கள்..நன்றாகத்தான் உள்ளது..

மர்மயோகி said...

//உங்களுக்கு இலவசம் தேவையில்லை என்ற போது அத்தோடு நிறுத்திக்கனும், அப்படியல்ல இலவசமே தப்பு என்றால் எல்லா மானியத்தையும் விமர்சிக்கனும்//

ஹஜ் பயணத்திற்கு மட்டும் அரசு மான்யம் கொடுப்பதில்லை...அரிசிக்கு கொடுக்கிறது, மண்ணெண்ணைக்கு கொடுக்கிறது, பெட்ரோலுக்கு கொடுக்கிறது..இப்படி அத்தியாவசியத்தேவைகள் அனைத்திக்கும் மானியம் கொடுக்கப்படுகிறது...

இவை எல்லாம் இலவசம் என்றும்..வாங்கமால் போய்விடுவீர்களா நண்பரே?

ஏன் ஹஜ் பயணத்திற்கு கொடுக்கப்படும் மானியத்திற்கு மட்டும் உங்களுக்கு கோபம் வருகிறது..

மர்மயோகி said...

//அப்போ காவிக்கு எதிர்பதம் பாவி என்கிறீர்களா? //


ஹாஹாஹாஹா!
காலையிலயே அங்க வெயில் ஜாஸ்தியா!?

பதில் சொல்லமுடியாமல் சமாளிப்பதற்கு இப்படியா? இதெல்லாம் பழைய டெக்னிக்குங்க..

வால்பையன் said...

//இவை எல்லாம் இலவசம் என்றும்..வாங்கமால் போய்விடுவீர்களா நண்பரே?

ஏன் ஹஜ் பயணத்திற்கு கொடுக்கப்படும் மானியத்திற்கு மட்டும் உங்களுக்கு கோபம் வருகிறது.. //


அதை தான் நானும் சொல்றேன், ஏன் ஹஜ் மானியத்தை மட்டும் ஆதரிக்கிறீர்கள்!?, அதை கேள்வி கேட்டால் ஏன் உங்களுக்கு கோவம் வருகீறது!?

மர்மயோகி said...

//இவை எல்லாம் இலவசம் என்றும்..வாங்கமால் போய்விடுவீர்களா நண்பரே?

ஏன் ஹஜ் பயணத்திற்கு கொடுக்கப்படும் மானியத்திற்கு மட்டும் உங்களுக்கு கோபம் வருகிறது.. //


அதை தான் நானும் சொல்றேன், ஏன் ஹஜ் மானியத்தை மட்டும் ஆதரிக்கிறீர்கள்!?, அதை கேள்வி கேட்டால் ஏன் உங்களுக்கு கோவம் வருகீறது!? //

ஹாஹாஹாஹா!
காலையிலயே அங்க வெயில் ஜாஸ்தியா!? - உங்க பாஷையிலே சொல்ல வேண்டியதுதான்
வேற என்னதான் பண்றது...
நீங்க வேற எதையும் சொல்றமாதிரி இல்லை..
கவேர்மேன்டுல எங்களுக்கு வேற என்ன சலுகை இருக்கு..இதாவது கெடைக்குதே..உங்களுக்குத்தான் எரியுது...
அதை ஒண்ணும் பண்ணமுடியாது....

வால்பையன் said...

//கவேர்மேன்டுல எங்களுக்கு வேற என்ன சலுகை இருக்கு..இதாவது கெடைக்குதே..உங்களுக்குத்தான் எரியுது...
அதை ஒண்ணும் பண்ணமுடியாது.... //


ரேஷன்கார்டு இஸ்லாமியர்களுக்கு தரமுடியாதுன்னு யாராவது உங்ககிட்ட சொன்னாங்களா?
கேஸ் கனைக்‌ஷன்

இஸ்லாமியர்களுக்கு இல்லைன்னு யாராவது சொன்னாங்களா?

உங்களுக்கு ஒண்ணுமேயில்லையாக்கும், கேக்குறவன் கேனயைனா இருந்தான்னு ஒரு பழமொழி இருக்கு, உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன், பாக்குறவங்களுக்கு தெரியும் நான் எரிஞ்சு பேசுறேனா, நியாயமா விவாதிக்கிறேனான்னு!

மர்மயோகி said...

வால்பையா..
உமக்கு என்ன மரை கழண்டு விட்டதா? ரேஷன் கார்டு, கேஸ் கனெக்ஷன் எல்லாம் அத்தியாவாசியப் பொருள்..இதை ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்தான் வழங்குகிறார்கள் என்று யாராவது சொன்னார்களா?
பணக்காரன், ஏழை, தாழ்த்தப்பட்டவன், பிற்படுத்தப்பட்டவன் என்று எல்லாரும் உபயோகப்படுத்துவது..
இதையெல்லாமா சொல்லிக்கொண்டிருப்பது..
ரொம்பவும் நிதானம் தவறி பேசுகிறீர்கள் என்று நினைக்கிறன்..
கேக்குறவன் கேனயன் என்று மட்டும் பழமொழி இல்லை..
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்றும் பழமொழி உண்டு..

Anonymous said...

// ஹஜ் பயணத்திற்கு மான்யம் வாங்குபவர்களையும் வெட்கமில்லாதவர்கள் என்று சொல்றிங்களா தல!?
//

ஹஜ் யாத்திரை வசதி படைத்த இஸ்லாமியர் தமது சொந்தப் பணத்தில் போக வேண்டும், ஏழை இஸ்லாமியருக்கு அத கட்டாயம் இல்லை.. அதாவது இது ஒரு யாத்திரை இல்லை .. ஆகவே மானியம் வாங்கிக் கொண்டு ஹஜ்ஜுக்கு போவது சரியில்லாத ஒரு செயல் இதனை நான் சொல்லவில்லை. எனது இஸ்லாமிய நண்பர் ஒருவர் சொன்னது. அது உண்மையும் கூட ...

Anonymous said...

@ மர்மயோகி வால்பையன் நல்லது நடக்கனும்னு விவாதம் பண்ணமாட்டாருனு நேற்றுத் தான் தெரிஞ்சிகிட்டேன். தமிழ்மணத்தில வரப் பதிவுகளில் பொறுக்கி எடுத்து, அங்கே போய் எங்கடா குற்றம் இருக்கும்னு தேடி எதாயவது சொல்லுவாரு.. நாம் போய் விவாதம் பண்ணால் போன் நம்பரக் கொடுத்து முடிஞ்சா கால் பண்ணுனு சொல்வாரு. அவருக்கு இன்கம்மிங்க் ஃப்ரி என்றதால இவருக்கு ஐஎஸ்டி போட்டு கால் பண்ணி பேசி நமக்கு என்னாகப் போகுது... ஜஸ் லீவ் தெம் ..

முட்டாளோடு பேசலாம், அறிவாளியோடு பேசலாம் - இரண்டும் இல்லாதவரோடு அல்லது இரண்டும் இல்லாதவர் போல நடிப்பவரோடு பேசிப் பயன் இல்லை ...

மர்மயோகி said...

நன்றி திரு இக்பால் செல்வன்..

ஏழை இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணம் அவசியம் அல்லதான்..

என்னதான் வசதிபடைத்தவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றாலும், வெளிநாடுகள் என்றால் சில அசௌகரியங்களை சந்தித்தே ஆகவேண்டும், அந்தவகையில் அரசின் உதவியை எதிர்பார்ப்பதில் தவறில்லை..

நீங்கள் சொல்வதுபோல வால்பைய்யன் விவாதத்தில் பின்வாங்கினால் அவரது வாதத்திறமைக்கு ஏதாவது பங்கம் ஏற்படும் என்றே ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கிறார்..பாவம்..

வால்பையன் said...

@ இக்பால் செல்வன்
@ மர்மயோகி

யோக்கிய சிகமாணிகளே!

ஏழைகளுக்கு ஹஜ் பயணம் வேண்டாம்னு சொல்றதை அதே மாதிரி இலவச விசயத்திலும் சொல்லாம்ல!

இக்பால்
நீங்க ஒரு கடைந்தெடுத்த இஸ்லாமியர்னு தெரியது, பதில் கேள்விக்கு மட்டும் சொல்லுங்க, உங்க பருப்பு கடையிற வேலையை வீட்ல வச்சுக்கோங்க!

Anonymous said...

அய்யோ வால்பையனா ..ஆஹா நான் எஸ்கேப்பு

Anonymous said...

வாலபையனுக்கு ஒரு கேள்வி..நீங்கள் நடிகையை வைத்து கடை திறந்தது உண்மையா..உண்மையென்றால் அது எந்த நடிகை..?ஹிஹி

வால்பையன் said...

நான் யாரையும் வச்சு கடை திறக்கல சதீஷ்
ராஜன் அவரது ப்ளாக்கில் அப்படி எழுதிட்டார். அதையே பிடித்து கொண்டு இவர் பேசுகிறார்!

நடிகையை வைத்து கடை திறக்கும் அளவுக்கா நான் என் திறமையை நம்புவேன்! :)

வால்பையன் said...

//உமக்கு என்ன மரை கழண்டு விட்டதா? ரேஷன் கார்டு, கேஸ் கனெக்ஷன் எல்லாம் அத்தியாவாசியப் பொருள்..இதை ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்தான் வழங்குகிறார்கள் என்று யாராவது சொன்னார்களா? //


மானியம்னா என்னான்னாவது தெரியுமா?

நீங்க கொஞ்சம் வயசானவர்னு ஒருத்தர் சொன்னாரு, உங்களுக்கு வயசு மட்டும் தான் ஆச்சுன்னு இப்ப தெரியுது

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?