Pages

Wednesday, March 10, 2010

கலைஞரின் சினிமா பாசம்..!!!

புதிய தலைமைச் செயலகம் வரும் 13 ம் தேதி கோலோகோலமாக திறக்கப்படவுள்ளது... பிரதமர்,மற்றும் சோனியா காந்தி போன்ற தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்...

சட்டமன்றத்திற்கு சிறிதும் சம்மந்தமில்லாத நடிகர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்..அது போதாதென்று இன்னொரு மோசமான நிகழ்வுதான் மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணாக்கப்படுகிறது என்பதற்கு உதாரணம்.

இந்த வருடத்தின் முதலாவது பட்ஜெட் இந்த புதிய சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்னும் அவசரத்தில், அவசர அவசரமாகக் காட்டப்படும் இந்த வளாகம், இன்னும் முழுமையாக கட்டப்படாமல், பிரதமர், மற்றும் சோனியா காந்தி போன்ற தலைவர்கள் வரும்போது முழுமையாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால், திரைப்பட ஆர்ட் டைரக்டர் தோட்டா தரணி என்பவரை வைத்து ஏறக்குறைய இரண்டரைக் கோடி ருபாய் செலவில் தலைமைச் செயலகம் செட் போடப் படுகிறது.

இப்படி அவசர அவசரமாக தனது சுய நலத்திற்க்காக செயல்படும் கருணாநிதி, இதில் கூட சினிமாக்காரன் ஆதாயம் அடைய வேண்டும் என்கிற நோக்கில் செயல்படுகிறார்.

இந்த இரண்டரைக் கோடி ருபாய், கலைஞர் டி வி, வருமானத்திலோ, அல்லது ஸ்பெக்ட்ரம் வருமானத்திலோ செலவழிக்கப்படுவதல்ல.. அத்தனையும் பொதுமக்களின் உழைப்பை உறிஞ்சி வாங்கப்படும் வரியிலிருந்துதான்...

அடுத்தநாளே இந்த செட்டிங் கலைக்கப்பட்டுவிடும். இதற்குத்தான் நமது பணம் செலவழிக்கப் படுகிறது..

ஒரு வேலை, கலைஞரோ, மன்மோஹனோ, அல்லது சோனியா காந்தியோ இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனால்..அதற்கும் இந்த கருணாநிதி ஒரு "டூப்"பை வைத்து இந்த விழாவை நடத்தினாலும் நடத்திவிடுவார்..! அந்த மேக் அப்பிற்கு செலவு? இளிச்சவாய் பொதுமக்கள் எதற்கு இருக்கிறோம்? அரிசியை ஒரு ரூபாய்க்கு வாங்கி அதற்கு சமைப்பதற்கு நூறு ருபாய் செலவழிக்கும் அறிவாளிகளல்லவா நாமெல்லாம்..!!!

வெல்க தமிழ்!! வாழ்க தமிழகம்..!!!

5 comments :

sekar said...

Thalaivaa,

Why cant we file a case against this ?

மர்மயோகி said...

நன்றி சேகர் !!

கேஸ் போடலாம்தான்..அப்புறம் நம்ம மேலேயே அவங்க பல கேஸ் போடுவாங்களே..தாங்க முடியுமா?

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள் மர்மயோகி, இலவசங்களும் இப்படித்தான் மக்களின் பணத்தில் மக்களையே ஏமாற்றும் திட்டம். நன்றி.

Balamurugan said...

பட்ஜெட் தாக்கல் செய்யும் இடத்தில் நடிகர் நடிகைகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் இருக்கிறதா?

இருந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை, இன்றைய நிலைமை அப்படி!

மர்மயோகி said...

நன்றி பித்தன் , நன்றி பாலமுருகன்.

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?